கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 4, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

இரண்டு வளையல்கள்

 

 ஒவ்வொரு முறை அதைக் கழட்டி வாங்கும்போதும் அவனுக்குத் துக்கமாகவே இருந்தது. பெரும்பாலும் அவன் கேட்பது கூட இவ்லை. அவளே வளையல்களைக் கழட்டிக் கொடுத்து விடுவாள். முன்பாவது சமையல் அறையில் போய் கழட்டி எடுத்து வருவாள். இப்போது அதுவுமில்லை. முகத்துக்கு எதிராகவே கைகளை நீட்டியபடி கழற்றிக் கொடுத்து விடுகிறாள். மெலிந்து நீண்டு போயிருந்த அந்தக் கை வளையல்களைக் கழட்டியதும் பார்க்க இயலாததாக உள்ளது. ரத்தம் வெளிறியபடி இருக்கும் அந்த விரல்கள் பாம்பைப் போல நீண்டு சுருண்டது போல இருந்தன.


அவன் செய்த குற்றம்

 

 பச்சை ஜிப்பா நீலவானம் பொழிந்து கொண்டிருந்த சூரிய ஒளியிலே தனித்து இனம் கண்டு கொள்ளும்படியாகத் தகதகவெனப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அத்தக பெருங்கூட்டத்திலும், அந்தப் பச்சை ஜிப்பாவினால் மட்டும் யாருடைய கவனத்திலிருந்தும் தப்ப முடியாது. சொக்காயும் தலைப்பாகையும் அணிந்த நாட்டுப்புறத்தார்கள், கோட்டும் தொப்பியும் தரித்த நகரப்புறத் தார்கள், உடலை மறைக்கத் துணியின்றி வெற்றுடம்புடன் காட்சி அளித்த பிச்சைக் காரர்கள், வண்ண வண்ணப் புடவைகள் உடுத்திய பெண்மணிகள் எல்லோரும் கடை களுக்கிடையே இருந்த குறுகலான பாதை வழியே நெருக்கியடித்துக் கொண்டு


நான் தொலைத்த மனிதர்கள்

 

 அதுவே எனது முதல் நீண்ட நெடுந்தூர பயணம். சென்னையிலிருந்து பஞ்சாப் (மோகா) நோக்கி தில்லி வழியாக பயணிக்க எனது அலுவலகத்தில் திட்டமிட்டிருந்தார்கள். ஏறக்குறைய 3 நாள் பயணம் அது. அன்று மாலை 6:50 க்கு சென்ட்ரலில் இருந்து தில்லி கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தது அந்த தொடர்வண்டி. கன்னிமுறைப் பயணம் என்பதால் 1: 30 மணி நேரத்திற்கு முன்பே ரயில்நிலையம் சென்றுவிட்டேன். சென்னை சென்ட்ரல் – எத்துனை பேரின் கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்து கொண்டிருக்கும் இடம். புதுப்புது மனிதர்கள்,


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 “அப்பா அவர் என்னேப் பாத்து ‘சாம்பு,இந்த சின்ன வயசிலே,உனக்கு இருக்கும் ஆசையை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.உன் வயசிலே இருக்கும் எல்லா பையன்களுக்கும் ஒரு ‘குருக்கள்’ ஆகணும் என்கிற ஆசை வறாது.தீவிர சுவாமி பக்தி இருந்தாத் தான் அந்த மாதிரி ஆசை வரும்.அதேத் தவிர சிதம்பரம் நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் ஆக பூர்வ ஜென்ம வாச னையும் இருக்கணும்’ன்னு சொன்னார்.கூடவே ராதாவின் மாமியார் சாம்பசிவனுக்கு தீவிர சிவ


அப்பாவின் கோபம்

 

 இந்த பேப்பரை யார் இங்கே வச்சிரிக்கறது? கோபமான கேள்வி அந்த வீட்டில் ஒலிக்கவும் வீடே நிசப்தமாகியது. மீண்டும் அந்த கேள்வி ராமச்சந்திரனால் அங்கு நின்று கொண்டிருந்த மகன், மகள் மனைவியை நோக்கி வீசப்பட்டதும், நானில்லை..என்று தயக்கமாய் மகனிடமிருந்தும், மகளிடமிருந்தும் வந்தது. நீங்க இரண்டு பேரும் இல்லையின்னா இந்த பேப்பருக்கு கால் முளைச்சு இந்த இடத்துக்கு வந்திருக்குமா? மீண்டும் அவரிடமிருந்து கிண்டலான கேள்வி வர மனைவி மெல்ல முன் வந்து யாராவது படிச்சுட்டு மறந்து வச்சிருப்பாங்க. இப்படி சொல்றதை


கொடுப்பவரெல்லாம் மேலாவார்…?

 

 இன்னும் சரியாக ஒரு மணி நேரத்தில் மணிமாறனைப் பார்க்கப் போகிறேன்..!!!! என்னுடைய பர்சனல் செக்ரட்டரி கனிகாவைக் கூப்பிட்டு எல்லா அப்பாயின்ட்மென்ட்டையும் கேன்ஸல் பண்ணிவிட்டேன்…. நான் ஒரு சாதாரண ஆளில்லை என்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள். ஆமாம்..இந்தியாவிலேயே பேர் சொல்லும் பத்து கம்பெனிகளில் ஒன்றான ‘ நிரவதி ஃபார்மா ‘ வின் M.D. ..CEO… மருந்துக் கம்பெனிகளில் நம்பர் ஒன்…ஏழு நாடுகளுக்கு ஏற்றுமதி.. இதைத் தவிர சில்லறைக் கம்பெனிகள் நிறைய… எனக்கே மறந்து போகும் அளவுக்கு….. நிரவதி என் மனைவிதான்..


எல்லோருக்குமான துயரம்

 

 ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாகனங்களின் இரைச்சல் ஒருமித்து அவனைத் தாக் குவது போலிருந்தது. ஹோட்டலின் உள்ளிருந்த மெலிதான இருட்டும். சப்தமின்மையும் மனதில் வந்தது. ஆனால் உள்ளே சுந்தரியுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவன் மனது இப்படித்தான் இரைச்சல் போட்டுக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது, பசியை நன்கு உணர ஆரம்பித் தான் ஹரி. கோபத்தை உதறிவிட்டு உள்ளேயே இருந்திருக்கலாம் என்று பட்டது. சுந்தரி ‘ஆர்டர்’ செய்த தக்காளி சூப்பும். வெஜிடபிள் பிரியாணியும் மேஜைக்கு இப்போது வந்திருக்கும். “என்ன மேடம்


நித்தியாவுக்குக் கோபம்..!

 

 அலுவலகம் விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் நித்தியாவைப் பார்த்து…. “ஹாய்….!!….” உற்சாகமாய்க் கை ஆட்டினான் சேகர். அவள் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு வெடுக்கென்று திரும்பிக்கொண்டாள். சட்டையைக் கழற்றக்கூடத் தோன்றாமல்… மனம் ‘பக் ‘கென்றது இவனுக்கு. வினாடி நேரம் செய்வதறியாது திகைத்தவன் அவள் அருகில் வந்து…. “கோபமா…?” முகத்தைப் பார்த்து கொஞ்சலாய்க் கேட்டான். அவள் பேசவில்லை. மாறாகத் திருப்பிக்கொண்டாள். காலையில் அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் இவள் ஏதோ தொணதொணக்க.. கடுப்பாகிப் போய் ஒரு தட்டு தட்டியத்திற்கு இன்னும் இவ்வளவு கோபம்


விதியோ விதி!

 

 மதிய சாப்பாட்டிற்கு பின் வெற்றிலை பாக்கை வாயில் மென்றவாறு வாசலில் வந்தமர்ந்த சுந்தரேசன், வீதியின் இருபுறமும் நோட்டமிட்டார். பின்பு வீட்டிற்குள் இருந்த சுவர் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். அருகில் வந்து நின்ற மனைவி திலகவதியிடம் “என்ன இன்னும் நம்ம ஜோசியரை காணலியே?” என்றார். “அவர் கிராமத்து பக்கம் கொஞ்சம் மழை பெய்யுது போல இருக்கு பாருங்க…. கொஞ்ச நேரம் கழிச்சு வருவார்…. நீங்க உள்ளே வந்து கொஞ்ச நாழி தூங்குங்க” என்றாள் திலகவதி. வீட்டிற்குள் நுழைந்தவர், இருபது


தாரை

 

 மாணிக்கம் ஒரு ஏழை விவசாயி. தினமும் காலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச் சந்தைக்கு கொண்டு சென்று விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும் கீரைகளைப் பறிக்க, வயற்காட்டுக்குப் போகும் வழியில், ஒரு குடிலில் முனிவர் ஒருவர் ஒரு சிறிய பெருமாள் விக்கிரகத்தை வைத்து, அதைத் துளசி இலைகளால் பூஜைகள் செய்வதை பார்த்துக்கொண்டே போவான். அப்போதெல்லாம் முனிவரின் மீது ஒரு