அக்கா நித்யாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்தார்கள். அம்மா, தங்கை வித்யாவிடம் கிசுகிசுத்தாள்.
“உள்ளே போ…’தங்கை பேரழகு; அக்கா சுமார் என்பதால்…!
பெண் வீடே அதிர்ந்தது. காரணம் – நித்யாவை அழைத்து வந்ததே வித்யாதான்….! வந்தவர்களுக்கு சம்மதம்; அக்கா நித்யாவுக்கும்…!
“போய்ச் சொல்கிறோம்…’ என விடைபெற்றனர் பையன் வீட்டார்.
அம்மா அலறினாள். “உன்னால நாலு இடம் தவறிடுத்து…!
தலைகாட்டாதன்னா அக்கா நித்யாவோட வந்து நிக்கற…! இதுவும் போச்சு…’
அக்கா நித்யா சிரித்தாள். “வித்யாவை வரச் சொன்னது நான்தான்…!
தங்கச்சி அழகாயிருந்தாலும், அக்காவைப் பிடிச்சுப் போறவர்தான்
லைஃப்ல சரியானவர்மா…! வித்யாவை, அவர் பார்க்கவேயில்ல.
என்னைப் பார்த்த கண்ணை எடுக்கவேயில்லை. ஸோ, இவர்தான் என்னோட… அவர்…’
நித்யா கணக்கு தப்பவில்லை. சம்மதம் என பையன் வீட்டிலிருந்து போன் வந்தது!