கரோனா பேசுகிறேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 7,404 
 
 

கரோனா, நான்தான் பேசுகின்றேன். என்னால் உங்களுக்கு தொந்தரவா? கண்ணுக்குத்தெரியாமல் காற்றில் கலக்ந்து சுவாசத்தில் நுளைந்துவிடுகின்றேன் என்று பேசிக்கொள்கிறார்கள். முற்றிலும் பொய் நம்பாதீர்கள். நான் ஓர் தொற்றுக்கிருமி. என்னைத்தொட்டால் பற்றிக்கொள்கிறேன். தும்மலுடன் வந்து ஒட்டிக் கொள்கிறேன். இருமலுடன் செருமப்பட்டு வெளி வருகின்றேன். சுத்தமாக இருந்தால் சத்தமில்லாமல் போய்விடுகின்றேன். என்னை அழிக்க நீங்கள் வேறெதுவும் செய்ய வேண்டாம்.

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

எங்கிருந்து வந்து உங்கள் உடலில் புகுந்து கொண்டேன்? வவ்வால்களை உண்ட பாம்பிலிருந்து வந்ததாக கூறுகின்றார்கள். வவ்வால்களுக்கு எந்த நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கமும் விரைவில் நெருங்கிவிடுவதில்லையாம். அதிக எதிர்ப்பு சக்தியும், எந்த நுண்ணுயிரிகளின் தாக்கத்தையும் தாங்கும் வல்லமை படைத்தவைகள்தான் வவ்வால்கள் என்பது ஆராட்சியாளர்கள் முடிவு. வவ்வால்களின் உடலில் பதிங்கியிருந்த நான், வவ்வால்களை உண்ட பாம்பின் உடலின் வெப்ப தட்பத்திற்கு ஏற்ப எனக்கு சிறிது உருவங் கொடுக்கத்தொடங்கினேன். ஆனாலும் பாம்பிடம் என்னால் உயிர்வாழ முடியவில்லை. பாம்பை உண்ட மனிதன் சற்று தளர்ந்திருந்தான். நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடல் என்னை அழிக்கும் சக்தியைப் பெற்றிருக்கவில்லை. அவனிடம் ஒட்டிக்கொண்டேன்.

இல்லை. இவ்வாறு நான் உருவாகவில்லை. மனிதன்தான் என்னைப் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கினான். பெருகிவரும் சனத்தொகையை கட்டுப்படுத்த இயற்கை ஆயுதமாக என்னை உருவாக்கினார்கள். பாலியல் தொற்று நோய் என்ற கிருமியின் மூலக்கூறுகளை ஆராய்ந்து அதிலிருந்து சற்று வேறுபட்ட இந்த வைரசை உற்பத்தி செய்தார்கள். இது இந்திய ஆராச்சியாளர்களின் எடுகோள். இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. முன்னுக்குப்பின் முரண்பாடான முடிவுகளைத்தந்திருக்கிறார்கள்.

2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து Contagion என்று ஒரு படம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் புகழ்பெற்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் கரு ஒரு தொற்று வைரஷ். ஒரு நாட்டின் வரையறைக்குட்பட்டிருந்த இந்த தொற்றுக்கிருமி எவ்வாறு பல நாடுகளுக்கும் பரவத் தொடங்குகின்றது என்றும், அதனால் அன்றாட வாழ்வில் அவை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதும், மக்களிடையே ஏற்படும் தொற்றுப்பீதியையும் வெளிக்காட்டுகிறது இந்தப் படம். இன்றைய கரோனா நிலைமைக்கும் இற்றைக்கு ஒரு தசாப்தங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கும் என்ன தொடர்பு?

ஒருவேளை இந்தப் படத்தை பார்த்தவர்கள் அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட்டார்களா? இல்லை; இந்தப் படத்தை உருவாக்கியவருக்கு ஞான உதயம் கிடைத்ததா? இவ்வாறான ஒரு சம்பவம் வருங்காலத்தில் உருவாகப்போகின்றது என்று?

என்னை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராச்சியில் ஒரு குழு முன்னேறிக்கொண்டிருக்க, நான் தொற்றிவிடாதிருக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இன்னொரு குழு ஆரவாரம்…..!

எது எப்படியிருப்பினும் “சுத்தம் சுகம் தரும்” என்ற வாசகத்திற்கு இணங்க ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதுடன். உலக சுகாதார அமைப்புகள் விடுக்கும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றினால் என்னால் உங்களிடம் ஒட்டிக் கொள்ளவோ உயிர்வாழவோ முடியாது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *