பேராசை பெரும் நஷ்டம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 14,402 
 
 

சிறுநாவலூர் என்னும் கிராமத்தில் சுப்பன் என்ற விவ சாயி வாழ்ந்து வந்தான். கிராமத்து விவசாயிகள் எல்லோரும் நிலத்தில் பயிர் வைக்கும்போது தான் சுப்பனும் பயிர் வைப்பான்.

ஆனால் மற்ற விவ சாயிகளின் நிலத்தில் விளைவதை விட அதிக விளைச்சல் சுப்பனின் நிலத்தில் ஏற்பட்டது. உணவு தானியங்களை விற்பனை செய்தபோது அவனுக்கு அதிக வருமானம் கிடைத்தது. மற்ற விவசாயிகள் எல்லோரும் சுப்பனைக் கண்டு மனம் புழுங்கினர். அவன் போடுகின்ற உரங்களைத்தானே நாமும் போடுகிறோம். நமக்கு மட்டும் ஏன் அவன் அளவு விளைச்சல் இல்லை என வாய் விட்டே பேசிக் கொண்டனர்.

சில வருடங்களிலேயே பெரிய பணக்காரனாகி விட்டான் சுப்பன். ஆனால் அவனுக்கு சந்தேகம்தான் தீரவில்லை. தன் நிலத்தில் மட்டும் எப்படி இவ்வளவு விளைச்சல் என்று யோசனை செய்தான். இந்த ரகசியத்தை எப்படியும் கண்டுபிடித்து விட வேண் டும் என நினைத்தான். ஒரு நாள் நடுஇரவில் நிலத்தைப் பார்க்க கிளம்பி விட்டான். நிலத்திற்கு அருகில் உள்ள புளிய மரத்தடியில் உட் கார்ந்து கொண்டான்.

விடியற்காலை நேரம் புயல் அடிப்பது போன்ற சத்தம் வானத்திலே கண் ணைக் கூசும் ஒளி. அண் ணாந்து பார்த்தான்.

இரண்டு பூதங்கள் ஆகாய மார்க்கமாக அவன் நிலத்தை நோக்கி கீழிறங் கின. அதன் முதுகுகளில் பெரிய பெரிய தங்க அண் டாக்களில் தண்ணீர்.

அந்தத் தண்ணீரை அவைகள் அவன் நிலத்தில் ஊற்றின.

அடடே இந்த தண் ணீரின் மகிமைதான் நமது நிலத்தின் விளைச்சலுக்குக் காரணம் என புரிந்து கொண்டான் சுப்பன்.

நேரே பூதங்களின் எதிரே போய் நின்றான். “ஏ பூதங்களே… நீங்கள் யார்…? ஏன் என் நிலத்திற்கு தண் ணீர் பாய்ச்சுகிறீர்கள்…?” என்றான் சுப்பன்.

பூதங்கள் இரண்டும், “ஐயா நாங்கள் தேவேந்தி ரன் சபையின் காவலாளி கள். ஒரு நாள் நாங்கள் அவர் வருவதைக் கவனிக் காமல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டோம். அதனால் கோபம் அடைந்த தேவேந்திரன், “நீங்கள் பூமியிலே பூதங்களாக திரிந்து பன்னிரெண்டு ஆண்டுகள் உட்கார நேர மின்றி கங்கை தண்ணீரை சுமந்து வந்து யாருடைய நிலத்திலாவது பாய்ச்சி வேலை செய்து வரவேண் டும்.

அவ்வாறு பன்னி ரெண்டு ஆண்டுகள் கழித்து சாப விமோசனம் பெற்று மீண்டும் தேவ லோகம் வருக என சாபம் கொடுத்து விட்டார். அன்று முதல் நாங்கள் உட்கார நேரமின்றி கங்கை நீரைக் கொண்டு வந்து உனது நிலத்தில் பாய்ச்சுகிறோம். அதனால்தான் உனக்கு அமோக விளைச்சல் கிடைக்கிறது. இப்போது நாங்கள் கங்கை நதி செல்ல கிளம்பினால் மாலையாகும். அங்கிருந்து தண்ணீர் எடுத்து வர அதிகாலை ஆகிவிடுகிறது. எங்க ளுக்கு உட்கார நேரமே இல்லை” என்று இரண்டு பூதமும் அழுதன.

“ஆமாம் உங்களுக்கு சாப விமோசனம் பெற இன்னும் எவ்வளவு நாள் உள்ளது” என்றான் சுப்பன்.

“இன்னும் ஆறு மாதங் கள் இருக்கின்றன” என்றன பூதங்கள்.

ஐயையோ பூதங்கள் போய் விட்டால் கங்கை தண்ணீர் கிடைக்காதே. விளைச்சல் குறைந்து விடுமே. நமக்கு பணம் சேராதே. இந்த பூதங்களை இங்கேயே தங்கி நமக்கு வேலை செய்ய அவைகளை அடிமையாக்க திட்டம் போட் டான். மந்திரவாதி ஒருவனி டம் சென்று யோசனை கேட்டான்.

“அந்த பூதங்களை நீ எப்படியாவது ஒரு பாட்டிலில் அடைத்து விடு. பிறகு அவைகள் உனக்கே வேலை செய்ய வேண்டு மென சத்தியம் வாங்கிக் கொண்டு வெளியே விடு. பூதங்கள் சத்தியம் தவறாது” என்றான், மந்திரவாதி.

மறுநாள் இரவு நிலத் திற்குச் சென்றான் சுப்பன். பூதங்கள் இரண்டும் தண் ணீர் பாய்ச்சிக் கொண்டி ருந்தன. “ஏய் பூதங்களே… உங்களால் எவ்வளவு பெரி தாக வளர முடியும்?” என்றான்.

“நாங்கள் ஆகாயம் வரை வளர முடியும்” என் றன பூதங்கள்.

“சரி வளருங்கள் பார்க் கலாம்” என்றான் சுப்பன். பூதங்கள் ஆகாயம் வரை வளர்ந்தன.

“சரி இப்போது எவ் வளவு சிறியதாக மாற முடியும்” என்றான் சுப்பன்.

பூதங்கள் இரண்டும் கட்டெறும்பு அளவிற்கு உருமாறின.

அடுத்த நிமிடம் அவை களை தான் வைத்திருந்த பாட்டிலில் போட்டு மூடி விட்டான்.

“ஐயையோ இவன் ஏதோ திட்டம் போட்டு இப் படி செய்து விட்டானே…! நாம யார் நிலத்துக்கு வேண்டுமானாலும் கங்கை நீரை பாய்ச்சி இருக்கலாம். ஆனா நாம தொடர்ந்து சுப்பன் நிலத்துக்கு தண் ணீர் ஊற்றியும் நன்றியில்ல பாத்தியா…? இனி இவனுக் காக நாம் வேலை செய்யக் கூடாது. எப்படி இவனிடம் இருந்து தப்பிக்கலாம்” என இரண்டு பூதங்களும் பேசிக் கொண்டன.

“சுப்பா எங்களை வெளி யே விடு. இல்லாவிட் டால் உன் நிலத்துக்கு கங்கை நீர் கிடைக்காது. விளைச்சல் குறைந்து விடும். பழையபடி ஏழையாகி விடுவாய்” என் றன பூதங்கள்.

“நீங்கள் என்னிடமே வேலை செய்வதாக சத்தி யம் செய்து கொடுத்தால் வெளியே விடுகிறேன்” என்றான் சுப்பன்.

“ஏ முட்டாள் சுப்பா… நாங்களே சாபம் பெற்று சுய உருவம் இழந்து பூதமாக இருப்பவர்கள். நாங்கள் செய்யும் சத்தியம் எங்களை கட்டுப்படுத்தாது. எனவே நாங்கள் தேவலோகம் சென்று சுயஉருவம் பெற்று வருகிறோம். அதன் பிறகு உனக்கு சத்தியம் செய்து தருகிறோம்” என்றன.

“சரி சரி…” என சுப்பன் பாட்டிலைத் திறந்து விட இரண்டு பூதங்களும் தப்பித் தால் போதுமென ஆகாய மார்க்கமாக பறந்தன.

ஒரு வாரம் ஓடிற்று. பூதங்கள் வரவில்லை. வய லும் கங்கை நீரின்றி வளம் இழந்து காணப் பட்டது.

சுப்பனுக்கு அதிர்ச்சி. பூதம் பொய் சொல்லுமா? சொல்லாதே. பிறகு எங்கே தவறு நடந்தது?

யோசித்தவன் அன்று இரவு தனது வயலுக்கு அரு கில் இருந்த புளிய மரத்தில் ஏறி கண் காணிக் கலா னான்.

நடு இரவு தாண்டிய நேரத்தில் 2 பூதங்களும் அந்த வழியாக பறந்து வந்தன. சுப்பனின் வயலைத் தாண்டிச் சென்று அடுத் தடுத்த வயல்களில் கங்கை நீரை நிரப்பின.

சுப்பன் அதிர்ந் தான். ஓடிப் போய் பூதங்கள் முன்பாக நின்றான். “என்னை ஏமாற்றி விட்டீர்கள். அதுமட்டுமல்லாமல் என் நிலத்தை தவிர்த்து வேறு வயலில் தண்ணீர் விடு கிறீர்கள். இது அநீதி” என்று கத்த லானான்.

http://i15.photobucket.com/albums/a3…a/cd46be04.jpg

அப்போது ஒரு பூதம் பேசிற்று: “மானிடப் பதரே! நீ கேட்காம லேயே உனக்கு அதிர்ஷ்டம் வந் தது. அதன் மூலம் பலன் பெற்றாய். அதிர்ஷ்டத்துக்கான காரணம் தெரிந்தும் உனக்குள் பேராசை தலைதூக்கிற்று. அதிர்ஷ்டம் எப்போதும் உனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்று பேராசைப்பட்டாய். கிடைத்த அதிர்ஷ்டத் தில் வாழ்வை பலப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அதிர்ஷ்டத்தையே உனக்கு அடிமைப்படுத்த எண்ணக் கூடாது. அதிலும் உன் அணுகுமுறை எங்களை வேதனைப்படுத்தி விட்டது. நீ எத்தனாக இருந்தால் நாங்கள் எத்த னுக்கு எத்தனாக இருப்போம். இனி எஞ்சிய ஆறு மாதங்களும் யார் நிலத்துக் கோ தண்ணீர் விட்டாலும் உன் வயல் பக்கமே எட்டிப் பார்க்கமாட்டோம். நீ எங்களை ஏமாற்ற எண்ணிய வகை யிலேயே நாங்களும் உன்னை ஏமாற்றி விட்டோம். இப்போதாவது உனக்கு புரிகிறதா…?”

சுப்பனுக்கு பேச வார்த்தையில்லை. பேராசை பெருநஷ்டம் என்ற பழமொழி அவனுக்கும் தெரியும் தானே…!

Print Friendly, PDF & Email

1 thought on “பேராசை பெரும் நஷ்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *