Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைத்தொகுப்பு: தினமலர்

449 கதைகள் கிடைத்துள்ளன.

மாயமாய் மறைந்த பணம்!

 

 சங்ககிரி என்ற ஊரில் தவசி என்ற நெசவாளி இருந்தான். அவன் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவன். விதவிதமான வேலைப்பாடமைந்த உயர்வகை ஆடைகளை நெய்வதில் வல்லவன். ஆனால், அவன் திறமைக் கேற்ற வேலை அவனுக்குக் கிடைக்கவில்லை. சரிவர வேலை கிடைக்காததால், வீட்டில் வறுமை சூழ்ந்தது. தவசியை விட திறமையில் குறைந்த நெசவாளிகள் நாள் பூராவும் வேலை செய்து நிறைய பொருள் ஈட்டி வந்தனர். அவர்கள் நெய்யும் மோட்டாரகத் துணிகளுக்கு நிறைய கிராக்கி இருந்தது. அதனால் அவர்களுக்குத் தொழில் நல்ல முறையில்


மூக்குத்தி!

 

 சுகந்தபுரி என்ற ஊரில் வட்டிக்கடை வைத்து நடத்தினான் வேணு. அவரது மனைவி வச்சலா சிறந்த குணவதி. வேணு பேராசை பிடித்தவன். அநியாய வட்டி வாங்கினான். தர்மவானான தந்தை முன்பு செய்து வந்த அன்னதானத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான். “பூ, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, இதெல்லாம் தண்டச்செலவு என்று கூறி தெய்வ வழிபாட்டை நிறுத்தினான். கணவனை எதிர்க்க முடியாத வச்சலா மவுனமாக கண்ணீர் உகுப்பாள். ஒருநாள் “”வட்டிக்கடைக்காரர் வேணு வீடு எது?” என்று விசாரித்தப்படியே வந்தார், ஒரு பெரியவர். அவரிடம்


கடவுளின் கணக்கு!

 

 சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் கொடுக்க மாட்டான். பண்ட பாத்திரமோ, நகையோ கொண்டு வந்தால்தான் பணம் கொடுப்பான். அதுவும், பாதி விலைக்குத்தான் வாங்குவான். கடவுள் அவன் பக்கம் இருந்து, எல்லா மக்களுக்கும் கஷ்டத்தைக் கொடுத்து, அவனுக்கு லாபத்தை வாரிக் கொடுத்தார். “”இதெல்லாம் ரொம்பப் பாவம். நம் மகனுக்குப் பாவத்தைச் சேர்த்து வைக்காதீர்கள்,” என்று அவன் மனைவி


இளவரசி ஷெரில்!

 

 முன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள் மிகவும் சோம்பேறி. எவ்வளவு சொன்னாலும் ஒரு வேலைகூடச் செய்ய மாட்டாள். தாய் சொன்ன அறிவுரையை அவள் கேட்கவில்லை. நாளாக ஆகத் தாய்க்கு சினம் மிகுதி ஆயிற்று. ஒருநாள் மிகுந்த கோபத்தோடு ஷெரில் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். வலி தாங்காமல் ஷெரில் “ஓ’வென்று அழுதாள். அந்த நேரத்தில் வீட்டுக்கு வெளியே ஓசை ஒன்று கேட்டது. அரசி ஒருத்தி அந்த


தேர்வு வேண்டாம்!

 

 முன்னொரு காலத்தில் மகத நாட்டில், ஏகேந்திரா என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவருக்கு, சஞ்சித், சர்மா என இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் புகழ் பெற்ற குருவிடம் கல்வி கற்க அனுப்பத் தீர்மானித்தான் மன்னன். சஞ்சித் எதையும் சட்டெனப் புரிந்து கொள்வான்; ஆனால், சர்மா மந்தபுத்தி படைத்தவன். குருவிடம் தன் மகன்களைப் பற்றிக் கூறவே, அவரும் ‘தமக்கு மிகவும் வயதாகி விட்டதால், கல்வி புகட்ட இயலாது’ என்றார். ஆனால், தன்னுடைய இரு சீடர்கள் தனித்தனியே ஆசிரமங்கள்


வெண்ணைச் சிலை

 

 பல நூற்றாண்டுகளுக்கு முன், விசித்திரபுரி நாட்டில் தாத்தா, பாட்டியோடு சுசித்திரசேனன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பெற்றோர் இல்லை. அவன் தாத்தா ஒரு கல்வெட்டும் தச்சர்; மிகுந்த ஏழை. சுசித்திரசேனன் மிகுந்த நோஞ்சானாக இருப்பான். அவனால் எந்த கடினமான வேலையையும் செய்ய முடியாது. அவனைச் சிறுவர்கள் தங்கள் விளையாட்டில் கூட சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதனால், அவன் சிறுவர்களோடு விளையாடாமல் தாத்தாவோடு கல்வெட்டும் இடத்திற்குப் போவான். அங்கு போவதற்கு அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் தாத்தா


திருந்திட்டேன்!

 

 ”நானா… நான் அண்டரண்ட பஷி. உங்கள் பாட்டி கதை சொல்ல கேட்டிருப்பாயே. நான் பவுணர்மி அன்றுதான் பிறப்பேன். அதுவும் யாராவது பார்த்து எடுத்தால்தான் நான் முட்டையிலிருந்து வெளிவருவேன். உன் அதிர்ஷ்டம் நீ என்னைப் பார்த்தாய். அப்பாடா எத்தனை வருஷமாக காத்துக் கிடந்தேன் தெரியுமா? என்னை ஒருவரும் கண்டுபிடிக்கவே இல்லை!” ”அதிர்ஷ்டமா? ஐயோ… இனிமே நீ அந்த மாதிரி சீட்டி அடிக்காமல் இரேன்!” மறுநாள் அவர்கள் எழுந்திருக்கும்போது அதுவும் எழுந்தது. அதற்குத்தான் உடலை இஷ்டப்படி குறுக்கிக் கொள்ள முடியுமே.


என்ன பேச்சு பேசினான்!

 

 ஓர் ஊரில் ஏழை இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் இளமுருகு. அவனுக்கு சொந்தமாக கீற்றுக் குடிசை ஒன்று இருந்தது. பல ஆண்டுகளாகக் கீற்றுகள் மாற்றப்படவில்லை. அதனால் மழை பெய்தால் குடிசைக்கு உள்ளும் பெய்யும்; வெயிலும் உள்ளே அடிக்கும். அவனிடம் மாடு ஒன்று இருந்தது. அதுவும் அந்தக் குடிசைக்குள் அவனுடன் இருந்தது. பிழைப்பு தேடி அவன் தொலைவிலிருந்த இன்னொரு ஊருக்குச் சென்றான். அந்த ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். தன் ஒரே மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தார்.


வேரில்லா மரம்

 

 அடுப்பில் சாம்பார் கொதிக்க தாளித்து இறக்கி வைத்தாள் வத்சலா. ஹாலில் அபியும், அவள் அப்பாவும் சிரிக்கும் சப்தம் கையை டவலால் துடைத்தபடி வந்தாள். “”அப்பா, இந்த ப்ரோக்ராம் இன்னும் ஒரு வாரத்தில் முடித்தாகணும்” லேப்டாப்பைத் திறந்து அதில் தலையைக் கவிழ்த்திருந்தார்கள் எட்டிப் பார்த்தாள். போஸ்ட்கவரில் ஏதோ புள்ளிபுள்ளியாய் ஓடி விழுந்தபடி இருந்தது என்ன பண்றீங்க? “”டவுன்லோடு பண்ணிட்டு இருக்கோம்” கண்களை எடுக்காமல் மாதவன் பதிலளிக்க, “”அப்படின்னா என்னங்க?” “”ஐயோ அம்மா நீ வேற தொணதொணன்னு உனக்கு இதைப்பத்தி


மனமே கடவுள்

 

 பத்து வயது பேரன் அந்த பேட்டரி காரை அழகாக வளைத்து, வளைத்து ஓட்டுவதை சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத். “”என்னப்பா பேரனுக்கு இவ்வளவு விலையில் காஸ்ட்லி கார் வாங்கிக் கொடுத்துட்டு அவன் விளையாடுவதை ரசிச்சுட்டு இருக்கிங்களா?” பக்கத்தில் வந்து நிற்கும் மகன் சிவாவைப் பார்த்து புன்னகைத்தார். “”அமெரிக்காவிலிருந்து என் பேரன் வந்திருக்கான். என்னோடு இருக்கிற இந்த ஒரு மாசமும் அவனை சந்தோஷமாக வச்சுக்கணும்னு பார்க்கிறேன்.” “”அதுக்காக இவ்வளவு விலையில் தேவையாப்பா. இதை எடுத்துட்டும் போக முடியாது.