மைதிலியைக் காணோம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 2,617 
 
 

கவுதமுக்கு, கிரேட்டர் நோயிடா புத்தா சர்க்யூட்டில் ஓட்டின ரேஸ் எல்லாம் மறந்து விட்டது! பெடலை எத்தனை அழுத்தினாலும், கோவை ஸ்மார்ட் சிடியில், கார் நகர மறுத்தது!

‘ஐயோ! கமிஷனர் கிட்ட சீக்கிரம் போய்த் தீரணுமே! மைதிலிக்கு என்ன ஆச்சு?’ மனசில் மத்தளம், இடி, மின்னல், சுனாமி எல்லாம் ஆல்டோ மயம்! (ஆல் டு கெதெர்)

பக்கத்தில், மைதிலியின் அம்மா- கவுதமின் அக்கா லட்சுமி! அவளுடைய கணவர் பூபதி! அவர்கள் வேண்டாத தெய்வங்கள் இல்லை! மைதிலிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே! என்ற பீதியில் உறைந்து கிடந்தார்கள்.

‘மிரட்டல் போன் எதுனாச்சும் வந்துதா?’ கவுதம் கேட்டான். அவர்களின் தலைகள் இல்லை என்று ஆடின.

“கவுதம்! இன்னிக்கு நேரா கமிஷனர்கிட்ட பேசினாத்தான் வேலை நடக்கும்! சுதந்திர தினம்- எல்லா போலீசும் பிஸிதான்!” ஒரு நண்பன் போன் செய்தான். இன்னொருவன் சொன்னான், “சேச்சுவைப் பிடி! அவனுக்கு கமிஷனர் பழக்கமாம்!”

சேச்சு போன், “அவுட் ஆஃப் கவரேஜ்……அல்லது ஸ்விட்ச் ஆஃப்…….” என்று பறைசாற்றியது.

கவுதம் கமிஷனர் ஆபீஸில் நுழைந்து விட்டான்! சேச்சு விஷயத்தைக் கேள்விப்பட்டு கார் பார்க்கிங்கில் காத்திருந்தான்!

கவுதமும் சேச்சுவும் கடந்த காலத்தில், கார் ரேஸ் சாம்பியன்கள்! நல்ல நண்பர்கள். போலீஸ் வட்டத்தில் சேச்சுவுக்கு நல்ல செல்வாக்கு!

அதனால்தானே வேலை, தீயாய் நடந்தது!

“கொஞ்சமாவது அறிவு வேண்டாமாடா! காலைலிருந்து என்னடா பண்றீங்க!” புது DIG அம்மா செல்லமாகக் கடிந்து கொண்டார்கள்.

“சரி! சொல்லும்மா! எப்படி நடந்தது?” எஸ்.ஐ. மாலதி (ஸ்மார்ட்டாக இருந்தாள்) கேள்வி கேட்கவும் செய்தாள்.

லட்சுமிதான் கோர்வையாக சொல்ல ஆரம்பித்தாள்.

“மைதிலிக்கு அடுத்த வாரம் கலியாணம் அவிநாசியில்! இன்னிக்கு காலேஜ்ல மார்க் ஷீட் குடுத்தாங்கன்னு வாங்கப் போனா!”

“எத்தனை மணிக்கு?”

“காலைல பத்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி டூ வீலர்ல போயிட்டா!”

“கூட யாராவது?

”அவளோட பக்கத்து வகுப்பில் படிக்கும் காஞ்சனா”

“… அடுத்த தெருவில் ஏறிப்பா- தினமும்”

மாலதி காஞ்சனாவின் நம்பரைக் குறித்துக் கொண்டாள்.

‘காணோம்னு எப்படி சொல்றீங்க?”

“அது வந்துங்க!…. என்று இழுத்த லட்சுமியை முறைத்தான் கணவன் பூபதி.

“காலேஜ் போயிட்டு, புள்ள அம்மாவைக் கூப்பிட்டு கேஷ் கொண்டு வரச் சொல்லிச்சு. பார்ட்டி வக்கிறோம்னு சொல்லி! இவளும் காசு கொண்டு போய் கொடுத்திட்டு ரிஸப்ஷன்ல உக்காந்து இருந்திருக்கா 2 மணி வரை!”

“லட்சுமி கூட கலியாண மாப்பிள்ளையும் போயிருக்கிறான்!”

ரெண்டு பேரும் சோறு தண்ணி இல்லாம உக்காந்து கிடந்தாங்க! மூணு மணிக்கு பசங்க யாரும் தென்படல்ல! மொபைல் போட்டா ஸ்விட்ச் ஆஃப் னு வருது!

அப்புறம் என்ன பண்ணீங்க?

அங்க இருந்த மாணவிகள், டீச்சர்கள், ப்ரின்சிபால் எல்லாரையும் பாத்து மைதிலியைப் பத்திக் கேட்டோம்.

“அவ கான்டீன்ல இருந்து உடனே கிளம்பினதை நான் பார்த்தேன்” என்றாள் காஞ்சனா!

“நீ ஏன் அவ கூட திரும்பிப் போகவில்லை?”

“அவ ஷாப்பிங் போகணும் அம்மாகூட அப்படீன்னு சொன்னா!”

தெரிஞ்ச இடங்களுக்கு நாசூக்காக போனில் கேட்டு விசாரித்ததில் கூட, ஒரு பலனும் கிடைக்கவில்லை! மைதிலி என்ன ஆனாள்னு புரிபடவேயில்லை!

அப்புறம் சார் தான் கவுதம்கிட்ட போன் போட்டு உடனே வரச் சொன்னாரு. போலீசுக்குப் போயிடலாம்னுட்டு.- திக்கித் திணறிச் சொல்லி முடித்தாள் லட்சுமி.

“கலியாண மாப்பிள்ளை எங்கே!” அவன் நண்பர்களோட அவன் தனியாகத் தேடிக் கொண்டிருக்கிறான்- தெரிந்த இடங்களில் விசாரித்துக் கொண்டு.

மாலதி சட்டென்று லட்சுமியைத் தனியாகக் கொண்டு போனாள், “ஏதாவது சாப்பிடலாம் வாம்மா!”

சாப்பிடும்போது மாலதி, லட்சுமியிடம் நிறைய விவரங்களை அறிந்து கொண்டிருந்தாள்.

“அம்மா! யார் மேலாவது சந்தேகம் இருக்குதா?”

“இந்தக் கலியாணத்தில் அவளுக்கு விருப்பம்தானே? பையன் யாரு? உறவிலா?”

“ஆமாங்க! எங்க உறவுக்காரப் பையந்தா! டைடல் பார்க்குல வேலை பாக்குறான். பெரிய சம்பளம்!. அவன இவளுக்கும் ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொன்னா”

“மாலதி! எல்லா ஸ்டேஷனும் அலெர்ட்ல வச்சிடு! புள்ள போட்டோ விவரங்கள் போட்டு நம்ம வாட்ஸ் அப் க்ரூப்ல அனுப்பிடு! Inspector சொன்னார்.

“ நாங்க துடியலூர்ல சொல்லிடறோம்! உடனே போயி நீங்க ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைண்ட் காப்பியை குடுத்திடுங்க!

இன்னிக்கு திங்கள் சந்தை வேற! சுதந்திர தினம் பந்தோபஸ்து வேற! பிஸியா இருப்பாங்கப்பா!

“மைதிலி!” லட்சுமியின் முகம் இன்னும் நேராகவில்லை! கவலையில் தொய்ந்து விட்டாள். பூபதி வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

கவுதம், சேச்சு இருவருமாக எல்லா நடைமுறைகளையும் சமாளித்தனர்.

மாப்பிள்ளையின் போன் வந்தது!

அக்கா! அவள் ஏதோ நண்பர்களுடன் காரில் ஏறினதை அவளுடைய ஒரு பிரெண்டு சொல்கிறாள்.

எங்கேடீ போனே! லட்சுமி அரற்றினாள்.

வீட்டுக்கு போயி எல்லாரும் வேறு ஏதாவது வழிகளை யோசனை செய்யலாம்.- போலீசு அவிங்க வேலையைப் பாக்கட்டும். பூபதி சொல்ல, அனைவரும் மைதிலியின் வீட்டை நோக்கி நகர்ந்தனர்.

அந்த kia காரில் மொத்தம் நான்கே பேர் உட்கார்ந்திருந்தனர். மைதிலியின் கண்கள் மிரண்டிருந்தன. ஸ்விட்ச் ஆஃப் ஆன தன் மொபைல் போனை அடிக்கடி பார்த்தாள். வண்டி வேகமாக, பொள்ளாச்சி சாலையில் ஓடிக்கொண்டிருந்தது.

‘மைதிலி! நீயே எங்களை மாட்டி விட்டுடுவே போல!” – சுந்தரம் அழகாகச் சிரித்தான். முகத்தில் கலியாணக் களை!

எங்கதான் போறோம் இப்ப? கேட்டாள் காஞ்சனா

ரொம்ப முக்கியமோ? மாப்பிள்ளைப் பையன்-அர்ஜுன் திரும்பிப் பார்த்து காஞ்சனாவைக் கேட்டான்.

அப்படி இல்ல டியர்! அடுத்த பிளான் என்ன? லட்சுமி அம்மாவ போன் போட்டு கேட்கணுமா?

உரத்த குரலில் சுந்தரம் சொன்னான். “யாரையும் ஏதும் கேட்க வேண்டாம்” நம்ம கலியாணம் முடிஞ்ச பிறகு பாக்கலாம்.

“நல்ல வேளை! லட்சுமி அம்மா நம்ம சப்போர்ட்ல இருக்காங்க! அப்போவே மைதிலி சுந்தரம் விவகாரம் அம்மாவுக்குத் தெரியும்.

அப்ப ஏன் கலியாணம் தேதி வரை வந்து விட்டதே!

அப்பாவின் பிடிவாதம்தான். அவருக்கு சுந்தரத்தைப் பிடிக்கவில்லை. அவன் பிஸினஸ் செய்கிறான் என்று அவருக்கு அவனிடம் பிடிப்பு இல்லை. அன்னாடம் காய்ச்சி! காசுக்கு நம்மகிட்ட வந்து நிப்பான்-தினமும்- அப்படீன்னு சொல்வார் அடிக்கடி.

காஞ்சனா தன் காதலில் தெளிவாகத்தான் இருந்தாள். ஆனால் எதிர்க்கத் துணிவு இல்லை. அருண் மதில் மேல் தயாராக இருந்தான் பூனைபோல!

லட்சுமிதான் இருவருக்கும் புத்தி சொல்லி(!) மார்க் ஷீட் வாங்கும் தினம் பூபதிக்குத் தெரியாமல் ஓடிவிட பிளான் போட்டிருந்தாள்.

பிளானின் அடுத்த கட்டம் அவர்கள் மலுமிச்சம்பட்டிக்கு அருகில் ஒரு கோவிலில் மணமுடித்து, ஊருக்குத் திரும்புவதுதான்.

கார் மலுமிச்சம்பட்டி வளைவில் திரும்பவும், அங்கே கையில் மைதிலி போட்டொவுடன், வாகன சோதனை செய்து கொண்டிருந்த போலீசார் kia காரை நிறுத்தவும் சரியாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *