கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 8, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

லீலையில் ஒரு வேலை

 

 சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஆல்பா சென்டர் . ஒரு புறம் ஜவுளிக்கடைகள், இன்னொருபுறம் நகைக் கடைகள், இதற்கிடையே ஜனநாட்டம். பைக்கட்டுகளோடும் குழந்தை குட்டிகளோடும் ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கால் நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் களைகட்டி இருக்கிறது அந்தப் பகுதியில் வெறிச்சோடிக் கிடந்த ஆல்பா சென்டர், ஏதோ புதுப் பொலிவு பெற்றமாதிரி களை கட்டியிருந்தது. நடிகர் திலகம் கட்சி தொடங்கியபோது இருந்த அதே பரபரப்பு. அதற்குப் பிறகு வானத்தை வில்லாக வளைக்கும் முக்கிய நிகழ்வு எதுவம்


நம்பிக்கை – ஒரு பக்க கதை

 

 “என்ன சொல்றீங்க? கொடுக்கற பணம் அஞ்சு வருஷத்துல அஞ்சு மடங்காகுமா? நம்பற மாதிரி இல்லையே! பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்தற மாதிரி சொல்லுங்கண்ணா” “சில விஷயங்கள நம்ப முடியாது தான். ஆனா இதுல நான் பணம் போட்டு இப்படி பணம் எடுத்திருக்கேனே தம்பி!” “அண்ணே.. ரெண்டு வருஷமா என்னை உங்களுக்குத் தெரியும்.. இத்தன நாள் சொல்லாம இப்ப ஏன் சொல்றீங்க? என்ன வச்சு எதாவது டெஸ்டு கிஸ்டு பண்றீங்களா?” “டெஸ்டெல்லாம் இல்லப்பா, நானே இதுல அவ்ளோ நம்பிக்கை


அசைவும் பெருக்கும்

 

 தவறான இடத்தை வந்தடைத்திருக்கிறோமோ என்ற ஐயம் மனத்தை நெருட, வெளிப்படும் சொற்கள் அதைக்காட்டிவிடுமோ என்ற தயக்கத்தில் அமைதியாக நின்றிருந்தான் கௌதம். “எத்தனை நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய்?” என்றார் எதிரிலிருந்தவர். “இரண்டு ஆண்டுகளாக… ஆனால் பயிற்சியை விட்டுவிட்டுத்தான் செய்ய முடிந்தது. சில சமயம் மூன்று மாதங்கள்கூட இடைவெளி எடுத்ததுண்டு. ஆனால் எவ்வளவு தொடர்ந்து செய்தும் பலன் என்று எதையும் அனுபவிக்கவில்லை.” “பலன் என்று எதை எதிர்பார்க்கிறாய்?” “கண்டிப்பாக அதிமானுட சக்திகள் எதையும் எதிர்பார்த்து தியானப் பயிற்சியில் இறங்கவில்லை. அவற்றில்


நிலவாய் அவள்

 

 பொன் போல் ஜொலிக்கும் பழுப்பு நிற சுருள் கேசம், கறுந்திராட்சை போன்ற பளிங்கு விழிகள், அளவாய் புன்னகைக்கும் இளஞ்சிவப்பு உதடுகள், ரோசாப்பூ நிற தேகத்திற்கு ஏற்றவாறு அடர் சிவப்பு வெல்வெட் மேலாடை, அடுக்கி வைத்த மேகப் பொதிகள் போல் பரந்து விரியும் இளஞ்சிவப்பு கீழாடையென அந்த பார்பி பொம்மை அவன் கண்களை அகல விரியச் செய்தது. பல வண்ணங்களில் விட்டு விட்டு மின்னும் அலங்கார விளக்குகளின் மின்னொளியில் அந்த பார்பி பொம்மை உண்மையிலேயே அவனைப் பார்த்து புன்னகை


சுடாத இரவும் தொடாத உறவும்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஞாயிற்றுக் கிழமை இரவில், திங்கள் வந்தது. தேய்ந்து வளர்ந்த அத்திங்களைக் கண்டு, செவ்வாய்த் தாமரைகள் அழுது கொண்டிருந்தன. அரக்காம்பல் என்னும் அல்லிகள் அப்போது சிரித்துக்கொண்டிருந்தன. அந்த ஊரும், தடாகத்திலுள்ள நீரும்; கலப்பைகள் உழுதுவைத்த சேறும், இரவு நேரத்தில் ஒற்றுமையாக உறங்கிக் கொண்டிருந்தன. ஆனால், அவள் மட்டும் உறங்கவில்லை. சுடாத இரவும், இரண்டு நாட்களாகத் தொடாத உறவும், அவளுடைய இளமை உணர்ச்சிகளை எழுப்பிவிட்டதால், உள்ளத்தில்


ஓடிப்போனவள் கதை

 

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதையைப் பற்றி ஓடிப்போனவள் கதை அமானுஷ்யமான கற்பனை யல்ல. ராக்ஷஸக் கதையும் அல்ல. அன்றாட வாழ்விலே அல்லலுறுகிற எத்தனையோ அபாக்கிய வதிகளில் ஒருத்திதான் சிவகாமியும். அவளை – அவளைப்போன்றவர்களை ஏசி வசைபாடத்தான் தெரியும் சமூக மக்களுக்கு. அடிப்படைக் காரணமே, சம்பிரதாயக் குட்டையிலே ஊறிக் கிடக்கும் அட்டைகளான சமூகப் பெரியார்களே என்பதை அவர்கள் உணரமாட்டார்கள். இன்றைய சமுதாயம் கரையான் புற்று. இடிந்து கொண்டிருக்கும் பாழ்


தொடர்புகள்

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஊரைவிட்டு வந்ததிலிருந்து, நிலவு வளர்ந்து தேய்ந்தது நூறு இருநூறு முறை இருக்கும். போட்டியாய் நகர் விளக்குகள் எரிந்து, நிலவு தோற்கும் இந்த ஊரில் யார் கணக்கெடுக்கப் போகிறார்கள்? வெய்யில் பதம் பண்ணிய செம்மண் மத்தியில் பனந்தோப்புகளுக்குப் பின்னால் சந்திரன் ஒளிவீசும் அழகை யெல்லாம் விட்டுவிட்டு குளிர் நடுங்கும் பனிப்பிரதேசத்தில் வாழ்கிறேன் என்று நாட்களைக் கடத்தும் நிலைமையாகிவிட்டது. எஞ்சினியர், ஆராய்ச்சியாளன். எப்படியிருந்தால் என்ன? நாளை


தலைச்சுமை

 

 காலை 7.00 மணி வெய்யிலே சுள்ளென்று அடித்தது. கோடை சூரியன் உக்கிரமாக பிரகாசித்தது. “வெள்ளரிப் பழம் ! வெள்ளரிப் பழம்…!” பின்னால் ஓங்கி குரல் கேட்டது. கோடைக்கு வெள்ளரிப் பிஞ்சு தாகத்தைத் தணிக்கும். உடல் சூட்டைக் குறைக்கும். அதன் பழமோ… தோல் நீக்கி, சர்க்கரையும், ஏலக்காயும் தட்டிப் போட்டு கலந்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி. சின்னத் துண்டுகளாக்கி குளிர்பதனப்பெட்டியில் வைத்து கொஞ்சம் குளிரூட்டி சர்க்கரையைத் தொட்டுக்கொண்டு தின்றால்.. ஆகா…அமிர்தம். ! எதுவுமே வேண்டாம். வெறுமனே வெள்ளரிப்பழத்தை


வெள்ளச்சி என்ற வெள்ளை மான்

 

 வில்பத்து தேசிய பூங்கா (“குளங்களின் நிலம்”) இலங்கையில் உள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இந்த பூங்காவின் தனித்துவமான அம்சம் இயற்கையான்குளங்கள் – இயற்கையான, மணல்-விளிம்பு நீர்ப் படுகைகள் அல்லது மழைநீரால் நிரம்பிய பள்ளங்கள். இலங்கையின் வடமேற்கு கரையோர தாழ்நில உலர் வலயத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா அனுராதபுரத்திற்கு மேற்கே 30 கிமீ ,மற்றும் புத்தளத்திற்கு வடக்கே 26 கிமீ , கொழும்பிற்கு வடக்கே சுமார் 180 கிமீ அமைந்துள்ளது. இந்த பூங்கா131,693 ஹெக்டேர்) பரப்பளவில் உள்ளது


தாயாகிப் போன மகள்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்த முதலாவது தவணை பெண் பார்க்கும் படலத்தி லேயே ஒருவேளை மணப்பெண்ணாக மாறக்கூடிய பவானியை, வழக்கப்படி எவரும் அலங்கரிக்கவில்லை . அவள் தன்னைத் தானே அலங்காரம் செய்யத் துவங்கினாள். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில், கன்னித்தன்மை கழியப் போகும் எல்லாப் பெண்களும் சிணுங்குவது போல் சிணுங்கி, நாணிக் கண் புதைக்கத்தான் செய்தாள் பவானி. “மாப்பிள்ளைப் பையனை எவ்வளவு நேரமாய் காக்க வைக்க உத்தேசமாம்!” என்று