அண்ணே நீங்க எப்படி… இந்த ஜெயிலுக்கு வந்தீங்க?
நான் இங்கே வந்ததுக்கு போலீஸ் தான் காரணம் அவங்ககிட்டே மாட்டிக்கிட்டேன், அழைச்சி வந்து இங்கே விட்டுட்டாங்க.
தப்புப் பண்ணினா அப்படித்தானே செய்வாங்க?
தப்பு செய்யறதுக்குப் பல சமயம் நாமளும் காரணம், சில சமயம் இந்த சமூகமும் காரணம்.
அதெல்லாம் இருக்கட்டும், தப்பு பண்றதுக்கு நம்ம உடம்பிலுள்ள துத்த நாகமும் ஒரு காரணம்னு சொல்றாங்க.
அப்படியா?
ஆமாம்! நம்ம உடம்பிலே துத்த நாகம் குறைச்சலா இருந்தா நாம தப்புப் பண்ணுவோமாம்.
ஒரு மனுஷனைக் குற்றம் செய்யத் தூண்டறதுக்கு துத்த நாகப் பற்றாக்குறையும் ஒரு காரணம்னு கண்டுபிடிச்சிருக்காங்க.
வேடிக்கையா இருக்கே இது
பிரிட்டன்லே ஒரு 17 வயசுப் பையன் ஐந்து வாரத்துக்குள்ளே 46 குற்றங்களைச் செஞ்சதா அவனை அரெஸ்ட் பண்ணினாங்க, கோர்ட்டில் கேஸ் நடந்தது.
அவனோட வக்கீல், அவன் பண்ணின குற்றத்துக்கெல்லாம் அவனைக் குறை சொல்லமுடியாது. அவன் உடம்புல ஒரு பொருள் இருக்க வேண்டிய துத்த நாகம். குறைவா இருந்தாலே தான் அவன் தப்புப் பண்ணினான்னு வாதாடி அதை ஆதாரப்பூர்வமா நிரூபிச்சும் காட்டினார்?
தீர்ப்பு என்ன ஆச்சு?
அந்தப் பையனை நீதிமன்றம் விடுதலை பண்ணிப்புட்டது.
நான்கூடப் பெரிசா எதையும் செஞ்சுடலே. என்னையும் விட்டிருக்கலாம், ஏனோ தெரியலே இங்கே கொண்டாந்து விட்டுட்டாங்க.
அப்படி என்னதான் நடந்தது?
ஒண்ணுமில்லே.. ஒருநாள் பஸ்லே போய்கிட்டிந்தேன். கண்டக்டர் டிக்கெட் குடுத்தார். நான் பாக்கெட்லேயிருந்து காசு எடுத்து அவர்கிட்டே கொடுத்தேன். அதுக்காக என்னைப் பிடிச்சு போலீஸ்கிட்டே
ஒப்படைச்சுட்டாங்க.
பாக்கெட்லேயிருந்து காசு எடுத்துக் குடுக்கறது ஒரு பெரிய தப்பா?
அதைத்தான் நானும் கேட்டேன்..
அதுக்கு என்ன சொன்னாங்க?
பாக்கெட்லேருந்து காசு எடுத்துக்; கொடுக்கறது தப்பு இல்லே. ஆனா நீ காசு எடுத்த பாக்கெட் உன்னுடையது இல்லையே, பக்கத்துல நின்னவர் பாக்கெட் ஆச்சே அப்படிங்கறாங்க.