கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 5, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

அகதி

 

 சுழித்துக்கொண்டு ஓடும் ஆற்றின் குறுக்கே நீண்டிருந்த ஈரமான மூங்கில்களின் மேல் கால் பதித்து நடந்து கடக்கும்போது எதிர்ப்புறம் கைநீட்டி அழைக்கும் அந்த அழகான இளைஞன் மேல் கண் பதிந்து கவனம் சிதற கால் லேசாகச் சறுக்குகிறது. நதியில் காத்திருக்கும் முதலைகள் இடறிவிழும் அவளை விழுங்க வாய் பிளக்கும்போது அந்த இளைஞன், “மிம்மி வெய் எழுந்திரு , போலீஸ்….” என்கிறான் பதற்றத்துடன். ததும்புகிற பெரிய மார்பகங்களோடும், சிவந்த முகத்தோடும் குனிந்து அவளை உலுக்கி எழுப்பிய மாலதியம்மாள் கண்களை நிறைத்தபடி


பாப்பூ

 

 மணி பத்தைத் தாண்டிவிட்டது. ஆனால் இருவரும் அவரவர் இடத்தை விட்டு நகரவில்லை. சமையல் எப்பவோ ஆறிப்போயிருக்கும். ஆனால் சாப்பிட இருவருக்குமே தோன்றவில்லை. வாழ்க்கையில் ஒரு இடைவெளிக்குப் பின் பசி தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. பழக்கத் துக்குப் படிந்ததாய்ப் போய் விடுகிறது. சாப்பிடற வேளையா, சரி, சாப்பிட்டுத் தொலை, காரியத்தை முடி. பேச்சுக்கூட, கொஞ்ச நேரமாக அவர்களிடையே அடங்கிவிட்டது. சண்டை பூசல் கிடையாது. வாக்குவாதம் அவர்களிடையே அதிகம் நேர்வதுமில்லை. யோசனை? அதற்கென்ன, முடிவே இல்லை என்கிறோம். அதுகூட தொடர்ந்த


கன்னத்தில்

 

 காங்கேசன் துறையிலிருந்து புறப்படும் புகையிரதத்தில நடராசனை வழியனுப்பி வைக்க வந்த பாலன் சொன்னான். “மச்சான் கொழும்புக்குப் போன உடனே தபால் போடு…..முடியுமெண்டால் நான் சொன்ன சாமான் என்ன விலையெண்டு கேட்டு எழுது” “போன உடனே முதல் வேலை இதுதான்” என்று சொல்லிவிட்டு “எங்கடை செல்வராணி கலியாணம் முடிச்சிட்டாளாம் தெரியுமோ?” எனக் கேட்டான் நடராசன். “ஓ, பசறையிலை ஆரையோ மரி பண்ணியிருக்கெண்டு கமலா சொன்னது” பதிலளித்த பாலன் நடராசனையும் ஒரு கேள்வி கேட்டாள். “இந்திராணியும் யாழ்ப்பாணத்திலைதான் எங்கையோ கலியாணம்


சயனஸ் மூக்கு!

 

 “பளஸ் டூ மாணவர்களே, மாணவிகளே! சயனஸ்’ என்றால் என்ன? டாக்டர் காளிமுத்து பாணியில் கூறுகிறேன், கேளுங்கள்! ஏ… வாலிப வயோதிக அன்பர்களே…! ஆஸ்துமா, ப்ராங்கைடீஸ், மார்பில் சளி, தொண்டையில் கபம், நாசித்துவாரங்களில் கபம், நாசித் துவாரங்களில் நயாகரா நீர்வீழ்ச்சி போன்ற ஜலதோஷ சாம்ராஜ்யத்தின் இருபதாம் நூற்றாண்டு வாரிசுதான் சயனஸ்!’ ஏதோ ஒற்றைத் தும்மல், இரட்டைத் தும்மல் என்று அலட்சியமாக எண்ணிவிடாதீர்கள். ‘சயனஸ்’ உள்ளவனின் நாசித்துவாரங்களிலிருந்து புறப்படும் தொடர்ச்சியான தும்மல்களுக்கு வலையப்பட்டியின் தவில் வாசிப்புக்கு ஈடாக தனி ஆவர்த்தனம்


பரிசில் வாழ்க்கை

 

 ஊருக்கு மேல் கையில் நீர் வளம் ததும்பிய தலங்களில் இருந்தன சாத்தாங்கோயில்கள். ஆற்றங்கரை குளத்தங்கரை போக சில சமயம் தோப்புகள்,திரடுகள்,விளைகள் நடுவிலும், அபூர்வமாக வயற்காடுகளின் திட்டுக்களிலும் சாத்தா நிலை கொண்டிருப்பார். சாத்தாங்கோயில் என்பதுதான் வழக்கு.மற்றபடி கிறிஸ்துவின்,என்று நீ அன்று நான் உன் எதிரி அல்லவோ எனும் நிரந்தரமான எதிரியான சாத்தானின் கோயில் எனப் பொருள் கொளல் ஆகா! சாஸ்தா என்பதன் தமிழாக்கம் சாத்தா. அல்லது மறுதலை நேராம். சாஸ்தா என்ன மொழி என்றெனக்குத் தெரியாது. வேட்டி வேஷ்டியானது


அவனுக்கும் தமிழ் என்று பேர்…

 

 உயிர் பிரியும் தருவாயில் கூட நமச்சிவாய ஓதுவார் திலகவதி கையைப் பிடித்துக் கொண்டு கூறிய வார்த்தைகள் இப்போதும் தமிழ் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.. “திலகம்..ஏதோ. நான் வாழும் வரைக்கும் ‘ தமிழ்.. தமிழ்னு ஒரே மூச்சாக இருந்திட்டேன்.. ! தமிழுக்கு என்னால் செய்ய முடிஞ்சதெல்லாம் செஞ்சிட்டேன்னு நெனைக்கிறேன். இப்ப நான் சொன்னது நம்ப மகன் தமிழப்பத்தி.! எந்த காலத்திலும் அவன் தமிழை மறக்காம இருக்க நீதான் அவனுக்கு உறுதுணையா இருக்கணும். ‘ தமிழ்…இங்க வாப்பா…உன்ன பிள்ளையா


சைக்கிள்

 

 “சைக்கிள் ” என்ற தலைப்பில் சுதாராஜ் எழுதிய சிறுகதை முதல் தடவையாய் சிறுவயதில் வெகுவாக கவர்ந்திருந்தது. அதை வாசித்ததிலிருந்து நான் இவரின் வாசகன். இவரைப் போல நானும் எழுத வேண்டும் என அந்த காலத்தில் ஆசைப்பட்டிருக்கிறேன். அப்ப சைக்கிள் ஓடக் கூடத் தெரிந்திருக்கவில்லை. இவரைப் போல என் அண்ணரும் பழைய சைக்கிள் எல்லாம் ஓடி, ஓடி வெறுத்து…கரைச்சல் கொடுக்க அம்மா, கடன் பெற்று ஒரு புதிய சைக்கிள் வாங்கி கொடுத்திருந்தார். அதை ஒரு மாசத்திலே பொதுசன நூலகத்தில்


பள்ளிக்கூடம்..! – ஒரு பக்க கதை

 

 “எதுக்கு நம்ம பெண்ணை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்காமல் அரசாங்க பள்ளியில் சேர்க்கனும் என்கிறீங்க…? “கண்ணகி கணவனைக் காட்டமாகக் கேட்டாள். பதில் பேசாமல் இருந்தான் சந்திரன். “தாய் மொழி பாசமா..?” “ம்ம்ம்ம்……” “எனக்கும் தாய் மொழி பாசம், தமிழ் மேல விருப்பம் இருக்கு. ஆனாலும்….கால நிலவரத்துக்குத் தகுந்த மாதிரி நாமும் மாறனும். தமிழைத் தாண்டி நம்ம நாடு நகரங்களில் ஆங்கிலம் பரவல் மொழியாய் இருக்கு. பெரும்பாலும் அயல்நாடுகளிலும் இதே நிலை. அப்புறம் படிப்பைப் பொறுத்து +2த் தாண்டினால் பெரும்பாலும்


முறை மாப்பிள்ளை

 

 அண்ணி, என் மகள் கிரேனாப்புக்கு என்ன குறைச்சல்? பி.ஏ. பட்டதாரி. ஒத்தைக்கு ஒரு மகள். அவள் சின்ன வயதில் நீங்க உங்கள் அண்ணன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கிளி மாதிரி இருக்கிற எங்கள் அண்ணன் மகள் கிரேனாப்பு தான் என் மகன் யோசேப்புக்கு என்று ஆயிரம் தடவை சொன்னீங்க. இப்போது உங்க மகன் இஞ்சினியர் ஆனதும் மனம் மாறிவிட்டீர்களே. அண்ணன் மகள் வேண்டாம் என்று சொல்வது அண்ணன் வீட்டில் அணுகுண்டு போட்டது போலிருக்கிறது. கிரேனாப்பு என்ற கிளி,


ஹவுஸ் ஹஸ்பெண்ட்

 

 மூன்று வருடங்களாகக் காதலித்து அவளை திருமணம் செய்து கொண்டேன். தற்போது எங்களுக்கு ஒரு மகள். வாழ்க்கை நல்ல புரிதலுடன் சென்று கொண்டிருக்கிறது. அன்று என் மனைவியின் தங்கை திருமணத்திற்கு சென்று இருந்தோம். மனைவி தன்னை திருமண கொண்டாட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள். என் செல்ல மகள் என்னுடனே ஒட்டிக் கொண்டிருந்தாள். ஏனென்றால் அவள் எப்போதும் என்கூடவே இருப்பாள். அவளுக்குத் தேவையான அனைத்தையும் நானே செய்வேன். நாங்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோது , என் மகளின் டயாபர் ஈரமாகி விட்டது.