தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,789 
 

நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது.

அப்போது, வழக்காளி ஒருவர் நீதிபதியிடம் சொன்னார், “”ஐயா… வழக்கின் தீர்ப்பு எனக்கு சாதகமாக இருக்க வேண்டும். ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்…”

நீதிபதி மறுத்துவிட்டார்.

உடனே வழக்காளி சொன்னார், “”ஐயா, நன்றாக யோசியுங்கள். உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தரும் ஆள் கிடைக்க மாட்டான்!”

நீதிபதி சிரித்துக் கொண்டே சொன்னார் –

“”இல்லை சகோதரா, இதுபோல சன்மானம் கொடுப்பதற்கு நிறையப் பேர் கிடைப்பார்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை வேண்டாம் என்று மறுத்துக்கூற உனக்குத்தான் வேறு ஆள் கிடைக்க மாட்டார்!”

அந்த நீதிபதி வேறு யாருமல்ல… புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞராக இருந்து நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற ஜட்ஜ் கிமன் லால்!

– கலைப்பித்தன், கடலூர். (செப்டம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *