கதையாசிரியர் தொகுப்பு: சு.சமுத்திரம்

50 கதைகள் கிடைத்துள்ளன.

சண்டைக் குமிழிகள்

 

 இன்னும் குட்டையாகவே இருக்கும் குட்டாம்பட்டியில், கூனிக்குறுகிய ‘வாழாத’ வடக்குத் தெருவில், தங்கம்மா – லிங்கம்மாவின் மகாயுத்தம், இதோ நடந்து கொண்டிருக்கிறது. மருந்துக்குக் கூட ஓடு போட்ட வீடோ அல்லது காரை’ வீடோ காணப்படாத இந்தத் தெருவில், உள்ள ஓலை வீடுகள் காற்றில் ஓலமிட்டு துடி துடித்தன. இந்தச் சந்துப் பகுதியில், இந்த மாதத்தில் தங்கம்மாவுக்கும் லி ங்கம்மாவுக்கும் இடையே நடைபெறும் மூன்றாவது மகாயுத்தமாகும் இது. ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக்கூடாது என்ற பழமொழியை நம்புபவர்கள், இவர்களின் போர் முழக்கத்தைப்


தராசு

 

 கைத்தறி லுங்கியை , செம்மண் நிறத்துப் பேண்ட்டால் அகற்றிவிட்டு, பாடாவதி பனியனை வெளுத்துப்போன வெள்ளைச் சட்டையால் மறைத்துக் கொண்டு, ஒப்புக்குத் தலையை வாரியபடியே கண்ணாடியை வேண்டா வெறுப்பாய்ப் பார்த்த விசுவநாதனை, செந்தாமரையும் அவனை மாதிரியே பார்த்தாள். ஸ்டவ்வில் பூனை குத்துக் காலிட்டு உட்கார்ந்திருப்பதை சொல்லத்தான் போனாள். ஆனால் – அதற்குள், வீட்டிற்கு வெளியே நடுரோட்டில் டெப்டி டைரக்டரின் கார், கரடுமுரடாய்ச் சத்தம் போட்டபடியே நின்றது. காருக்குக் குறைச்சலில்லை. வழக்கமாய் வருவதுதான். ஆனால் அன்று ஏனோ, காரின் குரல்


டிராக்டர் தரிசனம்

 

 “எலெக்ஷனை நம்பிப் பணத்தைச் செலவளிக்கப்படாது…. எலெக்டிரிஸிட்டியை நம்பி இலையைப் போடப்படாது… இந்த ரெண்டையும் செய்தாலும் செய்யலாம்… ஆனால், வாடகை டிராக்டரை நம்பி வயலைக் காயப் போடாதேன்னு சொன்னேனே.. கேட்டியா….? கேட்டியா….?” வயலின் வரப்போரத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடி தந்தை மருதமுத்து சொன்னது, மகன் கணபதியா பிள்ளையின் காதில், “கெட்டியா- கெட்டியா-” என்றேதான் கேட்டது. தந்தையைச் சத்தம் போடப் போனார். இயலவில்லை. அவர் முகத்தைப் பார்க்கக் கூச்சப்பட்டு, வயலின் ஓர் ஓரத்தில் கல்லடுப்பில் பொங்கிய பாத்திரத்தைப் பார்த்தார். அதில் கோழித்


கோபுரம்

 

 அந்த நால்வரும், அந்த வீட்டில் உள்ளவர்களை மிருகங்களைப் போலக் கட்டிப் போட்டிருந்தார்கள். குடிசை வாசிகளுக்கு பங்களாவாகவும் பங்களாக்காரர்களுக்கு அவுட் ஹவுஸாகவும் தோன்றும் அந்த வீட்டின் பின்கதவின் அருகே போடப்பட்டிருந்த இரும்புக் கட்டிலோடு சேர்த்து கோமதி கட்டப்பட்டிருந்தாள். அவள் வாயில் தரையைத் துடைப்ப தற்காகப் பயன்படுத்தும் அழுக்குத் துணி அப்பிக் கிடந்தது. இரண்டு கைகளையும் எடுத்துக் கட்டில் கால்களில் கட்டிப் போட்டிருந்தார்கள். கண்களில் நீரூற்றாகி , கன்னங்களில் அருவி போல் பொழிந்த நீர், தரையில் துளித் துளியாய் விழுந்து


ஒரு காதல் கடிதம்…

 

 ஆடை அலங்காரத்தின் உச்சக்கட்டமாக இரண்டாவது மாடியில் ஒண்டி’ போர்ஷனில் தெற்குப் பக்கம் உள்ள ஜன்னலுக்கு வகிடெடுத்ததுபோல் தோன்றிய இரண்டு செங்குத்தான கம்பிகளுக்கு இடையே, கட்டங்ககட்டமாக முடிந்த நடுப்பகுதியில், நடுப்பக்கத்துக் கட்டத்தில் சதுரக் கண்ணாடியை சாத்தி வைத்துவிட்டு, சிவராசன், முகத்திற்குப் பவுடர் தடவும் சாக்கில் முதல் மாடியில் இரண்டாவது போர்ஷனில் இருக்கும் ஓர் இளசைப் பார்த்தான். அதே அறையில் அதே சமயம் கிழக்குப் பக்கம் இருந்த குறுகலான ஜன்னலில் கையளவு கண்ணாடியை பிரித்தபடியே கிரவுண்ட் போர்ஷனில் வாழும் அல்லது


சிக்கமுக்கிக் கற்கள்

 

 காடுகொன்று நாடாக்காமல், நாடுகொன்று, காடான மலைக்காடு…….. பார்வதி, படுக்கையாய் பயன்பட்ட கோணிப்பையின் இருமுனைகளையும், வீட்டுக்கூரையின் அடிவாரமான மூங்கில் கழியில் சொருகினாள். புறத்தே கதவாகவும், அகத்தே படுக்கையாகவும் ஆகிப்போன அந்தக் கோணி, இந்த இரண்டிற்கும் தாராளமாகவே இருந்தது. மூங்கில் நிலைவாசலில் தொங்கி, இந்தக் கோணிக்கதவு, தரையில் மடிந்தும் படிந்தும் தவழும் வகையிலான பொந்து வாசல்: அதுவே படுக்கையாகும்போதும் அப்படித்தான். முன்தலையையும் முட்டிக்கால்களையும் முட்ட வைத்தால் மட்டுமே படுக்கக்கூடிய தலை. ஆகையால், கோணிக்குச் சிக்கல் இல்லை. அவனும் இவளும் சேர்ந்து


கொடி(ய)ப் பருவம்

 

 மார்த்தாண்டம், அந்தத் தெருவை குறுக்கும் நெடுக்குமாய், இடதுபக்கம் நடந்து வலதுபக்கம் திரும்பியுமாய், பலதடவை நடந்து விட்டாலும், இன்னும் நடையை நிறுத்தவில்லை. பனியன் போடாததால், அவரது வெள்ளைச் சட்டை வேர்வை பெருக்கில் முதுகில் சரிகைபோல் ஒட்டி, இடுப்பிற்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியை கேரிபேக்கில் வைக்கப்பட்ட சதைப்பிண்டமாய் காட்டியது. பலதடவை அந்தத் தெருவை அளவெடுத்து விட்டதால், அவர் உடம்பில் துருப்பிடித்த முதுமை, கால்களை நடக்க வைக்காமல், நகர்த்திக் கொண்டிருந்தது. ஆனாலும், உடம்பை சுமக்கமுடியாமல் சுமந்தபடியே, தொடர் நடையாய் நடந்தார். அந்த


திருப்பம்

 

 நீலா, தனது சபதத்தை இப்படி நிறைவேற்றிக் காட்டுவாள் என்று ராமலிங்கம் நினைக்கவே இல்லை. அரசுப் பயணமாய், டில்லி சென்ற இருவாரக் காலத்திலும், அவள் சபதம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை. அப்படியே சிற்சில சமயம் வந்போது ‘பைத்தியக்காரப் பொண்ணு’ என்று மனதிற்குள்பேச, அந்தப்பேச்சே வாய் மத்தியில் கோடிட்டது. வீட்டுக்கு வந்ததும், அவளைச் சமாதானப் படுத்தவேண்டும் என்றுகூட நினைத்திருந்தார். அந்தப் புறா, தனது குஞ்சுகளோடு, பறந்துபோனதை, இன்னும் அவரால் நம்ப முடியவில்லை. நம்பித்தான் ஆகவேண்டும் என்பது போல் அந்த பெரிய


அவள்… அவளாக…

 

 அறைக்குள்ளே அகமும் புறமுமாய் இயங்கிய வர்த்தினி, அந்த அறையின் எல்லைக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு, ஒரு கையில் சின்ன சூட்கேஸோடு வராந்தாவிற்கு வந்தாள். சுவருக்கு மதில் போல, சுவரோவிய வண்ணக் காகித நிறத்தில் தோற்றம் காட்டிய சோபா செட்டில் உட்காராமல், ஒரு மூலையில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, விரித்துப் பிடித்த செய்திப் பத்திரிகை ஒன்றிற்குபடி “தலைமறைவான”வனைப் பார்த்து வர்த்தினி சிறிது பரபரப்போடு பேசினாள். “ராமசாமி. நேரமாயிட்டு” அரசியல் சட்டம் 356 – சம்பந்தப்பட்ட செய்தி நிகழ்வுகளை


நான்காவது குற்றச்சாட்டு

 

 பர்வின், மாணிக்கத்திடம் சிறிது கடிந்துதான் பேசப்போனாள். ‘இங்கே வரப்படாதுன்னு சொன்னேனே’ என்று சொல்வதற்காக குவிந்த உதடுகள், செவ்வரளி பூ மொட்டாய் தோன்றின. ஆனாலும் அவரை, – முகம் தொலைத்த மனிதராய், கண்களை மட்டுமே கொண்டவராய் பார்த்ததில், அந்த மொட்டுப் பூ மலர்ந்தது. அவரிடம், வீட்டில் அல்லாவின் பேரில் சொன்ன ஆறுதலை, இப்போது, தான் வைத்திருக்கும் கோப்பின் ஆணையாக ஆறுதலாக்கினாள். ‘கவலப்படாதீங்க… எல்லாம் நல்லபடியாவே முடியும்… அதுவும் இன்றைக்கே முடிந்துவிடும்’. மாணிக்கத்தின் பார்வை, அவள் வழியாய் தாவி அந்தக்