கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2021

100 கதைகள் கிடைத்துள்ளன.

முள் எலியும் முயலும்

 

 ஒரு முள்ளெலி தினந்தோறும் அதிகாலையில் இரைதேடு வதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தது. அது செல்லுகின்ற வழியிலே இருந்த புல்லை மேய்வதற்காக ஒரு முயல் அந்த நேரத்தில் அங்கு வருவதுண்டு. வளைந்து குட்டையாக இருக்கும் முள்ளெலியின் கால்களைப் பார்த்ததும் முயலுக்குச் சிரிப்பு வரும். முள்ளெலி குடுகுடுவென்று மெதுவாக ஓடுவதைக் கண்டும் அதற்குச் சிரிப்பு வரும். அதன் உடம்பெல்லாம் முள்ளாக இருப்பதை நோக்கியும் முயல் நகைக்கும். “முள்ளெலியாரே, எங்கே இவ்வளவு வேகமாகப் புறப்பட்டீர்கள்?” என்று இப்படி முயல் கிண்டலாகத் தினமும் கேட்ப


ஒப்பனையுதிர் காலம்

 

 மேற்புறத்தில் படிந்திருந்த தூசியைத் தட்டியபடி மைலாப்பூர் கோவிந்தன், புத்தகத்தைக் கொடுத்தான். ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ முதற்பதிப்பு கொடுத்த மகிழ்ச்சியை விட, அதிலிருந்த பெயர் அதிக அதிர்ச்சியைக் கொடுத்தது. கே. சாமுவேல் அமிர்தசாமி, உ.வெ.சா. தெரு, தாம்பரம். அதே கோழி கிறுக்கிய கையெழுத்து. “சும்மா சொல்லக் கூடாது சார், பெரிய புதையல், அந்த வீட்டு அம்மாவே போன் பண்ணி வரச் சொன்னாங்க” “வீட்ல இவரு இல்லையா?” என்று சாமுவேல் பெயரைக் காட்டினேன். “அவரு நம்ம ரெகுலர் கஸ்டமர் சார்.


பந்து

 

 அந்த சின்னஞ் சிறிய சந்துக்குள்தான் இவர்கள் பந்தடிக்கின்றார்கள். இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று வாழைச்சீப்புப் போல் வரி வரியாக வீடுகள். வீட்டுக்கு முன்னால் வேலியேதும் இல்லாத திறந்த வெளிகள், செடி வளர்த்து மறைப்புக்கள், முட்கம்பி வேலிகள், மூங்கில் பிளாச் சடிப்புகள், காம்பவுண்ட் சுவரும் கேட்டுகளுமாக தரத்திற்கேற்ப பாதுகாப்புகள். எல்லா வீட்டுக்காரர்களுமே அந்தச் சந்துக்குள்ளாகத்தான் நடக்க வேண்டும். வெளியே றோட்டுக்குப் போவதென்றாலும்… உள்ளே வீட்டுக்கு வருவதென்றாலும்! சந்தடிமிக்கதான அந்தச் சந்துக்குள்தான் இவர்கள் பந்தடிக்கின்றார்கள். தாங்கள் ஏதோ அர்ஜுனா


நம்முடைய நேரு

 

 எங்கள் பாட்டி எனக்கு அடிக்கடி கதை சொல்லுவாள். ராமன் கதை, கிருஷ்ணன் கதை, எல்லாம் சொல்வாள். “தசரத மகாராஜாவுக்கு மணிமணியாகக் குழந்தைகள் பிறந்தார்கள். ரத்னம் போல் ராமன் பிறந்தான்” என்று கதை சொல்வாள். கிருஷ்ணன் கதையைச் சொன்னாலும், ‘அவன் மணிப்பயல்’ என்று சொல்வாள். “அதென்ன பாட்டி, மணிப்பயல், ரத்னம் போலப் பிறந்தவன் என்கிறாயே; ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டேன். “ரத்னம் அதிக விலையுள்ளது, சுலபமாகக் கிடைக்காது. அது மாதிரியே ராமனைப் போலவும் கிருஷ்ணனைப் போலவும் குழந்தைகள்


வெள்ளைத் தீ

 

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குங்குமம் இடறிய சுடலைச் சிவப்பு. முதல் நட்சத்திரங்கள் திக்கின. கோடை ஆற்றின் நடுவயிற்றுள் நான். மணல் அள்ளி தண்ணீர் செய்தேன். அருவி. விழித்தேன். உள் வீங்கிய முலைக்காம்புகளை வார்த்தைகள் சப்பிக் கொண்டிருந்தன. புரிந்தது. உன்னைத் திருட கவிதையின் பிறாண்டல். தரமாட்டேன் உன்னை . எப்பொழுதும் எவருக்கும். கர்ப்பத்துள் தூங்கும் உன்னை எழுப்பி, முகம்பார்க்க மரணமே சரி. வார்த்தைகளற்ற கவிதையில், வர்ணங்களற்ற ஓவியத்தில், சப்தங்களற்ற


ஃபெயில் காலம்

 

 “பெரியப்பா மெட்ராஸ்க்கு நாளக்யாம்மாப் போறாவ?” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட செல்லம்மாவைக் கூர்மையாய்ப் பார்த்தாள் அம்மா. “என்ன, பெரியப்பா போறாவளான்னு மொள்ளமாக் கேக்க? நீயுந்தானட்டி அவியக் கூடப் போற! ராத்திரி ஏழு மணிக்கி ரயிலாம். வீராவரத்ல போய் ரயிலேறணும். நாலு மணிக்கெல்லாம் பெரியப்பா வந்துருவாவ. அப்ப அளுதுட்டு நிக்யாத. உடுப்பெல்லாம் எடுத்து வச்சிட்டியா?” செல்லம்மாவுக்கு இப்போதே அழுகை வரப் பார்த்தது. கடந்த ஒரு வாரமாய், நாள் தவறாமல் அம்மா இவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிற சமாச்சாரம் தான். ஆனாலும்


பாம்பு

 

 புரந்தரர் காலனியைப் பாம்பு வந்து சேர்வதற்குள் படிஞாயிறு மலைகளுக்குள் இராத்தங்கப் புகுந்துவிட்டது. நல்ல முனைப்பான வைகாசி வெயில். மழைகண்டு ஆயின மாதங்கள். பாவி அரசு செய்தால் பருவமழை பொழியாது, செல்லாது இயல்பாக இயற்கை, கசங்கிக் குலையும் கானுயிர் என்பது கார்க்கோடக புராணம். பசிய புல் எலாம் காய்ந்து சருகாகி, ஊர்வன, பறப்பன வருந்தி உயிர் தரித்துக் கிடந்தன. குடையுமில்லை வெயில் தாங்க, பெப்ஸியும் இல்லை தாகம் தீர்க்க. புதர்கள் அடர்ந்து கிடக்க வேண்டிய செயற்கைப் பூங்காக்களில் காய்ந்த


ஆகஸ்ட் 15

 

 போக்குவரத்தின் நெரிசல் அதிகமாக இருந்ததாலும், தனது போசைக்கிளின் பிரேக் மேல் அவ்வளவாக நம்பிக்கை இல்லாததாலும், இறங்கி ஓரமாக தள்ளிக் கொண்டு நடந்தார் விநாயகம். ஆற்றுப் பாலத்தின் மேல் தள்ளிய போது, ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு இரும்புக் கிராதிகள் மேல் கையூன்றி பாலைவனமாய் மணல் வரிகள் கொண்ட காவிரியைப் பார்த்தார். இதென்ன நதியா, மைதானமா? எப்படி இருந்த காவிரி ஏன் இப்படி வாடிப் போனாள்? பெருமூச்சின் வெளிப்பாடு. மனம் கலங்கியது. இரண்டு கரைகளையும் அணைத்துக் கொண்டு , நுரைத்தபடி


திடீர் கல்யாணம்

 

 “என்னடா, பாபு. இப்பதாண்டா உனக்கு 23. அதற்குள் கலியாணக் கார்டு கொண்டு வந்து விட்டாயே” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் நண்பன் நவீன். “சே! சே! இது எங்க அண்ண ன் கலியாணக் கார்டுடா. என் கலியாணக் கார்டு இப்படியாடா இருக்கும். என் கலியாணக் கார்டு பார்த்தாலே, இது கோடீஸ்வர மாப்பிள்ளை என்று சொல்லுமளவுக்கு பட்டு ரிபன் கட்டி, பந்தாவாக அனுப்புவேன்.” “இது மாதிரி பட்டிக்காட்டு கல்யாண மண்டபத்தில் வைத்து நடப்பதெல்லாம் ஒரு கல்யாணமாடா? புளியங்கொம்பு மாதிரி ஒரு


தங்கச் சங்கிலி

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில்