கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

2111 கதைகள் கிடைத்துள்ளன.

தலைமுறை – ஒரு பக்க கதை

 

 பெரியவர் பக்தவச்லம் வீட்டு வாசலில் வேப்பமரத்தடியில் உட்கார்ந்து ஒரு வாரப்பத்திரிகையை படித்துக் கொண்டிருந்தார். அவரது பேரன் மகேஷ் புதிதாக வாங்கிய மோட்டார் பைக்கை பளபளவென்று துடைத்துக் கொண்டிருந்தான். வீட்டு முன் ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்தவர் கண்ணாடியை மட்டும் இறக்கிவிட்டு பெரியவரே, இங்கே பிருந்தாவன் நகர்னு புதுசா பிளாட் போடறாங்களே, அது எங்கே ? என்று கேட்டார். அது மாதிரி எந்த நகரும் இங்கே இல்லையே! என்றார் பக்தவச்லம். சார், நேரா போயி லெப்ட்ல கட்


மனசு – ஒரு பக்க கதை

 

 ஸாரி டியர், இன்னைக்கும் எனக்கு வேற வேலை இருக்கு. நீங்க முன்னாடி போங்க, நான் பஸ்லயே வந்திடறேன். கவிதாவின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியப்பட்டு போனாள். அவளது தோழி சாந்தி. இந்த ஒரு வாரமாகவே அவளது நடவடிக்கையே சரியில்லை. ஏய், என்னடி ஆச்சு உனக்கு? நானும் பத்து நாளா கவனிக்கிறேன.” நீ ஏதோ ஒரு காரணம் சொல்லி குமாரோட போறதை தவிர்க்கற… அப்படி என்னடி பிரச்சனை உங்களுக்குள்? என்றாள் சாந்தி. அதில்லடி, எனக்கும் ஆசைதான். ஜாலியா அவனோட போய்


உயர்ந்த உள்ளம் – ஒரு பக்க கதை

 

 “இன்னைக்கு நாம குடும்பத்தோட வெளிய போறதா இருக்கோம். ராத்திரிதான் வருவோம். ஆனாலும், காலங்கார்த்தால எழுந்து நீ சமைக்க ஆரம்பிச்சுட்டே. வெளியே சாப்பிட்டுக்கலாமே, ஏம்மா கஷ்டப்படுறே?” – செல்ல மகள் சிணுங்கலோடு கேட்டாள் வெளியேதான் சாப்பிடப் போறோம்! அப்புறம் என்ன பண்றே|? வேலை இருக்குடி…நீ கிளம்பு! – துரத்திவிட்டாள் அம்மா. சுஜி, அன்று முழுக்க குழம்பியபடியே வந்தாள். வீடு திரும்பியவுடன் பார்த்தால், சமையல் மேடையில் சமைத்த பாத்திரங்கள் கழுவிக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன என்னம்மா, சமையல் செய்திருக்கே…ஆனா, எடுத்துட்டு வரல!


பாசமா? தப்பா..! – ஒரு பக்க கதை

 

 “படுத்துக்க மட்டும் வசதி. பெத்துக்க வசதியில்லையா?” ரமா மெளனமானாள். ரமா- வித்யா, நெருங்கிய நண்பிகள். ரமா, காதல் திருமணமானவள். டாக்டரான வித்யாவிடமே, ரமா போய் நின்றாள். கன்சல்ட் செய்ய அல்ல..? அபார்ஷனுக்காக..! ஒரு குழந்தைக்காக தவமா தவமிருக்காங்கடி..? முதல் பிள்ளையையே கலைக்கறேங்கற…? ”வேற டாக்டரையாவது ரெகமண்ட் செய் ப்ளீஸ்…” ஒரு துளி பாசமில்லா பேசறியேடி..? டாக்டர் வித்யா எரிந்தாள். ரமா சிரித்தாள் ”பக்கவத்துல சொல்றேன்..! காதல்னு நான் அவசரப்பட்டது தப்பு. தப்பான புருஷன்கிட்டே ஒரு குழந்தையும் பெத்துக்கிட்டா


அக்கா – ஒரு பக்க கதை

 

 ”உங்க அக்கா ஒரு கிரவுண்ட் வாங்கியிருக்கா…! உங்க தங்கை ஒரு லட்சம் அரியர்ஸ் வாங்கினா. ரெண்டும் கஞ்சப் பிசாசு…” என் மனுஷாளை குறை சொல்லாம இருக்க மாட்டியா? ரவி வெடித்தான். “ஹூம்..! என் அம்மா வீட்டுக்குப் போறேன்…” போய் விட்டாள். ரமாவின் தாய் வீடு. ”சொந்தக்காரா பக்கத்துல வீடு பார்க்காதீங்கன்னேன். இப்ப, டாண்ணு உங்க அக்கா வந்துடறா, டேரா போடறா, ச்சேய்…” ரமாவின் தம்பி மனைவி அங்கலாய்த்தாள். ரமாவுக்கும் கேட்டது, வெளியேறினாள். ரவியின் செல் ஒலித்தது. ”வினய்


பாட்டில்! – ஒரு பக்க கதை

 

 தூங்கி எழும்போதே காலில் இடித்தது. எல்லாமே காலி பாட்டில்கள். பொதுவாக மாதம் 25 அல்லது 30 பாட்டில்கள்தான் சேரும். இந்த மாதன் எங்கள் பேச்சுலர் ரூமில் புதிதாய் ஒரு விருந்தினன் வந்தான்…தங்கினான்…செலவுகள் ஏற்றினான்…பாட்டில் எண்ணிக்கையைக் கூட்டினான், சென்று விட்டான். இப்போது மாதக் கடைசியில் பர்ஸ் பல்லைக் காட்டுகிறது.பர்ஸில் மூன்று ஐந்து ரூபாய் காயின்கள் தான் இருந்தன. ஒரு வேளை டீ, தம்முக்குத்தான் சரியாய் இருக்கும். மதியத்துக்கு? மூணு தம் வாங்குவோம்…ஆபிஸ் கேன்டீன்லேயே டீயைக் குடிப்போம்( உவ்வே). முடிவெடுத்து


குடும்பம் – ஒரு பக்க கதை

 

 ”ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வர்றேன்…” என்றவாறே அம்மா வெளியேறியதும் வாசு கோபத்தோடு மனைவி பானுவிடம் சத்தம் போட்டான்… காலங்காத்தால வயசனவங்களை பட்டினியாவா வெளியே அனுப்பறது…டிபன் சாப்பிட்டுப் போங்கன்னு ஒரு வார்த்தை கேட்டியா..? வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியாம ஒரு ஆம்பிளை கத்தக் கூடாது…டாக்டர் அவங்களை வெறும் வயித்தோடதான் வரச் சொல்லியிருக்கிறார்… ஏதோ டெஸ்ட் எடுக்கணுமாம்.அதான் சாப்பிடாம போறாங்க…” இதைக் கேட்டதும் வாசுவின் கோபம் இன்னும் வீரியம் ஏறியது. வெளியே எட்டிப் பார்த்தான். அம்மா .தெரு முனையை எட்டி இருந்தாள்


மனைவி – ஒரு பக்க கதை

 

 குடும்பச்செலவுக்கு ருபாய் ஐம்பதாயிரம் லோன் வேண்டுமென்றும் அதை மாதம்தோறும் மூவாயிரம் வீதம் பிடித்தம் செய்து கொள்ளும்படியும் கேட்டு கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் வாகினி. “கம்பெனியுல லோன் கேட்குற அளவுக்கு அப்படி என்ன உனக்கு கஷ்டம்!’’ அவளுடன் வேலை பார்க்கும் தோழி திவ்யா கேட்டாள். “கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோண வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.!’’ யதார்த்தமாய் சொன்னாள் வாகினி.


சந்தோஷம் – ஒரு பக்க கதை

 

 ரங்கசாமி ஆற்றாமை தாங்காமல் பக்கத்து வீட்டு தியாகராஜனைக் கேட்டே விட்டார். ‘ஏன் சார், தீபாவளிக்கு எதுக்கு இத்தனை தடபுடல், இவ்வளவு செலவு? நீங்க செலவு பண்ணுன காசுக்கு ரெண்டு பவுன் நகை வாங்கி வச்சுட்டாக்கூட பிற்காலத்துக்கு உதவியா இருக்குமே? கேட்ட ரங்கசாமியை கையமர்த்தி விட்டு, வீட்டினுள் சென்ற தியாகராஜன் ஒரு சி.டி.உடன் வந்தார் . அதை ரங்கசாமியிடம் கொடுத்து, ”இதை வீட்டில் போய் போட்டுப் பாருங்கள்! நான் செலவு செய்ததறகு அர்த்தம் புரியும்!” என்றார் ரங்கசாமி சி.டி.யை


பொட்டலம் – ஒரு பக்க கதை

 

 கிராமத்திலிருந்து அண்ணன் மணியைப் பார்க்க வந்திருந்த சத்யா. அவருடைய மளிகைக் கடைக்கு விஜயம் செய்தான். அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செய்தித் தாள்களை ஒவ்வொன்றாக உருவி, கூம்பு வடிவத்தில் லாவகமாக மடித்து. அவைகளில் பலவகையான மளிகைச் சாமான்களைப் போட்டு, சணல் நூலால் கட்டி வாடிக்கையாளர்களுக்கு மணி கொடுத்துக் கொண்டிருந்ததை அவன் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கடையில் சற்று கூட்டம் குறைந்தவுடன், தன் சந்தேகத்தை அண்ணனிடம் வெளிப்படுத்தினான். “சென்னையின் முக்கியப் பகுதியில் மளிகைக் கடை வச்சு நடத்திக்கிட்டு இருக்கிற நீங்க.பழைய