அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4
வந்து இருந்தவர்கள் ல்லோரும் ஒரு வாய் வைத்தார் போல் ‘குழந்தை தங்க விகரம் போல கலரா,அழகா இருக்கு’என்று சொன்னார்கள்.லதாவுக்கும், கனேசனுக்கும் ‘மாஸ்டருக்கும்’ சந்தோஷ மாக இருந்த்து.
அடுத்த நாள் ஒரு வாத்தியாரை அழைத்து வந்து வீட்டை ‘புண்யா வசனம்’ பண்ணினார். வாத்தியார் கணேசனைப் பார்த்து “குழந்தைக்கு என்ன பேர் வைக்கப் போறேள்”என்று கேட்டதும் கணேசனும் காயத்திரியும் கோரஸாக “குழந்தைக்கு ‘லதா’ன்னு பேர் வையுங்கோ வாத்தியார்“என்று சொன்னதும் அந்த வாத்தியார் குழந்தைக்கு ‘லதா’ என்கிற பேரை ‘நாம கரணம்’ பண்ணி விட்டு தக்ஷனையை வாங்கிக் கொண்டுப் போனார்.கணேசன் தன் மாமனாருடன் உட்கார்ந்துக் கொண்டு காயத்திரி பண்ணி இருந்த கல்யாண சாப்பாட்டை சாப்பிட்டான்.அவர்கள் சாப்பிட்டு விட்டு எழுந்த பிறகு காயத்திரி மீதி இருந்த சாப்பாட் டைப் போட்டுக் கொண்டு சாப்பிட்டாள்.கொஞ்ச நேரம் எல் லோரும் பேசிக் கொண்டு இருந்து விட்டு படுக்கப் போனார்கள்.
மாமனார் தூங்கி விட்டு இருப்பார் என்று நினைத்து கணேசன் காயத்திரியிடம் “காயத்திரி, நமக்கு ஏழு வருஷம் கழிச்சு லதா பொறந்து இருக்கா.பொறக்கும் இந்த முதல் குழந்தை ஒரு ஆண் குழந்தையா பொறக்கணும்ன்னு நான் தினமும் பகவானை வேண்டி வந்தேன்.ஆனா பகவான் என் ஆசையை பூர்த்தி பண்ணாம ஏமாத்திட்டார்.இந்த குழந்தை பொண்ணா பொறந்துடுத்து காயத்திரி. லதாவை நாம ரெண்டு பேரும் நம்முடைய ஆசையைக் கொட்டி வளத்து ஆளாக்கி வரணும்.நான் வே லை செஞ்சு வர இந்த ‘நித்திய கண்ட பூரண ஆயுசு’ ‘ஸ்வீட் மாஸ்டர்’ வேலையை நம்பி நாம ரெண்டா வது குழந்தைப் பெத்துக் கொள்றது ரொம்ப தப்பு.இப்பவே அக்கம் பக்கத்தில் நிறைய பொ¢ய ஹோட்ட ல்கள் வரப் போறதுன்னு பேசிண்டு இருக்கா.ஒரு வேளை நமக்குப் பொறக்கிற ரெண்டாவது குழந் தையும் ஒரு பொண்ணாப் பொறந்துட்டா,இவா ரெண்டு பேருக்கும் நாம துணி மணிகள் வாங்கிக் குடுத்து,படிக்க வச்சு,ஒரு நல்ல இடத்தில் கல்யாணமும் பண்ணிக் குடுக்க நம்ம கிட்டே அவ்வளவு பணம் காசு இருக்காதே.இந்த ரெண்டு பெண் குழந்தைகளும்,ஒரு ஏழை பையனை கல்யாணம் பண் ணிண்டு வந்து நம்மைப் போலவே கஷ்டப் பட்டு வரதை என்னால் நினைச்சுப் பார்க்கவே பிடிக்கலே. நாம தான் கஷ்டப்பட்டு வந்துண்டு இருக்கோம்.நம்ம வயத்லே பொறக்கும் குழந்தைகளாவது சந்தோ ஷமா,சௌக்கியமா,பணம் காசோடு இருந்து வர வேணாமா சொல்லு.அதனாலே என் மனசிலே ஒன் னு தோன்றது.நான் உன் கிட்டே அதை சொல்வேன்.நீ அதை ஒத்துக் கொள்ளுவியா” என்று அழாத குறையாக கேட்டான்.‘தன் ஆம்படையான் இந்த மாதிரி கெஞ்ஜிப் பேசுவதைக் கேட்டதும் காயத்திரிக்குத் தூக்கி வாரி போட்டது.
‘இவர் என்ன சொல்லப் போறாரோ பகவானே.இத்தனை வருஷம் கழிச்சு நமக்கு பகவான் தன் கண்ணைத் தொறந்து இருக்கார்.அது பொண்ணா இருந்தா என்ன,பிள்ளையா இருந்தா என்ன.இவ ருக்கு முதல் குழந்தை பிள்ளையா பொறக்க வேணும்ன்னு ஆசை.எனக்கும் தான் அந்த ஆசை இருந் தது.ஆனா என்ன பண்றது.பகவான் சித்தம் வேறே மாதிரி இருக்கே.அதை நாம அதை ஏத்துண்டே ஆகணும்.இவர் என்ன தோன்றது இவர் மனசிலே.நான் சொன்னா நீ ஒத்துக் கொள்ளுவியான்னு வே றே கேக்கறாரே பகவானே.ஒரு வேளை இந்த பொண் குழந்தை நமக்கு வேணாம்….. ‘ அதற்கு மேல் அவளால் நினைத்துப் பார்க்கவே பயமாய் இருந்தது.‘பகவானே அப்படி ஏதாவது இவர் விபா£தமா சொ ல்லாம இருக்கணுமே.என்ன சொல்லப் போறாரோ’என்று பயந்து கொண்டே “சொல்லுங்கோ,நீங்க சொ ல்லி நான் ஒத்துக் கொள்ளாம இருப்பேனா.சொல்லுங்கோ.நீங்க இந்த மாதிரி என்னிடம் கெஞ்ஜி கேட் டதே இல்லையே.நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்கோ”என்று பயந்துக் கொண்டே கேட்டாள் காய த்திரி.தன் கணவன் என்ன சொல்லப் போறாரோ என்று நினைத்து காயத்திரி மனசு ‘திக்’‘திக்’ என்று
அடித்துக் கொண்டு இருந்தது.
கணேசன் ¨தா¢யத்தை வரவழைத்துக் கொண்டு “காயத்திரி, நான் என்ன சொல்றேன்னா, நமக்கு இந்த ஒரு குழந்தையே போதும்ன்னு நான் நினைக்கிறேன்.ரெண்டாவது குழந்தை நமக்கு வேணாம்ன்னு எனக்குத் தோன்றது.எனக்கு வர இந்த சின்ன சம்பளத்லே இந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக் குடுத்து,அவ ஆசைப் பட்ட துணீமணிகள் எல்லாம் வாங்கி குடுத்து,இவளை நல்ல ஸ்கூலில் படிக்க வச்சு,ஒரு நல்ல பையனாப் பாத்து நம்மிடம் இருக்கும் பணத்தை எல்லாம் போட்டு அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டு,நாம நிம்மதியா இருந்து வரலாமா.நீ என்ன நினைக்கிறே” என்று தட்டுத் தடுமாறிக் கேட்டான்.கணேசன் சொன்னது காயத்திரி காதில் தேனாகப் பாய்ந்தது. ’அப்பாடா இதைச் சொல்லவா இவர் இவ்வளவு பூர்வ பீடிகைப் போட்டார்.இதை சொல்லவா இவர் இவ்வளவு தயங்கினார்’என்று நினைத்து நிம்மதி அடைந்தாள் காயத்திரி.நாம கேட்டதுக்கு காயத்திரி இன்னும் பதில் சொல்லம இருக்காளே’என்று நினைத்து “காயத்திரி,நான் கேக்கறேன்.நீ பதில் சொல் லாம இருக்கே.நான் சொன்னது உனக்குப் பிடிக்கலையா”என்று மறுபடியும் கேட்டான் கணேசன். காயத்திரி தன்னை சமாளித்துக் கொண்டு “நீங்க கேட்டப்ப நான் ஏதோ யோஜனைப் பண்ணீண்டு இருந்தேன்.அதனால் தான் உடனே என்னால் பதில் சொல்ல முடியலே.எனக்கு ஒரு ஆட்க்ஷபனையும் இல்லை.உங்களுக்கு எது சரின்னு படறதோ அதைப் பண்ண நான் தயாரா இருக்கேன்.உங்க சந்தோ ஷம் தான் என் சந்தோஷம்.நீ சொன்னபடியே பண்ணலாம்”என்று சொல்லி பெரு மூச்சு விட்டாள் காயத்திரி.
தன் மாப்பிள்ளையும்,பொண்ணும் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்ட ‘மாஸ்டருக்கு’ கவலை வந்து விட்டது.’என்னடா இது.இவா ரெண்டு பேரும் இப்படி பேசிண்டு இருக்காளே.நமக்குத் தான் ஒரு பிள்ளைக் குழந்தை பெத்துக்கற பாக்கியம் இல்லே.காயத்திரிக்காவது ஒரு பிள்ளைக் குழந்தைப் பொறக்கும்,அவன் நமக்கு ‘நெய் பந்தம்’ பிடிப்பான்னு தானே இத்தனை வருஷமா நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம்.இவா ரெண்டு பேரும் இந்த மாதிரி முடிவு எடுத்து,அந்த ஆசையிலும் மண் ணை அள்ளிப் போட்டுட்டாளே இவா பகவானே.நீ எனக்கு ஒரு பிள்ளையே தான் தரலே.ஒரு பேரனு ம் இல்லேன்னு ஆயிடுத்தே.என் மூச்சு நின்னுப் போனா எனக்கு யார் ‘நெய் பந்தம்’ பிடிப்பா.நாம என்ன பண்ணலாம்.இந்த ஜென்மம் இப்படி வீணாப் போயிடுத்தே’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் புரண்டுப் புரண்டுப் படுத்துக் கொண்டு இருந்தார். அவரு க்குத் தூக்கமே வர வில்லை.அவர் சின்னவரா இருந்த போது ஒரு ஞாயித்துக் கிழமை அனந்த ராம தீஷீதர் சொன்ன கால க்ஷபத்தில் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வந்தது.
‘வாழ்க்கையில் ஒருத்தருக்கு அவர் காலத்துக்கு அப்புறமா,அவருக்கு ‘கொள்ளிப் போட’ பிள் ளையோ,’நெய் பந்தம்’ பிடிக்க ஒரு பேரனோ இல்லாம இருக்கும் நிலை ஏற்பட்டால்,அந்த பொ¢யவர் காசிக்குப் போய் தன் பிராணனை விட்டா,அந்த க்ஷத்திர மகிமையால் அவருக்கு நல்ல கதி கிடைக்கும்.காசி க்ஷத்தரத்திற்கு அத்தனை மகிமை உண்டு’ என்று சொன்னது அவர் ஞாபகத்துக்கு வந் தது.உடனே அவர் ‘நாம அந்த காலஷேபத்தில் சொன்னது போல பேசாம மாப்பிள்ளைக் கிட்டேயும், பொண்ணு கிட்டேயும் சொல்லிண்டு,நம்ம கிட்டே இருக்கிற பணத்தை எடுத்துண்டு, காசிக்கு போய் மீதி காலத்தை அங்கே கழிச்சுட்டு,காசியிலேயே கண்ணை மூடிடலாம்’ என்று முடிவு என்று பண்ணி னார்.இந்த முடிவு இப்போ அவருக்கு கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது..
அன்று ஞாயித்துக் கிழமை.கணேசன் ஆத்தில் இருந்தான்.’மஸ்டர்’ சாயங்காலமா காயத்திரி க்கு நிறைய புஷ்பமும் மாப்பிள்ளைக்கு பிடிச்ச பாதுஷாவையும் வாங்கிண்டு பொண்ணு வீட்டுக்கு வந்தார்.ஹாலில் காயத்திரியும் கணேசனும் குழந்தை லதாவுடன் விளையாடி கொண்டு இருந்தார்கள். மாமனாரைப் பார்த்ததும் கணேசன் எழுந்து நின்றுக் கொண்டு “வாங்கோ மாமா,வாங்கோ” என்று அவ ரை வரவேற்றான் காயத்திரியும் அப்பாவைப் பார்த்தது.’’வாப்பா, வா”என்று சொல்லி குழந்தையை கணேசனிடம் கொடுத்து விட்டு எழுந்துக் கொண்டாள்.’மாஸ்டர்’ உள்ளே வந்து ஹாலில் போட்டு இருந்த சோபாவில் உட்கார்ந்தார்.காயத்திரி சமையல் ரூமுக்குப் போய் அப்பாவுக்கு காப்பி கலந்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.’மாஸ்டர்’ காயத்திரி கொண்டு வந்த காப்பியை வாங்கி குடுத்து விட்டு டவரா டம்ளரை காயத்திரி இடம் கொடுத்தார்.
கொஞ்ச நேரம் ‘லோகாபிராமமாக’ ஏதோ பேசிக் கொண் டு இருந்து விட்டு ‘மாஸ்டர்’ காயத்ததி ரியை பார்த்து ”அம்மா காயத்திரி,உனக்கு ஒரு நல்ல ஆம்படையானை நான் பாத்துக் குடுத்து இருக் கேன்.நீயும் சமத்தா ஒரு அழகான பெண் குழந்தையை பெத்துண்டு விட்டே.குழந்தையும் பார்க்க ரொம்ப நன்னா இருக்கு.நான் என் வாழ்க்கையை நன்னா வாழ்ந்துடேன்.எனக்கு இனிமே ஒன்னும் இல்லே என் வாழ்க்கைலே எதிர் பார்க்க.எனக்கு எந்த ஆசையும் இல்லே.நான் பகவானை போய் அடையறது ஒன்னு தான் இனிமே என் ஆசை.என் கை கால் திடமா இருக்கும் போதே,நான் காசிக்கு ப் போய் இருந்து விடலாம்ன்னு ரொம்ப ஆசைப் படறேன்.மீதி வருஷங்களை காசிலே வாழ்ந்துட்டு, என் காலம் முடியும் போது கண்ணை மூடலாம்ன்னு இருக்கேன்.நான் காசிக்குப் போக டிக்கட் ‘புக்கி ங்க்’ போட்டுட்டேன்”என்று நிதானமாகச் சொன்னார்.
உடனே கணேசன் ”என்ன மாமா இது,இப்போ தான் எங்களுக்கு ஒரு குழந்தை பொறந்து இரு க்கு.இன்னும் நிறைய எங்க வாழ்க்கையிலே நல்லது எல்லாம் நடக்கணும்.இப்போ பாத்து நீங்க காசிக்கு போகணும்ன்னு சொல்றேளே.எங்க கூட இன்னும் கொஞ்ச வருஷம் இருந்துட்டுப் போகக்கூடாதா. எனக்கும் காயத்திரிக்கும் யார் இருக்கா சொல்லுங்கோ”என்று அழமாட்டாத குரலில் கேட்டான்.அவர் மௌனமாய் இருந்தார்.கொஞ்ச நேரம் கழிச்சு “இல்லே மாப்ளே நான் சொல்றதை கொஞ்ச கவனாமா கேளுங்கோ.எனக்கு ‘கொள்ளிப் போட’ ஒரு பையன் வேணும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டேன்.ஆனா எனக்கு ஒரு பையன் பொறக்கறதுக்கு முன்னாலேயே என் ஆத்துக்காரி என்னை விட்டுட்டு போயிட் டா.சரி,நாம காயத்திரியை நன்னா வளத்து வந்து,அவள் பொ¢யவளா ஆனப்புறம்,அவளை ஒரு நல்ல பையனாப் பாத்து அவன் கையில் பிடிச்சிக் குடுத்துட்டு,அவளுக்கு ஒரு பையன் பொறந்தா அந்த பேரன் எனக்கு ‘நெய் பந்தம்’ பிடிப்பான்னு காத்துண்டு இருந்தேன்.நீங்க அன்னைக்கு பேசிண்டு இருந்ததே, நான் கேட்டுண்டு இருந்தேன்.இப்போ எனக்கு ஒரு பேரன் இல்லேன்னு ஆயிடுத்து. காசிக்குப் போகணும்ன் னு ரொம்ப வருஷமா நான் காயத்திரி கிட்டே சொல்லிண்டு தான் இருக்கே ன்.அங்கு தான் தன் என் பிராணன் போகணும் என்கிறது என் தீராத ஆசை.அங்கே பிராணன் போ ¡னா ,‘நல்ல கதி’க் கிடைக்கும் ன்னு என்று நான் சின்னவனா இருந்தப்ப,ஒரு நாள் ஆனந்தராம தீஷீதர் கால க்ஷபத்லே கேட்டு இருக்கேன்.ஆனா நீங்க என்னை சில வருஷங்க உங்களோடு இருக்கச் சொல்றேள்.அப்படி நான் தங்கி இருந்து,ஒரு வேளை எனக்கு ‘ஏதாவது’ ஆயிடுத்துன்னா, என் ஆசையே நான் நிறைவேத்திக் கொள்ள முடியாதே” என்று அவர் சொல்லும் போது அவர் கண்களில் நீர் துளித்தது.
கணேசனுக்கு என்ன சொல்லுவது என்று புரியவில்லை.தன் மாமனார் சொல்லுவது அவனுக்கு நியாயமாக பட்டது.அப்பா படும் வேதனையைப் பார்த்த காயத்திரி மிகவும் கஷ்டப் பட்டாள்.’சரி,நாமே அவரை காசிக்குப் போகட்டும்’ன்னு சொல்லிட்டா,அவர் நம்ம அப்பாவைத் தொந்தரவு பண்ண மாட் டார் என்று நினைத்து “அவர் இஷடம் போல் அவர் காசிக்குப் போய் வரட்டும்ன்னு தான் எனக்கும் படறது.அவருடைய ரொம்ப நாள் ஆசை இது.நாம இதை தடுக்க வேணாம்ன்னு எனக்குத் தோன்றது” என்று சொல்லி விட்டாள்.இதை கேட்ட கணேசன் ”என்ன காயத்திரி,நீயே அவரை இங்கு இருக்க வேணாம்ன்னு சொல்லி,அவரை காசிக்கே கொண்டுப் போய் விட்டுட்டு வருவே போல இருக்கே” என்றான் கோபத்தோடு.“என்னை தப்பா எடுத்துக்காதீங்கோ.அவர் இஷ்டப் படியே அவர் காசிக்குப் போகட்டும்.அவர் ரொம்ப வருஷமா இந்த ஆசையை என் கிட்டே சொல்லிண்டு வந்து இருக்கார். அங்கு போவது அவருக்கு பிடிச்சு இருக்கு.அவர் ஆசைப்பட்டது போல காசிக்கு அவர் போகட்டும். அவரைத் தடுக்காதீங்கோ” என்றாள் காயத்திரி.காயத்திரி இப்படி சொன்ன பிறகு கணேசன் ஒன்றும் சொல்லவில்லை.“சரி மாமா,நீங்க உங்க இஷ்டப்படியே காசிக்குப் போய் வாங்கோ” என்று சொல்லி விட்டு என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினான் கணேசன்.
‘மாஸ்டர்’ காசி போவதற்கு வேண்டியவற்றை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டார்.வழிக்கு ஒரு ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு மீதி பணத்தை பாங்கில் போட்டு,’பாஸ் புக்’,‘ATM கார்ட்’ எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டார்.காசிக்கு போவதற்கு ரெண்டு நாள் முன்னமே தன் பைக¨ளை எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டை காலி பண்ணி விட்டு ‘மாஸ்டர்’ தன் பொண்ணு வீட் டிற்கு வந்து தங்கினார்.காயத்திரி தன் அப்பாவுக்கு பிடிச்ச சமையலை எல்லாம் அவருக்குப் பண்ணிப் போட்டாள்.பத்தாம் தேதி வந்ததும் கணேசனும் காயத்திரியும் ‘மாஸ்டரை’அழைத்து கொண்டுப் போய் ‘வாரணாசி எக்ஸ்ப்ரெஸ்ஸில்’ ஏற்றி விட்டு நின்றுக் கொண்டு இருந்தார்கள்.“காசிக்குப் போய் சேந்த தும்,நீங்க தங்கி இருக்கற விலாசத்தை எங்களுக்கு எழுதுங்க.அடிக்கடி லெட்டர் போடுங்க நாங்களும் உங்களுக்கு அடிக்கடி லெட்டர் போடறோம்” என்று சொல்லும் போது கணேசன் கண்ணிகளில் நீர் துளித்தது.
அவன் தன் கையினால் துடைத்துக் கொண்டான்.இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த காயத்திரி “அப்பா,உங்க உடம்பை ஜாக்கிரதையா கவனிச்சுண்டு வாங்கோ.அவர் சொன்னா மாதிரி ரெண்டோ மூனோ நல்ல கம்பளிகள் வாங்கிக்கோங்கோ.அங்கே குளிர் ஜாஸ்தியா இருக்கும்.அசட்டையா இருந்து உடம்புக்கு வர வழைச்சுக் கொள்ளாதீங்கோ. உங்களுக்கு வென்னீர் வச்சுக் குடுக்கக் கூட அங்கே யாரும் இல்லே”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது காயத்திரிக்கு அழுகை வந்து விட்டது.உடனே ‘மாஸ்டர்’ “அழாதே காயத்திரி,நான் என்னை ஜாக்கிறதையா பாத்துண்டு வரேன்.நீ கவலைப் படாம இருந்து வா.உன் பிரபஞ்சத்தை கவனிச்சுண்டு வா.நான் என்ன சின்ன குழந்தையா சொல்லு”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது வண்டி நகரவே கணேசனும் காயத்திரியும் “ஜாக்கிரதையா இருந்து வாங்கோ”என்று சொல்லி விட்டு கொஞ்சம் பின்னால் நகர்ந்துக் கொண்டார் கள்.’மாஸ்டர்’ தன் கையை ஆட்டிக் கொண்டு இருந்தார்.வண்டி கண்ணை விட்டு மறையும் வரையில் நின்றுக் கொண்டு இருந்து விட்டு கணேசனும் காயத்திரியும் ஸ்டேஷனை விட்டு வெளியெ வந்து ஆட்டோவைப் படித்து வீட்டுக்கு வந்தார்கள்.
கணேசனும் காயத்திரியும் குழந்தை லதாவை செல்லமாக வளர்த்து வந்தார்கள்.குழந்தைக்கு மூனு வயசு ஆனதும் ஒரு நாள் கணேசன் “காயத்திரி நான் அதிகமா,ஏன் கொஞ்சம் கூட படிக்கலெ. ஐஞ்சாம் ‘க்லாஸ்’ பெயில் நான்.அதனாலே நான் குழந்தை லதாவை பக்கத்தில் இருக்கும் ‘கான்வெ ண்ட்டில் சேத்து அவள் இங்கிலிஷ் மீடியத்தில் படிக்க வைக்க வேணும்ன்னு ஆசை படறேன்.நீ என்ன நினைக்கறே காயத்திரி” என்று கேட்டான்.”எனக்கும் இந்த ஐடியா ரொம்ப பிடிச்சி இருக்கு.நாம லதா வை ‘கான்வென்ட்டிலே’ சேத்து படிக்க வைக்கலாம்” என்று காயத்திரி சொல்லவே கணேசனும் பத்தா யிரம் ரூபாய் ‘டொனேஷன்’ குடுத்து அந்த ‘கான்வெண்ட்டில்’லதாவை சேர்த்தான்.லதாவும் சந்தோ ஷமாக அந்த ‘கான்வென்ட்’ ஸ்கூலுக்குப் போய் படித்து வந்தாள்.
ராத்திரி கணேசன் வீட்டு வரும் போது ரொம்ப ‘டயர்டா’ வந்துக் கொண்டு இருந்தான்.இதை கவனித்த காயத்திரி கணேசனைப் பார்த்து “ஏன்னா,ரொம்ப களைப்பா இருக்கேளே.இன்னைக்கு வேலை ஜாஸ்தியா இருந்ததா”என்று கேட்டாள்.”ஆமாம் காயத்திரி இன்னைக்கு வேலை கொஞ்ச ஜாஸ்தி தான்.ஆனா இந்த வெய்யில் காலத்லே,அந்த அடுப்படிலே வேலை செஞ்சு வறது தான் ரொம் பவே கஷ்டமா இருக்கு”என்று சொல்லி தன் கை,கால்,மூஞ்சி எல்லாவற்றையும் பச்சைத் தண்ணீர் விட்டு நன்றாக கழுவிக் கொண்டு,பிறகு துடைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான் கணேசன். காயத்திரி கணேசனுக்குத் தட்டைப் போட்டு தான் பண்ணி இருக்கும் சமையலை பறிமாறினாள்.
கணேசன் வேலை செய்து வரும் ஹோட்டல் பக்கத்தில் ரெண்டு மூனு போ¢ய ஹோட்டல்கள் திறந்து விட்டார்கள்.அதனால் கணேசன் வேலை செய்யும் ஹோட்டலில் வியாபாரம் குறைந்துக் கொண்டே வர ஆரம்பித்தது.கணேசன் செய்யும் ‘ஸ்வீட்டுகள்’ மூனு நாலு நாள் ஆனாலும் வியாபாரம் ஆகாமல் தங்கி வர ஆரம்பித்து விட்டது.அதனால் ஹோட்டல் முதலாளி கணேசனைப் பார்த்து “கணேசா,நீ தினமும் ‘ஸ்வீட்’ பண்ண வேணாம்,ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வந்தாப் போதும்” என்று சொல்லி விட்டு அவனுக்கு கொடுத்து வரும் சம்பளத்தைக் குறைத்து தந்தார்.கணேசனால் ஒன்னும் சொல்ல முடியவில்லை.அவன் ’இந்த வேலையும் வேணாம்ன்னு சொல்லிட்டா,நமக்கு வேறே எங்கேயும் வேலைக் கிடைகாதே’ என்று மிகவும் கவலைப் பட்டான்.வீட்டுக்கு வந்த காயத்திரியிடம் சொல்லி வருத்தப்பட்டான். காயத்திரியும் கணேசனும்,குடும்ப செலவை ஈடு கட்ட மிகவும் கஷ்டப் பட்டு வந்தார்கள்.நாளுக்கு நாள் விலை வாசி வேறு ஏறி வந்தது.குடித்தனம் பண்ணவதே ரொம்ப கஷ்டமாய் இருந்தது இருவருக்கும்.
காசி ஸ்டேஷன் வந்ததும் அவர் கீழே இறங்கி ஊருக்குள் வந்தார்.அப்போது தான் அவருக்கு இனிமே நாம் எங்கே தங்கப் போறோம்,என்ன சாப்பிடப் போறோம்’ என்ற யோஜனை வந்தது. பசி எடுக்கவே அங்கே தென்பட்ட ஒருவரை ‘நல்ல வெஜிடொ¢யன் சாப்பாடு எங்கே கிடைக்கும்’ என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது.ஆனால் அவருக்கு ஹிந்தி தொ¢யாதே.கடை வீதியில் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டு இருந்தார்.அப்போது அந்த வழியே போய்க் கொண்டு இருந்த ஒரு பிராம ணரைப் பார்த்து ‘மாஸ்டர்’ “நீங்க தமிழ் பேசறவரா” என்று தமிழில் கேட்டதும்,அவர் தமிழில் பதில் சொன்னது அவர் பதில் காதில் தேனாக பாய்ந்தது.உடனே ‘மாஸ்டர்’ அவா¢டம் “நான் இன்னைக்கு காத்தாலே தான் சென்னைலே இருந்து காசிக்கு வந்து இருக்கேன்.இங்கே சாப்பிட நமம ‘சௌத் இண்டியன்’ சாப்பாடு எங்கே கிடைக்கும்” என்று கேட்டதும் அவர் “நீங்க இப்படியே நேரா போய் கடை சியிலே வலது பக்கம் போனா,வரும் அந்த தெருவிலே ‘சங்கர மடம்’ இருக்கு.அங்கே போனா அவா ‘பிராமண சாப்பாடு’ போடுவா” என்று சொன்னதும் ‘மாஸ்டர்’ அவருக்கு நன்றி சொல்லி விட்டு அவர் சொன்ன வழியே போய் சங்கர மடத்திற்கு வந்தார்.
அந்த நேரம் பாத்து அங்கே சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டு இருந்த ஒரு பிராமணர் ‘மாஸ்டரை’ பார்த்து “வாங்கோ,நீங்க காசிக்கு எதுக்கு வந்து இருக்கேள்” என்று கேட்டார்.உடனே ‘மாஸ்டர்’ தன் கதை பூராவையும் சொன்னார்.அவர் உடனே ”நான் தான் இந்த மடத்தின் மானேஜர்.என் பேர் சாமப சிவம்.உங்களுக்கு இந்த ‘ஸ்வீட்’ எல்லாம நன்னா பண்ண வரும்ன்னு சொல்றேள் நீங்க இந்த சங்கர மடத்லே நாங்க சொல்ற ‘ஸ்வீட்டுகளை’ எல்லாம் பண்ணித் தாங்க.நீங்க இங்கேயே சாப்பிட்டுண்டு இருக்கலாம்.உங்களுக்கு தங்க ஒரு சின்ன ரூம் தறேன்”என்று சொன்னார்.அந்த மானேஜர் சின்னவராக இருந்தாலும் வயசு வித்தியாசம் பார்க்காம ‘மாஸ்டர்’அவர் காலைத் தொட்டு சார்,நீங்க எனக்குத் தெய்வம் சார்.’இதை பண்ணு’,‘அதை பண்ணு’ ன்னு எனக்கு உத்தரவு போடுங்கோ.நான் பண்ண காத்துண்டு இருக்கேன்” என்று சொன்னார்.உட னே அந்த மானேஜர் “ரொம்ப சந்தோஷம்.உங்க பேர் என்ன”என்று கேட்டார்.’மாஸ்டர்’ உடனே என் பேர் விஸ்வநாதன்.ஆனா என்னை எல்லாரும் ‘விசு’ன் னு தான்னு கூப்பிடுவா”என்று சொல்லி நின்றுக் கொண்டு இருந்தார்.அந்த மானேஜர் ”இப்போ நீங்க குளிச்சுட்டு சாப்பிடுங்க”என்று சொன்னார்.குளித்து சாப்பிட்டு விட்டு மானேஜர் குடுத்த ‘ரூம்லே’ ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டார் விசு.
அன்று சாயங்காலமா அவர் கிளம்பிப் போய் ‘போஸ்ட் ஆபீசிக்கு’ப் போய் ஒரு ‘இன்லன்ட் லெ ட்டர்’ வாங்கி வந்து தன் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் விவரமாக ஒரு கடிதம் எழுதினார். ‘அன்புள்ள காயத்திரிக்கும்,மாப்பிள்ளைக்கும் என் ஆசீர்வாதங்கள்.குழந்தை லதா சௌக்கியமா இரு ந்து வருவான்னு நினைக்கறேன்.நான் இன்னிக்கு காத்தாலே சௌக்கியமா காசி வந்து சேந்தேன். இப்போ நான் சங்கர மடத்லே மானேஜர் குடுத்த ஒரு ‘ரூம்லே’ தங்கி இருக்கேன்.அவர் எனக்கு ஒரு ‘ஸ்வீட் மாஸ்டர்’ வேலை குடுத்து இருக்கார். எனக்கு இங்கே சாப்பாடு ‘·ப்¡£யா’ போடறா,நான் சௌ க்கியமா இருந்துண்டு வரேன்.உங்க மூனு பேருக்கும் ஆசீர்வாதங்கள்.என் விலாசத்தை கீழே எழுதி இருக்கேன்.S.விஸ்வநாதன்.சங்கர மடம், வாரணாசி,PIN Code.220067. UP.விசு கடிதத்தை எழுதி மாப்பிள்ளை அடரஸ்ஸை எழுதி,அந்தக் கடித்ததை ‘போஸ்ட்’ பண்ணினார்.
விஸ்வநாதன் எழுதின கடிதத்தை ‘போஸ்ட்மன்’ கொண்டு வந்து காயத்திரியிடம் கொடுத்தான் அந்தக் கடிததைப் பிரித்துப்ப் படித்தாள் காயத்திரி.அவள் மனம் மிகவும் சந்தோஷப்பட்டது.கணேசன் ஆத்துக்கு வந்ததும் காயத்திரி தன் ஆத்துகாரா¢டம் “அப்பா காசிலே இருந்து லெட்டர் போட்டு இருக் கார்.அவர் சௌக்கியமா சங்கர மடத்தில் ‘ப்ரீயா’சாப்பிட்டுண்டு வராராம்.அவருக்கு தங்க ஒரு சின்ன ரூம் கூட மட மானேஜர் ‘ப்ரீயா’க் குடுத்து இருக்காராம்.இந்தாங்கோ அந்த லெட்டர்” என்று சந்தோ ஷத்தில் சொல்லிக் கொண்டு,அப்பா போட்ட ‘இன்லண்ட்’ லெட்டரை கணேனசனிடம் கொடுத்தாள். கணேசன் தன் மாமனார் எழுதி இருந்த ‘இன்லண்ட்’ லெட்டரைப் பிரித்து படித்தார்.அவனுக்கு ரொம் ப சந்தோஷமாய் இருந்தது.விசு தவறாமல் வாரம் ஒரு லெட்டர் போட்டுக் கொண்டு இருந்தார்.காயத்தி ரியும் தன் அப்பாவுக்கு பதில் போட்டு வந்தாள்.அந்த பதிலில் “அவர் ‘பிஸியா’ வேலைக்கு போய் வந்துண்டு இருப்பதால் தான் தான் அவரால் பதில் எழுத முடியலே.நான் பதில் எழுதறேன்.தப்பா எடுத்துக்க வேண்டாம்”என்றும் எழுதி வந்தாள்.வாரத்துக்கு ஒரு லெட்டர் போட்டுக் கொண்டு இருந்த காயத்திரி மாசத்துக்கு ஒரு தடவை பதில் போட ஆரம்பித்தாள்.விலை வாசி ஏத்தத்தினாலும்,வரும் சம்பளம் ரொம்ப கம்மியாக இருந்ததினாலும்,காயத்திரியும் கணேசனும் குடித்தனம் பண்ணீ வரவே ரொம்ப கஷ்டப் பட்டுக் கொண்டு வந்தார்கள்.
காயத்திரி ஒரு நாள் தன் கணவனைப் பார்த்து ”நான் சொல்றென்னு நீங்க தப்பா எடுத்துக்காதீங்கோ.விலை வாசி எல்லாம் ரொம்ப ஏறிண்டு வருது,மாச செலவை சமாளிப்பதே ரொம்ப கஷ்டமா இருக்கு.அதனால்லே நானும் அக்கம் பக்கத்லே யாராவது சமைக்க கூப்பீட்டா போய் வரட்டுமா”என்று தயங்கிக் கொண்டே கேட்டாள்.கணேசன் உடனே “காயத்திரி,நான் உன்னை சமையல் வேலைக்கு எல்லாம் அனுப்ப மாட்டேன்.உன் அப்பா உன்னை எனக்கு நீ சமையல் வேலை செஞ்சு வந்து எனக்கு சம்பத்திச்சு கொடுக்கவா கல்யாணம் பண்ணிக் குடுத்தார்.நீ சமையல் வேலைக்கு போய் வந்து குடும் பத்தை சமாளிச்சு வரேன்ற விஷயம் அவர் காதிலே விழுந்தா,என்னை பத்தி அவர் என்ன நினைச்சுக் குவார்.அவர் மனசு கஷ்டப் படாதா.வேணாம் காயத்திரி.நீ சமையல் வேலைக்கு போக வேணாம்.நான் வேணும்னா இன்னும் ரெண்டு இடத்லே போய் அங்கே ‘ஸ்வீட்’ பண்ணி சம்பாதிச்சுண்டு வரேன்”என் று சொல்லி விடவே காயத்திரி சும்மா இருந்து விட்டாள்.வாரம் தவறாம அப்பாவுக்கு அவர் அனுப்பின கடிதத்துக்கு பதில் போட்டு வந்துக் கொண்டு இருந்தாள் காயத்திரி.தன் கஷ்டம் எதையும் எழுதாமல் வெறுமனே ‘நாங்க சௌக்கியமா இருந்துண்டு வரோம்.லதா நன்னா படிச்சுண்டு வரா’ என்று மட்டும் பதில் எழுதி வந்தாள் காயத்திரி.
சொன்னது போல கணேசனும் நிறைய இடங்களுக்கு எல்லாம் போய் ‘ஸ்வீட்’ பண்ணிக் கொடு த்துக் கொண்டு வந்து,சம்பாத்தித்து வந்தான்.காத்தாலே நாலு மணிக்கு வீட்டை விட்டு கணேசன் போய் இரவு பதினோரு மணிக்குத் திரும்பி வந்துக் கொண்டு இருந்தான். காயத்திரியும் ரொம்ப சிக்கனமாக இருந்து வந்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தாள்.
மூன்று வருஷங்கள் ஓடி விட்டது.லதா ஏழாம் ‘க்லாஸ்’ பாஸ் பண்ணினாள்.அவளை ‘கான் வென்ட்டிலே’ எட்டாம் ‘க்லாஸ்’ படிக்க வைக்க பணம் அதிகமாகத் தேவைப்பட்டது.வீட்டு வாடகை கொடுத்து விட்டு,வீட்டுக்கு அரிசி,பருப்பு,காய்கறி எல்லாம் வாங்கி வர காயத்திரியால் முடியவில்லை. அதனால் காயத்திரி ஒரு நாள் கணேசனிடம் “இதோ பாருங்கோ,உங்களுக்கு வரும் சம்பளத்லே குடுத்தனம் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு.அதனாலே நாம லதாவை ஒரு சாதாரண பள்ளிக் கூடத்லே சேத்துடலாமே” என்றாள்.கணேசன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.கணேசனுக்கு வரும் பணம் குடும்ப செலவுக்குப் போதாமல் இருக்கவே காயத்திரி, தன் அப்பா வாங்கி கொடுத்த இருந்த வெள்ளி சாமான்கள் ஒன்னு ஒன்னா வித்து வந்து குடும்பத்தை சமாளித்து வந்தாள்.’அப்பா பாட்டுக்கு காசிலே சந்தோஷமா இருந்து வரட்டும்.அவர் கிட்டே நம்ம குடும்ப கஷ்டத்தே சொல்ல வேணாம்’ என்று நினைத்து அப்பாவுக்கு ‘நாங்க இங்கே சௌக்கியமா இருந்து வரோம்.உங்க உடம்பை ஜாகிற தையா கவனிச்சு வாங்கோ’ என்று மட்டும் பதில் எழுதி வந்தாள் காயத்திரி.அடுத்த வருஷமே கணே சனும் காயத்திரியும் லதாவை சாதாரண ஸ்கூலில் சேர்ந்து அவளைப் படிக்க வைத்தார்கள்.
விசுவும் முடிந்த போது ‘தான் சௌக்கியமா இருந்து வறேன்’ என்று பதில் போட்டதும் காயத்தி ரியும் அவருக்கு பதில் போட்டுக் கொண்டு வந்தாள்.காயத்திரி தன் அப்பாவுக்கு அவள கஷ்டத்தை யோ,அவர் கல்யாணத்துக்கு வாங்கிக் கொடுத்த வெள்ளி சாமான்களை எல்லாம் வித்து விட்டதையோ, பத்தி எழுதாமல் முன்னம் எழுதி வந்தாப் போலவே அவள் பதில் போட்டு வந்தாள்.ஒவ்வொரு தடவை தன் பதிலை ‘போஸ்ட் பாக்ஸில்’ போடும் போதும் காயத்திரிக்கு ‘நாம அப்பாவுக்கு இப்படி ஒரு பொய் யான பதிலைப் போட்டு வருகிறோமே,இது தப்பு இல்லையா,அவர் யாரோவா.நம்மைப் பெத்த அப்பா இல்லையா’என்று அவள் உள் மனம் வேதனைப்படும்.தன் மனதுக்குள் அழுது வந்தாள் காயத்திரி.
அன்று ஞாயித்துக் கிழமை.ஸ்வீட் வேலை ஒன்னும் இல்லாததால்,வெறுமனே வெளியில் போய் சுத்த வேணாம் என்று நினைத்து கணேசன் வீட்டில் இருந்தான்.தன் ஆத்துக்காரருக்கு கா·பி கலந்து க் கொண்டு வந்து கொடுத்து விட்டு காயத்திரி அவன் எதிரில் உட்கார்ந்துக் கொண்டாள்.கணேசன் கா·பியைக் குடித்துக் கொண்டு இருந்தான்.காயத்திரி மெதுவாக கணேசனிடம் “நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளுங்கோ.உங்களுக்கு வர சம்பாத்யம் எனக்கு மாச செலவுக்கு போறலே.அதனால்லே நான் என் அப்பா எனக்குக் கல்யாணத்லே குடுத்த எல்லா வெள்ளிப் பாத்திரங்களையும் ‘சேட்’ கடைலே வித்து வந்து தான் குடும்ப செலவை பண்ணி வந்துண்டு இருக்கேன்.இனிமே விக்க என் கிட்டே ஒரு வெள்ளிப் பாத்திரமும் இல்லே.நாம சாப்பிட்டுண்டு வற வெள்ளித் தட்டு ஒன்னு தான் இருக்கு.அதனாலே நான் என்ன சொல்றேன்னா,நானும் ரெண்டு மூனு ஆத்லே சமையல் வேலைக்குப் போய் வரலாம்ன்னு இருக்கேன்.நீங்க என்ன சொல்றேள்“என்று கேட்டாள்.
நெடு நேரம் யோசித்த கணேசன் வீட்டு செலவுக்கு பணம் வேண்டி இருந்ததினால் ஒன்னும் சொல்லாம “சரி காயத்திரி,நான் என்ன சொல்றதுன்னே எனக்குத் தொ¢யலே.நான் உன்னை கல்யா ணம் பண்ணிக் கொண்டப்ப, உன் அப்பா கிட்டே நான் உன்னை கண் கலங்காம பாத்துக்கிறேன்னு சொன்னேன்.ஆனா நாம் இப்போ இருக்கிற நிலைலே உன்னை நான் சமையல் வேலைக்கு போக வேணாம்ன்னு சொல்லவும் முடியலே.நான் என்ன பண்ணட்டும் காயத்திரி.உன்னை நான் சமையல் வேலைக்கு அனுப்புவேன்னே கனவிலும் நினைக்கலே.என்ன பண்றது. உன்னால் முடிஞ்சா ரெண்டு மூனு ஆத் துக்குப் போய் சமையல் வேலை செஞ்சு வா……..’என்று கணேசன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது.”அழாதீங்கோ,நீங்க அழுதா அதை என்னால் பாத்துண்டு சும்மா இருக்க முடியாது” என்று சொல்லி தன் கணவரை சமாதா னமப் படுத்தினாள் காயத்திரி.
வருஷங்கள் ஓடி விட்டன.லதா படித்து பத்தாவது பாஸ் பண்ணினாள்.‘இவ்வளவு படிக்க வசச் தே அதிகம்,அவளை மேலே படிக்க வைக்க வேண்டாம்’ என்று எண்ணி கணேசனும் காயத்திரியும் அவளை மேலே படிக்க எங்கேயும் சேர்க்கவில்லை.லதா ரொம்ப ஆசைப் பட்டாலும்,காயத்திரியும் கனேசனும் தங்கள் குடும்ப நிலவரத்தை சொல்லி அவளை வீட்டிலேயே இருந்து வரச் சொல்லி விட் டார்கள்.லதா வீட்டில் தான் இருந்து வந்தாள்.
முப்பது வருஷத்திற்கு மேல் நெருப்படியில் தொடர்ந்து வேலை செய்து வந்ததினால்,கணேச னுக்கு படுக்கை விட்டு எழுதுக் கொள்ளும் போது அடிக்கடி மயக்கம் வருவது போல் இருந்தது. கொஞ்சம் சோர்வாகவும் காணப் பட்டான்.ரொம்ப நேரம் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு இருந் தான்.இதைப் பார்த்த காயத்திரி கணேசனைப் பார்த்து “காத்தாலே இருந்து நீங்க ரொம்ப சோர்வா இருக்கேளே.உங்களுக்கு உடம்பு சரி இல்லையா”என்று கவலையோடு கேட்டாள்.கணேசன் “ஆமாம் காயத்திரி.அது மட்டும் இல்லே எனக்கு கொஞ்ச மயக்கம் கூட வருது.மத்தியானம் சாப்பாட்டிலே கொஞ்சம் காரம் சாபிட்டாக் கூட தொண்டையிலே இருந்து அடி வயிறு வரை ‘கப’‘கப’ ன்னு எரிச்சல் இருக்கு.ஏன்னே எனக்கு தொ¢யலே”என்று சொல்லி தன் தொண்டையை தடவி விட்டு கொண்டான். ”நீங்க சொல்றதைக் கேட்டா ரொம்ப பயமா இருக்கேன்னா.நாம ஒரு நல்ல டாக்டரைப் போய் பாத்துட் டு வரலாமா”என்று கேட்டாள் காயத்திரி.”வேனா¡ம் காயத்திரி.எதுக்கு வீண் செலவு.போகப் போகப் பாக்கலாமே”என்று சொல்லி விட்டு குளிக்கப் போனான் கணேசன்.காயத்திரிக்கு கணேசன் உடம்பை ப் பத்தின கவலை வாட்டி வந்தது.’இப்போதைக்கு அவர் சம்பளம் ஒன்ணு தானே இந்த குடும்பத்தை நடத்தி வரது.நம்ம சம்பாத்யம்ன்னு ஒன்னும் இல்லையே.அவருக்கு உடம்பு அதிகமானா நாம் என்ன பண்ணப் போறோம்.இந்த குடும்ப செலவுக்கு என்னப் பண்ணப் போறோம்’ என்று வேதனைப் பட்டுக் கொண்டு இருந்தாள் கணேசனுக்கு காலை நேரங்களில் வரும் மயக்கம் கொஞ்சம் கொஞ்சமா அதிகா¢த்து வந்தது.
காயத்திரியால் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.’டாகடர் கிட்டே போய் காட்டி வரலாம்’ என்று கணேசனை வற்புறுத்தி வந்தாள்.ஆனால் கணேசனுக்கு தன் உடம்பில் ‘ப்ராப் லெம்’இருக்குன்னு நன்றகத் தொ¢யும்.’டாகடர் கிட்டே போனா அவர் இந்த ‘டெஸ்ட்’,அந்த ‘டெஸ்ட்’ ன்னு சொல்லி பணத்தை கறந்து விடுவாரே.அவ்வளவு பணத்துக்கு எங்கே போறது’ என்று பயந்து டாக்டர் கிட்டே போவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தான்.
ஒரு வாரம் தான் ஆகி இருக்கும்.அன்னைக்கு காயத்திரி கணேசனை வேலைக்குப் போக விடவில்லை.”நீங்க வாங்க.நாம ஒரு தடவை டாக்டர் கிட்டே போய் அவர் உங்களுக்கு உடம்பு ஒன் னும் இல்லேன்னு சொன்னா,அப்புறமா நீங்க தைரியமா வேலைக்குப் போய் வாங்கோ.இல்லே உங்க உடம்பிலே ‘ப்ராப்லெம்’ இருக்குன்னு சொன்னா,அதுக்கு மருந்து வாங்கிண்டு சாப்பிட்டு வந்து உங்க உடம்பை பூரணமா குணம் ஆக்கிண்டு நீங்க வேலைக்கு போய் வாங்கோ.உங்க ‘ப்ராப்லெம்’ சின்னதா இருந்தா மருந்து மாத்திரைலே சீக்கிரமா குணம் ஆக்கிண்டு வரலாம்.வாங்க போகலாம்“ என்று கண் டிப்பா ன குரலில் சொன்னாள் காயத்திரி.காயத்திரி கண்டிப்பாக சொன்ன அப்புறம் வேறு வழி இல் லாம கணேசன் டாக்டர் கிட்டே போய் வர சம்மதித்தான்.காயத்திரி ஒரு ஆட்டோவைப் பிடித்து கணே சனை அருகில் இருந்த ஒரு டாக்டர் கிட்டே அழைத்துப் போனாள்.டாக்டர் காயத்திரியையும் கணேச னையும் பார்த்து “வாங்க உக்காருங்க” என்று சொல்லி அவர்களை உட்கார சொன்னார்.காயத்திரி டாக் டரைப் பார்த்து “டாக்டர்,இவருக்கு காத்தாலே எழுந்ததும் ரொம்ப மயக்கமா இருக்குன்னு சொல்றார். சாப்பாடு சாப்பிட்டா தொண்டையிலே இருந்து அடி வயிறு வரை எரிச்சல் இருக்குன்னு சொல்றார்” என்று சொன்னதும் டாக்டர் கணேசனை நன்றாக பா¢சோதனைப் பண்ணப் பார்த்து விட்டு, ‘ப்லட் டெஸ்ட்’’எக்ஸ்ரே’, ECG எல்லாம் எடுத்து வரச் சொன்னார்.காயத்திரி வெளீயே வந்து கணேசனுக்கு டாக்டர் எழுதி கொடுத்த எல்லா ‘டெஸ்ட்டு’களையும் பண்ணி விட்டு,கனேசனை அழைத்துக் கொண் டு வீட்டுக்கு வந்தாள்.அடுத்த நாள் ரெண்டு பேரும் ஹாஸ்பிடலுக்குப் போய் எல்லா ‘டெஸ்ட் ரிஸல்ட் டு’ களையும் வாங்கிக் கொண்டு காலியாக இருந்த சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.
– தொடரும்