
நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன. 2011க்கான “சுஜாதா சிறந்த சிற்றிதழ் விருது” பெற்றிருக்கும் 361 டிகிரி என்னும் சிற்றிதழின் ஆசிரியர்.
கவிதை நூல்கள்
- நிலாக்காலங்கள் (2001)
- மயிலிறகாய் ஒரு காதல்(2008)
- ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்(2008)
- வெயில் தின்ற மழை(2010)
சிறுகதை நூல்
- யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்(2009)
Interests: தனித்திருக்கும் நிலவிற்கு துணையாய் இரவெல்லாம் விழித்திருக்கப் பிடிக்கும்; சிறுபூவோ சிறுகுழந்தையோ சிந்துகின்ற கள்ளமில்லா புன்னகையில் எனைத் தொலைக்கப் பிடிக்கும்; கடற்கரையில் அலைகளோடு சடுகுடு விளையாடி சோர்கையில் வானம் பார்த்து விழுந்துகிடக்கப் பிடிக்கும்; கவிதை ரசிக்கும் கண்களில் காலமெல்லாம் வாழ்ந்துவிட துடிக்கும் மனசு பிடிக்கும்; காலத்திற்கே அனுபவக்கதைகள் சொல்லுகின்ற வெள்ளைநரைகள் ரொம்ப பிடிக்கும்; என்ன வாழ்க்கை இது என்று சலிக்கின்ற மனிதர்கள் கண்டால் ஒதுங்கி நடக்கப் பிடிக்கும்; முயன்றவன் தோற்றதில்லை என்ற முழக்கம் கேட்டால் சொன்னது குழந்தையென்றாலும் காலில் விழுந்து வணங்கப் பிடிக்கும்;
Favorite Movies: Children of Heaven, 3IRON, The Way Home, மூன்றாம் பிறை, நாயகன், பாட்சா, முதல் மரியாதை….
Favorite Music: இளையராஜனின் அத்தனை பாடல்களும்
Favorite Books: பைபிள், கம்பராமாயணம், கடல்புரத்தில், The sorrows of young werther….Its a BIG list 🙂
———————————————————————————————
நிலாரசிகன், மென்பொருளாளர்
இந்தியா.
nilaraseegan@gmail.com
நிலாரசிகன் சிறுகதைகள்
நிலாரசிகன் பக்கங்கள்
———————————————————————————————-