Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

2365 கதைகள் கிடைத்துள்ளன.

சென்றது மீளாது

 

 ஐந்து வயதுடைய ஒரு ஏழை சிறுவன் அவன் பெயர் ஆதித்தன். அம்மாவின் பெயர் சாந்தி, ஆதித்தன் துரு துருவென்று இருப்பான். தன் நண்பர்களுடன் ஒற்றுமையுடனும் இருப்பான். ஆதித்தன் பள்ளியில் சேர்க்கப்பட்டு படிக்க ஆரம்பித்தான். படிப்பில் முதல் மாணவனாக இருப்பான். ஆதித்தன் நான்காம் வகுப்பு அடி எடுத்து வைக்கிறான். தன் நண்பர்கள் தன்னை விட்டு விலகி செல்கிறார்கள். ஆதித்தன் அழுக்கு முகத்துடனும், கிழிந்த சட்டையுடனும், செம்பட்டை தலையுடனும் இருப்பான். மற்றவர் பார்ப்பதற்கு அழகாக தெரியமாட்டான் . ஆதித்தனுக்கு ஒன்றும்


அவுரி

 

 கதை கேட்க: https://www.youtube.com/watch?v=JYDg4loiEqg தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்த்துவிட்டார் தாசரி நாயக்கர். அப்படி ஆகிவிட்டது சம்சாரிகள் பாடு. ‘ஒண்ணும் ஒப்பேறாது இனிமெ’ என்று சொல்லிக்கொண்டார் தனக்குள். பாவிப்பயல்கள் இப்படிச் செஞ்சிட்டாங்களே? எல்லா விலைகளும் கூடிக்கிட்டே போறதென்ன? இந்த அவுரியின் விலை மட்டும் இப்படி தலைகீழாக குறையற்தென்ன? ஏதோ கவுல் இருக்கு இதிலெ என்று உறுதியாய் நம்பினார். “லேய், யாரோடலெ விளையாடுறது?” என்று தனக்கு முன்னால் யாரோ இருப்பதாக நினைத்து ஒந்திபோல ஆட்டினார் தலையை. அய்யோ, மோசம் போயிட்டேனே;


சந்தோஷங்கள் சந்தோஷங்கள்

 

 சுவரில் தொங்கிய காலண்ட ரைப் பார்த்தான் சின்னக் கண்ணன். ஆகா என்று கைகொட்டிக் களித்தான். ஈசிச்சேரில் ஓய்வாகச் சாய்த்திருந்த அப்பா கேட்டார், “இப்ப என்ன சந்தோவும்?” என்று. “நாளைக்குத் தேதி இருபது” என்றான் கண்ணன். “சரி. அதுக்கென்ன?” “நாளைக்கு ஒரு விசேஷம். ஞாபகம் இல்லை?” “என்ன விசேஷம்?” “பம்பர் பரிசுச் சீட்டு குலுக்கல் முதல் பரிசு ரெண்டு லட்சம்”. “ஆமா, மறந்தே போனேன்” என்று நிமிர்ந்து உட்கார்ந்தார் தந்தை. “நாளைக்கு நமக்கு பரிசு கிடைக்கும், ஆமாதானே?” என்று


அவசரம்

 

 அம்மா சொன்னது. பழனிக்கு சந்தோஷம் தந்தது: “ஏண்டா பழனி ராசிபுரம் வரைக்கும் போயி உங்கக்காகிட்ட இந்தத் தொகையைக் குடுத்துட்டு வந்துடறியா? உங்க மாமா வேற வெளியூரு போயிருக்குதாம். சொன்ன தேதிக்கு வாங்கனவங்களுக்குத் திருப்பித் தரணுமில்ல…” அவனுக்கு ராசிபுரம் பிடிக்கும். ருக்மணியக்காவையும் பிடிக்கும். ஏன் பிடிக்காது? அவளுக்குத்தான் தம்பி மீது எவ்வளவு பிரியம். பழனி பரீட்சையில் பாஸ் செய்து பள்ளிக்கூடப் படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டான் என்பது தெரிந்ததும் அவள் வேலை மெனக்கெட்டு ஊருக்கு ஓடி வரவில்லையா? பள்ளிக்கூடக்


நீறு பூத்த நெருப்பு

 

 மல்லிகை முல்லையின் நறுமணம் ஒரு பக்கம். கேசரி…பஜ்ஜி…காபியின் நாவில் நீர் சுரக்கவைக்கும் மணம் ஒருபுறம்..சந்தோஷம்…பயம்…பதற்றத்துடன் கைகோத்து ஃயூஷன் கலவையாக புதிய ஒரு சங்கமத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. “பெண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…ஸ்ருதிகிட்ட கேட்டு உங்கள் முடிவைச் சொல்லுங்கோ. பெண்ணின் விருப்பம் ரொம்ப முக்கியம். சேகா! நான் சொல்றது சரிதானே…” ராஜி தெளிவாக…. மிகவும் மிருதுவாக, உறுதியாகச் சொள்ளாள். அவள் பூசி மெழுகி பேசவில்லை, அது மிகவும் இயல்பாகவே இருந்தது, ராமசுப்பு ஆடிப்போய் விட்டார். ஸ்ருதிக்கு இரண்டு மூன்று


கறி

 

 தேன் கூட்டிலே நெறிகிற ஈ. மாதிரி, பஸ் நிலையத்தில் ஜனக் கூட்டம். வருசா வருசம் சித்திரை பதினெட்டுக்கு சோலைசாமி கோயில் திருவிழா. சனம் வெள்ளமாய் பொங்கி விட்டது பொங்கி. எத்தனை பஸ் வந்து அள்ளிக் கொண்டு போனாலும் கூட்டம் குறைந்த பாடில்லே. ஒழுங்கு பண்ண ‘போலீஸ் லத்தி அடி’. அவ்வளவும் கறி திங்க வந்த கூட்டம். காரேறி, மாட்டு வண்டி கட்டி. நடையாய் நடந்து கறிக்கு ஆசைப்பட்டு வந்த சனங்கள் தான். ஒரு கிடாயா? ரெண்டு கிடாயா?


அதுவும் கடந்து…

 

 எல்லாம் முடிந்து விட்டது. இன்று காலை ஐந்தரை மணிக்கு வாசல் மணியின் ஓயாத ஓலம் என்னை எழுப்பியது. என்னையும் அறியாமல் தூங்கிவிட்டேன் போலும். பால் காரன் அழைப்பு மணியின் மேல் தன் முழு பலத்தை பிரயோகித்து தன் பொறுமையின் எல்லையை கோடி காட்டிக் கொண்டிருந்தான். வாரி சுருட்டிக்கொண்டு எழுத்தேன். அந்த அவசரத்தில் நான் கடந்த சில நாட்களாக காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் வேலையை செய்ய மறந்தேன் – ஸித்தார்த்தின் முகத்தை கவனமாக பார்க்கவில்லை. பாலை வாங்கிக்கொண்டு


அர்ப்பணிப்பு – ஒரு பக்க கதை

 

 “ஏதோ.. நினைவுகள்.. கனவுகள்…” அமைதியான அந்த அதிகாலையிலே செல்போன் அழைத்தது.. ‘யாரா இருக்கும்’.. என்று நினைத்தவாறே அட்டன் செய்தார் பிரதாபன். “ஹலோ.. நான் சேது பேசறேன்”, என்ற குரலைக் கேட்டவருக்கு தூக்கி வாரிப்போட்டது. “டே.. எப்படிடா இருக்க?.. எங்க இருக்க..? எங்களையெல்லாம் மறந்துட்டியா? ஏன்டா.. ஊருக்கே வரமாட்டேங்கறே?”, என்று கேள்விகளை அடிக்கிக் கொண்டே போனார். ஆமாம்… எத்தனை வருஷமாச்சு… ஏழு வருடங்களாக ஒரு பேச்சு மூச்சில்ல..ஆர்மில சேர்ந்திட்டதா காத்துவாக்குல ஒரு சேதி வந்தது.. அவ்வளவு தான்..அதனால் தான்


சிக்கமுக்கிக் கற்கள்

 

 காடுகொன்று நாடாக்காமல், நாடுகொன்று, காடான மலைக்காடு…….. பார்வதி, படுக்கையாய் பயன்பட்ட கோணிப்பையின் இருமுனைகளையும், வீட்டுக்கூரையின் அடிவாரமான மூங்கில் கழியில் சொருகினாள். புறத்தே கதவாகவும், அகத்தே படுக்கையாகவும் ஆகிப்போன அந்தக் கோணி, இந்த இரண்டிற்கும் தாராளமாகவே இருந்தது. மூங்கில் நிலைவாசலில் தொங்கி, இந்தக் கோணிக்கதவு, தரையில் மடிந்தும் படிந்தும் தவழும் வகையிலான பொந்து வாசல்: அதுவே படுக்கையாகும்போதும் அப்படித்தான். முன்தலையையும் முட்டிக்கால்களையும் முட்ட வைத்தால் மட்டுமே படுக்கக்கூடிய தலை. ஆகையால், கோணிக்குச் சிக்கல் இல்லை. அவனும் இவளும் சேர்ந்து


கொடி(ய)ப் பருவம்

 

 மார்த்தாண்டம், அந்தத் தெருவை குறுக்கும் நெடுக்குமாய், இடதுபக்கம் நடந்து வலதுபக்கம் திரும்பியுமாய், பலதடவை நடந்து விட்டாலும், இன்னும் நடையை நிறுத்தவில்லை. பனியன் போடாததால், அவரது வெள்ளைச் சட்டை வேர்வை பெருக்கில் முதுகில் சரிகைபோல் ஒட்டி, இடுப்பிற்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியை கேரிபேக்கில் வைக்கப்பட்ட சதைப்பிண்டமாய் காட்டியது. பலதடவை அந்தத் தெருவை அளவெடுத்து விட்டதால், அவர் உடம்பில் துருப்பிடித்த முதுமை, கால்களை நடக்க வைக்காமல், நகர்த்திக் கொண்டிருந்தது. ஆனாலும், உடம்பை சுமக்கமுடியாமல் சுமந்தபடியே, தொடர் நடையாய் நடந்தார். அந்த