மாசிலாமணிக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் பண்ணியே ஆகணும்னு டாக்டர் சொல்லிட்டார். இரண்டிலிருந்து மூன்று லட்சங்கள் ஆகலாம்.
சிக்கனமாக இருந்து, நேர்மையாக சம்பாதித்து முன்னுக்கு வந்தவர். கால்குலேட்டடு பெர்சன். வயது எண்பது.
அவருக்கு சம்மதமில்லையென்றாலும், மனைவி கணவருக்கு பைபாஸ் பண்ணியே ஆக வேண்டும் என உறுதியாக இருந்தார்.
அன்புக்கணவர் ஆயிற்றே…! மூன்றரை லட்சங்களை விழுங்கி மாசிலாமணி உயிர் பெற்றார்.
வீட்டிற்கு வந்ததும், ”பைத்தியக்காரியா இருக்கியே, இந்த வயதில் இவ்வளவு செலவு தேவையா..? போனால் போகட்டும்- னு விடாம, காசைக் கரியாக்கிட்டியே…”
”என்னங்க, இப்படிச் சொல்றீங்க…? எனக்கு இந்த நிலை ஏற்பட்டால். நீங்க சும்மா விட்டிருப்பீங்களா?”
”நான் செலவு பண்ணியிருக்க மாட்டேன் உன்னை மாதிரி” என்றதும்தான் தாமதம், விசாலி ஹார்ட் அட்டாக்கில் போய்ச் சேர்ந்தாள்…!
– 6-4-11