கதையாசிரியர் தொகுப்பு: கி.வா.ஜகந்நாதன்

35 கதைகள் கிடைத்துள்ளன.

துறவரசர் இளங்கோவடிகள்

 

 சிங்காதனத்தில் சேரமன்னன் வீற்றிருந்தான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பது அவன் பெயர். அவனுக்குப் பின் ஒராசனத்தில் அவனுடைய குமரர் இருவரும் அமர்ந்திருந்தனர், மூத்தவன் செங்குட்டுவன். இளையவன் பெயர் இளங்கோ என்று சொல்வார்கள். சின்ன ராஜா என்று அதற்கு அர்த்தம். மந்திரிகளும் வேறு பெரியவர்களும் அரசனுடைய அவையில் இருந்தார்கள். அப்போது ஜோசியம் சொல்கிறவன் ஒருவன் அங்கே வந்தான். அவனை நிமித்திகன் என்றும் சொல்வார்கள். அங்க அடையாளங்களைக் கண்டே அவன் ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றிய செய்திகளைச் சொல்லும் ஆற்றல் படைத்திருந்தான். அரசனிடம்


உரை வகுத்த நக்கீரர்

 

 மதுரையில் திடீரென்று பஞ்சம் வந்துவிட்டது. மழை பல காலமாகப் பெய்யவில்லை. பாண்டிய அரசன் பஞ்ச காலத்தில் உணவுப் பொருளைப் பகிர்ந்து கொடுக்க ஏற்பாடு செய்தான். அக்காலத்தில் அவன் மதுரையில் ஒரு தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்தான். அதில் புலவர்கள் இருந்து தழிழாராய்ச்சி செய்து வந்தார்கள். அந்தப் புலவர்களுக்குப் பஞ்ச காலத்தில் வழக்கம் போல வேண்டிய வசதிகளைச் செய்து தர முடியாதோ என்று அவன் வருந்தினான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘புலவர்கள் எங்கே போனலும் சிறப்புப் பெறுவார்கள்.


சேதுபதியின் மோதிரம்

 

  கையை அசைத்துத் தொட்டில. ஆட்டிக் கொண்டே நாவையும் அசைத்துப் பாடிக் கொண்டிருந்தாள், அந்தப் பெண்மணி. முகத்திலே பொலிவின்றி, உடம்பிலே உரமின்றி, கழுத்திலே மங்கலமின்றி நின்றிருந்த அந்த மடந்தைக்கு நாவிலே மாத்திரம் இனிமையும் வன்மையும் இருந்தன. தொட்டிலிலே கிடந்த சின்னஞ் சிறு குழந்தையை ஆர்வம் பொங்கப் பார்த்தபடியே அவள் தாலாட்டிக் கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தில் என்ன என்ன நினைவுகள் ஒடினவோ, யார் கண்டார்கள்? இடையிடையே ஒரு பெருமூச்சு, சிறிது நேரம் மெளனம், சிறிது முகத்திலே புன்சிரிப்பு, பிறகு


சீத்தலைச் சாத்தனர்

 

 சேரன் செங்குட்டுவன் கலைவளம் காணுவதற்காகப் போயிருந்தான். அங்கே வாழ்ந்த மலைவாணர்களாகிய வேடர்கள் மான் கொம்பு, கவரிமானின் வால் முதலிய காணிக்கைகளோடு மன்னனை வந்து பார்த்தார்கள். அப்போது அவர்கள் தாம் கண்ட அதிசயம் ஒன்றை அரசனுக்கு எடுத்துச் சொன்னார்கள். “அரசே, ஒரு பெண் தன் கணவனை இழந்து வந்து, இந்த மலையின் மேல் ஏறி, ஒரு வேங்கை மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது வானவர்கள் விமானத்தில் அவள் கணவனேடு வந்து, அவளை அழைத்துக்கொண்டு சென்றதைக் கண்டோம்” என்றார்கள். அதைக்


சோழனைக் காத்த மோசியார்

 

 யானை வெகு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வீரர்கள் ஓடி வந்துகொண்டிருந்தார்கள். கையில் வாளை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடிவந்தார்கள். ஒரே ஆரவாரம். யானையின்மேலே இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். ஒருவனைப் பார்த்தால் யானைப் பாகன் என்று நன்றாகத் தெரிந்தது, அவன்தான் முன்னால் உட் கார்ந்திருந்தான். பின்னால் இருந்தவன் ஒளிவீசும் முகமும் ஆடையணிகளும் அணிந்திருந்தான். அவன் அரசனாகத்தான் இருக்க வேண்டும். யானாப்பாகன் அங்குசத்தால் யானாயின் மத்தகத்தில் குத்தினன். அது அடங்கவில்லை. பிளிறிக்கொண்டே ஓடியது. பின்னல் ஓடிவந்த வீரர்கள் அந்த யானையைத் துரத்திக்கொண்டு வந்தார்கள்


அரிசில்கிழார்

 

 ‘நல்லவர் என்பதில் தடை இல்லே. ஆனாலும்……’ அவன் மேலே சொல்லாமல் இழுத்தான். “ஆனாலும் என்ன?’ என்று புலவர் கேட்டார். அவர் யார்? விளக்கமாகச் சொல்’ என்ருர் அரிசில்கிழார். “பேகன், பெரிய வள்ளல் என்ற புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. புலவர்களிடத்தில் எவ்வளவோ பிரியமாக இருக்கிருர், குடிமக்களிடத்தில் அன்பு உடையவரே. ஆனால் இங்கே அவரைப் பிரிந்து, தனியே வாழுகிறாள் அவருடைய மனைவி கண்ணகி. அந்த அம்மாளுக்கு எத்தனை துயரம் இருக்கும்!” “ஏன் பிரிந்து வாழுகிறாள்?” “அந்த அம்மாள் பிரியவில்லை.


ஒளவைப் பாட்டி

 

 ஒளவைப் பாட்டி என்று சொன்னலே ஒரு கிழ உருவம் உங்கள் மனக்கண்முன் தோன்றும். தமிழிலே அந்தப் பாட்டி பாடிய பாட்டுக்கள் பல உண்டு. நீங்கள் பள்ளிக் கூடத்தில் வாசிக்கிற ஆத்திசூடி, கொன்றைவேங்தன், கல்வழி இவையெல்லாம் அந்தப் பாட்டி பாடியவைகளே. ஆனல் அந்தப் பாட்டிக்கு முன்பே மற்றோர் ஒளவை இருந்தாள். அவளும் புலமை நிரம்பியவள்தான்; இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் இருந்தவள். மகா கெட்டிக்காரி. பெரிய பெரிய மன்னர்களெல்லாம் அந்த ஒளவையிடம் மதிப்பு வைத்திருந்தார்கள். அதிகமான் என்ற அரசன் ஒருவன்


உயிர் காத்த கோவூர்கிழார்

 

 திருக்கோவலூர் என்று ஒர் ஊர் திருவண்ணுமலேக்குப் போகிற வழியில் இருக்கிறது. பழைய காலத்தில் அது ஒரு சிறிய காட்டுக்குத் தலைநகராக இருந்தது. காரி என்ற வள்ளல் அந்த நாட்டுக்குத் தலைவனாக விளங்கினான். அந்த நாட்டுக்கு மலையமான் காடு என்று பெயர். மலையமான் என்பது, அதை ஆளும் தலைவனுக்குப் பெயர். காரியை மலையமான் திருமுடிக்காரி என்று சொல்வார்கள். அவனுக்கு உள்ளது சிறிய காடுதான்; ஆனாலும் சேர சோழ பாண்டிய நாட்டுப் பொருளெல்லாம் அவனைத் தேடி வரும். எப்படி என்று


சோறு அளித்த சேரன்

 

 “எங்கிருந்து வருகிறீர்கள்?” “தமிழ்நாட்டிலிருந்து.” “அப்படியா? மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் படைக்கும் கெளரவர் படைக்கும் குறைவில்லாமல் உணவு கொடுத்த தமிழ்நாட்டிலிருந்தா?” “ஆம்.” “உங்கள் அரசன் மகா தாதாவாக இருக்கிறானே!” “அவன் பரம்பரையே அப்படித்தான்.” “உதியஞ் சேரலாதன் என்ற பெயரை நாங்கள் அறிவோம். ஆனால் அவன் இயல்பு ஒன்றும் எங்களுக்குத் தெரியாது”. “அவன் எல்லாக் குணங்களிலும் சிறந்தவன்.” இவ்வாறு பேசிக்கொள்பவர்களில் ஒருவர் தமிழ் நாட்டார். மற்ருெருவர் வடநாட்டார். தமிழ்நாட்டில் உள்ள முரஞ்சியூர் என்ற ஊரிலே பிறந்த நாகராயர் என்ற புலவர்


புதிய வீடு

 

 “என்ன பளமை அடிச்சுக்கிட்டே இருக்கியே; நாளைக்கு ஆடிப் பதினெட்டு; கொமரீசுபரரை மறந்துட்தியா, புள்ளே? அரிசி, பருப்பு, காய் எல்லாம் வச்சிருக்கியா?” என்று கேட்டான் மாரப்பக் கவுண்டன். “இன்னிக்குத்தான் புதுமை பேசறியே. எல்லாத்தையும் பாக்குக் கடிக்கிற நேரத்திலே சேத்துடமாட்டேனா?” என்று பெருமிதத்துடன் கூறினாள் பழனியாயி. வருஷத்துக்கு ஒரு முறை அவர்கள் காவேரிக்கு நீராடச் செல்வார்கள். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அவர்கள். காவிரியாறு அவர்கள் ஊரிலிருந்து இருபத்திரண்டு மெயில் தூரத்தில் இருக்கிறது. மோகனூர் என்ற ஊருக்குப் போய், அங்குள்ள காவிரியில்