கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2023
பார்வையிட்டோர்: 3,955 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மழை சற்றுக் குறைந்ததும் வீதியில் நடமாட்டம் ஆரம்பித்தது. கனகுவை ஒரு ஜவுளிக் கடைப் பத்தலில் நிற்க வைத்து விட்டுப் போயிருந்த புருஷனும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வந்து சேர்ந்தான். முதல் கேள்வியாக “பெரியவர் இருந்தாரா?” என்று கேட்டாள் அவள்.

“ம்…”

“பணம் குடுத்தாரா?”

“நாளைக்குத் தர்றேன்னுட்டாரு.”

“நாளைக்கா?”

அவனது தலையைத்துவட்டி விடுவதற்காகச் சேலை முந்தானையைத் துழாவிய அவளது கரங்கள் அப்படியே நின்றன.

”நானும் மொதலாளி கிட்ட அப்பவே கேட்டுட்டேன், வாரக் கூலிய தெனக் கூலியா மாத்திக் குடுத்திருங்கன்னு. சரின்னு தான் சொன்னார். இப்பக் கேக்கப் போற நேரத்திலே ஒரு பார்ட்டி வந்திருச்சு. ஏவாரம் போற நேரத்துல பணம் குடுத்துட்டுப் பேசுங்கன்னா குறுக்கால நிக்க முடியும்?”

இதில் நியாயம் இருப்பதாகவோ, இதற்கு மேல் அவளுால் என்ன செய்ய முடியும் என்றே அவள் யோசிக்கவில்லை. இரவு உணவுக்காகக் காத்திருக்கும் குழந்தைகளின் பசி முகங்களே அவளது கண்களில் தெரிந்தன. “ஒனக்குத் தைரியம் இல்லாட்டிப் போவுது, நா வேணாப் போயி வாங்கி யாரவா?” என்று கேட்டாள் அவள்.

”வேணாம். நீ அங்கெல்லாம் போக வேளும்.”

“ஏன்? போனாக்கா என்ன?”

“சொன்னாக் கேப்பியா…. போடி வீட்டுக்கு” – அவனுக்குக் கோபம் வந்தது.

‘சட்’டென்று அவள் முகம் சிறுத்தது. எங்கோ, எதன் மீதோ தோன்றிய எரிச்சலில் சித்த இரு நானும் வந்துட்டேன்” என்று அவன் கூறியதைப் பொருட்படுத்தாமல் ‘விடுவிடு‘வென்று நடக்க ஆரம்பித்தாள் அவள்.


பெட்டிக் கடையில் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு திரும்பிய ஆறுமுகத்துக்கு ஏமாற்றமாயிருந்தது. அதற்குள் அவள் போய்விட்டிருந்தாள்.

கொஞ்ச தூரத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. ஒன்று, அவனது குடிசைக்கு. மற்றது வேலை பார்க்கிற விறகு டெப்போ வுக்கு. முதலில் பீடியைப் புகைத்துக் கொண்டே குடிசைக்குப் போகிற பாதை வழியாக நடந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் அவளைக் காணவில்லை. திடீரென்று அவனுக்குச் சந்தேகம் வந்தது.

“ஒருவேளை டெப்போவுக்குப் போயிருப்பாளோ?”

“அசாத்திய துணிச்சல்காரி அவள். தனது சொல்லை மதிக்காமல் போயிருக்கவும் கூடும்”.

மனத்துக்குள் ‘ஜிவ்’வென்று என்னவோ இழுபட்டது.

“வரவர சிறுக்கி மகளுக்குக் கொழுப்பு ஏறிக்கிட்டுத்தாம் போருது,”

திரும்பி வந்து மீண்டும் விறகு டெப்போவை தோக்கி நடக்க ஆரம்பித்தான்.

முதலாளியைப் பற்றி அவனுக்கு ஒன்று மில்லை. அவரது மகன் – சின்ன முதலாளியை- நினைக்கும்போதுதான் பயமாக இருந்தது. செடியில் சேலை சுற்றியிருந்தால் கூட நின்று பார்த்துவிட்டுப் போகிற ஜாதி அவன். டெப்போவில் சின்ன வயது சுமைக் கூலிப் பெண்களின் நிறையக் கதைகள் இவனுக்குத் தெரியும். தெரிந்து என்ன? உத்திரவாதமான வேலைக்கும். சலவைத் தாள் பவிசுக்கும். புதுச் சேலைக்கும் வேறு வழி? சின்ன முதலாளியின் ‘ஏஜெண்டு’ ராமாத்தாளின் காவிப் பல் சிரிப்புக்குப் பல பேர் பணிந்து போய் விடுகிறார்கள்.

கனகுவும் புருஷனுடன் அங்கு வேலை பார்த்தவள்தான், ராமாத்தாளுடன் நெருங்கிப் பழகவே ஆறுமுகம் வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லி விட்டான். உள்ளூற ஏதோ ஒரு சம்சயம். குறுகுறுப்பு, தற்செயலாகக் கூட டிப்போவுக்கு வர அனுமதிப்பதில்லை.

”அவ்வளோ சொல்லியிருந்தும் இப்ப ஏம்போனா? என்ன காரணம்?”

ஆறுமுகத்துக்கு என்னவெல்லாமோ தோன்றின.

டிப்போவுக்கு அவன் போனபோது பெரிய முதலாளி மட்டுமே அங்கு இருந்தார். அவனைக் கண்டதும், “என்னடா ஆறுமுகம்! இன்னுமா நீ போகலை?” என்று கேட்டார்.

“ஆமாங்க. வந்து…”

அவனுக்குச் சரியாகப் பேச்சு வரவில்லை. கண்கள் இங்கும் அங்குமாக அலைந்தன. அம்பாரமாகக் குவிந்து கிடந்த விறகு மறைப்பில் பார்வை நிலைத்தது.

“கூலி கேட்டல்ல? சின்னவன் இருந்தாக் கூட்டியா, கல்லாச்சாவி அவங்கிட்ட இருக்கு!”

ஆறுமுகம் சின்ன முதலாளியைத் தேடினான்.

“அவர் சித்த முத்தித்தான் வெளியே போனார்” என்றான் வாட்ச்மேன்.

“அப்படி என்ன அவசரம்? பெரியவர் கிட்டக் கூடச் சொல்லாம?”

”அவசியம் சொல்லணுமா?” வாட்சமேன் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சிரித்தான்.

“ராமாத்தா வந்திருச்சு..”

யாராவது புதிய கிராக்கி இட்டும்போது மட்டுமே இந்நேர அவள் வருவது வழக்கம்.

ஆறுமுகத்துக்கு நெஞ்சில் கோடாரி இறங்கிய மாதிரி இருந்தது கேட்ட வேகத்தில் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.


சிறு தூறலாக இருந்தாலும் குடிசைக்கு வருவதற்குள் தெப்பமாக நனைந்து விட்டான் அவன்.

குழந்தைகள் மூன்றும் குடிசைக்கு முன் தேங்கியிருந்த நீரில் காகிதக் கப்பல்கள் விட்டுக் கொண்டிருந்தன.

“அம்மா எங்கே? இங்கே வந்தாளா?”

மூத்த பெண்ணைப் பார்த்து வினவினான். விளையாட்டு முகப்பில் இருந்த அதற்கு இவன் கேட்டது காதில் விழவில்லை.

“கழுத…நா என்ன கேக்கறேன். நீ என்ன செஞ்சிக்கிட்டிருக்கே?”

‘பளா’ரென்று முதுகில் ஒன்று வைத்தான். அது ‘ஙே’ என்று கத்திக் கொண்டு உள்ளே கப்பல்களை விட்டு விட்டுத் தன் ஓடிற்று, னைக் காத்துக்கொள்ள, ‘நடுவனும்’ அவளுக்குப் பின்னால் ஓடினான். கைக் குழந்தை மட்டும் விவரம் புரியாமல் இவனது மடியையே குறியாக வைத்து, தாலி வத்து, ”அப்பா…. பிச்சுக்கோத்து…” என்றது.

“சனியன்களா…”

ஆறுமுகம் பெரிசுகளைத் துரத்திக்கொண்டு உள்ளே செல்லும்போது. கனகு வாசலில் வந்து நின்றன், “பட்டினி கிடக்கிற புள்ளைங்கள ஏய்யா அடிக்கிறே? அதும் பாவம் ஓன்ன விடுமா?” தைரியம் இருந்தால் அவனை அப்போதே திருப்பித் தாக்கத் தயாராக இருப்பவள் போல் ஆவேசத்துடன் வினவினாள்.

அவனுடைய ஆத்திரமும், கோபமும் ‘சட்’ டென்று அடங்கின, நெருப்பு அணைத்த மாதிரி இருந்தது. புகை மட்டும் வந்தது. “பாத்தியா. மழைல வெளையாடறத? நாளைக்கு ஒண்ணுன்னு ஆருடி பாக்கறது?” என்றான் தன்னை விட்டுக் கொடுத்து விடாமல்.

”ஏன்..ஏழூரு சீமைகளையும் ஆன்ற ராசா நீதான் இருக்கியே, பாக்க மாட்டே? பொளப்பத்துப் போயி அடிக்கியே. பசிக்கு துன்னு அழுதுச்சுங்க. நாத்தான் வெளையாட அனுப்பினேன். இன்னும் அடுப்பப் பத்த வைக்கல்ல. முதல்ல அதுக்கு வழி பாரு…” அவனுக்குக் கோபம் வருவதையோ, அதனால் சச்சரவு ஏற்படும் என்பதையோ துளிக்கூட சட்டை செய்யாத தொனியில் அவள் பின்னும் ஏதேதோ பேசிக்கொண்டு போனாள், மற்று குடும்பத்து ஆண்கள் நடந்துகொள்கிற முறை; இவனொத்த வயசுப் பெண்கள் இருக்கிற இருப்பு: வாழ்கிற வாழ்க்கை….

சாதாரணமாக ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே ‘சுருக்’கென்று கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடுகிற அவனுக்கு இப்போது ஏனோ ஒன்றுமே நேரவில்லை, பதிலுக்கு மனத்தில் ஒரு மூலையில் ஏதோ ஒரு நிறைவு கூடிக் கொண்டே போயிற்று. அழுகிற குழந்தைகளைச் சமாதானப் படுத்துகிற மாதிரி “வாங்கடா கண்ணு..படுத்துக்கலாம்”” என்று கூறியபடியே இரண்டு குழந்தைகளையும் இரண்டு கரங்களால் தூக்கிக்கொண்டான் அவன்.

பாய் விரித்துவிட்டுத் திரும்பியபோது. கனகு ஏனோ அழகானவளாகத் தெரிந்தாள்!

– 1980-06-22

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *