கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,429 
 

(1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வடிவேலுவிற்குச் சில நாட்களாக வலது காது குத்து குத்தென்று குத்தியது. ஒரே வலி. அந்த வேதனை தாங்க முடியாத அளவிற்கு அகோரமாக இருந்தது.

அவன் தாயார் என்னென்னவோ கைமருந்துகளை யெல்லாம் செய்து பார்த்தாள். ஒன்றுமே பலிக்கவில்லை.

காதுக் குத்தோ, பல் வலியோ சகிக்க முடியாமலிருந் தால் ஒரு டிஸ்பிரினை வாயில் போட்டு தற்காலிகமாக நோவைக் கட்டுப்படுத்தக்கூட. அந்தக் கிராமத்தில் முடியாது. ஏனென்றால் ஊருக்குள்ளே கொண்டு வரக் கூடாது எனத் தடை செய்யப்பட்ட. பொருட்களில் டிஸ்பிரின், அஸ்பிரின் குளிசைகளுமடங்கும். ஆகவே மூதூர் ஆஸ்பத்திரிக்குப் போகமட்டும் வலியைப் பொறுத் துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை!

வடிவேலுவிற்கு மூதூர் வைத்தியசாலைக்குப் போக வும் பயம். ஏனென்றால் அவனுக்கு வயது பத்தொன்பது. வயதுக்கு மீறிய வளர்ச்சி.

ஆகவே உள்ளூர் அனுபவஸ்தர்களின் கைமருந்து களையே பிரயோகம் பண்ண வேண்டியிருந்தது.

“இது கணச்சூடுதான். நன்றாகக் குளித்து முழுக வேணும்” என்றார் வடிவேலுவின் தாய் வழிப் பாட்டனார்.

வடிவேலுக்கு அந்த வேதனையிலும் சிரிப்புத்தான் வந்தது!

‘பத்து வருசத்துக்குப் பின்னால இந்த மாரிக்குத்தான் நல்லா மழை பெய்யுது என்று எல்லாரும் சொல்றாங்க. கார்த்திகை மாதம் முழுக்க ஒரே மழைதான். மழையில நெலமெல்லாம் தன்னூத்துக் கொண்டு ஊரெல்லாம் வௌளக்காடு வெயில் முகத்தையே கணக்கிடக்கல்ல. ஒரே குளிர்! வெடவெடென்று கூதல். இந்த நிலையில் கணச்சூடும் மண்ணாங்கட்டியும்’ என்று எண்ணினான் வடிவேலு. காது வலித்தது! அந்த வலி தொடங்கி ஒரு மாதமாகி விட்டது.

தற்போது வலது கன்னம் முழுவதும் வீங்கி வடிவேலு படுக்கையில் வீழ்ந்து விட்டான். ‘

விதவைத் தாய்க்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை. பாவம்! அவளது இஷ்ட தெய்வமான வெருகற் சித்திர வேலாயுதர்கூடக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பூசை புனஸ்காரங்களின்றித் தவித்து நிற்கையில் அவளால் வேறு யாரிடந்தான் முறையிட முடியும்?

அவளுக்கு இன்னுமொரு பயம்.

ரோந்து வாற ஆமிக்காரங்க, வேலிக் கம்பிய வெட் டிற்று நடுமுற்றத்தால வரக்க, படுத்துக் கிடக்கற மகனைப் பிடிச்சுக் கொள்வானுகளே.

தலைக்கோழி கூவிச் சில பொழுதுகள் கழிந்த பின்ன ர்…

விடிவெள்ளி காலித்துக் கிழக்கு வெளுத்துக் கொண்டி ருக்கையில், காகங்கள் கரைவதற்குச் சற்று முன்னால்,

நாய்கள் குரைத்து ஊளையிடும் நாயின் ஊளைச் சத்தம் இயமன் வருவதற்கான கட்டியம் என்பது ஐதீகம்! இப்போது யதார்த்தம்!

நாயின் ஊளைச் சத்தம் கேட்டதுமே வடிவேலுவும் அவனொத்த இளைஞர்களும் வீட்டைவிட்டு ஓடிவிடுவார் கள். கிழடு கட்டைகள் மட்டுமே வீட்டிற் தங்கும்.

ஊருக்கருகால் ஓடும் ஆற்றைக் கடந்தாற் கரச்சை. நீர் முள்ளிகளும் கண்டல் மரங்களும் நெருங்கிய காடு.

மீண்டும் ஊர் ‘கிளீயர்’ ஆகும் வரையும் அந்தக் கரச்சைக் காடுகள் தான் இளைஞர்களின் சரணாலயம்! சுவிஸ்ஸும், பிரான்சும், கனடாவும் அக்கிராமதது இளை ரூர்களுக்கு எட்டாத விவகாரம்!

கன்னம் வீங்கிப் பருத்திருக்கும் வடிவேலுவின் தலை மாட்டில் இருந்தபடி ‘ஆமிக்காரன் வந்தால் எப்படி ஓடி ஒளிக்கப் போகிறான்’ என்று கலங்கியவாறே குன்றிப் போயிருக்கிறாள் அவன் தாய் வள்ளியம்மை.

“என்னக்கை செய்றா ஊட்டுக்குள்ள” என்ற கேள்வியோடே அவள் தம்பி சிவப்பிரகாசம் வீட்டுக்குள் வருகிறான்.

“காதுக்குத்து இன்னமும் அப்படித்தாண்டா இருக்கு. எந்த மருந்துக்கும் கேக்கல்ல! மூதூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகவும் பயமாயிருக்கு ஆமிக்காரனுக்கு எல்லா வாலிபப் புள்ளைகளும் புலிதான்!”

சிவப்பிரகாசம் சற்று யோசித்த பின்னர், தான் கொண்டு வந்த சைக்கிளை வீட்டுக்குள் கொண்டு வந்து, சைக்கிளை ஸ்டாண்டில் நிற்க வைத்துப் பின்னர் சில்லைச் சுழல வைக்க பெடலைப் பிடித்துச் சுழற்றும் படி வடிவேலுவின் சின்னத்தம்பிக்கு ஆணையிடுகிறான்.

சக்கரம் சுழல்கிறது. அதன் சுழற்சியில் சைக்கிளின டைனமோ வேலை செய்ய லைற் எரிகிறது.

வடிவேலுவைத் தூக்கி நிறுத்தி வைத்து அவன் காதுக்குள லைற்றின் ஒளியைப் பாய்ச்சுகிறான் சிவப் பிரகாசம்.

லைற் ஒளியில் வடிவேலுவின் காதுக் குருத்தில் ஓர் உண்ணி!

இரத்தம் குடித்துப் பருத்துக் கபில நிறமாய்…

லைற் ஒளியிற் துல்லியமாகத் தெரிகிறது. சிலப் பிரகாசம் ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் பேன் பிடியாய்ப் பிடித்து ஊசித் துவாரத்துள் ஒட்ட கத்தை நுழைத்த கதையாக அவ்விரல்களைக் காது மடலில் நுழைத்து… “விடுங்க மாமா”

வடிவேலு அலறுகிறான். அவன் அலறுகையிலேயே சிலப்பிரகாசத்தின் பேன்படி விரல்கள் உண்ணியோடு வெளிவருகின்றன. சருகுண்ணி ! எப்படி இவன் காதிற்குள் நுழைந்தது. வடி வேலுதான் நொடியை அவிழ்க்கிறான்.

“ஒண்ணரை மாசத்துக்கு முன்னால ஆமிக்காரன் வரக்க வெள்ளாப்பிலேயே கரச்சைக், ஓடினன். அண்டு பகல் முத்திலா தண்ணி வென்னி இல்ல. பசிக்களையில நித்திரை கொண்டிற்றன். பொழுது படத்தான் வீட்ட வந்தேன். அன்றயிலிருந்துதான் இந்தக் காது குத்து!

“சரி உண்ணியக் கழட்டிற்றன். இனி வலிக்காது” என்றாள் சிவப்பிரகாசம்.

நம்ம எல்லாரையும் பிடிச்சிருக்கிற உண்ணி எப்ப கழரப் போகுதோ? செத்த மாட்டில உண்ணி களண்ட மாதிரி எண்டு ஊரில சொல்வாங்க. நம்ம சமூகம் எல்லாம் செத்தாத்தான் உண்ணி கழருமோ? என்று எண்ணிக் கொண்டான் வடிவேலு.

– 1993

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *