ஒரு பேரக் குழந்தை, என் மடியிலே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 6,015 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

அன்று சுதந்திரத் திரு நாள்.

நாடு சுதந்திரம் அடைந்து பத்து ஆண்டுகள் முடிந்திருந்தது.

பள்ளிக்கூட கொடி ஏற்பு விழாவுக்கு நேரம் ஆகி விட்டதால் மணைவியை அவசரப் படுத்தினார் சிவராமன்.

“சீக்கிரம் காபியைக் குடு சிவகாமி.மணி ரொம்ப ஆயிடுத்து.நான் நேரத்தோடு பள்ளிக் கூடத் துக்கு போக வேண்டாமா சொல்லு.இன்னிக்கு எங்க பள்ளிக் கூடத்திலே கொடி ஏத்துவாளே.நான் அதுக்கு நேரத்துக்கு போக வேணாமா” என்று சிவராமன் அலுத்துக் கொண்டு சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சிவகாமி சூடான ‘காபி’யை டவரா டம்ளரில் ஆற்றிக் கொண்டே வந்தாள்.

”இந்தாங்கோ காப்பி.எனக்கு கொஞ்ச நேரமாயிடுத்து இன்னைக்கு,’டிக்காக்ஷன்’ சீக்கிரமா இறங்கவே இல்லை”என்று சொல்லிக் கொண்டே காப்பியைக் கணவனிடம் கொடுத்தாள் சிவகாமி.

‘மட’ மட’ வென்று மணைவி கொடுத்த ‘காபி’யைக் குடித்து விட்டு செருப்பை தன் காலில் மாட்டிக் கொண்டு வேகமாகப் பள்ளி கூடத்திற்கு கிளம்பினார் சிவராமன்.

“அம்மா எங்க காலேஜிலும் இன்னைக்கு இன்னைக்குக் கொடி ஏத்தறா.நானும் சீக்கிரமா போக ணும்”என்று சொல்லி விட்டு குளிக்கப் போனாள் ராஜீ.

குளித்து விட்டு நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ராஜியும் காலேஜ்க்கு கிளம்பிப் போய் விட்டாள்

மகள் காலேஜ் போவதையே பார்த்துக் கொண்டு இருந்தாள் சிவகாமி.

‘ஆச்சு,இந்த வருஷம் படிப்பு முடிஞ்சா ராஜீ காலேஜ் படிப்பு முடிஞ்சிடும்.இன்னும் ஒன்னோ ரெண்டோ வருஷத்தக்குள்ளே இவளே ஒத்தன் கையில் பிடிச்சுக் கொடுக்கணும்.இந்த காலத்திலே ஒரு கல்யாணம் பண்றதுன்னா லேசு இல்லையே’ பிள்ளை ஆத்திலே என்ன எல்லாம் கேப்பாளோ. அதே எல்லாம் வாங்கி ஆகணும்,அப்புறமா கல்யாணம் செலவு வேறே. இவரோ இது வரைக்கும் கல்யா ணத்துக்குன்னு ஒன்னும் பணமே சேர்க்கலே.வரும் சம்பளம் ஆத்து செலவுக்கே போந்தும் போராத துமா இருக்கே’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்த சிவகாமி தான் இன்னும் ‘காபி’க் கூட குடிக்கவில்லை என்பதையே மறந்து விட்டாள்.

சமையல் ரூமுக்குப் போய் தனக்குக் ‘காபி’ போட்டுக் கொண்டு வந்து நிதானமாக குடித்தாள் சிவகாமி.

சிவராமனுக்கு வயது இருபதெட்டு வயது ஆகும் போது,இருபத்தி மூனு வயது ஆன சிவகாமியை கல்யாணம் பண்ணிக் கொண்டார்.இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்து வந்தார்கள். இருப்பினும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு,சிவகாமியின் இருப்பத்தேழாவது வயதில் ராஜீ பிறந்தாள்.

ராஜி பிறந்த பிறகு தங்களுக்கு ஒரு பிள்ளைக் குழந்தை வேண்டும் என்பதில் மிகவும் ஆசை யாக இருந்தார்கள் சிவரமன் தம்பதிகள்.பகவான் அவர்கள் ஆசையை பூர்த்தி பண்ணவில்லை.

ராஜீ பிறந்து பத்து வருஷம் கழித்து அவர்களுக்கு ‘இரட்டை குழந்தைகள்’ பிறந்தன.

இரண்டும் பெண் குழந்தைகள்.

‘சரி,இந்த ஜென்மத்லே நாம குடுத்து வச்சது அவ்வளவு தான்’ என்று எண்ணி மனதை தேத்த றவு பண்ணிக் கொண்டு வந்தார்கள் சிவராமன் தம்பதிகள்.பிறந்த குழந்தைகளில் ஒருவளுக்கு ‘ராதா’ என்றும்,மற்றவளுக்கு ‘மீரா’ என்றும் அம்பாள் பேரையே வைத்து,அவர்களை சந்தோஷமாக வளர்த்து வந்தார்கள்.

பள்ளிக்கூடத்தில் இருந்து கணவன் வீடு திரும்பியதும் சிவகாமி முதல் வேலையாக “ஏன்னா, நம்ப ராஜீ காலேஜ் படிப்பு இந்த வருஷம் முடிஞ்சிடும்.இன்னும் ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ கழிச்சு அவளை ஒருத்தன் கையிலே பிடிச்சுக் குடுக்க வேணாமோ சொல்லுங்கோ.ராஜிக்கு கல்யாணம் பண்ண ஆரம்பிச்சா எவ்வளவு செலவு ஆகுமோ.பிள்ளை ஆத்துலே என்ன எல்லாம் கேப்பாளோ அதை எல்லாம் நாம எப்படி சமாளிக்கப் போறோம் என்பதைப் பத்தி எல்லாம் எப்போதாவது யோஜ னை பண்ணினேளா” என்று கவலையுடன் கேட்டாள்.

”நான் யோஜனை பண்ண என்ன இருக்கு சிவகாமி.உனக்கு தெரியாதது ஒன்னும் இல்லே.ராஜி காலேஜ் ‘பீ£ஸ்’ கட்டி அவளுக்கு புஸ்தகம், போழை, காலேஜ் டிரஸ்,எல்லாம் வாங்கிக் கொடுத்து,மத்த இரண்டு குழந்தைகளைக்கும் நான் துணி மணி எல்லாம் வாங்கிக் கொடுத்து,ஸ்கூல் ‘பீஸூம்’ கட்டி நாமும் ரெண்டு வேளை வயிறார சப்பிட்டு வரவே என் சம்பளம் கைக்கும் வாய்க்குமா இருக்கு.’ஸேவி ங்க்ஸ்’ன்னு ஒன்னும் பாங்கிலே அதிக பணம் இல்லே.நான் ‘ரிடையர்’ ஆக இன்னும் எட்டு வருஷம் தான் பாக்கி இருக்கு.பாக்கலாம்.அந்த பகவான் எந்த வழி விடறாரோ விடட்டும்” என்று விரக்தியோடு பதில் சொன்னார் சிவராமன்.

ராஜீ நல்ல தங்க விக்கிரகம் போல் அழகாக இருப்பாள்.நல்ல புத்திசாலியும் கூட.ராஜி ஒரு காரியம் செய்தால் இன்னைக்கெல்லாம் பார்த்து கொண்டு இருக்கலாம்.எதையும் நன்றாக “ப்ளான்’ பண்ணி செய்வாள் ராஜி.அசாத்திய பொறுமையும் அவளிடத்தில் குடி கொண்டு இருந்தது.

படிப்பு முடித்து ராஜீ ஒரு ‘ப்ரொடக்ஷன் கம்பனியில்’ வேலைக்குச் சேர்ந்தாள்.

வேலைக்கு சேர்ந்த இடத்தில் ஆறு மாததிற்குள் எல்லாம் மானேஜர் ரவியின் பாராட்டுதலையும், சக ஊழியர்களின் மதிப்பையும் பெற்று விட்டாள் ராஜி.

ரவியும் ராஜியின் புத்திசாலித்தனத்தையும் அழகையும் அடிக்கடி புகழ்ந்து பேசி வந்தான்.

இந்த புகழ்ச்சி நாளடைவில் அவள் மேல் அவனுக்கு அது காதலாக மாறியது.

ஒரு நாள் அவள் நல்ல மூடில் தனியாக இருக்கும் போது ரவி “ராஜி, நீ தப்பா எடுத்துக்க மாட் டேன்னா,நான் உன் கிட்டே ஒன்னு கேக்கட்டுமா” என்று தயங்கி தயங்கிக் கேட்டான் ரவி.

”கேளுங்கோ சார்” சொல்லி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் ராஜீ.

“நானும் ஒரு பிராமண பையன் தான்.நல்ல குடும்பம் எங்களுடையது.முறைப்படி நம்ம ரெண்டு குடும்பமும் ஜாதகப் பா¢வர்த்தணை பண்ணிண்டு,ஜாதகங்கள் ஒத்துண்டு இருந்தா,உன்னே கல்யா ணம் பண்ணிக் கொள்ள ஆசைப் படறேன்.உனக்கு என்னேக் கல்யாணம் பண்ணீக்க சம்மதமா. உனக்குப் பிடிக்காட்டா,நீ என் கிட்டே நோ¢டையாகவே சொல்லலாம்.நான் உன்னை வலுக் கட்டாயம் பண்ணலே.என்று சொல்லி விட்டு அவள் பதிலுக்கு காத்து இருந்தான் ரவி.

சற்று நேரம் யோஜனைப் பண்ணினாள் ராஜீ.

கொஞ்ச நேரம் கழித்து “நான் என் அப்பா அம்மாவை கேக்கணும் சார்.நான் வேலைக்கு சேர்ந்து இப்போ தான் ஆறு மாசம் ஆயி இருக்கு.என் கல்யாணத்தை அவா இவ்வளவு சீக்கிரம் பண்ணுவாளா இல்லையான்னு,எனக்குத் தெரியாது.நான் அவாளை கேட்டுட்டு தான் உங்களுக்கு சொல்ல முடியும். எனக்கு கொஞ்சம் ‘டயம்’ குடுங்கோ” என்று சொல்லி நிறுத்தினாள்.

”நீ,நிச்சியமா உன் அப்பா அம்மாவை கேளு ராஜி.அது தான் முறையும் கூட.ஆனா அதுக்கு முன்னாடி என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள உனக்கு சம்மதமான்னு,,,,,” என்று அவன் சொல் லிக் கொண்டு இருக்கும் போதே அவள் முகம் குப்பென்று சிவந்தது.

“நான் என் அப்பா அம்மா கிட்டே கேக்கணும்னா உங்களுக்கு புரியலையா”என்று சொல்லி விட்டு வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னாள்.

ரவிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.அவன் ராஜியைத் ‘தாங்க்’ பண்ணீனான்..

வீட்டுக்கு வந்த ராஜீ அவள் அப்பா அம்மாவிடம் தன் மானேஜர் சொன்னதை சொன்னாள்.

‘ராஜீயோட மானேஜரே ராஜியே கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப் படறப்போ,நாம இந்த நல்ல சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திண்டு ராஜீ கல்யாணத்தை முடிச்சுடலாமே. அந்த மானேஜரும் ஒரு பிராமண பையனா இருக்கான்.அவா குடும்பம் நல்ல குடும்பம்ன்னு ரவி தன் குடும்பத்தைப் பத்தி சொன்னதா ராஜீ சொல்றாளே’என்று யோஜனைப் பண்ணினார் சிவராமன்.

சற்று நேரம் கழித்து ”என்ன சொல்றே சிவகாமி.உன் அப்பிபிராயம் என்ன” என்று மணைவியின் எண்ணத்தைக் கேட்டார் சிவராமன்.

“எனக்கு என்னவோ இவ்வளவு சீக்கிரம் நாம கல்யாணம்ன்னு வச்சுண்டா கல்யாண செலவுக்கும், பிள்ளை விட்டார் கேக்கற சீர் வரிசைக்கும் நாம எங்கே போவோம்ன்னு தான் எனக்கு ரொம் பயமா இருக்குண்ணா”என்று தன் பயத்தைச் சொன்னாள் சிவகாமி.

“நாம அவா கிட்டே ‘எங்களால் கல்யாணம் தான் நன்னா பண்ணிக் குடுக்க முடியும்,’சீர்’ன்னு எல்லாம் ஒன்னும் பண்ண எங்க கிட்டே ரொம்ப பண வசதி இல்லை’ ன்னு சொல்லுவோம்.அவா ஒத்து ண்டா,நாம மேலே ஆக வேண்டியதை கவனிக்கலாம்.இல்லை அவா ‘இதை பண்ணணும்’‘அதை பண் ணணும்’ன்னு கேட்டா நம்மாலே முடியாதுன்னு சொல்லிடலாம் சிவகாமி.பையன் பிராமண பையனா இருக்கான்.நம்ம ராஜீக்கு மானேஜராவும் இருக்கான்.அதனால்லே தான் நான் இந்த கல்யாணத்துக்கு ‘சரி’ன்னு சொல்லாலாம்ன்னு நினைச்சேன்”என்று சொல்லி நிறுத்தினார் சிவராமன்.

”உங்க இஷ்டம் போல பண்ணுங்கோ” என்று சம்மதம் தெரிவித்தாள் சிவகாமி.

ராஜி,ரவி ரெண்டு பேருடைய ஜாதகமும் நன்றாகப் பொருந்தி இருக்கவே, ‘பெண் பார்க்க’ ஏற் பாடு பண்ணினார் சிவராமன்.

‘பெண்’ பார்க்க வந்த ரவியின் அம்மா சாரதா ‘எங்களுக்கு உங்க பெண்ணைப் பிடிச்சு இருக்கு’ என்று சொல்லி விட்டு,“நீங்க எங்க பையன் ரவிக்கு வரதக்ஷணையா ஐம்பதாயிரம் ரூபாய் குடுக்க ணும்.பொண்ணுக்கு வைரத் தோடும்,வைர மூக்குத்தியும்,போடணும்.அவா ரெண்டு பேருடைய கல்யா ணத்தே ‘ஜாம்’‘ஜாம்’ ன்னு ஒரு பெரிய சத்திரத்திலே பண்ணனும்.நல்ல ‘கேடா¢ங்க்’ காரரை சாப் பாடுக்கும் ‘டிபனு’க்கும் அரேஞ்ச் பன்னணும்”என்று கண்டிப்பாக சொன்னாள்.

பையன் அப்பா ஒன்னும் சொல்லாமல் வெறுமனே தன் மணைவி சொல்வதைக் கேட்டுக் கொ ண்டு சும்மா இருந்தார்.

பொறுமையாக பையனின் அம்மா சொன்னதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த சிவராமன் “நாங்க ஐம்பதாயிரம் ரூபாய் வரதக்ஷணயும் குடுத்து,பொண்ணுக்கு வைரத் தோடும்,வைர மூக்குத் தியும் போடஎங்களுக்கு வசதி போறாது.நீங்க கேட்டுண்டா மாதிரி எல்லா ஏற்பாடுகளையும் பண்ணி நாங்க அவா ரெண்டு பேருடைய கல்யாணத்தையும் ஒரு பெரிய சத்திரத்திலே நன்னா பண்ணித் தறோம்.அவ்வளவு தான் எங்களால் முடியும்” என்றார்.

“நன்னா இருக்கு நீங்க சொல்றது.வரதக்ஷணையும் கிடையாது,வைரத் தோடும்,வைர மூக்குத் தியும்,இல்லேன்னு சொன்னா,எங்களுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் இல்லே” என்று சொல்லி விட்டு எழுந்து விட்டாள் சாரதா.”நாங்க எங்களாலே பண்ண முடியறதைத் தான் சொன்னோம். சரி, அப்புறமா உங்க இஷ்டம்”என்று சொல்லி சிவராமனும் எழுந்து,அவர்களை வழி அனுப்பி வைத்து வீட் டுக்குள் வந்தார்.

இந்த பேச்சில் மிகவும் ஏமாந்தவன் ரவி தான்.ராஜீக்கும் இதில் சற்று மன வருத்தம் தான்.

ரவி பார்க்க மிகவும் அழகாக இருந்தான்.தவிர அவன் ‘மானேஜராக’ வேறு இருந்தான்.நல்ல சுபாவம் உள்ளவனாக இருந்த ரவியை கல்யாணம் பண்ணிக் கொள்ள ராஜி ரொம்ப ஆசைப் பட்டாள்.

‘ஆபீஸி’ல் ரவி ராஜீயை தனியாக சந்தித்து, “ராஜீ,என் அம்மா கேட்டதைப் பத்தி தப்பா எடுத் துக்காதே.நான் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப்படறேன்.உன்னைத் தவிர நான் வேறு பெண்ணையும் நான் கண்ணெடுத்துக் கூட பாக்க மாட்டேன்.எனக்கு கொஞ்சம் ‘டயம்’ குடு.நான் என் அம்மாவிடம் எப்படியாவது மெல்ல பேசி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வக்கிறேன் எனக்கு அந்த ¨தா¢யம் இருக்கு.ப்ளீஸ்.நீ கொஞ்சம் காத்துண்டு இரு”என்று கெஞ்சினான் ரவி.

உடனே “சரி நான் காத்துண்டு இருக்கேன்” என்று ராஜீ சொன்னதும் “ரொம்ப தாங்க்ஸ் ராஜி” என்று அவளை ‘தாங்க்’ பண்ணினான் ரவி.

ரவி பல தடவை அவன் அம்மாவிடம் கெஞ்சினான்.

கடைசியில் அவன் அம்மா “சரிடா ரவி,நான் அவாளை வரதக்ஷணை கேக்கலே.மத்தது எல்லா ம் போட்டு அவா கல்யாணம் பண்ணித் தரட்டும்” என்று தன் கெடு பிடியில் இருந்து கொஞ்சம் விட் டுக் கொடுத்தாள் சாரதா.ரவிக்கு மிகவும் சந்தோஷம்.

உடனே ரவி அவன் அம்மாவை ‘தாங்க்’ பண்ணினான்.

‘ஆபீஸி’ல் ரவி ராஜீயிடம் அவன் அம்மா சொன்னதை சொன்னான்.ராஜீ மிகவும் சந்தோஷப் பட்டாள்.

ராஜீ வீட்டிற்கு வந்து “அப்பா ரவியின் அம்மா வரதக்ஷணை வேணாம்.வெறுமனே வைரத் தோடும்,வைர மூக்குத்தியும் போட்டு கல்யாணம் பண்ணிக் குடுத்தா போதும்ன்னு சொன்னதா என் மானேஜர் என் கிட்டே இன்னைக்கு ‘ஆபீஸில்’ சொன்னார்” என்று சொல்லி நிறுத்தினாள்.

“இப்போ விக்கற விலையில் வைரத் தோடும்,வைர மூக்குத்தியும், சேந்து ஒரு இருபதஞ்சு ஆயி ரம் ரூபாயாவது ஆகுமே.அவ்வளவு பணத்துக்கு நான் உடனே என்ன பண்றது” என்று சொல்லி யோஜனையில் ஆழ்ந்தார் சிவராமன்.“ஆமாம் ரெண்டுத்துக்கும் நீங்க சொல்ற பணம் நிச்சியம் பஞ்சமில்லாம ஆகும்” என்று ஆமோத்திதாள் சிவகாமி.

சிவராமன் திருவண்ணாமலையில் இருக்கும் தன் தம்பிக்கு தங்கள் ‘பிதுரார்ஜித சொத்தான’ இரண்டு ஏக்கர் நிலததை வித்து தனக்கு அதில் சேர வேண்டிய பணம் கிடைக்குமா என்று கேட்டு கடிதம் எழுதினார்.

சிவராமன் தம்பி அந்த கடிதம் கையில் கிடைத்தவுடன் உடனே “அண்ணா,அந்த இரண்டு ஏக்கர் நிலத்தின் விளைச்சலை தான் நான் என் வருஷாந்திர சாப்பாட்டுக்கு வச்சுண்டு வறேன். உன்னை போல எனக்கு நிரந்தர மாச வருமானம் எதுவும் இல்லே.தவிர இப்போ அந்த நிலத்தை வித்தா ரொம்ப கம்மி விலைக்குத் தான் போகும்.அதனால் நான் அந்த நிலத்தை இப்போ விக்க முடி யாது” என்று பதில் கடிதம் போட்டு விட்டான்.

சிவராமனுக்கு இது முதலிலேயே தெரியும்.

‘தன் தம்பி இதுக்கு ‘சரி’ன்னு சொன்னாலும்,அவன் பொண்டாட்டி இதுக்கு ஒத்துக் கொள்ள வே மாட்டா.சுத்த பிடிவாதக்காரி அவ.அவளை மீறீ தன் தம்பியால் ஒன்னும் பண்ண முடியாது’ என்றும் சிவராமனுக்கு நன்றாகத் தெரியும்.

“இந்த சம்பந்தத்தை நாம விட வேணாம் சிவகாமி.நாம வைரத்தோடும், வைர மூக்குத்தியும் போட்டு கல்யாணத்தே பண்றோம்ன்னு சொல்லலாம்ன்னு இருக்கேன். நீ என்ன சொல்றே சிவகாமி” என்று கேட்டு விட்டு சிவகாமியின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார் சிவராமன்

“என்னவோ பண்ணுங்கோ.எனக்கு அவ்வளவு ¨தா¢யம் இல்லே” என்று சற்று சந்தேகத்துடன் சொன்னாள் சிவகாமி.

“பகவான் இருக்கார் சிவகாமி.நம்ம பொண்ணுக்கும் நாம காலா காலத்திலே கல்யாணம் பண் ண வேணாமா சொல்லு”என்று இழுத்தார் சிவராமன்.‘இன்னும் ஆறு மாசத்துள்ளே பணம் சேந்த வுடன் கல்யாணத்தை பண்ணலாம்’ என்று நினைத்து ராஜியை பிள்ளை வீட்டார் கிட்டே ‘சரி’ ன்னு என்று சொல்லச் சொன்னார் சிவராமன்.

கல்யாணத்திற்கு ‘சரி’ என்று சிவராமன் ஒத்துக் கொண்டவுடனே சம்மந்தி மாமி அவர்கள் வீட்டு ஜோஸ்யரைப் பார்த்து கல்யாணத்துக்கு சீக்கிரமா ஒரு நல்ல நாள் ஒன்றைப் பார்க்கச் சொன் னாள். ஜோஸ்யரும் சாரதா மாமி சொன்னதைப் போல அந்த மாசத்திலேயே ஒரு நல்ல முஹூத்த நாளைப் பார்த்து சொன்னார்.

’சுபஸ்ய சீக்ரம்’ என்கிற காரணத்தை சிவராமனிடம் சொல்லி “நீங்க இந்த கல்யாணத்தை இந்த மாசத்துள்ளே முடிக்க ‘ட்ரை’ப் பண்ணுங்கோ.அப்புறமா மார்கழி மாசம் வந்துடறது. நான் எங்காத்து ஜோஸ்யரை கல்யாண முஹூர்த்தத்துக்கு ஒரு நல்ல நாள் பாக்கச் சொன்னேன்.அவர் தை மாசத்லே இவா நக்ஷத்திரங்களுக்கு கல்யாண முஹூர்த்தம் ரொம்ப ‘லெட்டா’ தான் கிடைக்கிறதுன்னு சொன் னார்” என்று ‘போனில் சொல்லி’ அவசரப் படுத்தினாள் சாரதா.

சம்மந்தி மாமி இந்த விஷயத்தை போன் பண்ணி சொன்னதும் சிவராமனுக்கு கையும் ஓடவி ல்லை காலும் ஓடவில்லை.கல்யாண செலவுக்கு பணத்தை சேகா¢க்க ஆரம்பித்தார் சிவராமன்.

உடனே சிவராமன் தன் பள்¨ளிக்கூடத்தில் தன்னால் எவளவு பணம் மாசா மாசம் கட்ட முடி யுமோ அந்த அளவுக்கு ‘P.F. லோனுக்கு’ மனு போட்டுஅந்த ‘செக்ஷன் ஆபீசரை’ பார்த்து “கொஞ்ச ம் சீக்கிரமா லோனைக் குடுங்க” என்று கெஞ்சிக் கேட்டார்.

ஒரு வாரம் ஆனதும் ‘P.F. லோன்’ பணம் வந்து விட்டது.

சிவகாமி தான் தன் பெண்ணுக்கு என்று சேர்த்து வைத்து இருந்த நகைகளையும்,தன் நகைக ளில் கொஞ்தத்தையும் அழித்து தன் பெண்ணுக்கு கைக்கும் கழுத்துக்கும்,பையனுக்கு மோதிரமும் பண்ணி முடித்தாள்.

சாரதா மாமி சொன்ன முஹூர்த்த நாள் நெருங்கிக் கொண்டு இருந்தது.

சிவராமன் சத்திரம்,சமையல் காரர்,நாதஸ்வரம்,கல்யாணத்திற்கு பூ,வாத்தியார் எல்லா ஏற்பாடு களையும் ஒருவாறு பண்ணி முடித்தார்.

கல்யாண பந்தலில் கல்யாணத்திற்கு எல்லாம் தயாராக இருந்தது.

முஹூர்த்ததிற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னால் சம்மந்தி மாமி சிவராமனை தனியா க அழைத்து “மாமா வைரத்தோடும்,வைர மூக்குத்தியும் செஞ்சுட்டேளா.அதை கல்யாண பொண்ணு க்கு நீங்கோ போடலையா.அப்படிப் போட்டா தானே கல்யாணத்துக்கு வந்தாவாளுக்கு எல்லாருக்கும் தெரியும்”என்று இழுத்தாள்.

சிவராமன் அந்த மாமியை தனியாக அழைத்து “மாமி,எனக்கு கொஞ்ஜம் டயம் குடுங்கோ. நான் நிச்சியமா வைரத் தோடும்,வைர மூக்குத்தியும் பண்ணி போடறேன். கல்யாணத்துக்கு என்ன செலவு ஆகும்ன்னே எனக்குத் தெரியலே.நான் யாருக்குப் பண்ணப் போறேன் மாமி.என் பெண்ணு க்குத் தானே.நான் நிச்சியமா பண்ணி போடறேன்.ஆனா தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை மட்டும் நிறுத்திடாதீங்கோ.உங்களை கெஞ்சிக் கேட்டுக்கறேன்” என்று கெஞ்சினார் சிவராமன்.

”உங்க வார்த்தைக்கு மா¢யாதை கொடுத்து நான் கல்யாணத்தை நடத்த சம்மதிக்கிறேன்.ஆனா எங்களே ஏமாத்த மட்டும் நினைக்காதீங்கோ” என்று சற்று கடுமையாகவே சொல்லி விட்டு கல்யாண த்தை நடத்த ஒத்துக் கொண்டாள் சாரதா.

கல்யாணம் நன்றாக நடந்து முடிந்தது.

சிவராமனுக்கு எல்லோருக்கும் பணம் பட்டுவாடா பண்ண பணம் போதவில்லை.

சமையல்காரர் மிகவும் நல்லவர்.அவர் தன் பங்குக்கு ஒரு நாலா ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டார்.சத்திரக் காரரும் சிவராமன் படும் கஷடத்தைப் பார்த்து ஒரு ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டார்.வாத்தியாரும் தக்ஷணையில் கனிசமாக குறைத்துக் கொண்டார்.

மற்றவர்களுக்கு எல்லாம் தன்னிடம் இருந்த பணத்தையும்,போறாததற்கு தன் தம்பியிடமும், தன் மச்சினனிடமும்,கடன் வாங்கி எல்லோருக்கும் பட்டுவாடா பண்ணி முடித்தார் சிவராமன்.

தன் அப்பா அம்மாவை நமஸ்காரம் பண்ணி விட்டு எழுந்துக் கொண்டு “அப்பா,அம்மா,உங்க உடம்பை பாத்துங்கோ.ராதாவையும்,மீராவையும் நன்னா படிக்க வையுங்கோ”என்று சொல்லும் போது அவள் கண்கள் குளமாற்று.

“புக்காத்துக்குப் போகும் போது நீ அழக்கூடாது ராஜீ தெரியறதா.கண்ணைத் துடைச்சுக்கோ.நீ அவா ஆத்துக்கு சந்தோஷமா போகணும்”என்று சொல்லி பெண்ணை அனுப்பி வைத்தார்கள் சிவரா மனும் சிவகாமியும்.

பத்து நாள் ஆயிற்று.

சாரதா மாமி போனில் வெறுமனே சிவராமனை கூப்பிட்டு ‘வைரத்தோடும்,வைர மூக்குத்தியும், என்ன ஆச்சு’ என்று கேட்டு நச்சரித்து வந்தாள்.

சிவராமனும் ஏதோ சாக்கு போக்கு சொல்லி வந்தார்.

பொருத்து,பொருத்துப் பார்த்த சாரதா மாமி சிவராமனைப் ‘போனி’ல் கூப்பீட்டு ”இதோ பாரு ங்கோ மாமா.நீங்க எப்ப வைரத்தோடும்,வைர மூக்குத்தியும்,போடுவேளோ எனக்கு தெரியாது.அது ரெண்டும் போட்ட அப்புறமாத் தான் உங்க பெண்ணுக்கு ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ண முடியும் அதனாலே நீங்கோ சீக்கிரமா வைரத்தோடும், வைர மூத்துத்தியும், போடற வழியைப் பாருங்கோ” என்று கோபமாக சொல்லி ‘போனை’ வைத்து விட்டாள்.சம்மந்தி மாமி சொன்னதை சிவராமன் சிவ காமி இடம் சொன்னார்.
சிவராமனுக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை.

”நான் பல தடவை அடிச்சுண்டேனே.கேட்டேளா.உங்களாலே ராஜிக்கு வைரத்தோடும்,வைர மூக்குத்தியும்,போடமுடியுமான்னு.ஆனா நீங்க ’பாத்துக்கலாம் சிவகாமி.பகவான் இருக்கார்,பகவான் இருக்கார்’ ன்னு சொன்னேள்.இப்போ எந்த பகவான் வந்து நமக்கு வைரத்தோடும்,வைர மூக்குத்தியும் தரப் போறார் சொல்லுங்கோ. உங்க போக்கே எனக்கு புரியலே.இப்போ என்னண்ணா பண்றது.சம்மந்தி மாமி இப்போ ராஜி ‘சாந்தி முஹூர்த்ததை’ நடத்த விட மாட்டா போல இருக்கே” என்று அழ மாட்டாத் குறையாக கணவனிடம் முறை இட்டாள் சிவகாமி.

“இருக்கட்டும் சிவகாமி.நான் ராஜீ கிட்டே நிதானமா பேசிப் பாக்கறேன்.இப்போதைக்கு இந்த சமாசாரத்தை நாம மறந்துட்டு மேலே ஆக வேண்டியதை கவனிக்கலாம்” என்று சொல்லி விட்டு கோ விலுக்குப் புறப்பட்டு போனார்.

‘நம்ப பொண்ணுக்கு ‘சாந்தி முஹூர்த்தம்’ நடக்காது போல இருக்கே’ என்று நினைத்து குழம்பி ப் போய் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தாள் சிவகாமி.

அன்று சாயங்காலம் ராஜி தன் வீட்டுக்கு வந்தவுடன் சிவராமன் நிதானமாக “ராஜீ,உன் மாமி யார் வைரத்தோடும்,வைர மூக்குத்தியும், போட்டா தான் ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ண முடியும்ன்னு ஒரு கண்டிஷனை போட்டு இருக்கா.அது உனக்குத் தெரியும்ன்னு நான் நினைக்கறேன் மாப்பிள்ளை என்ன சொல்றார்.நாம என்ன பண்ணலாம்ன்னு உனக்கு தோன்றது.நீ எதைச் சொல்றயோ அதை நா ன் பண்றேன்ம்மா” என்று சொன்னார்.

”ஆமாம்ப்பா.நானும் இதை கேள்விபட்டேன்.ஒன்னு பண்ணலாம்பா.நீங்க நம்ப வீட்டு கோடி யில் இருக்கும் சேட்டிடம் ஒரு வைரத்தோடும்,ஒரு வைர முக்குத்தியும்,வாங்குங்கோ.அதை ‘வட்டியும் அசலு’மா நான் கட்டி விடறேன்’ என்று சொல்லி அவன் கொடுக்கும் பத்திரத்தில் கை எழுத்து போட் டு அவனுக்கு கொடுத்துடுங்கோ.அப்புறமா அந்த வைரத்தோட்டையும்,வைர மூக்குத்தியையும்,ஒரு நல்ல நாள் பாத்து நீயும் அம்மாவும் என் மாமியார் கிட்டே கொடுத்து விட்டு ‘மேலே ஆக வேண்டிய தை நீங்க கவனியுங்கோ’ன்னு சொல்லிட்டு ஆத்துக்கு வந்துடுங்கோ.அப்புறம் மீதியை நான் கவனிச்சு க்கறேன்”என்று சொன்னாள் ராஜீ.

“என்னடி சொல்றே ராஜீ.சேட்டுக் கிட்டே வாங்கினா அவன் அசாத்திய விலை சொல்வானேடீ. அவன் கிட்டேயா வாங்கச் சொல்றே.அவன் வட்டி வேறே ஜாஸ்தியா போடு வானேடீ.அவன் போடற வட்டியே நம்மால் கட்ட முடியாதே ராஜி.அந்த சேட் கிட்டே போய் வைரத் தோட்டையும்,வைர மூக்கு த்தியேயும் வாங்கச் சொல்றயே” என்று கத்தினாள் சிவகாமி.

”வேறு வழி இல்லை அம்மா.அப்படித்தான் இப்போ பண்ணியாகணும்” என்று சொல்லி விட்டுப் தன் வீட்டுக்குப் போய் விட்டாள் ராஜீ.

சிவராமனும் ராஜீ சொன்னது போல் கோடி வீட்டில் இருக்கும் சேட்டிடம் பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு ஒரு வைரத்தோடும், ஒரு வைர மூக்குத்தியும், வாங்கிக் கொண்டு வந்தார்.

ஒரு நல்ல நாளாப் பார்த்து சம்மந்தி மாமியிடம் சிவராமனும்,சிவகாமியும் வைரத்தோட்டையும், வைர மூக்குத்தியையும் கொடுத்து விட்டு “கொஞ்ஜம் ‘டிலே’ ஆயிடுத்து மாமி.மன்னிச்சுக்கோங்கோ. இனி மேலே ஆக வேண்டியதை நீங்க கொஞ்சம் பண்ணுங்கோ” என்று சொல்லி விட்டு பவ்யமாக நின்றுக் கொண்டு இருந்தார்கள்.
வைரத்தோட்டையும்,வைர மூக்குத்தியையும் கையிலே வாங்கிக் கொண்ட சாரதா மாமி “நிச்சிய மா மாமா.நான் வாத்தியாரைக் கூப்பிட்டு ஒரு நல்ல முஹூர்த்தமா பாத்து ‘சாந்தி முஹூர்த்ததுக்கு ஏற் பாடு பண்றேன்”என்று முக மலர்ச்சியோடு சொன்னாள்.

உடனே சிவராமனும் சிவகாமியும் “ரொம்ப தாங்ஸ் மாமி.நீங்கோ ‘முஹூர்த்த நாளை’ எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்கோ.நாங்க வந்து அந்த ‘முஹூர்த்ததுக்கு’இருந்து விட்டு போறோம்”என்று சொல் லி விட்டு,சந்தோஷமாக கிளம்பிப் போனார்கள்.

வாத்தியாரை கூப்பிட்டு சாந்தி முஹூர்த்ததிற்கு நாளும் நேரமும் எழுதி வாங்கிக் கொண்டாள் சாரதா மாமி.

பையனும் மாட்டுப் பொண்ணும் ஆபீஸில் இருந்து வந்ததும் சாந்தி முஹூர்த்த நாளையும் ‘டயத்தையும்’ அவர்களிடம் சந்தோஷமாக சொன்னாள் சாரதா மாமி.
முஹூர்த்த நாளை சம்மந்திகளுக்கு ‘போனில்’ சொன்னாள் சாரதா.இருவரும் சந்தோஷப்பட்டு “நாங்க முஹூர்த்தத்துக்கு வறோம் மாமி” என்று சொல்லி விட்டு ‘போனைக் கட்’ பண்ணீனார்கள்.

“என்ன உங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷம் தானே” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் சாரதா.ரவி சந்தோஷப் பட்டு “ரொம்ப ‘தாங்ஸ்மா’ “என்று சொன்னான்.
மாமியார் சொன்னதற்கு பதில் ஒன்னும் சொல்லவில்லை ராஜீ.

சாரதா ”என் ராஜி நீ ஒன்னும் சொல்லாம இருக்கே”என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.

கொஞ்ச நேரம் பொறுத்து விட்டு “நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்கோ அம்மா.இப்போ நான் ‘சாந்தி முஹூர்த்தம்’ பண்ணிக் கொள்ளப் போவது இல்லே” என்று சொல்லி விட்டு தன் கண்க ளைத் துடைத்துக் கொண்டு இருந்தாள் ராஜி.

“என்ன சொல்றே ராஜி,நான் வாத்தியாரைப் பாத்து ‘சாந்தி மூஹூர்தத்துக்கு’ நாள் குறிச்சி இருக் கேன்.இந்த சந்தோஷ சமாசாரத்தே நான் உங்க அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் ‘போன்’ பண்ணீ சொல்லி இருக்கேன்.அவா ரெண்டு பேரும் சந்தோஷப் பட்டு ’நாங்க முஹூர்தத்துக்கு வறோன்னு வேறே ‘போன்’ பண்ணி சொல்லி இருக்கா.நீ என்னடான்னா ‘நான் இப்போ சாந்தி முஹூர்த்தம் பண்ணிக் கொள்ளப் போறது இல்லே’ன்னு சொல்லிட்டு என்னமோ உன் கண்ணை கசக்கிண்டு இரு க்கே.இந்த ‘பன்ஷன்’ எல்லா கல்யாணம் ஆன பையனுக்கும் பொண்ணுக்கும் ஒரு மூஹூர்த்த நாள் ளே பண்ணுவா புக்காத்லே இருக்கற பெரியவா.உங்க அம்மா,அப்பா வைரத் தோட்டையும், வைர மூக் குத்தியையும் கொண்டு வந்துக் குடுக்க கொஞ்சம் லேட்டாயிடுத்து” என்றாள் சாரதா.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *