கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

182 கதைகள் கிடைத்துள்ளன.

சீதையாக வந்த பார்வதிதேவி!

 

 பூலோக சஞ்சாரம் செய்யப் புறப் பட்டார் சிவனார். உடன் வருமாறு தேவியையும் அழைத்தார். ”ஸ்வாமி, தாங்கள் உபதேசித்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன். முடிந்ததும் புறப்படலாமே?!” என்றாள் தேவி. இதைக் கேட்டதும், ”தேவி… நம்மைத் துதிக்கும் அடியவர்களுக்கு அருள்வதில் தாமதம் கூடாது. இன்று மட்டும் சுலப பாராயணம் செய்து விட்டுப் புறப்படு!” என்றார் பரமனார். பார்வதிதேவியின் முகத்தில் குழப்பம். ”ஸ்வாமி, இதற்கான சுலப பாராயணம் குறித்து தாங்கள் உபதேசிக்க வில்லையே?” என்றாள். புன்னகையுடன் ஏறிட்ட


இந்திரன் வியந்த கர்ணன்!

 

 பாரத தேசத்தில் பல வள்ளல் பெருமக்கள் தோன்றியிருந்தாலும், கர்ணனுக்கு ஈடானவர்கள் வேறு எவரும் இல்லை. கௌரவர் களில் மூத்தவனான துரியோதனனைத் தன் தலை வனாக ஏற்ற கர்ணன், அவனாலேயே அங்க தேசத் துக்கு மன்னனாக முடி சூட்டப்பட்டான். அதே வேளையில், கர்ணன் மீது அவச்சொல் ஒன்றும் இருந்தது. அதாவது, ‘துரியோதனனது பொருளை எடுத்து வாரி வழங்கிய கர்ணன், தனது சொத்தாக இருந்திருந்தால், அதை இதுபோல் கொடுத்திருப்பானா?’ என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், கர்ணன் ஒப்பற்ற தர்மவான்


பாண்டுரங்கனின் திருவிளையாடல்!

 

 விஜயநகரப் பேரரசை, ராம் ராயர் என்ற மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு முறை, படை-பரிவாரங்களுடன் பண்டரிபுரம் கோயிலுக்குச் சென்றார் ராம் ராயர். அங்கு, அழகே உருவான ஸ்ரீபாண்டுரங்கனைக் கண்ட மன்னர் பேரானந்தம் அடைந்தார். ‘இவ்வளவு அழகு பொருந்திய விக்கிரகம் தலைநகரில் இருப்பதே சிறப்பு!’ என்று எண்ணியவர், ஸ்ரீபாண்டுரங்கனின் விக்கிரகத்தை தலைநகர் ‘ஹம்பி’க்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டார். பண்டரிபுரம் மக்கள் செய்வதறி யாது பரிதவித்தனர். விரைவில், ஹம்பியில் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டு ஸ்ரீபாண்டுரங்கனின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்


எண்ணெய் தேய்ப்பவன் ‘குரு’ வாக ஆன கதை!

 

 அவந்திபுரம் எனும் ஊரில் வாழ்ந்தவன் சேனா; கிருஷ்ண பக்தி யில் சிறந்தவன். அரண்மனையில் பணி புரிந்த சேனா… மன்னரின் உடலில் எண்ணெய் தேய்ப்பது, அவரின் உடம்பை மென்மையாகப் பிடித்து விடுவது போன்ற பணிவிடைகள் புரிந்து வந்தான். இதற்காக அரசர், அவனுக்கு மானியம் கொடுத்திருந்தார். தவிர, சில விசேஷ நாட்களில் கூடுதலாக வெகுமதிகள் வழங்குவதும் உண்டு. நாட்கள் ஓடின. ஒரு கட்டத்தில்… அரசருக்குப் பணிவிடை செய்வது போக மற்ற நேரங்களில், கிருஷ்ணர் வழிபாட்டில் நாட்டம் செலுத்தினான். நாளாக நாளாக


பகலை இரவாக்கிய பதிவிரதையின் கற்பு!

 

 அத்திரி மற்றும் வசிஷ்ட முனிவர்களது காலத்தில் வாழ்ந்தவர் கௌசிக முனிவர். இவரின் மனைவி சைப்யை, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று வாழ்ந்த பதிவிரதை. முன்வினைப் பயனால், கௌசிக முனிவரை குஷ்ட ரோகம் பீடித்திருந்தது. ஆனாலும், எந்த விதமான அருவருப்பும் வெறுப்பும் காட்டாமல், கணவருக்குத் தேவையான பணிவிடைகளை செவ் வனே செய்து வந்தாள் சைப்யை. இந்த நிலையில், தன் மீது சைப்யை கொண் டிருக்கும் அன்பை சோதிக்க முனைந்தார் கௌசிகர். மனைவியை அழைத்தவர், ”சைப்யை… எனக்கு, தாசி ஒருத்தியிடம்


ஏழு குழந்தைகளையும் ஏன் கொன்றாள் கங்கை?

 

 சூரிய வம்சத்தில் தோன்றிய இக்ஷ்வாகுவின் மகன் மகாபிஷக். இவன், ஆயிரம் அசுவமேத யாகங்களை நடத்தியவன் ஆதலால், இந்திரனுக்கு நிகராக விளங்கினான். ஒரு முறை, பிரம்மலோகம் சென்றிருந்தான் மகாபிஷக். பிரம்மனின் சபையில் தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கங்காதேவியும் இருந்தாள். அவளது மகிமையை எல்லோருக்கும் உணர்த்தும் விதம், ”பூலோக மாந்தர்களின் பாவங்களைப் போக்குபவள் இவள்” என்று புகழ்ந்தார் பிரம்மதேவன். அவையில் கூடியிருந்த அனைவரும் அவளை பெருமிதத்துடன் நோக்க… கங்கா தேவிக்கு, ‘தனக்கு நிகர் எவரும் இல்லை’ என்ற கர்வம்


பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!

 

 முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி?! ஆனாலும் அவளுக்கு, ‘இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?’ என்றொரு சந்தேகம். அதற்குத் தீர்வு காண முனைந்தாள். சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப் போட்டு மூடி விட்டாள். ‘இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார், பார்க்கலாம்!’ என்பது அவளது எண்ணம். மறு நாள், ”ஸ்வாமி, நேற்று


மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்!

 

 இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?’ – தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு தேடி இருவரும் கிருஷ்ணரை சந்திக்கப் புறப்பட்டனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வருவதைக் கண்ட கிருஷ்ணருக்கு மகிழ்ச்சி. உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தார். தங்களது சந்தேகம் குறித்து கிருஷ்ணரிடம் தெரிவித்தனர். உடனே, ”ஆஹா… இருவரது சிந்தனையும் ஒன்றாக இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன் உங்களுக்கு ஒரு சோதனை!”


‘குடிசையின் சுகம் மாளிகையில் இல்லையே!’

 

 பரந்தாமனின் பெருமிதம் ‘உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார். இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் புராணங்களில் உண்டு. அவற்றில் ஒன்று இந்தக் கர்ணபரம்பரைக் கதை… ‘பாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பினாலும், அவர்களுக்கு தேசத்தை திருப்பித் தர மாட்டோம்’ என்றான் துரியோதனன். இதையடுத்து, பாண்டவர்களின் சார்பில் தூதராகச் சென்று, துரியோதனனைச் சந்திக்க முடிவு செய்தார் கிருஷ்ணர். பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன் மற்றும் துரியோதனன் உள்ளிட்டோர், கிருஷ்ணரைத்


மாலிகன் மதி இழந்த கதை!

 

 கிருஷ்ண பரமாத்மாவின் நண்பன் கிரக தோஷத்தாலோ, விதி வசத்தாலோ… மனிதனின் புத்தி, சில தருணங்களில் பேதலித்து விடுகிறது. மாலிகனின் நிலையும் அப்படித்தான் ஆயிற்று! பேராசை யும் மமதையும் தலைதூக்க… சிறியவர்- பெரியவர் என்றில்லாமல், எல்லோரையும் அவமதித்து, பலவாறு துன்புறுத்தினான் மாலிகன். யார் இந்த மாலிகன்? யதுகுல நாயகனாம் கண்ணனின் நண்பன். கண்ணனின் தோழனாக இருப்பவன், சுபாவத்தில் நல்லவனாகத்தானே இருக்க வேண்டும்?! மாலிகனும் இயல்பில் நல்லவன்தான். யசோதை அன்னைக்கு நிகராக… கண்ணனிடம் அன்பைப் பொழிந்தவன்தான்! எனவேதான் அவனுக்கு, சகல