புன்னகைபுரி என்ற ஊரை தயாளன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனிடம் விலை மதிக்க முடியாத ஒரு பெரிய வைரக்கல் இருந்தது. அது அவர்களது மூதாதையர் வைத்துச் சென்ற பரம்பரை சொத்து. அதைத் தன் நாட்டின் பெருமையாக அவன் கருதினான். இந்நிலையில் அந்த வைரக் கல்லில் தலை முடி போல் ஒரு கீறல் விழுந்தது.
மன்னன் துடித்துப் போனான். வைரத்தின் அழகே போய் விட்டது என்று வருந்தினான். உடனே அரசன் தன் நாட்டின் நகை விற்பனையாளர்களை வரவழைத்து ஆலோசித்தான். “”அவ்வளவுதான் இந்த வைரத்தை ஒன்றும் செய்வதற்கில்லை.
http://www.dinamalar.com/siruvarmala…es/Smr-1-2.jpg
அது தன் மதிப்பைப் பெரும் பகுதி இழந்துவிட்டது. அது இன்னும் விரிசல் கொடுக்கும்,” என்று வைர வியாபாரிகள் கூறினர். “”யாராவது இந்த வைரத்தை இதன் பழைய மதிப்பிற்குக் கொண்டு வந்தால் அவருக்குத் தக்க பரிசு வழங்குவேன்,” என்று அரசன் அறிவித்தான். கடைசியாக ஓர் ஏழை பொற்கொல்லன் ஒருவன் அந்த ஊரில் இருந்தான். அவனது திறமையை பயன்படுத்தி கொள்ளத் தெரியாத பணக்கார நகை வியாபாரிகள் அவனை சீந்துவதே இல்லை. “”அரசே இந்தக் கீறலை வைத்தே வைரத்தின் மதிப்பைப் பல மடங்கு உயர்த்த முடியும்,” என்றான்.
வைரக்கல் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின் அந்த பொற்கொல்லன் ஒரு சிறிய நகைப் பேழையுடன் திரும்பி வந்தான். பேழையைத் திறந்ததும் அரசன் பிரமித்து விட்டான். வைரத்தின் மீது அழகான ரோஜா ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. முன்பு அரசனுக்குக் கவலை அளித்த கீறல், இப்போது ரோஜாவின் காம்பாகி இருந்தது. மகிழ்ச்சியடைந்த ராஜா அவனுக்கு பல பரிசுகள் கொடுத்ததுடன் ராணிக்கு புதுவிதமான நகைகள் பல செய்து தரும்படி ஆர்டர் கொடுத்தான். அவ்ளோ தான் சீந்துவார் இல்லாமல் இருந்த பொற்கொல்லர் ஒரே நாளில் மிகவும் பிரபலமானான். அவனிடம் ஆர்டர் கொடுக்க பல நகைக் கடைக்காரர்கள் “க்யூ’வில் நின்றனர். பேரும் புகழுமடைந்தான் வயதான பொற்கொல்லன்.