கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2022

137 கதைகள் கிடைத்துள்ளன.

நானும் ரிக்ஷாக்காரனும்

 

 அப்பொழுது நான் பொரளை மின் வண்டி (ட்ரேம் கார்) தரிப்பிடத்திலீருந்து ஒரு மைலுக்கு மேல் தூரமில்லாத ஒரு இடத்தில் அமைத்திருத்த புத்தம் புது வீடொன்றில் தங்கியிருந்தேன். தினசரி காலையில் மீன்வண்டி தரிப்பிடத்துக்கும், மாலை வேளையிலோ இரவிலோ கந்தோரிலிருந்து வேலை முடிந்து வீடு திரும்பும் போது தரிப்பிடத்திலிருந்து வீடுவரைக்கும் நடந்து செல்வது எனது வழக்கம். மழை நாளில் இரவாகி, அதன் பின் வீடு திரும்ப நேர்ந்தால் மட்டுமே நான் ரிக்ஷோவில் செல்வேன். ரிக்ஷோவில் நான் இருந்து விட்டே சென்றேனாயினும்,


குமிழி

 

 நிலைக்கண்ணாடியின் முன்னின்று தன்னை அலங்கரிப்பதில் ஈடுபட்டிருந்தாள், ஜானகி. கல்யாணராக ஆலாபனத்தை, அவளது உதடுகள் முனகிக்கொண்டிருந்தன. அவளது உள்ளத்தில் குதூகல அலைகள் எழும்பிக் குதித்தவண்ண மிருந்தன. அந்தக் குதூகல அலைகளிலே, அவளது சிந்தனைப் படகு ஒரே ஒரு எண்ணத்தைத் தாங்கிப் பாய் விரித்துச் சென்றது. “இன்றைக்குக் கூட்டிப் போவதாகக் கூறியிருக் கிறார்கள். ‘அவர்கள்’ வந்ததும் எப்படியாவது இன்று போகவேண்டும்.” ஜானகி, ராஜாராமின் மனைவி. ராஜாராம் அவளை அடையக் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும்; அவ்வளவு அழகி. நன்கு பழுத்துக் கனிந்த


பேசக் கூடாத இடம்

 

 “பேசுவது தப்பா குருவே” என்று வேகமாய் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “ஏன் கேட்கிறாய்? உனக்கு என்ன பிரச்சனை?” என்றார் குரு. “நான் ரொம்பப் பேசுகிறேன் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். பேசுவது தப்பா?” “பேசுவது தப்பல்ல, ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும்” என்று சொன்ன குரு, அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார். “ஒரு குழாய் ரிப்பேர்காரன் இருந்தான். வேலையில் கெட்டிக்காரன். நாணயமானவன். ஒருநாள் அவனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அவன் வழக்கமான வாடிக்கையாளர்தான்


சூட்சும இடைவெளி

 

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்க வேண்டுமென்ற தணியாத ஆசை எனக்கு. ஆனால் படுக்கையில், இருக்கையில், நடக்கையில், பயணிக்கையில்… எந்நேரமும் மரண பயம் என்னை மீசை முறுக்கி ஓங்கிய அரிவாளுடன் துரத்திக் கொண்டிருக்கிறது. பள்ளிவாசலில் போகும்போது பயானில் (சொற்பொழிவு) மவுலவியும், தெருவில் நடக்கையில் மதப் பிரச்சாரம் செய்வோரும் எதிர்வரும் மரணத்தைச் சொல்லியே பயமுறுத்துகிறார்கள். அவ்வளவுக்குப் பெரிய உருவமா மரணம் என்ற கேள்வி அடிக்கடி எனக்குள்


பொறாமை

 

 உயர்நிலைப்பள்ளியில் படித்த உல்லாசமான காலம். நெருங்கிய நண்பன் ஒரு திறமைசாலி. சிறந்தபேச்சாளன், கவிஞன். அந்த காலத்தில் அவன்மேல் எனக்கு பொறாமை. இப்போது? அவன் மேடையில் தமிழ் பேசும்போது கை தட்டல் காதைத் துளைக்கும். ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொருவாக்கியமும், வாக்கியத்துக்கிடையே சில விநாடி இடைவெளி என பேசுவதை இளம் வயதிலேயேகலையாக்கியவன் என் நண்பன். கை தட்டும் கும்பலில் நான். மனதின் அடித்தளத்தில் ஒரு மூலையில்பொறாமை பொறி… எனக்கு மட்டும் அவனைப்போல் மேடைப் பேச்சு வரவில்லையே? ஒவ்வொரு முறையும் அவன்


எல்லே இளம் கிளியே…

 

 மணி எட்டு ஆகிவிட்டது. அவசர அவசரமாக பள்ளி செல்ல தயாரானாள் சுந்தரி. அவள் கணவன் சுப்பிரமணியன் அப்போது தான் குளிக்கச் சென்றான். காலையில் இட்லி சாப்பிட்டு கையில் தயிர் சாதம் எடுத்துக் கொண்டாள். கணவனுக்கும் டிபன் எடுத்து வைத்தாள். குளித்து உடை மாற்றி ஆபீஸ் செல்ல தயாராகி சாப்பிட அமர்ந்தான். கருப்பு நிற பேண்டும் அதற்குப் பொருத்தமாக சிவப்பு கருப்பு கலந்த சிறிய கட்டங்கள் போட்ட முழுக்கை சட்டை அவன் அழகை மேம்படுத்திக் காட்டியது.ஆறு அடி உயரமும்


மகா வாக்கியமும் மாமியின் நிழலும்

 

 எவ்வளவு காலம் என்று ஞாபகமில்லை. ஆனால் மனமே அறியாத, அல்லது, எல்லாம் ஒளி மயமாகவே தரிசனமாகிற இனிய பொற் காலமது..சுவேதாவிற்கு அப்போது அம்மா தான் உலகம் . அவள் மட்டும் தான் அந்த இருப்பில் ஜொலிக்கிறவள். இப்பவும் கடவுள் தரிசனமாகவே, கண்ணுக்குள் நிற்கிற அம்மா..அவளுக்குத் தெரியும் .எது குப்பை வண்டிக் காலம் என்று. .அதெல்லாம் மனிதனைப் பற்றி அறிய நேரும் போது, பின்னால் வந்த சுமை, துக்கம் இருள் எல்லாம் தான்.. உண்மையில் மனிதர்களைப் பற்றியோ, அவர்களின்


அப்பாவும், பிள்ளையும்…

 

 ‘இந்த இடமும் கை விரிப்புதான்!’ – வீட்டுக்குள்ளிருந்தே அப்பா தூரத்தில் நடை தளர்ந்து வருவதைக் கொண்டே கண்டு பிடித்துவிட்டான் சேகர். ஆனாலும், அவர் உள்ளுக்குள் வந்ததுமே… “என்னப்பா ஆச்சு..?” கேட்டான். “பச்!!” அவர் சலிப்புடன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு போய் நாற்காலியில் அமர்ந்ததைப் பார்க்கப் பாவமாக இருந்தது. நிலைமை தெரிந்து விட்டது. இதற்கு மேல் கேட்டாலும் அவர் சொல்லமாட்டார். சுபாவம் அப்படி. நினைத்த சேகர் அறைக்குள் போய் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து வெளீயே வெறித்தான். “என்னங்க ஆச்சு..?”


வார்த்தைகள்

 

 காலை ஐந்து மணி குமுதினி மெதுவாக எழுந்து உட்கார்ந்துக் கொண்டாள்,தூக்கம் வரவில்லை பக்கத்தில் அவளின் பேரக் குழந்தை ஐஸ்வரியா தூங்கி கொண்டு இருந்தாள்,அவள் தலையை மெதுவாக தடவி விட்டாள் குமுதினி,மாநிறம் அடர்த்தியான முடியை இருக்கமாக பின்னி போட்டிருந்தாள் ஐஸ்வரியா,ஒரு கையை பாட்டி மேல் போட்டு படுத்து கிடந்தாள் அவள்,எவ்வளவு அன்பான குழந்தை காதம்பரிக்கு இப்படி ஒரு மகளா என்று நினைக்கும் போது குமுதினிக்கு ஆச்சிரியமாக தான் இருந்தது,காதம்பரி ரமேஷின் மனைவி,குமுதினி மகாலிங்கத்தின் ஒரே மகன் ரமேஷ்,அவன் படிப்பை


மூன்றாவது மனிதன்

 

 கிராமத்திலிருந்து வந்த ஒரு கிழமைக்குள்ளேயே திணறிப் போய் விட்டான், சுப்பிரமணி என்ற வினைதீர்த்த முருகேச சுப்பிரமணியன். மாமா கழுகாசலந்தான் அவனை சென்னைக்குக் கூட்டிக் கொண்டுவந்து திருவல்லிக்கேணி அருணாசலம் தெருவில் ரூம் ஒன்றில் குடியமர்த்தியது. சிலருடைய பெயரைக் கேட்டுவிட்டு அவருக்கும் பெயருக்கு முள்ள தொடர்பை நினைத்தால் விழுந்து விழுந்து சிரிக்கத் தோன்றும். ஆனால் பெயரைப் போல அர்த்தமுள்ளவர் கழுகாசலம். “ஆபீஸ்… ரூம்… சாப்பாட்டுக்கு ஹோட்டல்.. அவ்வளவுதான்… அப்புறம் எனக்கு திருட்டு சமாசாரம் பிடிக்காதப்பா… தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற