தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 4,861 
 

அத்தியாயம்-18 | அத்தியாயம்-19

பிறகு ரமேஷ்”இப்போ அதே மனசு நீங்க ரெண்டு பேரும் இந்த மாதிரி விலை ஒசந்த புடவை களை கட்டிண்டு இருக்கும் போது எவ்வளவு சந்தோஷபடறது தொ¢யுமா”என்று சொன்னான்.உடனே காயத்திரி “நீ கவலைப்படாதே.நாங்க நீ வாங்கிக் குடுத்த புடவைகளை எல்லாம் கட்டிண்டு வரோம்” என்று சொன்னாள்.அது வரை தன் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த ஆனந்தின் தலையை வருடிக்கொண்டே ரமேஷ் “நீயும் ரொம்ப நன்னா இருக்கே ஆனந்த் இந்த ‘டிரஸ்ஸ்லெ’. நீயும் இனிமே இந்த மாதிரியே ‘டிரஸ்ஸை’ தான் போட்டுண்டு வரணும் என்ன” என்று சொல்லி விட்டு பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த டிரைவரிடம் இருந்து கேக்கும்,சாக்லெட்டும் இருந்த பெட்டியை ஆனந்திடம் கொடுத்தான்.

ஆனந்த் அவைகளை வாங்கிக் கொண்டு “அங்கிள்,நேத்து நான் இந்த’ டிரஸ்ஸை’ப் போட்டு ண்டு விளையாடப் போனேன்.என் ‘ப்ரெண்ட்ஸ்’ எல்லாம் இந்த ‘டிரஸ்’ ரொம்ப நன்னா இருக்கு .யார் உனக்கு வாங்கி கொடுத்தான்னு கேட்டா.நான் உடனே எங்க வீட்டுக்கு ஒரு அங்கிள் அடிக்கடி வருவார். அவர் தான் இந்த ‘டிரஸ்ஸை’ எனக்கு வாங்கி குடுத்தார்ன்னு சொன்னேன்”என்று சொல்லி விட்டு கேக் பாகெட்டைப் போய் பிரித்து சாப்பிட ஆரம்பிதான்.ஆனந்தன் சொன்னதை கேட்டு மனதுக்குள் சந்தோஷப் பட்டான் ரமேஷ்.“எனக்கு போன ஞாயித்துக் கிழமை உடம்பு சரி இல்லாம இருந்தது.அதனால் தான் நான் வரலே”என்று சொன்னதும் “உனக்கு என்னப்பா உடம்பு” என்று கவ லையுடன் கேட்டாள் காயத்திரி.“கொஞ்ச ஜுரமா இருந்தது.நான் டாகடர் கிட்டே போய் காட்டி மாத்தி ரை வாங்கி போட்டுண்டேன்.செவ்வாய் கிழமை சரியா உடம்பு சரியா போச்சு” என்று சொன்னான் ரமேஷ்.“நீ தனியா இருக்கே. உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துகோப்பா” என்று காயத்திரி சொன்ன தும் “சரி மாமி” என்று ரமேஷ் சொல்லிக் கொண்டு இருக்கும் போது “இந்தாங்கோ காபி” என்று சொல்லி லதா காப்பிப் போட்டுக் கொண்டு ரமேஷிடம் கொடுத்தாள் லதா கொடுத்த காபியை வாங்கிக் குடுத்து விட்டு டம்பளரை கீழே வைத்தான் ரமேஷ்.

கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் “மாமி, வர புதன் கிழமை தான் பிப்ரவரி ஒண்ணாம் தேதி. அன்னைக்கு ஆனந்த் ‘பர்த் டே’.நான் பாகடரி போய் விட்டு பதினோரு மணிக்கா,இங்கே வந்து விடறேன்.நாம எல்லோரும் கிளம்பி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு போய் ஆனந்த் பேர்லே சுவாமிக்கும் அம்பாளுக்கும் அர்ச்ச்சனை பண்ணி ட்டு அப்படியே ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வரலாம்.நீங்க மூனு பெரும் பதினோரு மணிக்கு ரெடியா இருங்கோ” என்று சொன்னான்.காயத்திரி “நாங்க ரெடியா இருக்கோம்ப்பா” என்று சொன்னாள்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு ரமேஷ் “நான் போயிட்டு வரேன் மாமி” என்று சொல்லி விட்டு மெல்ல எழுந்து காலை ஊன்றி வைத்து அக்குள் கட்டையை எடுத்து வைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தான் ரமேஷ்.லதா அவன் கூடவே போய் அவன் காரில் ஏற போகும் போது “நீங்க வாங்கி குடுத்த புடவைகள் எல்லாம் ரொம்ப நன்னா இருக்கு.உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’” என்று வெக்கப் பட்டுக் கொண்டே சொன்னாள் லதா.உடனே ரமேஷ் “ ‘தாங்க்ஸ்’ எல்லாம் சொல்லாதே லதா.நான் யாரோ இல்லே லதா” என்று சொல்லி விட்டு காரி ல் ஏறி கொண்டான்.லதா அவனுக்கு ‘டா’ ‘டா’ காட்டி விட்டு ‘போர்ஷனு’க்கு வந்தாள்.ரமேஷ் ‘நான் யாரோ இல்லே லதா’ என்று சொன்ன வார்த்தைகள் லதா காதில் ரீங்காரம் பண்ணிக் கொண்டு இருந் தது.‘அவருக்கு என் மேலே பழைய காதல் இருக்கு போல இருக்கே. அதனாலே தான் நான் ‘யாரோ இல்லை’ன்னு சொன்னாரா அவர்.’அவர் இன்னும் தன் காதலை மறக்காம இருந்து வந்தார்ன்னா,நான் என் காதலை அவர் கிட்டே சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி விடுவது சுலபாமாச்சே.அப்போ நம்ம அம்மா ஒன்னும் சொல்ல முடியாதே’ என்று எண்ணி சந்தோஷப் பட்டாள் லதா.

ஆனால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ‘நான் அவர் தம்பி செய்த ‘பாதகச் செயலாலே ஆனந்தை பெத்துண்டு நிக்கறேனே.இந்த விஷயம் அவருக்கு நன்னா தொ¢யுமே.நான் கல்யாணம் பண்ணீக்க ஆசை படுகிறேன்னு சொன்னா,அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கணுமே.எனக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டம் இல்லை,வேணாம்ன்னு சொல்லிட்டா நாம என்ன பண்றது’ என்று அவள் மனம் நினைக்கும் போது கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அவள் மனதில் இருந்த சந்தோஷம் சுக்கு நூறாய் சிதறி விழுந்து விட்டது.லதாவுக்கு அதை நினைத்துப் பார்க்கவே ரொம்ப பயமாய் இருந் தது.ஒன்னும் புரியாத அவள் ‘அந்த மாதிரி அவர் சொல்லி விடக் கூடாதே பகவானே.நீ தான் அவர் மனசிலெ பூந்து அவர் என்னைக் கல்யாணம் பண்ணீக்கிறேன்னு சொல்ல வைக்கணும்’ என்று அவள் அப்போதில் இருந்து அம்பாளை வேண்டிண்டு வந்தாள்.

சொன்னார் போல் பிப்ரவரி ஒண்ணாம் தேதி காலை பதினொரு மணிக்கு வந்து காலிங்க் பெல் லை அழுத்தினான் ரமேஷ்.தான் கட்டி இருந்த பட்டுப் புடவை சரி செய்துக் கொண்டு போய் லதா வா சல் கதவைத் திறந்தாள்.சுரேஷ் நின்றுக் கொண்டு இருந்ததைப் பார்த்ததும் லதாவுக்கு சந்தோஷமாய் இருந்தது.“வாங்கோ, உள்ளே வாங்கோ”என்று சொல்லி ரமேஷை வவேற்றாள்.ரமேஷ் மெல்ல நடந்து உள்ளே வந்தான்.காயத்திரியும் பட்டுப் புடவைக் கட்டிக் கொண்டு ஜம் மென்று இருந்தாள்.அக்குள் அக்குள் கட்டையை ஒரு ஓரமாக வைத்து விட்டு அவன் வழக்கமாக உட்காரும் சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டான்.டிரைவர் ரமேஷ் ‘பிரீப்’ கேஸைக் கொண்டு வந்து ரமேஷி டம் கொடுத்தான். ரமேஷ் ‘ப்ரீப்’ கேஸைத் திறந்து அவன் கொண்டு வந்து இருந்த பத்தாயிரம் ரூபா யை காயத்திரி மாமியிடம் “இந்தாங்கோ மாமி,இந்த மாசம் நான் உங்க ஆத்து செலவுக்கு குடுக்க வேண்டிய பத்தாயிரம் ரூபாய்” என்று சொல்லிக் கொடுத்தான்.காயத்திரியும் ரமேஷ் குடுத்த பணத்தை வாங்கிக் கொண்டாள்.அந்த சமயம் பார்த்து ஆனந்த் புல் பான்ட்டு,புல் ஷர்ட் போட்டுக் கொண்டு வந்து ரமேஷ் முன்னால் நின்றுக் கொண்டு “அங்கிள், என் ‘டிரஸ்’ எப்படி இருக்கு” என்று கேட்டான். உடனே ரமேஷ் “ஆனந்த் உன் டிரஸ் ரொம்ப பிரமாதம். நீ இப்போ ஒரு பெரிய பையன் மாதிரி இருக்கே” என்று சொல்லி அவன் தலை யை வருடி விட்டான்.“ ‘ரொம்ப தாங்க்ஸ்’ அங்கிள்” என்று சொல்லி விட்டு போய் ரமேஷ் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்தான் ஆனந்த்.

ல்லோரும் ரெடி ஆனவுடன் ரமேஷ் அவர்க ளை அழைத்துக் கொண்டு கபாலீஸ்வரர் கோவிலு க்குப் போனான்.வாசலில் ரெண்டு அர்ச்சனைத் தட்டை வாங்கினான்.லதா அந்த ரெண்டு தட்டையும் எடுத்துக் கொண்டாள்.ரமேஷ் கோவிலுக்கு உள்ளே வந்து ‘ஸ்பெஷல் தா¢சன’ ‘டிக்கட்டும்’ ரெண்டு அர்ச்சனை ‘டிக்கட்டை’யும் வாங்கினான். ரமேஷ் முதலில் காபாலீஸ்வரர் சன்னிதானத்திற்கு போன தும் அங்கு இருந்த குருக்கள் ரமேஷைப் பார்த்ததும் “வாங்கோ வாங்கோ,இன்னைக்கு வெள்ளீக் கிழமை இல்லையே,நீங்க வந்து இருக்கேளே”என்று விசாரித்தார்.உடனே ரமேஷ் “குருக்களே,எனக்கு ஞாபகம் இருக்கு.இன்னைக்கு புதன் கிழமைத் தான்.ஆனா இந்த பையனுக்கு இன்னைக்கு பொறந்த நாள்.அவன் பேர்லே ஒரு அர்ச்சனைப் பண்ணுங்கோ”என்று சொன்னவுடன் “ஓ அப்படியா,பேஷாப் பண்ணிட்டா போறது” என்று சொன்னார் குருக்கள்.உடனே லதா ஒரு சொல்லி அர்ச்ச்சனை தட்டை குருக்களிடம் கொடுத்தாள்.அர்ச்ச னைத் தட்டை வாங்கி கொண்டு அந்த குருக்கள் “பையன் பேர், நக்ஷத்திரம்,கோத்திரம் எல்லாம் சொல் லுங்கோ”என்று கேட்டவுடன் காயத்திரி “கௌசிக கோத்திரம், பேர் ஆனந்த்,நக்ஷத்திரம் விசாகம்” என்று சொன்னதும் குருக்கள் மந்திரம் சொல்லிக் கொண்டே உள் ளே போய் சுவாமிக்கு அர்ச்சனைப் பண்ணீ,தேங்காய் உடைத்து,சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணி விட்டு கற்பூரம் காட்டி விட்டு வெளியே வந்து எல்லோருக்கும் கற்பூர தீபம் காட்டினார்.ரமேஷ் கற்பூர தீபத்தை தன் கண்ணீல் ஒத்திக் கொண்டு பாகெட்டில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை குருக்கள் தட்டில் போட்டான்.குருக்கள் அந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து கண்ணில் ஒத்திக் கொண்டு எல் லோருக்கும் விபூதிப் பிரசாதத்தைக் கொடுத்தார்.பிறகு அர்ச்சனைத் தட்டை காயத்திரியிடம் கொடுத் தார்.தட்டை வாங்கிக் கொண்டு காயத்திரி விபூதியை தன் நெத்தியில் இட்டுக் கொண்டு, ஆனந்தின் நெத்தியிலும் இட்டாள்.
அடுத்து ரமேஷ் அம்பாள் சன்னதிக்கு போனவுடன் அங்கு இரு ந்த குருக்கள் ரமேஷைப் பார்த்ததும் “வாங்கோ வாங்கோ,இன்னைக்கு வெள்ளீ கிழமை இல்லையே,வந்து இருக்கேளே” என்று விசாரித்தார். உடனே ரமேஷ் “எனக்கு ஞாபகம் இருக்கு.இன்னைக்கு புதன் கிழமைத் தான்.இந்தப் பையனுக்கு இன்னைக்கு பொறந்த நாள்.அவன் பேர்லே ஒரு அர்ச்சனை பண்ணுங்கோ”என்று சொன் னவுடன் “ஓ அப்படியா,பண்ணிட்டா போறது” என்று சொன்னார் குருக்கள்.உடனே லதா அர்ச்ச்சனை தட்டை குருக்களிடம் கொடுத்தாள்.அர்ச்சனைத் தட்டை வாங்கி கொண்டு அந்த குருக்கள் “பையன் பேர் என்ன,நக்ஷத்திரம் என்ன,கோத்திரம் என்ன” என்று கேட்டார்.காயத்திரி “கௌசிக கோத்திரம், பேர் ஆனந்த்,நக்ஷத்திரம் விசாகம்” என்று சொன்னதும் குருக்கள் மந்திரம் சொல்லிக் கொண்டே உள் ளே போய் அம்பாளுக்கு அர்ச்சனைப் பண்ணீ,தேங்காய் உடைத்து,அம்பாளுக்கு நைவேத்தியம் பண் ணி விட்டு கற்பூரம் காட்டி விட்டு வெளியெ வந்து எல்லோருக்கும் கற்பூர தீபம் காட்டினார். ரமேஷ் கற்பூர தீபத்தை தன் கண்ணீல் ஒத்திக் கொண்டு பாகெட்டில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை குருக்கள் தட்டில் போட்டான்.குருக்கள் அந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து கண்ணில் ஒத்திக் கொ ண்டு எல்லோருக்கும் குங்குமப் பிரசாதத்தை எல்லோருக்கும் குங்கும பிரசாதத்தை கொடுத்தார். பிற கு அர்ச்சனைத் தட்டை காயத்திரியிடம் கொடுத்தார்.அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு குங்குமப் பிரசாத்ததை ஆனந்தின் நெத்தியில் இட்டாள் காயத்திரி.பிறகு மெதுவாக நடந்து எல்லோரையும் அழைத்துக் கொண்டு வெளிப் பிரகாரத்திற்கு வந்தான் ரமேஷ்.

காயத்திரியும் லதாவும் ‘இந்தப் பையனுக்கு ஆனந்த் பேர்லே எவ்வளவு அக்கறை.பொறந்த நாள் அன்னைக்கு கபாலீஸ்வரர் கோவிலுக்கு அழைச்சு வந்து ஈஸ்வரனுக்கும்,அம்பாளுக்கும் அர்ச்சனை பண்ணி வச்சு இருக்கானே’ என்று நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.கார் வந்ததும் எல்லோ ரும் ஏறிக் கொண்ட பிறகு ரமேஷ் டிரைவரை பார்த்து “ஜி. ஆர் கிராண்ட் ஹோட்டலுக்கு போ” என்று சொன்னான்.கார் போர்ட்டிகோவில் வந்து நின்றதும் வாசலில் நின்றுக் கொண்டு இருந்த ஆள் ஓடி வந் து கார் கதவைத் திறந்து விட்டு நின்றுக் கொண்டு இருந்தான்.ரமேஷ் மெல்ல கீழே,இறங்கி அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான்.ரமேஷைப் பார்த்ததும் ஒரு மா னேஜர் ஓடி வந்து “குட் மார்னிங்க் பர்த் டே பாய்”என்று சொல்லி ஆனந்தின் கையைப் பிடித்து குலுக்கினார். ஆனந்தும் அவருக்கு” குட் மாரினிங்க் சார்” என்று சொன்னான்.லதாவுக்கும் காயத்திரிக்கும் ஆனந்து க்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.அந்த மானேஜர் ஆனந்தின் கையைப் பிடித்துக் கொண்டு “எல்லோ ரும் உள்ளே வாங்க”என்று சொல்லி விட்டு எல்லோரையும் உள்ளே அழைத்துப் போய் இவர்களுக்காக ‘ரிசர்வ்’ பண்ணி இருந்த டேபிளில் உட்கார வைத்தார்.ரமேஷ் உட்கார்ந்ததும் அவர் பவ்யமாக அக்குள் கட்டையை வாங்கிக் கொண்டு போய் பக்கத்து ரூமில் வைத்தார்.

எல்லோரும் உட்கார்ந்த பிறகு ரமேஷ் “ஆனந்த்,அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் முதல்லே சூப்பும்,கொரிக்க சில ஐட்டங்கள் குடுப்பா.சூப்பை நாம் குடிச்ச பிறகு அன்னைக்குப் போல நாம நம க்கு வேண்டியதை எல்லாம் போட்டுண்டு வந்து சாபிட்ட பிறகு நாம் எலோரும் உட்கார்ந்துண்டு இரு ந்தா உனக்கு ‘குட் மார்னிங்க்’ சொன்னாரே அந்த மானேஜர் நம்ம டேபிளில் ஒரு பெரிய கேக்கை கொண்டு வந்து விட்டு எல்லா சர்வர்களும் நம்மை சுத்தி நின்னுண்டு இருப்பார்.அவா ‘கேக்’ மேலே இருக்கிற மெழுகு வர்த்தி களைக் கொளுத்திட்டு நிப்பார்.நீ எழுந்து அந்த மெழுகு வர்த்திகளை ஊதி அணைக்கும் போது அவா எல்லோரும் உனக்கு ‘ஹாப்பி பர்த் டே’ பாட்டு பாடுவா.நீ அவர்கள் டேபி ளில் வைத்து இருக்கும் கத்தியால் கேக்கை வெட்டி ஒரு ‘பீஸை’ உன் வாயில் போட்டுக்கோ.அப்புறமா ஒரு ‘பீஸை’ பாட்டிக்கும்,ஒரு பீஸை அம்மாவுக்கும், ஒரு ‘பீஸை’ எனக்கும் தரணும் புரியறதா”என்று சொன்னான்.உடனே “சரி அங்கிள்”என்று சொன்னான் ஆனந்த்.சூப்பை குடித்து விட்ட பிறகு எல் லோரும் தங்களுக்கு வேண்டியதை எல்லாம் போட்டுக் கொண்டு வந்து சாப்பிட்டு முடித்தார்கள்.

ஹோட்டல் சர்வர் இவர்கள் சாப்பிட்ட எல்லா ‘ப்லேட்டு’களையும் எடுத்து டேபிளைக் ‘க்லீன்’ பண்ணி விட்டு,ரமேஷ் சொன்னா மாதிரி அந்த மானேஜர் ஒரு பெரிய ‘கேக்கை’க் கொண்டு வந்து டேபிளில் வைத்தார்.ஆனந்துக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.அந்த ‘கேக்’ ஒரு அடி அகலத்துக்கு வட் டமாக இருந்தது.அந்த ‘கேக்’கின் மேலே ‘Happy Birthday Anandh’ என்று சுத்தி எழுதி இருந்தது. ‘கேக்’ மெலே ஐந்து மெழுகு வர்த்திகள் வைக்கப் பட்டு இருந்தது.அந்த மானேஜர் வந்து அந்த மெழு கு வர்த்திகளை எல்லாம் ஏற்றினார்.ரமேஷ் ஆனந்தைப் பார்த்து “ஆனந்த் நீ எல்லா மெழுகு வர்த்திக ளையும் ஊதி அணைக்கனும்”என்று சொன்னவுடன் ஆனந்த் எழுந்து நின்றுக் கொண்டு எல்லா மெ ழுகு வர்த்திகளையும் ஊதி அணைத்தான்.உடனே எல்லா சர்வர்களும் அந்த மானேஜரும் கையைத் தட்டி;
Happy birthday to you, Happy birthday to you, Happy birthday to you, Happy birthday to you Anandh. May God Bless You Anandh என்று சொல்லிப் பாடிக் கொண்டு இருந்தார்கள்.ஆனந்த் டேபிள் மேலே இருந்த கத்தியை எடுத்து கேக்கை வெட்டி ஒரு ‘பீஸை’ எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டு விட்டு,இன்னொரு ‘பீஸை’ எடுத்து ரமேஷ் கிட்டக் கொண்டு வந்து நீட்டினான். ரமேஷ் “இல்லை ஆனந்த், முதல்லெ உன் பாட்டிக்கு, அப்புறமா உன் அம்மாவுக்கு, அப்புறமா எனக்கு” என்று சொன்னான்.ஆனால் ஆனந்த் “ இல்லை அங்கிள் முதல்லே உங்களுக்கு தான்” என்று பிடி வாதம் பிடிச்சான்.காயத்திரி “நீதான் முதல்லே வாங் கிக்கோயேம்ப்பா” என்று சொன்னாள்.ரமேஷ் எவ் வளவு சொல்லியும் ஆனந்த் பிடிவாதம் பிடிக்கவே, ரமேஷ் ஆனந்த் கொடுத்த கேக் ‘பீஸை’ட வாங்கி வாயில் போட்டுக் கொண்டான்.அப்பு றமா ஆனந்த் அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஒரு ‘பீஸை’க் கொடுத் தான்.எல்லோரும் கொஞ்ச நேரம் அங்கே இருந்து விட்ட பிறகு அந்த மானேஜர் மீதி இருந்த கேக்கை ஒரு பெரிய “ஜி. ஆர்.டி.கிராண்ட் ஹோட்டல்” பேர் போட்ட அட்டை பெட்டியில் ‘பாக்’ பண்ணி ஆனந்தின் கையில் கொடுத்தார்.

ஆனந்துக்கு இவ்வளவு பெரிய ஹோட்டல்லே இவ்வளவு கிராண்டா பிறந்த நாளைக் கொண் டாடினதை நினைத்து நினைத்து லதாவுக்கும் காயத்திரிக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.“மாமி, நாம ஒவ்வொரு வருஷமும் ஆனத்தின் பொறந்த நாளை இந்த் ஹோட்டலில் ‘கிராண்டாக’ கொண் டாடி வரணும்ன்னு நான் ரொம்ப ஆசைப் படறேன்”என்று சொன்னதும் ஆனந்த் “இந்த ஹோட்டல்லே யா அங்கிள்.எனக்கு இந்த ஹோட்டல் ரொம்ப பிடிச்சி இருக்கு”என்று சொன்னான்.”அப்படியா ஆன ந்த்,நீ கவலையே படாதே.நான் உன்னை வருஷா வருஷம் இந்த ஹோட்டலுக்கு அழைச்சு வந்து ‘பர் த்டே’வை கொண்டாட ஏற்பாடு பண்றேன்”என்று சொல்லி கொண்டே மெல்ல எழுந்து “மாமி,நாம கிள ம்பலாமா” என்று கேட்டான் ரமேஷ்.காயத்திரியும் “சரி நாம புறப்படலாம்” என்று சொன்னதும் ரமேஷ் மெல்ல சேரை விட்டு வெளியே வந்ததும் அந்த மானேஜர் ஓடி வந்து ரமேஷ் அக்குள் கட்டையை கொண்டு வந்து கொடுத்தார்.ரமேஷ் அதை வைத்துக் கொண்டு மெல்ல நடந்து வெளியே போர்ட்டி கோவிற்கு வந்து தன் டிரைவரை போனில் கூப்பிட் டான்.டிரைவர் வந்ததும் ரமேஷ் முன் சீட்டில் ஏறி க் கொண்டான்.லதா,ஆனந்த்,காயத்திரி மூவரும் ஏறிக் கொண்ட பிறகு டிரைவர் காரை ஓட்டி வந்து லதா வீட்டில் நிறுத்தினான்.லதா,ஆனந்த், காயத்திரி,மூவரும் இறங்கின பிறகு ரமேஷ் “ மாமி, நான் ‘பாக்டரிக்கு’ மறுபடியும் போகணும்.நான் இப்படியே காரில் போறேன்”என்று சொன்னான்.”சரிப்பா நாங்க ஆத்துக்கு போறோம்” என்று சொல்லி முடிக்கவில்லை ஆனந்த் “அங்கிள் உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ்” என்று சொன்னதும் ரமேஷ்”ஆனந்த்,எனக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லாதே.’தாங்க்ஸ்’ எல்லாம் வெளி மனுஷாளுக்குத் தான் சொல்லணும்.நான் உனக்கு சொந்தமானவன் ஆச்சே”என்று சொ ல்லி சிரித்தான்.

அன்னைக்கு ‘நான் யாரோ இல்லைன்னு சொன்னார்,இன்னைக்கு சொந்தமானவன்னு சொல் றாரு’ என்று நினைத்து லதா மனம் குழம்பினாள்.காயத்திரிக்கு ஹோட்டலில் பலமாக சாப்பிட்டு இரு ந்ததால் அவள் பாயைப் போட்டுக் கொண்டு படுத்தாள்.படுத்துக் கொண்டெ காயத்திரி “ஏண்டீ லதா, அந்த பெரிய ஹோட்டலில் இந்தப் பையன் ஆனந்த பொறந்த நாளை இவ்வளவு கோலாகலமா கொ ண்டாடினதை பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.போறாததுக்கு அவன் ஆனந்திடம் ‘ஆனந்த்,நீ கவலையே படாதே.நான் வருஷா வருஷம் இந்த மாதிரியே உன் பொறந்த நாளை கொண் டாட ஏற்பாடு பண்றேன்’னு சொல்லிட்டு போய் இருக்கான்.இதெல்லாம் நினைச்சா எனக்கு ஒரு பக்க ம் சந்தோஷமாகவும்,இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கு”என்று சொன்னாள்.லதா அம்மா பக்கத் திலேயே தன் பாயையையும் போட்டுக் கொண்டு வந்து படுத்துக் கொண்டே”நீ ஏம்மா பயப் படறே சொல்லு” என்று கேட்டாள்.காயத்திரி உடனே “உனக்கு என்ன பயித்தியமா பிடிச்சி இருக்கு.அவன் யாரோ நாம் யாரோ.ஏதோ இந்த மட்டும் அவன் நம்மாத்துக்கு வந்து இந்த உபகாரம் எல் லாம் பண்ணி வந்து இருக்கான்.ஆனந்த் பொறந்த நாள் அடுத்த வருஷம் தான் வரது.அவன் பணக்கார வாழ்க்கை யை பாரு.இந்த ஒரு வருஷத்துக்குள்ளே எந்த பணக்கார பொண்ணாவது அவனோடு நெருங்கி பழகி வந்து அவனை காதலிச்சு அவன் மனசை மாத்தி அவனை கல்யாணம் பண்ணிண்டுட்டாள்னா, வரவளோடு அவன் ஜாலியா இருந்து வந்து,நம்மை காத்லே விட்டுட்டான்.அப்போ நாம என்ன பண் ணுவோம் சொல்லு.நான் பயப் படறது உனக்கு நியாயமா தொ¢யலையா லதா” என்று கேட்டாள்.காயத் திரி சொன்னதைக் கேட்ட லதாவுக்கு தூக்கி வாரி போட்டது.அவளுக்கு அழுகையே வந்து விட்டது. லதா அழுகையை அடக்கி கொண்டாள்.

“அம்மா,நீ அப்படி எல்லாம் சொல்லாதே.உன் வாய் பலிச்சிடப் போறது.அவர் அப்படி எல்லாம் யாரையாவது எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டார்” என்று சொன்னதும் காயத்திரி “நீ சும்மா இரு லதா,நீ சின்னப் பொண்ணு.உனக்கு வயசு புருஷப் பசங்க மனசு தொ¢யாது.இதைத் தவிர இந்த பை யன் பணத்துக்காக எத்தனை வயசுப் பொண்க,அவன் மனசை மயக்க காத்துண்டு இருப்பா தொ¢யுமா” என்று விடாமல் சொன்னாள்.ஆனால் லதா மட்டும் ‘அவர் அப்படி எல்லாம் கண்ட பொண்ணை எல் லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டார்ம்மா’ என்று தன் காதலை மனதில் கொண்டு சொன்னாள்.“சரி லதா நாம போக போக பார்க்கலாம்.சாப்பிட்ட மயக்கம் எனக்குத் தூக்கம் வருது”என்று சொல்லி கொட் டாவி விடவே லதா சும்மா இருந்து விட்டாள்.ஆனால் அவள் மனசு மட்டும் அலை மோதிக் கொண்டு இருந்தது.’அம்மா சொன்னதே போல ஆகாம இருக்கணுமே தாயே’ என்று அம்பாளை வேண்டிக் கொ ண்டாள் லதா.

தன் ஆப்த நண்பன் வரதனிடம் பேசிக் கொண்டு இருந்தான் ரமேஷ்.“வரதா வர மூணாம் தேதி அன்னைக்கு என் அம்மா,என் அப்பா,சுரேஷ் இவா முனு பேரும் அந்த கார் ‘ஆக்சிடென்ட்டில்’ செத் துப் போய் ஒரு வருஷம் ஆகப் போறது.நான் என்ன பண்ணட்டும்”என்று கேட்டு அவன் சொல்வதை பண்ண தயாராக இருந்தான்.” உன்னுடைய இந்த காலை வச்சுண்டு,நீ பெரியவா பண்ணா மாதிரி மூனு பேருக்கும் ‘ஸ்ராத்தம்’ எல்லாம் பண்ண முடியாது.அன்னைக்கு நீ நூறு ஏழைகளுக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டு திருப்தி படுத்தினா,அவா ஆத்மா சாந்தி அடையும்.நீ ‘ஸ்ராத்தம்’ பண்ணா க்கூட ரெண்டு பிராமணாளுக்குத் தான் நீ சாப்பாடு போட முடியும்.அந்த ரெண்டு பிராமணா தான் திருப்தி அடைந்து வாழ்த்துவா.ஆனா நீ இப்படி அன்னதானம் பண்ணுவதாலே நூறு எழைகள் திரு ப்தி பட்டு வாழ்த்துவா.இது தான் ‘பெஸ்ட்’ ரமேஷ்”என்று சொன்னதும் ரமேஷ் “ரொம்ப தாங்க்ஸ் வர தா.நீ சொன்னா சரியா இருக்கும் எனக்கு மனசு இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு” என்று சொல்லி விட்டு இருவரும் ப்ரஸ்பரம் வேறு ஏதோ பேசிக் கொண்டே ‘கட்லெட்டை’சாப்பிட ஆரம்பித்தார்கள். நடு நடுவில் “வரதா,உன் அப்பா உடம்பைக் கவனிச்சு வா,நீ தான் அவருக்கு மெல்ல சொல்லி அவர் ஊறுகாய் போட்டுண்டு சாப்பிடுறதே முதல்லே குறை.அப்புறமா ‘டோடலி அவாய்ட்’ பண்ணு” என்று சொன்னான் ரமேஷ்.”ட்ரை பண்றேன் ரமேஷ்.நீ சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ்” என்று சொல்லி விட் டு சர்வர் கொண்டு வந்த வைத்த காப்பியைக் குடித்தான் வரதன்.பிறகு ரெண்டு பேரும் வெளியே வந் தார்கள்.வரதன் தன் ஸ்கூட்டரில் ஏறி போன பிறகு ரமேஷ் தன் காரில் ஏறி பங்களா வந்து சேர்ந்தான்.

ரமேஷ் வரதன் சொன்னா மாதிரியே ஏபரல் மூனாம் தேதி ‘சேவா சதன்’ போய், நூறு பேர் வயி றார சாப்பிட பணம் கட்டி விட்டு வந்தான்.ஏபரல் மூணாம் தேதி ரமேஷ் குளித்து விட்டு ரெடி ஆனா ன்.கொஞ்ச நேரம் அன்றைய இங்கிலிஷ் பேப்பரை படித்துக் கொண்டு இருந்தான்.சமையல் கார மாமா விடம் “மாமா,போன வருஷம் இதே நாளில் தான் என் அம்மா அப்பா என் கூடப் பிறந்தவன் மூனு பேரும் ஒரு கார் ‘ஆக்சிடென்ட்டில்’ செத்துப் போயிட்டா.நான் ‘சேவா சதன்னில்’ நூறு ஏழை களுக்கு இன்னைக்கு அன்னதானம் ஏற்பாடு பண்ணி இருக்கேன்.அவர்கள் சாப்பிட்டு விட்ட பிறகு நான் அங் கேயே சாப்பிட்டுக் கொள்கிறேன்.நீங்க எனக்காக இன்னைக்கு ஒன்னும் சமைக்க வேணாம்” என்று சொன்னான்.பேப்பரை படித்து முடித்ததும் ரமேஷ் மணியைப் பார்த்தான்.மணி பதினொன்னரை காட்டியது.ரமேஷ் எழுந்து ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு சரியாக பண்ணண்டு மணிக்கு ‘சேவா சதன்’ வந்தான்.அந்த மானேஜர் சொன்னா மாதிரி ஒரு பெரிய ஹாலில் நூறு ஏழைகள் வாழை இலை முன் உட்கார்ந்துக் கொண்டு இருந்தாகள்.ரமேஷ் வந்ததும் அவன் கையாலே மூனு பேருக்கு சாதம் போட் டு பறிமாறச் சொன்னார்.ரமேஷூம் அவர் சொன்னா மாதிரி மூனு ஏழைகளுக்கு சாதம் பறிமாறினான். உடனே அங்கு இருந்த சிப்பந்திகள் ‘கிடு’ ‘கிடு’ என்று எல்லா ஏழைகளுக்கு ஏற்பாடு பண்ணி இரு ந்த எல்லா ஐயிட்டங்களையும் பறிமாறினார்கள்.எல்லோரும் சாப்பிட்ட பிறகு ரமேஷ் ஒரு ‘டேபிளில்’ உட்கார்ந்துக் கொண்டு,தனக்கு ஒரு வாழை இலை போடச் சொல்லி ஏழைகள் சாப்பிட்டு விட்டு போ ன மீதி சாப்பாட்டை போட சொல்லி சாப்பிட்டான்.இப்படி சாப்பிட்டது அவனுக்கு சந்தோஷமாய் இரு ந்தது.சாப்பிட்டு முடிந்ததும் அந்த மானேஜர் செய்த உதவிக்கு அவரை மனதார ‘தாங்க்’ பண்ணி விட் டு ‘பாக்டரிக்கு’ வந்தான்.

‘நமக்கு இந்த உலகத்திலே யார் இருக்கா சொல்லிக் கொள்ள.நாம ஏன் இதை காயத்திரி மாமி கிட்டே சொல்லிக் கொள்ளக் கூடாது’என்று நினைத்தான் ரமேஷ்.‘பாக்டரி’ விட்டு பங்களாவுக்கு வரும் வழியில் ரமேஷ் லதா வீட்டுக்கு வந்து காலிங்க் பெல்லை அழுத்தினான்.லதா வந்து கதவைத் திறந்தாள்.சுரேஷைப் பார்த்ததும் லதா சந்தோஷத்துடன் “வாங்கோ,வாங்கோ “என்று சொல்லி ரமே ஷை வரவேற்றாள்.ரமேஷூம் சிரித்துக் கொண்டே மெல்ல காலை வைத்து வீட்டுகுள்ளே வந்தான். சுரேஷைப் பார்த்ததும் காயத்திரியும் “வாப்பா” என்று சொல்லி ரமேஷை வரவேற்றறாள். உள்ளே வந்த ரமேஷ் தன் அக்குள் கட்டையை ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு அவன் வழக்கமாக உட்காரும் சோ¢ல் மெல்ல உட்கார்ந்தான்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் “எனக்கும் இந்த உலகத்திலெ யார் இரு க்கா மாமி.என்னுடைய சுக துக்கங்களை எல்லாம் உங்க கிட்டே சொல்லிக்கலாம்ன்னு நினைச்சு நான் வந்தேன்.நான் ‘பாக்டரியில்’இருந்து ஆத்துக்கு போற வழிலே இங்கே வந்தேன்.போன வருஷம் இதே நாள்ளே தான் அவா மூனு பேரும் அந்த ‘ஆக்ஸிடென்ட்டில்’ செத்துப் போனா.இந்த காலை வச் சுண்டு நான் ‘ஸ்ராத்தம்’ எல்லாம் பண்ண முடியாது.அதனால்லேநான் அவா ஞாபகார்த்தமா இன்னை க்கு ‘சேவா சதனுக்கு’ போய் நூறு ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணிட்டு அவா சாப்பிட்டதும், மீந் த சாப்பாட்டை நான் சாப்பிட்டேன் .உங்க கிட்டே சொல்லிக்கணும்ன்னு தோனித்து,நான் சொல்லிட்டு போக வந்தேன்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.“கேக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.என்ன பண்றதுப்பா.உன் போறாத காலம் அவா உன்னை விட்டுட்டு போயிட்டா.நீ வருத்த படாதே.அவா போய் ஒரு வருஷம் ஆயிடுத்தா என்ன”என்று கேட்டு ரமேஷூக் கு ஆறுதல் சொன்னாள் காயத்திரி.”ஆமாம் மாமி ஒரு வருஷம் ஆயிடுத்து.இந்த ஒரு வருஷம் போ றதே எனக்கு ஒரு யுகமா இருக்கு.இனிமே மீதி இருக்கும் காலத்தை எப்படி நான் போக்கி வர போறே னோ” என்று விரக்தியுடன் சொன்னான்.காயத்திரி வருத்தப் பட்டாளே ஒழிய அவளுக்கு என்ன சொல்வது என்றே தொ¢யவில்லை.அவள் பதில் ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தாள்.

ரரேஷ் அழுவதைப் பார்த்ததும் லதாவுக்கும் அழுகை வந்தது.அவள் அடக்கிக் கொண்டாள். சுரேஷூக்கு காப்பி கலந்துக் கொண்டு வந்து கொடுத்தாள் லதா.காபியை வாங்கிக் கொண்டு ரமேஷ் மெதுவாகக் குடித்தான்.காபியை குடித்து கொண்டே”எங்கே ஆனந்தை கானோம்.விளையாட போய் இருக்கானா” என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது ஆனந்த ஆத்துக்கு வந்தான்.அவன் “நான் இப்போ விளையாடிட்டு வரேன் அங்கிள்”என்று சொன்னான் ஆனந்த்.“என்ன விளையாட்டு ஆடினே ஆனந்த்”என்று ரமேஷ் கேட்டவுடன் “நான் கிரிக்கெட் ஆடினேன்”என்று சொன்னான் ஆனந்த். “ஆனந்த்,மத்த ‘கேம்ஸை’ விட உனக்கு கிரிக்கெட் ஆட ரொம்ப பிடிக்குமா“என்று கேட்டான் ரமேஷ். “ஆமாம் அங்கிள் மத்த ‘கேம்ஸை’ விட எனக்கு கிரிக்கெட் ஆடத் தான் ரொம்பப் பிடிக்கும்” என்று சொன்னான் ஆனந்த்.” ‘குட்’ ஆனந்த்.அதையே நீ ஆடி வா ஆனந்த்.ஒரு ‘கேம்’ ஆடினா,அதையே நன்னா ஆடி அதிலே சாம்பியனா ஆகணும்” என்று சொல்லி அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான் ரமேஷ்.கொஞ்ச நேரம் இருந்து விட்டு ரமேஷ் “மாமி,நான் போயிட்டு வரேன்.ஆனந்த் ‘சண்டே’ நான் உனக்கு கேக்கும் சாக்லெட்டும் வாங்கி வரேன்.’சாரி’ ஆனந்த் நான் இன்னைக்கு வாங்கிண்டு வரலெ” என்று சொன்னான்.உடனே ஆனந்த் “சாரி எல்லாம் சொல்லாதீங்க. நீங்க நிறைய தடவை வாங்கிக் குடுத்து இருக்கேளே அங்கிள்”என்று சொன்னான் ஆனந்த்.உடனே லதா ‘பரவாயில்லையே ஆனந்த் கூட நன்னா பேசக் கத்துண்டு இருக்கானே’ என்று நினைத்து சந்தோஷப் பட்டாள்.

ரமேஷ் மெல்ல அக்குள் கட்டையை எடுத்து வைத்துக் கொண்டு மெல்ல நடந்து வாசலுக்கு வந் தான்.லதா ரமேஷ் கூடவே கார் வரைக்கும் வந்து ”நீங்க மனசு வருத்தப் படாதீங்க.சந்தோஷமா இரு ந்து வர பழகுங்க.உங்களுக்கு மனசு வருத்தமா இருந்தா இங்கே வந்து பேசிட்டு போங்க.இங்கே நான், ஆனந்த்,அம்மா எல்லாம் இருக்கா”என்று சொன்னாள் லதா.”ரொம்ப தாங்க்ஸ் லதா.நான் நிச்சியமா இங்கே வருவேன்.எனக்கும் உங்களை விட்டா யார் இருக்கா”என்று சொலும் போது அவன் கண்களீல் நீர் துளித்தது.அவன் பாக்கெட்டில் இருந்து தன் கைகுட்டை யை எடுத்து தன் கண்களை துடைத்துக் கொண்டான்.“நான் போய் வரேன் லதா”என்று சொன்னதும் லதா ‘டா’’ டா’ காட்டினாள்.ரமேஷ் கிளம்பிப் போனான.லதா ஆத்துக்குள் வந்தாள்.‘பாவம் தனக்கு யாரும் இல்லையே என்கிற ஏக்கம் அவருக்கு ரொம்ப இருக்கு’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டாள் லதா.லதா உள்ளே வந்ததும் “பாவம் லதா.அந்தப் பையனின் அம்மா,அப்பா,அவன் கூடப் பிறந்தவன் மூனு பேரும் செத்துப் போய் ஒரு வருஷம் ஆயிடுத்து.அவன் பாவம் தனியா இருந்துண்டு வரான்.அதான் அவனுக்கு ஒரு வருஷம் போறது ஒரு யுகமா இருக்கு”என்று சொல்லி வருத்தப் பட்டாள் காயத்திரி.

‘பாக்டா’¢யில் இருந்த் ரமேஷூக்கு ‘போன்’ வந்தது.ரமேஷ் பொனை ஆன பண்ணி பேசினான். அடுதத பகத்தில் இருந்து வரதன் பேசினான்.”ரமேஷ். என் அப்பாவுக்கு உடம்பு ரொம்ப மோசம் ஆகி நான் அவரை பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடலில் சேர்த்தேன்.அங்கு இருந்த டாக்டர்கள் ஆறு மணி நேரம் போராடியும் என் அப்பாவை காபாத்த முடியலே.இன்னைக்கு காத்தாலெ ஏழு மணிக்கு அவர் காலமாயிட்டார்” என்று அழுதுக் கொன்டே சொன்னான்.ரமேஷ்” அப்படியா வரதா,கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.நான் இன்னும் இருபது நிமிஷத்லே உங்க ஆத்துக்கு வறேன்” என்று சொல்லி விட் டு காரில் ஏறி வரதன் வீட்டுக்கு வந்தான்.வரதனோடு இருந்து ‘எல்லா காரியமும்’ முடிந்த பிறகு ரமே ஷ் பங்களாவுக்கு வந்து குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள எல்லாம் சொன்னான்.

இருபது நாள் ஆனதும் வரதன் மறுபடியும் ரமேஷ்க்கு போன் பண்ணி “ரமேஷ். அன் அப்பா ‘காரியங்கள்’ எல்லாம் நல்ல படியா முடுஞ்சுடுத்து.என் அம்மாவுக்கு அப்பா இருந்த ஆத்லே தனியா இருந்து வர பிடிக்கலே.ஆத்லே இருந்த சாமான்களை எல்லாம் ‘சேவா சதன்லே’ குடுத்திட்டேன். நா னும் அம்மாவும் நாளைக்கு காத்தாலே பிருந்தாவன் ‘எக்ஸ்பிஸ்’லே கிளம்பி,பெங்களூர் போய், ‘இஸ் கான்’லே இருந்து வர முடிவு பண்ணி ‘ரிசர்வேஷன்’ போட்டு இருக்கேன்”என்று சொன்னதும் ரமேஷ் “நான் உன்னை உங்க ஆத்லே இன்னைக்கு சாயங்காலம் மீட் பண்றேன்”என்று சொல்லி விட்டு போ னை ‘கட்’ பண்ணினான்.அன்று மாலையே ரமேஷ் வரதன் வீட்டுக்குப் போய் வரதனையும் அவன் அம்மாவையும் பார்த்து கொஞ்ச நேரம் மனம் விட்டு பேசிக் கொண்டு இருந்து விட்டு,பம்களாவுக்கு திரும்பி வந்தான்.பங்களா வரும் போது ரமேஷ் ‘நமக்கு இருந்த ஒரு ஆப்த நண்பனும்,இப்போ நம்மை விட்டு எங்கோ போய் விடப் போகிறான்’ என்று நினைத்து வருத்தப் பட்டான்.

‘ஒரு மாத்தமா இருக்கட்டுமே’என்று நினைத்து ரமேஷ் எட்டு துண்டுகளாக போட்டு இருந்த ஒரு ’பிசா’ பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்து லதா வீட்டுக்குப் போய் காலிங்க் பெல்லை அழுத் தினான்.¡லிங்க் பெல் சத்தம் கேட்டு எழுந்து வந்து வாசல் கதவைத் திறந்தாள் லதா.ரரேஷப் பார்த்த தும் அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.”வாங்கோ,வாங்கோ” என்று சொல்லி ரமேஷை உள்ளே வரச் சொன்னாள் லதா.மெல்ல தன் காலை ஊனி வைத்து உள்ளே வந்து ரமேஷ் தன் அக்குள் கட்டை யை ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு அவன் வழக்கமாக உட்காரும் சொ¢ல் மெல்ல உட்கார்ந்தான். டிரைவர் பாக்கெட்டைக் கொடுத்ததும் ரமேஷ் ஆனந்தை பார்த்து “ஆனந்த், இன்னைக்கு உனக்கு வித்தியாசமா ‘கேக்’ சாக்லெட்டுக்கு பதிலா ‘பிஸா’வாங்கிண்டு வந்து இருக்கேன்.இந்தா” என்று சொல்லிக் கொடுத்தான்.ஆனந்த் ஓடி வந்து அந்த ‘பிஸா’ பாகெட்டைவாங்கிக் கொண்டு “ஹை ‘பிஸா’வா எனக்கு ரொம்ப பிடிக்கும்.தாங்க்ஸ் அங்கிள்”என்று சொன்னான்.வழக்கம் போல் ஆனந்த் ஒரு துண் டை அவன் சாப்பிட்டு விட்டு,ஒரு துண்டை அவன் அம்மாவுக்கும்,ஒரு துண்டை அவன் பாட்டிக்கும் கொடுத்து விட்டு ஒரு துண்டை கொண்டு வந்து ரமேஷிடம் கொடுத்தான் ஆனந்த்.அந்த ‘பிஸா’ துண்டை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே ரமேஷ்” மாமி,இந்த வருஷத்லே இருந்து ஆனந்த் அந்த சின் ன பள்ளிக் கூடத்லே படிச்சு வர வேண்ம்.நான் அவனை ‘பத்மா சேஷாத்ரி ஸ்கூலில்’ சேத்து விட றேன்.நானும் ரமேஷூம் அந்த ஸ்கூலில் தான் படிச்சோம்.அங்கே ஆனந்தை சேத்துட்டா,அவன் ‘ப்ல ஸ்டூ’ வரை ஸ்கூலே மாத்தாம,ஒரே ஸ்கூல்லே படிச்சு வரலாம்”என்று சொல்லி முடிப்பதற்குள் காயத்தி ரி “வேணாம்,பத்மா சேஷாத்ரி ஸ்கூல் ரொம்ப பணக்கார படிச்சு வர ஸ்கூல்.எனக்கு நன்னா தொ¢யும்” என்று பயந்தபடியே சொன்னாள்.மெல்ல சிரித்தான் ரமேஷ்.”மாமி,நீங்க பணத்தை பத்தி கவலையே படாதீங்க .நான் இருக்கேன்.அவன் ஸ்கூல் செலவை நான் முழுக்க கவனிச்சுக்கிறேன்.ஆனந்துக்கு நல்ல அறிவு வளர அங்கே நிறைய வசதிகள் எல்லாம் இருக்கு”என்று சொல்லி கொண்டு இருக்கும் போது லதா காபியை கலந்துக் கொண்டு வந்துக் கொடுத்தாள்.

ரமேஷ் அந்த காபியை வாங்கி கொண்டு குடிக்க ஆரம்பித்தான்.காபியை குடித்து விட்டு டம்ளரை லதாவிடம் கொடுத்தான்.“நான் கிளம்ப றேன் மாமி” என்று சொல்லி விட்டு மெல்ல எழுந்தா ன்.சாய்த்து வைத்து இருந்த அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு ரமேஷ் மெல்ல வாசலுக்கு வந் தான்.லதா அவன் கூட கார் வரைக்கும் வந்து அவனுக்கு ‘டா’‘டா’ சொல்லி விட்டு ஆத்துக்குள் வந் தாள்.ஆத்துக்குள் வந்த லதாவைப் பார்த்து காயத்திரி “என்ன லதா இந்தப் பையன் ஆனந்தை ‘பத்மா சேஷாத்ரி ஸ்கூல்லே’ சேக்கப் போறேன்னு சொல்றான்.அந்த ஸ்கூல் ரொம்ப பணக்காரப் பசங்க படிக் கிற ஸ்கூல் ஆச்சே”என்று சொல்லி அலறினாள் லதா “அம்மா நீ ஏன் வீணா கவலைப் படறே.அவர் தான் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி விட்டுப் போறாரே”என்று சொன்னதும் காயத்திரி “லதா அவ னுக்கு ஒரு கல்யாணம் ஆயிட்டா நாம நடுத் தெருலே நிக்க வேண்டியது தான்.அதை மறந்துடாதே உனக்கும் வேலை இல்லே எனக்கும் வேலை இல்லே.இதை நீ யோஜனை பண்ணீயா”என்று அடித் தொண்டை யில் கத்தினாள்.லதா ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *