கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.குருமூர்த்தி

22 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜாராமனும் ரஸ்புடின்சமியாரும்…

 

 ரொம்பவும் சலிப்பில் இருந்த போலிஸ்காரர் நிமிர்ந்து சென்னியப்பலைப்பார்த்தார், “என்னய்யா விஷயம்…” “ஸார் ..ரொம்ப முக்கிய விஷயம் …கொஞ்சம் முக்கியமா கவனிச்சசு செய்யனும்…என்றான் வந்தவன்..ஒரு முக்கால் டவுசரும் பனியனும் போட்டிருந்தான் ..ஒரு கம்யூட்டர் என்ஜினியர் மாதிரி புலப்பட்டான்… ‘நீவ்க விஷயத்த சொல்லுங்க அது முக்கியமா இல்லைணமான்னு அப்புறம் முடிவு பண்ணலாம் ..நீங்க விவரமா நடந்த்தை ஒன்னு விடாம சொல்லுங்க ஸார் என்ன சமச்சாரம் … ‘வந்தவன் சங்கடப்பட்டதமாதிரி தெரிந்தது… ‘ஐய .நீ என்ன பொம்பிளை மாதிரி நெளியறே,,, சொல்லுய்யா


எம் மூஞ்சிலே எப்பவும் முழிக்காதே…

 

 “ஏய் நில்லு….. யாரடி உன்னை இப்படி அடிச்சது……” “யாரும் இல்லை……” “கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு மரியாதையா சொல்லு….ஸ்கூல்ல ஏதாவது ரவுடித்தனம் பண்ணி அடி வாங்கினியா ……’ ‘அதெல்லாம் இல்ல……’ ‘கொன்னே புடுவேன் மரியாதையா நெஞ்ச தொட்டு சொல்லு என்ன நடந்துச்சு…’ ‘ஆஞ்ஞே … யாரும் அடிக்கல்லே அத்தே….. ‘ ‘மரியாதையா சொல்லிடு அடிச்சு கொன்னுடுவேன்….ம்… இல்லை… நீ சரிப்பட மாட்டே ஒரு நிமிஷத்துல பாரு இப்ப என்ன நடந்துச்சின்னு கண்டு பிடிக்கிறேன்…… தாயாரு அந்த பெல்ட்டை எட்றி…..


ராஜாராமன் ரவிக்(கை) மாற்றின வரலாறு

 

 ஆதௌவ்….. விடியற்காலை ஒன்பது மணிக்கு மலர் ஆபிஸுக்கு வந்தால் ரொம்ப முக்கியமான விஷயம் இருக்க வேண்டும்… “ஹாய் …மலரு.. என்ன பல்லுவிளக்காம ஆபிஸ் வந்துட்டியா..” “சும்மா இர்ரா உனக்கு எப்பொவும் கேலி ..ராத்திரி பூரா உன்கூட பேசியே ஆகனும்னு ஒரே ஆத்திரம்…” ” ஆஹா உனக்கு இப்பிடி ஒரு யொகமாடா பயலே …சரி..சான்ஸை விடாதே மலரு இன்னைக்கே ஒடிப்போகலாம்….. என்ன கண்ணம்மா..பாரு கொடைக்கானல்ல எனக்கு ஒரு ரிசார்ட்டு இருக்கு..ஊட்டின்னா இன்னம் சௌகரியம்…உன் வசதி எப்பிடி..”. “ஏன்டா உனக்கு


ராஜாராமனின் பெர்முடா- ட்ரை ஆங்கிள்…..

 

 ‘ஹை……இது என்ன ராஜாண்ணா…..ரெண்டு டிரை ஆங்கிள்….அதும் ஒன்னுக்கு மேல ஒன்னு..அப்புறம் கீழே குட்டியா அதுக்குள்ளே ஒன்னு வேற..இதுக்கல்லாம் என்ன அர்த்தம்…’ ‘ராஜாத்தி..வா..வா..வா தங்கம்..ஆமா நீ மாத்திரம் தனியா வந்தா எப்பிடி நான் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சொல்ல முடியாதில்லே…முக்கிய விஷயமில்லையா …எல்லாத்தையும் கூட்டி வா கண்ணம்மா…’ “ஏய் எல்லாம் வாங்க…முக்கிய விஷயமாம்…ராஜாண்ணா..சொல்லப்போறான் ரொம்ப முக்கிய விஷயம்..ஓடியாங்க…ஓடியாங்க….” ‘ஆரம்பிச்சுட்டானா…இன்னிக்கு என்ன அஜண்டாவாம்….’ என்றார் மாமா ‘இவன்னாவே ஸ்வாரஸ்ம்டா…சிவராமா…… ‘டிரை ஆங்கிள் மாமா…’விளக்கினான் சிவராமன்…. ‘நீள அகலம் சொல்லியிருப்பானே’ என்றார் மாமா


சாமிகளே நீங்க நாசமாப்போகனும்…

 

 ஒவ்வொரு தடவை வலி வரும்போதும் பிராணன் நின்று போகும். சதை பிய்ந்தது மாதிரி வலித்தபோது ‘ அம்மா’ என்ற அனத்தலோடு வேதனையை விழுங்க முயற்சித்து கொஞ்சம் சமாளிக்கப்பார்த்தார் அங்குசாமி. சோகத்துக்கும் துக்கத்துக்கும் உடலளவில் நிதர்சமான வலி கிடையாது.அவைகளே பரவாயில்லை என்றுதான் அவருக்குத்தோன்றியது. அவைகளைச்சமாளிக்க முடிகிறது. இந்த உடல் உபாதைகளைச் சமாளிக்கிற தெம்பை அவரது உடல் இழந்திருத்தது. இப்போது ஒரு தடவை சர சரவென்று மூத்திரம் போனால் போதும்.இந்த நிமிஷம் அவர் வேண்டும் வரம் இதுதான்….. கொஞ்சம் போல