என்ன எழுதியிருப்பாள்..? – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,671 
 

அம்மாவை அப்பாவை எதிர்த்துக் கொண்டு, வடபழனி முருகன் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டு (காதல்) கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்துவிட்டு, ஆசைக்கணவனுடன் புது வீட்டில் குடியேறி ஒரு மாதமாகிவிட்டது.

‘சார்…கூரியர்’

யார் கிட்டேயிருந்து?’

‘அம்மாகிட்டேயிருந்துதான்.’

‘இப்பவாவது ஞாபகம் வந்ததே. என்ன எழுதியிருக்காங்க..?’

‘என்ன எழுதியிருப்பாங்க…உங்களை மறந்துட்டு வீட்டுக்குத் திரும்பி வான்னூ எழுதியிருப்பாங்க…’ சொல்லிக் கொண்டே கவரை பிரித்தாள்.

‘அன்பு மகளுக்கு

இப்பொழுது விற்கிற விலைவாசியில் வேலையில்லாத கணவனுடன் குடும்பத்தைச் சமாளிப்பது கடினம். அதனால் தாமதிக்காமல் உனக்காக ரேஷன் கார்டு விண்ணப்பித்து விட்டேன். அதில் உன் பெயருடன் உன் கணவர் பெயரையும் கொடுத்திருக்கிறேன். சம்பந்தப்பட்ட ரசீதை வைத்திருக்கிறேன். அடுத்த வாரம் சென்று புது கார்டை பெற்றுக் கொள்ளலாம்.

எங்களுடைய ரேஷன் கார்டிலிருந்து உன்னுடைய பெயரை நீக்கவும் ஏற்பாடு செய்து விட்டேன்.’

– எஸ்.வி.வாசுதேவன் (2-1-2008)

Print Friendly, PDF & Email

பார்வை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

தந்தை யாரோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *