பகிர்ந்து செய்தால் பளு குறையும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 7,580 
 
 

“எனக்கு ஆபீஸ்ல ரொம்ப பிரச்னை. எல்லா வேலையும் என் தலைலதான் விழுது. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

“ஏன், மத்தவங்க யாரும் உங்க ஆபீஸ்ல இல்லையா?”

“இருக்காங்க குரு. ஆனா அவங்க யாரும் என்னளவு வேலை செய்ய மாட்டாங்க. நானும் அவங்க கூட ரொம்ப பழகிக்க மாட்டேன்!”

வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. “”இந்தக் கதையைக் கேள்” என்று அவனுக்கு ஒரு கதையை சொல்லத்துவங்கினார் குரு.

“ஒருத்தன் கிட்ட பொதி சுமக்கிற கழுதைகள் ரெண்டு வேலை பாத்துக்கிட்டு இருந்துச்சு. ரெண்டுக்குமே ஒரே வேலைதான், சுமக்கிறது. அதில ஒண்ணு, அடுத்ததுகூட
எப்பவும் போட்டி போட்டுக்கிட்டே இருக்கும்.

வேணும்னே வேகமாக நடக்கும், நிறைய சுமைய வச்சாக் கூட கவலையில்லாம நிக்கும்.

அதுனால முதலாளிக்கு இந்த கழுதையத்தான் ரொம்ப பிடிக்கும். அடுத்த கழுதையைப்பிடிக்காது. அந்தக் கழுதைக்கு நிறைய அடி விழும். இதுல இந்தக் கழுதைக்கு ரொம்ப சந்தோஷம்.

அடி வாங்குற கழுதை ஒரு நாள் இந்தக் கழுதைகிட்ட, “இதோ பார் நீயும் நானும் ஒரே வேலைதான் செய்யறோம். ஆனா நீ மட்டும் தேவைக்கு அதிகமா வேலை செஞ்சு என்னை திட்டு வாங்க வைக்கிற. இது நல்லதில்ல’னு சொல்லிச்சு.

ஆனா இந்தக் கழுதை கேக்கல. இப்படியே கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் அடி வாங்குற கழுதையை துரத்தி விட்டுட்டான் முதலாளி.

“ஆகா இனி நாம மட்டும்தான் ராஜா’னு இந்தக் கழுதை சந்தோஷமாயிடுச்ச. ஆனா, எல்லா வேலையும் இந்தக் கழுதை மேல விழுந்துருச்சு. வேலை ஜாஸ்தியாக
ஜாஸ்தியாக அதனால வேகமா செய்ய முடியல.

அது மெதுவா செய்யறதைப் பாத்து முதலாளிக்கு கோபம். அதை அடிக்க ஆரம்பிச்சான். ஒரு கட்டத்துல இந்தக் கழுதை லாயக்குப்படாதுனு அதை துரத்தி விட்டுட்டு
புதுக் கழுதையை வாங்கிட்டு வந்துட்டான்.

அப்பதான் இந்தக் கழுதைக்கு தான் செஞ்ச முட்டாள்தனம் புரிஞ்சுது.”

குரு இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும் வந்தவனுக்கும் தன்னுடைய தவறு என்ன என்பதைக் கண்டு கொள்ள முடிந்தது. அப்போது குரு அவனுக்கு சொன்ன Win மொழி: எதையும் பகிர்ந்து செய்தால் பளு குறையும்!

– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *