கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 11, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

வேணுமானா வாங்கு!

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முருகனின் தந்தை பள்ளி ஆசிரியர். அந்தக் கிராமத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான், மாற்றலாகி வந்திருந்தார். எட்டாம் வகுப்பு வரை உள்ள அந்தப்பள்ளியில் முருகள் ஆறாம் வகுப்பில் படித்து வந்தான். முருகன் படிப்பில் முதல்மாணவன். ஒழுக்கத்திலும் கூட அவன்தான் முதல் மாணவன். முருகனுக்கு பொய் பேசுபவர்களையும் பிறரை ஏமாற்றுபவர்களையும் கண்டால் கொஞ்சங்கூடப் பிடிக்காது. அந்தக் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் கடை வைத்திருந்தார். அவரது கடையை


கனவு

 

 (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையில் அலுவலகத்திற்கு வந்ததும் அந்தச் செய்தி கிடைத்தது. அவளின் தந்தை கடந்த இரவில் செத்துப் போனாராம். பரபரப்பு மேலோங்கவில்லை. எப்படி..எப்படி..என்ற செய்தி அறியும் உணர்வே கிளர்ந்தது. துண்டு துண்டாக, அங்குமிங்குமாக, பொய்யும் மெய்யு மாக, ஒன்றுக்கொன்று முரணான தகவல்கள் கிடைத்தன. அப்படிப் பிரமாதப்படுத்தப்பட வேண்டியதாகவோ பெரிதாக அலட்டிக் கொள்ளத்தக்கதாகவோ ஏதுமில்லை. அவர் வயது போனவர்தானாம்; இரண்டு மூன்று நாட்களாக சிறிய சுகவீனமாகப் படுத்திருந்தவர்,


சகுந்தலை சரிதை

 

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1 – 9 | அத்தியாயம் 10 – 19 1. சகுந்தலையின் பிறப்பு விசுவாமித்திர முனிவர் முதலில் அரசராக இருந்து, பின்பு தவஞ்செய்து முனிவரானவர். அவர் அரசராக இருந்தபோது அவருக்குக் கௌசிகராசா என்று பெயர். கௌசிகராசா ஒருமுறை தமது படைவீரர் களுடன் வேட்டையாடச் சென்றார். வழியிலே வசிட்டமுனிவரின் ஆசிரமத்தைக் கண்டு அங்கே சென்றார். வசிட்டர் முனி சிரேட்டர்; சாந்தமே உருவானவர்;


நான் நீயாக.. நீ நானாக..

 

 சில பெண்கள்தான் அழகாக இருக்கிறார்கள்; அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள் ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத் தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது அழகு. வெளியில் கண்ணுக்குத் தெரியும் அழகு. ‘என்ன..? திடீரென்று அழகுப்பாட்டு பாடுகிறாய் என்கிறீர்களா..? ம்.. என் கஷ்டம் எனக்கு.. இப்படித்தான் அவ்வப்போது புலம்புவது என் வழக்கம். இதையெல்லாம் நீங்கள் கவனிக்காமல் உங்கள் வேலையில் கவனமாக


கடன் என்ன பெரிய கடன்?

 

 ரங்கசாமி ரங்கசாமி தோளை பிடித்து உலுக்கிய உலுக்கலில் சட்டென தன் நினைவுக்கு வந்தான் ரங்கசாமி ! என்ன என்ன விழித்து கேட்டான் உலுக்கிய சக தொழிலாளியிடம். ஆமா போ வர வர உனக்கு வேலை செய்யும்போதே தூங்கற பழக்கம் வந்துடுச்சு, “ராக்கப்பன் கடையில இருக்கற “எச்சலை கூடைய” எடுத்துட்டு வந்து வண்டியில போடு, அலுத்துக்கொண்டே சொன்னான் அந்த சக தொழிலாளி ரங்கசாமி இப்பொழுதெல்லாம் யோசனை செய்த மன நிலையிலேயே இருக்கிறான். இல்லையென்றல் பித்து பிடித்தாற் போல் இருக்கிறான்,


வானில் ஒரு மாற்றம்…!

 

 வானில் ஒரு மாற்றம்..!!! சிகாகோ நகரின் ‘ஓ ஹேர் ‘ (O’HARE) பன்னாட்டு விமானநிலையம். பறவைகள் கூட்டம் போல வினாடிக்கொரு விமானம் டேக்ஆஃப் .லேண்டிங். உலகிலேயே மிக அதிக விமானப் போக்குவரத்து உள்ள நகரங்களில் ஒன்று. வானிலை மாற்றங்கள் காரணமாக அதிக தாமதங்களும், விமான பயணம் ரத்தாவதும் ஏற்பட்டாலும் மிகவும் பரபரப்பான விமான நிலையம். இன்றைக்கு அந்த மாதிரியான ஒரு நாள். பனிமூட்டம், மழை, புயல் காரணமாக இரண்டு மணி நேர தாமதம் நாலாகி, ஆறாகி, பின்னர்


கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

 

 ஒரு பட்டிமன்றம். காரசாரமான விவாதம் . தலைப்பு “ கடவுள் இருக்கிறாரா இல்லையா?” முத்தாய்ப்பாக இரண்டு அணியின் தலைவர்களும் பேசவேண்டும் . “கடவுள் இருக்கிறார்” அணியின் தலைவர் எழுந்தார் பேச: “எல்லோருக்கும் என் தாழ்மையான வணக்கம். நாம் பார்க்கிறோமே இந்த அண்ட பெருவெளி, அதற்கு யார் அம்மா? அல்லது அப்பா ? அது எங்கிருந்து வந்தது ? இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு சிறு பகுதிகளே இந்த நட்சத்திரங்கள். அதில் ஒன்று தான் நமது சூரிய மண்டலம்.


பெரிய மனசு

 

 தயக்கத்துடன் தன் வீட்டு வாசல் சுற்றுச்சுவர் கதவுத் திறந்துகொண்டு வரும் வாலிபனைப் பார்த்ததும்…. ‘யாரிவன்..? யாரைத் தேடி வருகிறான்…?’ வாசலில் காற்று வாங்க உட்கார்ந்திருந்த சேகர் அவனை யோசனையுடன் பார்த்தான். ஆள் அருகில் .வந்ததும்… “யார் நீங்க…? யாரைப் பார்க்கனும்..?” கேட்டான். “பொதுப்பணித்துறையில் எஞ்சினியராய் வேலை செய்கிற சேகர் என்கிறது….?” இழுத்தான். “அது நான்தான்!” வந்தவன் சடக்கென்று துணுக்குற்றான். “சாரி சார். ஆள் தெரியாம நான்….” தடுமாறினான். “பரவாயில்லே?” “சார்! என் பேர் சிவா..!” “புது ஒப்பந்தக்காரரா…?


விருந்தாளி

 

 சமையல் மணத்தையும் புகையையும் உறிஞ்சி வெளியேற்றும் கடமையில் தோற்றுப் போன கிச்சின் எக்ஸோஸ்ற் ஃபான், நாதஸ்வரக் கச்சேரியின் நட்டநடுவே முக்கி முனகும் ஊமைக் குழலாட்டம் இரைந்துகொண்டிருக்கிறது. அந்த இரச்சலையும் மீறி – ‘காத்து கொஞ்சம் வரட்டுமே…… அந்த யன்னலை முழுசாத் திறந்து விடுங்கோவனப்பா…’ அவசரம் அவசரமாகச் சமையல் பாத்திரங்களைத் தண்ணீரில் நனைத்து, டிஷ் வொஷ்ஷருக்குள் தள்ளிக்கொண்டிருந்த சாரதா சத்தம் போடுகிறாள். வரவேற்பறைக்கு அருகிலிருக்கும் வொஷ் றூமைத் துப்புரவு செய்யப்போன சசிதரன், அடுப்படி யன்னலை வந்து திறக்கிறான். ஓ……


இளங்கோ

 

 (1960ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குறிப்பு: ‘இளங்கோ’ நாடகம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம் இயற்றிய ஆசிரியரைப் பற்றிய கற்பனை. காட்சி : 1 [ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகளுக்குமுன் ; சேர நாட்டில் வஞ்சிமா நகரை அடுத்த பூங்கா ; துறவிகள் சிலர் தம்முள் பேசிக் கொள்கிறார்கள்.] துறவி-1 : அடிகள் இந்த ஊருக்குப் புதியவராக வருகிறீர்களோ ? துறவி-2 : இல்லை. முன்பு ஒருமுறை வந்தது