கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 3, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

வலை

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அடி வயிற்றில் ஆவேசத்துடன் செருகப்பட்ட அந்த ஒன்பது அங்குலக் கத்தி கல்லீரலையும், மண்ணீரலையும் சிதைத்து மரணத்தை உண்டாக்கியிருக்கிறது. மரணம் இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் திகழ்ந்திருக்கலாம். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கண்களை ஓடவிட்டிருந்த இன்ஸ்பெக்டர் தன்ராஜ் ஒருமுறை அந்த மரணத்தின் கோரத் தன்மையை நினைத்துச் சிலிர்த்தார். இன்ஸ்பெக்டர் பதவி ஏற்ற இந்த ஆறு மாத காலத்தில் அவர் கையாளப் போகும் மூன்றாவது


இரத்தப்படுக்கை

 

 தில்லை கோபுரங்கள் நான்கும் மங்கலான சூரிய வெளிச்சத்திலுங் கூட மின்னித் தோன்றின, இன்று நிகழவிருக்கும் காட்சிகளை காண விரும்பாதவனாய் கதிரவன் கண்களை மூடிகொண்டே கிழக்கே அடி எடுத்து வைத்தனன் போலும், பொழுது புலராத அந்த வேளையில் தீக்ஷிதர்கள் யாவரும் கீழசன்னதி வாசலில் கூடிநின்று பரபரப்பாய் விவாதித்து கொண்டிருந்தனர், அந்த அதிகாலை வேளையிலும் சீக்கிரமாக அகத்து வேலைகளை நிறைவுசெய்து கொண்டு ஈரக்கைகளுடன் மடிசார் சரசரக்க சில பெண்களும் வந்து கூடத் தொடங்கினர், எப்படியும் இன்று ஒரு பிரச்சனை இருக்கிறது!!என்று


அஞ்சுவது அறிவார் தொழில்

 

 என்னங்க.. இங்க வந்து பாருங்க..காலையிலேயே ஆரம்பிச்சிட்டாங்க.. புனிதாவின் அழைப்பை கேட்டு கிச்சன் போர்ட்டிகோவிற்கு வந்தான் சரவணன். என்ன ஆச்சு..என்று கேட்டவனிடம், பக்கத்திலிருந்த காலி மனையை நோக்கி கை காட்டினாள். அங்கு மூன்று மதுப்பிரியர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். நீங்க ஆம்பளைங்க எல்லாம் சேர்ந்து போய் கேட்க கூடாதா.. என்று கேட்ட புனிதாவிடம் ஒன்றும் சொல்லாமல் போய் சோபாவில் அமர்ந்தான். இவர்கள் வசிக்கும் தெருவில் ஒரு பெரிய காலி மனை இருக்கிறது. அதை சுற்றி ‘ப’ வரிசையில்


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 டாக்டர் தொட்டுப் பார்த்ததும் காமாக்ஷிக்கு வலி பொறுக்க முடியாமல் ”தொடாதேள்,நேக்கு ரொம்ப வலிக்கறது” என்று கத்தி,டாக்டரின் கையைத் தள்ளினான். டாக்டருக்கு காமாக்ஷி சொன்னது அதிர்ச்சியைத் தந்தது. டாக்டர் உடனே வெளியிலே உட்கார்ந்துக் கொண்டு இருந்த சாம்பசிவனைக் கூப்பிட்டு “ஐயரே,நான் இவங்க வயித்தை தொட்டதும்,இவங்க வலியை தாங்க முடியாம ‘தொடாதேள்.நேக்கு ரொம்ப வலிக்கறது’ன்னு கத்தறாங்க.நான் இவங்க வயித்தே உடனே ‘ஸ்கேண்’ பண்ணீப் பாக்கணும்” என்று சொன்னதும் சாம்பசிவனும்,பரமசிவமும் பயந்து விட்டார்கள். “பயப்


இரண்டாவது மரணம்

 

 எனக்குத் தெரிந்து தாத்தா இப்பொழுது மூன்றாவது முறையாக இறந்திருக்கிறார். பஸ் எரிப்பில் உயிர் துறந்தவர்கள் எண்ணிக்கை பதினொன்றைத் தொட்டதாக ‘தமிழன்’ நாளேட்டில் தலைப்புச் செய்தியாகப் போட்டிருந்தார்கள். கட்சித்தலைவரொருத்தர் ஜலதோஷத்தால் அவதிப்படுகிறபோதெல்லாம், கொஞ்சம் நிம்மதியாக தும்மணுங்கிறதுக்காக பத்து ஏக்கர் பரப்பில் சின்னதாக வீடொன்றைக் கட்டிவைத்திருந்தார். சின்னவீடென்றாலும், காவலுக்கு ஓர் ஆள் வேண்டுமில்லையா? ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ஆள், அற்பசங்கைக்காக சாலையைக்கடக்க, அரசு பேருந்தொன்று இரண்டு நாளைக்குப் முன்பு மோதியதில், அங்கேயே அவனது ஆயுளும் முடிந்துபோனது. வார இதழொன்று, பஸ்ஸை


நட்பில் மலர்ந்த துணை மலராரம்

 

 இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும், காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, ஏதில் சிறு செரு உறுப மன்னோ, நல்லை மன்ற அம்ம பாலே மெல் இயல் துணை மலர்ப் பிணையல் அன்ன, இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோயே. (குறுந்தொகை – 229 மோதாசனார்) காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் காலைநேரச் சங்கு ஊதியதும், அயலவர்கள் பரபரப்பானார்கள். தொழிற்சாலைக்குச் சொந்தமான குவாட்டேஸில் அருகருகே வசித்த பாரமநாதனும், அப்துல் காதரும் ஒன்றாகவே


மறுபக்கம்

 

 அது, தைப்பிங் நகரிலுள்ள பெயர் பெற்ற தனியார் மருத்துமனை. சிறப்புப் பிரிவு அதாவது முதல் வகுப்பு. பள்ளியில் முதல் வகுப்பு என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். இங்கு வேறு மாதிரி. இறுதி வகுப்பில் படித்த மாணவன் எந்நேரமும் புறப்பட்டுப் போய்விடவேண்டுமே அப்படியான ஒரு சூழல். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ‘பஸ்ட் கிளாஸ் வார்டு’ என்றே எல்லாரும் சொல்கிறார்கள். அந்த அறையில் ஒரே ஒரு படுக்கை. மிகவும் நேர்த்தியான வடிவமைப்பு. அதன் பக்கத்தில் பல வகையான கருவிகள்.. எந்நேரமும் விழுப்புநிலை


விசாலம்

 

 எதிர் வீட்டில் வழக்கம் போலவே இன்றும் சண்டை. எப்போதும் போல் பெண்ணின் குரலே ஓங்கி ஒலித்தது. கேசவன் நூற்றுக்குப் பத்து வார்த்தைகள் ஆரம்பத்தில் பேசினான். இப்போது ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. “நீங்க ரோசம் இல்லாதவர் போல நடிச்சி இப்படி மௌனமா இருந்தே என் கழுத்தை அறுக்குறீங்க. ! மொதப் பொண்டாட்டி செத்ததும் புது மாப்பிள்ளையாய் வந்து என் கழுத்துல தாலி கட்டி இருக்கக் கூடாது. பேசாம பெத்த பொண்ணு, புள்ளைங்களோட தனிக்கட்டையாய் இருந்து ஆக்கித் தின்னிருக்கனும். இல்லே…


பட்டுப்பாவையர் உலகில் ஒரு பாவியின் நிழல்

 

 அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரி மாதுவை பொறுத்தவரை, அதில் அவளுக்கு படிப்பு வந்ததோஇல்லையோ, வேதத்தையே. கரைத்துக் குடிக்க அவளுக்கு, அது ஒரு தவச் சாலை போலவே விளங்கியது. வெறுமனே குடிக்கிற பொருளல்ல்ல அது. அதற்கும் மேலாய் எம்முள் என்றும் ஒரு சாட்சி புருஷனாகவே இருந்து ஒளிர்கின்ற, சத்தியத்தின் பிரதிபலிப்பாகவே அதை இனம் காண முடிந்தாலும், பாமர சனங்களைப் பொறுத்தவரை அது என்றும் மறை பொருள் தான். பன்னிரண்டே வயதாகியிருந்தாலும் மாதுவுக்கு அப்பாவின் வாய் மொழியாக இந்த வேத


இன்றைய பெண்கள்

 

 (இதற்கு முந்தைய ‘நதிகள், குணங்கள்…’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). பாரதியார் மேலும் தொடர்கிறார்… புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுர் மறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னிலே பொது வான் வழக்கமாம்; போற்றி போற்றி, ஜயஜய போற்றி!! இப்புதுமைப் பெண்ணொளி வாழி பல்லாண்டிங்கே! மாற்றி வையம் புதுமையுறச் செய்து மனிதர் தம்மை அமர்க்களாக்கவே ஆற்றல்கொண்ட பராசக்தி யன்னை நல்லருளி நாலொரு கன்னிகை யாகியே தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்