அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 2,517 
 

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

“அப்பா அவர் என்னேப் பாத்து ‘சாம்பு,இந்த சின்ன வயசிலே,உனக்கு இருக்கும் ஆசையை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.உன் வயசிலே இருக்கும் எல்லா பையன்களுக்கும் ஒரு ‘குருக்கள்’ ஆகணும் என்கிற ஆசை வறாது.தீவிர சுவாமி பக்தி இருந்தாத் தான் அந்த மாதிரி ஆசை வரும்.அதேத் தவிர சிதம்பரம் நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் ஆக பூர்வ ஜென்ம வாச னையும் இருக்கணும்’ன்னு சொன்னார்.கூடவே ராதாவின் மாமியார் சாம்பசிவனுக்கு தீவிர சிவ பக்தி இருக்கும்.அதான் அவனுக்கு அந்த குருக்கள் வேலே ரொம்ப பிடிச்சு இருக்குன்னு நேக்குத் தோன் றது’ன்னு சொன்னா.அவா சொன்னது தான் என் காதிலே ¡£ங்காரம் பண்ணீ ண்டு இருக்கு” என்று சந்தோஷமாகச் சொன்னான் சாம்பசிவன்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணின ராமசாமி “அவா ரெண்டு பேர் சொன்னதிலே ரொம்ப ஆழமான கருத்து இருக்குன்னு நேக்குத் தோன்றது.உனக்கு பூர்வ ஜென்ம வாசனையும், தீவிர சிவ பக்தியும் இல்லேன்னா,இந்த வயசிலே ஒரு குருக்கள் ஆகணும் என்கிற ஆசை வறாது.உன் வயசு பையன்களே நூத்லே தொன்னுதெட்டு பேருக்கு,உத்யோகத்துக்குப் போகணும்ன்னு தான் ஆசையா இருக்கும்.நூத்லே அந்த ரெண்டு பேர்லே நீ ஒத்தனா இருக்கே.அவா ரெண்டு பேரும் ரொம்ப அனுப விச்சு சொல்லி இருக்கா.ராதா மாமனாருக்கும்,மாமியாருக்கும் ரொம்ப சுவாமி பத்தி இருக்கும் போல தோன்றது.அதான் அவா ரெண்டு பேரும்,உன்னேப் பாத்து அப்படி சொல்லி இருக்கான்னு நேக்குத் தோன்றது” என்று சொன்னார்.

தன் கணவன் சொல்லிக் கொண்டு இருந்தத்தைக் கேட்ட பத்மா ”நீங்கோ சொல்றது ரொம்ப உண்மை.என் அம்மாவுக்கும்,அப்பாவுக்கும் ரொம்ப சிவ பகதி உண்டு.அவ ரெண்டு பேரும் தவறா மல் ஒவ்வொரு திங்கக் கிழமையும்,பிரதோஷத்துக்கும் தவறாம சிவன் கோவிலுக்குக்குப் போய் சுவாமி தா¢சனம் பண்ணீண்டு,சிவனுக்கு அர்ச்சனையும் பண்ணீண்டு வருவா.அதேத் தவிர எங்க அப்பா தினமும் சிவனுக்கு ருத்ரமும்,சமகமும் சொல்லிண்டு வருவா.எங்க ஆத்லே இருக்கிற சாலிக்கிராம சிவலிங்கத்திற்கு எங்க அப்பா தினமும் பூஜையும் பண்ணீண்டு வருவா” என்று கொஞ்சம் பெருமை யாகச் சொல்லிக் கொண்டாள்.

ஒரு வாரம் ஆனது.

அடுத்த நாள் காலை எழுந்ததும் பத்மா கொஞ்சம் நேரம் கழித்து எழுந்தாள்.அவளுக்கு நெஞ்சு வலி அதிகமாக வந்தது.அதையும் பொருட் படுத்தாமல் பல்லைத் தேய்த்துக் கொண்டு எல் லோருக்கும் ‘காபி’யைப் போட்டுக் கொண்டு வந்து ‘டேபிள்’ மேலே வைத்தாள்.
ராமசாமியும்,சாம்பசிவனும் காலையிலே எழுந்து சந்தியாவந்தவனம் பண்ணீ விட்டு,ரெடியாக ‘டேபிளில்’ காத்துக் கொண்டு இருந்தார்கள்.

மூவரும் ‘காபி’யைக் குடித்துக் கொண்டு இருந்தர்கள்.’காபி’யைக் குடித்துக் கொண்டு இருந்த பத்மா மூச்சு விடவே மிகவும் சிரமப் பட்டுக் கொண்டு இருந்தாள்.

இதைப் பார்த்த ராமசாமி “என்ன பத்மா.நீ இப்படி இழுத்து இழுத்து மூச்சு விடறே” என்று கேட்டதும் பத்மா “ஆமாண்ணா,நேக்கு இப்ப கொஞ்ச நாளா மூச்சு விடறது கொஞ்சம் சிரமாமாத் தான் இருக்கு.கூடவே அடிக்கடி நெஞ்சே அடைக்கறது.என்னன்னே தெரியலே.ஒரு வேளே.. நேத்தி ராத்திரி நான் சாபிட்ட சுண்டல்… தான் எனக்கு வாயுவைக்.. கிளப்பி விட்டு இருக்குமோ….வேறே என்னவா இருக்கும்” என்று தன் கணவனைப் பார்த்து சொன்னாள்.

அம்மா சொல்வதைக் கேட்டு சாம்பசிவன் மிகவும் கவலைப் பட்டான்.

உடனே ராமசாமி “பத்மா,சுண்டல் எல்லாம் சாப்பிட்டா இப்படி மூச்சு விடறது எல்லாம் சிரமமா இருக்காது.உன் உடம்பே இப்படியே வச்சுண்டு இருக்கக் கூடாது.உன்னே உடனே ஒரு டாக்டர் கிட்டே காட்டி ஆகணும்” என்று சொல்லி விட்டு,சாம்பசிவனைப் பார்த்து “சாம்பு,வாசல்லே காலியா போற ஒரு ஆட்டோவை கூப்பிடு” என்று சொன்னார்.சாம்பசிவன் வாசலுக்குப் போய் காலியாகப் போய்க் கொண்டு இருந்த ஒரு ஆட்டோவை கையைத் தட்டி கூப்பிட்டான்.ஆட்டோ வந்ததும் ராம சாமி வீட்டை பூட்டிக் கொண்டு,சாம்பசிவனையும் அழைத்துக் கொண்டு பத்மாவை சிவபுரியில் இருந்த ஒரு மருத்துவ மணைக்குப் போய் அங்கே இருந்த ஒரு டாக்டா¢டம் காட்டினார்.

அங்கே இருந்த டாக்டர் தன் ‘ஸ்டெதஸ்கோப்பை’ வைத்து பத்மாவை பரிசோதனைப் பண்ணீ னார்.அவர் மீண்டும்,மீண்டும் பரிசோதனைப் பண்ணீன பிறகு மெல்ல தன் கழுத்திலே இருந்த ‘ஸ்டெதஸ்கோப்பை’க் கழட்டி விட்டு,“சார்,இவங்க ‘ஹார்ட் ரேட்’ ரொம்ப ‘எராடிக்கா’ இருக்கு.இவங்க ‘ஹார்ட்லே’ ஒரு வேளை ‘ப்லாக்’ இருக்கும்ன்னு எனக்குத் தோணுது.இவங்களே இந்த சின்ன ‘ஹாஸ் பிடல்லே’ வச்சு கிட்டு,அதுக்கு வைத்தியம் எல்லாம் பாக்க முடியாது.நீங்க இவங்களே உடனே சிதம் பரம் இட்டுக் கிட்டுப் போய்,ஒரு பெரிய ‘ஹாஸ்பிடல்லே’ காட்டுங்க.ரொம்ப ‘டிலே’ பண்ணாதீங்க. நீங்க ‘டிலே’ பண்ணா இவங்க உயிருக்கு ஆபத்தாப் போவும்”என்று சொன்னார் அந்த டாக்டர்

டாக்டர் சொன்னதைக் கேட்ட ராமசமியும்,சாம்பசிவனும் மிகவும் பயந்து விட்டார்கள்.
ராமசாமி அந்த டாக்டருக்கு ‘பீஸை’க் கொடுத்து விட்டு,அந்த டாக்டா¢டம் “டாக்டர்,சிதம்பரம் ‘ஹாஸ்பிட ல்லே’ இவங்களுக்கு என்ன வைத்தியம் பண்ணுவாங்க” என்று கேட்டவுடன் அவர் “இவங் களுக்கு முதல்லே ஒரு ‘ஆஞ்சியோ’ பண்ணிப் பாப்பாங்க.அந்த ‘ஆஞ்சியோலே’ இவங்களுக்கு ‘ஹார்ட்லே’ ஏதாச்சும் ‘ப்லாக்’ இருக்குதான்னு பாப்பாங்க.அப்படி இருந்தா அந்த டாக்டர் இவங்களுக் கு ‘ஆபரேஷன்’ பண்ணி,அந்த ‘ப்லாக்கை’ எடுத்து விடுவாங்க” என்று சொன்னார்.

கண்களில் கண்ணிர்ர் தளும்ப ராமசாமி “டாக்டர்,’ஆஞ்சியோ’ பண்ண என்ன செலவு ஆகும். அப்புறமா நீங்க சொல்ற ‘ஆபரேஷனுக்கு’ என்ன செலவு ஆகும்” என்று கேட்டவுடன் அந்த டாக்டர் “ரெண்டுக்கும் சுமார் ஒரு லக்ஷ ரூபாய் பக்கம் ஆவும்” என்று சொன்னார்.ராமசாமி அந்த டாகடருக்கு தன் நன்றியைச் சொலி விட்டு சாம்சிவனைப் பார்த்து “சாம்பு,நான் அவ்வளவு பணம் எடுத்துண்டு வறலே.ஆத்துக்குப் போய் பணத்தே எடுத்துண்டு சிதம்பரம் போய் அம்மாவை காட்டிண்டு வரணும். கூடவே ராதாவுக்கும் மாப்பிள்ளைக்கும் ‘போன்லே’ சொல்லிட்டு வறேன்” என்று சொன்னார்.
நல்ல வேளையாக இவர்களை ஏற்றி வந்த ஆட்டோ சவாரி இல்லாமல் ‘ஹாஸ்பிடலுக்கு வெளியே காத்துக் கொண்டு இருந்தான்.இதைக் கவனித்த சாம்பசிவன் உடனே ஓடிப்போய் அந்த ஆட்டோவை அழைத்து வந்தான்.

ராமசாமி அந்த ஆட்டோ டிரைவரைப் பார்த்து “இந்த ‘ஹாஸ்பிடல்லே என் மணைவிக்கு வைத்தியம் பண்ண வசதி இல்லையாம்.சிதம்பரம் தான் போய் வைத்தியம் பாக்கணுமாம்.இவ ‘கன்டிஷன்’ இப்போ ரொம்ப மோசமா இருக்கு.நீங்க கொஞ்சம் சிதம்பரம் வர முடியுமாங்க” என்று கண்களில் கண்ணீர் முட்ட முட்ட கேட்டார்.

சாதாரணமாக சிவபுரியிலே இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் சிதம்பரம் வர மறுப்பார்கள் ராமசாமி கண்களில் கண்ணீர் முட்ட முட்டக் கேட்டதைக் கவனித்த அந்த ஆடோ டிரைவர் “சரி,சாமி நான் வறேன்.ஆனா நீங்க எனக்கு போக வர சத்தமும் சேத்துத் தரணும்.அப்படின்னா நான் வறேன்”என்று சொன்னதும்,ராமசமி ஒத்துக் கொண்டு பத்மாவை அந்த ஆட்டோவிலே ஏற்றிக் கொண்டு,சாம்பசிவனுடன் வீட்டுக்கு வந்து கதவைத் திறந்து பீரோவில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு,ராதாவுக்கு ‘போன்’ பண்ணினார்.

ராதா ‘போன்லே’ வந்ததும் ராமசாமி “ராதா அம்மா உடம்பு கொஞ்சம் மோசமா இருக்கு. காத்தாலேயே இருந்து மூச்சு விட ரொம்ப சிரமப் படறா.கூடவே நெஞ்சு வலியும் இருக்கு.நான் நம்ம ஊர்லே இருக்கிற ‘ஹாஸ்பிடல்லே’அழைச்சுண்டுப் போய் காட்டினேன்.அங்கே இருந்த டாக்டர் என்னேப் பாத்து ‘இவங்களுக்கு இங்கே வைத்தியம் பாக்க வசதி இல்லே.நீங்க உடனே இவங்களை சிதம்பரம் அழைச்சுக் கிட்டுப் போய் வைத்தியம் பாருங்க’ன்னு சொல்லிட்டார்.என் கிட்டே பணம் போறலே.நான் ஆத்துக்கு வந்து பணத்தே எடுத்துக் கொண்டு,சாம்புவோட சிதமபரம் போயிண்டு இருக்கேன்” என்று சொன்னார்.

உடனே ராதா ”நீங்கோ ரெண்டு பேரும் உடனே சிதம்பரம் கிளம்பி போங்கோ.அவர் கொஞ்சம் வெளியே போய் இருக்கார்.அவர் வந்ததும் நான் அவரே அழைச்சுண்டு சிதம்பரம் வறோம்.நீங்கோ சிதம்பரம் போனதும் எந்த ‘ஹாஸ்பிடலிலே அம்மாவே சேத்து இருக்கேள்ன்னு எனக்கு ‘போன்’ பண்ணீ மறக்காம சொல்லுங்கோ” என்றுசொன்னதும் ராமசாமி “நான் மறக்காம நிச்சியமா சொல்றேம் மா.நீ கவலைப் படாம இருந்துண்டு வா”என்று சொல்லி விட்டு ‘போனைக் கட்’ பண்ணீனார்.
பணத்தை எடுத்துக் கொண்டு ராமசாமி வீட்டை நன்றாகப் பூட்டிக் கொண்டு வந்து,அந்த ஆட்டோவிலே மெல்ல பத்மாவை ஏற்றிக் கொண்டு,சாம்பசிவனுடன் சிதம்பரம் போய் ஒரு பெரிய ‘ஹாஸ்பிடலுக்கு’ப் போனார்.உடனே ராதாவுக்கு ‘போன்லே’ அவர் பத்மாவை சேர்க்கப் போகிற ‘ஹாஸ்பிடல்’ பேரைச் சொல்லி விட்டு ‘போனை கட்’ பண்ணீனார்

சாம்பசிவன் ஆட்டோவை விட்டு இறங்கி ‘ஹாஸ்பிடலுக்கு’ உள்ளே போய் ஒரு ‘வீல் சேரை’க் கொண்டு வந்தவுடன் ராமசாமி,பத்மாவை மெல்லப் பிடித்து ஏற்றி ‘எமர்ஜென்சிக்கு’அழைத்துப் போனார்.சாம்பசிவன் அந்த ஆட்டோ டிரைவர் கேட்ட பணத்தை அப்பா ‘ஹாண்ட் பாக்கில்’ இருந்து எடுத்து கொண்டு விட்டு,அப்பா பின்னாலேயே ‘எமர்ஜென்சி’க்கு ஓடினான்.

‘எமர்ஜென்சி’யிலே இருந்த டாக்டர் பதமாவை நன்றாகப் பரிசோதனைப் பண்ணீப் பார்த்தார். கொஞ்ச நேரம் ஆனதும் ராமசாமியைப் பார்த்து “சார் இவங்க ‘ஹார்ட் பீட்’ ரொம்ப சரியே இல்லே,நீங்க இவங்களுக்கு ஒரு ‘ஆஞ்சியோ’ எடுங்க.அப்படி எடுத்து பாத்தா இவங்க ‘ஹார்ட்லே’ஏதாச்சும் ‘ப்லாக்’ இருக்கான்னு தெரியும்”என்று சொல்லி,ஒரு ஆளையும் கூட அனுப்பி,அந்த ஆளிடம் “இவருக்கு ‘ஆஞ்சியோ’ எடுக்கும் டாக்டரைக் காட்டு” என்று சொல்லி அனுப்பினார் டாக்டர்.

பத்மாவை அந்த ‘வீல் சேரி’லேயே தள்ளிக் கொண்டு ராமசாமி, கூட வந்த ஆளோடு ‘ஆஞ்ச ¢யோ’ எடுக்கும் டாக்டா¢டம் பத்மாவைக் காட்டினார். கூட வந்த ஆள் அங்கே இருந்த டாக்டரைப் பார்த்து “டாக்டர்,’எமர்ஜென்சி’யிலே இருக்கிற டாக்டர் இவங்களுக்கு உடனே ‘ஆஞ்சியோ’ எடுக்கச் சொல்லி,என்னை இவங்க கூட அனுப்பினார்” என்று சொல்லி விட்டுப் போனான்.

டாக்டர் பதமாவை ‘வீல் சேரிலேயே’ அழைத்துக் கொண்டு ‘ஆஞ்சியோ’ எடுக்கும் ‘ரூமு’க்கு போகும் வழியிலே “சார்,நீங்க ‘ரிஸப்ஷன்லே’ இருபது ஆயிரம் ரூபாய் கட்டி ஒரு ரசீது வாங்கிக் கிட்டு வாங்க”என்று சொன்னார்.
ராமசாமி ‘ரிசப்ஷனு’க்குப் போய் இருபது ஆயிரம் ரூபாயை கட்டி விட்டு ஒரு ரசீதை வாங்கிக் கொண்டு வந்து அந்த டாக்டா¢டம் காட்டினான்.இதற்கிடையில் ராதாவும்,சுந்தரும் அந்த ‘ஹாஸ்பி
டலுக்கு வந்து விட்டார்கள்.

“நீங்கோ ரெண்டு பேரும் வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி ராமசாமி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.ராமசாமி அவர்களிடம் “பத்மாவை ‘ஆஞ்சி யோ’ பண்ண அழைச்சுண்டு போய் இருக்கார் டாக்டர்” என்று சொன்னார்.
ராமசாமி மணீயைப் பார்த்தார்.மணி பன்னனடரைக் காட்டியது.அவருக்கு பசி வயிற்றைக் கிள்ளீயது.

ராமசமி அவர்களைப் பார்த்து “நீங்கோ,ஏதாவது வயித்துக்கு சாப்பிட்டேளா.நானும்,சாம்புவும் ஒரு டம்ளர் காபி குடிச்சது தான்” என்று கேட்டதும் ராதா “நாங்களும் காத்தாலே சாப்பிட்ட ‘காபி’யு டன் தான் இருக்கோம்” என்று சொன்னவுடன் ராமசாமி எல்லோரையும் அழைத்துக் கொண்டு அந்த ‘ஹாஸ்பிடலில்’ இருந்த ‘காண்டீனுக்கு’ப் போனார்.

‘காண்டீன்லே’ எல்லோருக்கும் சாம்பார் சாதமும்,தயிர சாதமும் ரெண்டு வடையும் வாங்கிக் கொண்டு வந்தார்.எல்லோருக்கும் நல்ல பசியாக இருக்கவே ராமசாமி வாங்கி வந்த சாம்பார் சாதத்தை யும்,தயிர் சாததையும் வடைகளையும் சாப்பிட்டு முடித்தார்கள்.
பிறகு ராமசாமி எல்லோரையும் அழைத்துக் கொண்டு வந்து ‘ஆஞ்சியோ’ எடுக்கும் இடத்தில் இருந்த சேர்களில் உட்கார்ந்துக் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டு சுவாமியை தியானம் பண்ணிக் கொண்டு இருந்தார்.சாம்பசிவனும் கண்களை மூடிக் கொண்டு சுவாமியை வேண்டிக் கொண்டு இருந்தான்.
மூனு மணி நேரம் பதமாவுக்கு ஆஞ்சியோவைப் பண்ணி விட்டு அந்த் டாக்டர் பத்மாவை வீட்ல் சேரில் அழைத்துக் கொண்டு வந்து வெளியே விட்டார்.அவர் பத்மா ‘ஆஞ்சியோ ரிப்போர்ட்டை’ ’ப் பார்த்து விட்டு “சார்,இவங்க ‘ஹார்ட்லே நாலு இடத்லே ‘ப்லாக்’ இருக்கு.இவங்களுக்கு ‘திடீர்’ன்னு இந்த மாதிரி ‘ஹார்ட்லே’ நாலு ‘ப்லாக்’ வந்து இருக்காது.ஏறகெனவே ஒன்னோ ரெண்டோ ‘ப்லாக்’ இருந்து இருக்கும்.இவங்க அப்பவே வந்து காட்டி இருந்தா,அந்த ரெண்டு ‘ப்லாக்கை’ சரி பண்ணி இருக்கலாம்.இவங்களுக்கு சக்கரை வியாதி வேறே இருக்கு.ஏன் இவங்க இதுக்கு முன்னமே ‘ஹாஸ் பிடலுக்கு’ வந்து உடம்பே காட்டிக் கிட்டு இருக்க கூடாது” என்று சொல்லி வருத்தப் பட்டார்.

ராமசாமி அந்த டாக்டரைப் பார்த்து “டாக்டர்,இந்த ஹார்ட் ஆபரேஷனுக்கு நான் எவ்வளவு பணம் கட்டணும்”என்று கேட்டதும் ”நீங்க ஒரு லக்ஷ ரூபாய் ‘ ரிஸப்ஷன்லே ‘கட்டி,அதுக்கு ஒரு ரசீது வாங்கிக்கங்க“ என்று சொன்னார்.

டாகடர் சொன்னதைக் கேட்ட பத்மா “டாக்டர்….நீங்க சொல்றது..கரெக்ட்.எனக்கு எப்பாவது …கொஞ்சம் மூச்சு …அடைக்கறா மாதிரி இருந்தது,நான்…. இது வாயுவா… இருக்கும்ன்னு…சும்மா இருந்துட்டேன்” என்று சொன்னாள்.பதமா சொன்னதைக் கேட்ட டாக்டர் “இதோ பாருங்கம்மா, நாங்க நாலு வருஷம் இந்த டாக்டர் படிப்பே படிச்சு விட்டு,ஒரு மூனு வருஷம் ஒரு சீனியர் டாகடர் கிட்டே ‘அஸிஸ்டெண்ட்டா’ வேலேப் பண்ணீட்டுத் தான்,தனியா இந்த டாக்டர் வேலேயேப் பண்ணி கிட்டு வறோம்.உங்களுக்கு எந்த உடம்பா இருந்தாலும்,நீங்க ஒரு டாக்டர் கிட்டே காட்டி, அவங்க என்ன சொல்றாங்களோ,அதே தான் செஞ்சு வரணும்.நீங்களா எதையும் உங்க இஷடத்துக்கு முடிவு பண்ணி விட்டு,சும்மா இருந்து வரக் கூடாது” என்று ஒரு பெரிய ‘லெக்ச்சரை’க் கொடுத்தார்,

டாக்டர் ‘நீங்க ஒரு லக்ஷ ரூபாய் ‘ ரிஸப்ஷன்லே ‘கட்டி,அதுக்கு ஒரு ரசீது வாங்கிக்கங்க’ன்னு சொன்னதைக் கேட்ட ராமசாமிக்குத் தேள் கொட்டியது போல இருந்தது.

அவர் இடம் ஒரு லக்ஷ ரூபாய் இல்லை.அவர் மொத்தம் கொண்டு வந்ததே ஒரு லக்ஷ் ரூபாய் தானே.அதிலே பத்மா ‘ஆஞ்சியோவுக்கு’ ஏற்கெனவே இருபதாயிரம் ரூபாய் கட்டி விட்டாரே.அவர் கையிலே என்பதாயிரம் ரூபாய் மட்டும் தான் இருந்தது.

உடனே அவர் தன் பெண் ராதா பக்கத்திலே போய் ரகசியாமாக “ராதா,நீ ஏதாவது கொஞ்சம் பணம் கொண்டு வந்து இருக்கியா.எனக்கு அம்மா ‘ஆபரேஷன்’ பணம் கட்ட ஒரு பத்தாயிரம் ரூபாய் குறையறது.நான் ஆத்லே இருந்து ஒரு லக்ஷ ரூபாய் தான் எடுத்துடுண்டு வந்தேன்” என்று கூனிக் குறுகிக் கொண்டுக் கேட்டார்.

ராதா “நீங்கோ கவலைப் படாதேள்.நான் அவர் கிட்டே கேட்டு உங்களுக்கு இருபதாயிரம் ரூபாய் வாங்கித தறேன்” என்று சொல்லி விட்டு சுந்தரத்தைக் கேட்டு ஒரு இருபதாயிரம் ரூபாயை வாங்கி அப்பாவிடம் கொடுத்தாள்.

ராமசாமி ராதா கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு,தன்னிடம் இருந்த என்பதாயிரதம் ரூபாயையும் ஒன்றாக சேர்த்து ‘ரிஸப்ஷனில்’ கட்டி அதற்கு ஒரு ரசீதை வாங்கிக் கொண்டு வந்து டாக்டா¢டம் காட்டினார்.”சரிங்க,இந்த ரிசீதே நீங்களே வச்சுக்குங்க.அனேகமா நான் ‘ஆபரேஷனே’ நாளுக்கு காத்தாலே தான் பண்ணுவேன்னு தோணுது” என்று சொன்னார்.

ராமசாமி “ஏன் பத்மா,எங்க யார் கிட்டேயும் அப்படி சொல்லாம இருந்து வந்து இருக்கே. நீ சொல்லி இருந்தா உடம்பு சின்னதா இருக்கும் போதே சரி பண்ணீண்டு இருக்கலாமே” என்று சொல்லி வருத்தப் பட்டார்.டாக்டர் “நீங்க சொல்றது ரொம்ப சரி.அது தவிர இவங்க கொஞ்சம் அதிகமா எண்ணை பண்டங்க சாப்பிடுவாங்க போல இருக்கு.இவங்களுக்கு ‘கொலெஸ்ட்ராலும்’ கொஞ்சம் அதிகமா இருக்கு.நான் இப்போ இவங்க சக்கரை வியாதிக்கும்,‘கொலெஸ்ட்ராலுக்கும்’ ‘இஞ்செக்ஷன்’ போடறேன்.இன்னிக்கு ராத்திரி அவங்க ஒரு ‘ரூம்’லே ரெஸ்ட் எடுத்துக் கிட்டு வரட்டும்.நாளைக்கு காலைலே நான் மறுபடியும் ஒரு ‘டெஸ்ட்’ எடுத்துப் பாத்த பிறவு தான் இவங்களுக்கு ‘ஆபரேஷன்’ பண்ணனும்” என்று சொன்னார்

பிறகு அருகில் இருந்த ‘நர்ஸை’ப் பார்த்து ஏதோ ஒரு மருந்தின் பேரைச் சொல்லி,”நீங்க, இந்த அம்மாவுக்கு அந்த ‘இஞ்செக்ஷனை’ப் போடுங்க”என்று சொன்னதும்,அந்த ‘நர்ஸ்’ வெளியே போய், டாக்டர் சொன்ன மருந்தைக் கொண்டு வந்து பதாமாவுக்கு ஒரு ‘இஞ்செக்ஷனை’ப் போட்டாள்.
டாக்டர் கொஞ்ச நேரம் இருந்து விட்டு “நான் நாளைக்குத் காத்தாலே வந்து இவங்க சக்கரை ‘லெவலையும்’,‘கொலெஸ்ட்ரால் லெவலையும்’ பாக்கறேன்.அப்புறமாத் தான் நான் ‘ஆபரேஷனை’ பத்தி ‘டிஸைட்’ பண்ண முடியும்” என்று சொல்லி விட்டுப் போனார்.

அங்கு இருந்த ஒரு நர்ஸ் பத்மாவை ஒரு சாதாரண ‘ரூமு’க்குக் கொண்டு போய் படுக்க வைத்து விட்டு பத்மாவுக்கு ஒரு போர்வையை போர்த்தி விட்டு “நீங்க இப்போ நல்லா தூங்குங்க.நான் போட்டு இருக்கும் ‘இஞ்செக்ஷன்’ உங்களுக்கு நல்ல தூக்கத்தேத் தரும்” என்று சொல்லி விட்டு ‘ரூமை’ விட்டு வெளியே போனாள்.

சாம்பசிவனையும்,ராதாவையும்,மாபிள்ளையையும் பார்த்து “நீங்கோ எல்லாம் சிவபுரிக்கு கிளம்பி ப் போய் நாளைக்கு காத்தாலே வாங்கோ.நான் பத்மா கூட இந்த ‘ரூம்’லெ இன்னிக்கு ராத்திரி அவளு க்கு துணையா இருந்துண்டு வறேன்.இந்த ‘ரூம்’லே ஒருந்தா தான் இருந்துண்டு வர முடியும்” என்று சொன்னார் ராமசாமி.

கொஞ்சம் நேரம் இருந்து விட்டு மூவரும் பத்மா இடம் சொல்லிக் கொண்டு,சிவபுரிக்கு கிளம்ப இருந்தபோது,சாம்பசிவனைப் பார்த்து “சாம்பு, ‘ஹாஸ்பிடல்’ செலவு இன்னும் ஜாஸ்தியாகும் போல இருக்கு.நான் ஒரு லக்ஷ ரூபாய்க்கு ஒரு ‘செக்’ எழுதித் தறேன்.நீ காத்தாலே ‘பாங்க்’ திறந்ததும்,இந்த ‘செக்’கே ‘பாங்க்லே’ குடுத்து பணத்தே வாங்கிண்டு வா” என்று சொல்லி தன் கை பையில் இருந்து ‘செக்’ புத்தகத்தை எடுத்து ஒரு லக்ஷ ரூபாய்க்கு ஒரு ‘செக்’கை எழுதி சாம்பசிவனிடம் கொடுத்தார் ராமசாமி.

அதை வாங்கிக் கொண்டு “அப்பா,நான் ‘பாங்க’ தொறந்ததும் முதல் வேலையா பணத்தை வாங்கிண்டு,எவ்வளவு சீக்கிரமா வர முடியுமோ,அவ்வளவு சீக்கிரமா ‘ஹாஸ்பிடலுக்கு’ வறேன். நீங்கோ அம்மாவே ஜாக்கிறதையாப் பாத்துண்டு வாங்கோ” என்று கண்களில் கண்ணீர் மல்கச் சொன்னான் சாம்பசிவன்.

அவர்கள் கிளம்பிப் போனதும் பத்மா “இது என்னண்ணா பெரிய வியாதியா ஆயிடுத்தே.நான் என் உடம்பு …கொஞ்சமா இருக்கும் போதே உங்க கிட்டே சொல்லி இருக்கணும்…தவிர என் வாயைக் கட்டிப்… போட்டு இருக்கணும்.டாகடர் சொன்னாப் …போல சாப்பாட்லே நெய்யும்,நிறைய எண்னை ….பண்டங்களும் சாப்ட்டு….வந்துண்டு இருக்கேன்” என்று கொஞ்சம் இழுத்து,இழுத்துப் பேசினாள்.

உடனே ராமசாமி “பதமா,இப்போ உனக்கு உடம்பு ரொம்ப சரி இல்லே.நீ இப்போ நிறைய பேசாம ‘ரெஸ்ட்’ எடுத்துண்டு வா.நீ சொல்றது எல்லாம் நடந்துப் போன சமாசாரம்.இப்போ அதே சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லே.இனிமே நாம ஆக வேண்டிய காரியங்களேத் தான் கவனிக்க ணும்.அந்த பகவான் அனுகிரஹத்தால், உன் சக்கரை வியாதி ‘லெவலும்’,’கொலெஸ்ட்ரால் லெவலும்’ ஆபரேஷன்’ பண்ற அளவுக்கு குறையணும்.முக்கியமா உன் சக்கரை ‘லெவல்’ குறையாட்டா,டாக்டர் உனக்கு நாளைக்கு ‘ஆபரேஷன்’ பன்ண மாட்டாரே” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

சிவபுரிக்கு வந்துக் கொண்டு இருந்த சாம்பசிவனும்,ராதாவும் மிகவும் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தார்கள்.பத்மா தன் கணவரைப் பார்த்து “ஏன்னா,டாக்டர் அப்படி சொல்லிட்டுப் போய் இருக்காறே.அம்மாவுக்கு ‘ஹார்ட் ஆபரேஷன்’ நல்ல படியா முடியுமா.அம்மாவுக்கு ஒன்னும் ஆயிடா தே” என்று ரொம்ப கவலையுடன் கேட்டாள்.

கொஞ்ச யோஜனைப் பண்ணீன சுந்தரம்” ராதா,நாளைக்குள்ளே உங்க அம்மா சக்கரை வியாதி அளவு நன்னா குறைஞ்சாத் தான் அந்த டாக்டர் உங்க அம்மாவுக்கு அந்த ‘ஹார்ட் ஆபரேஷனை’ப் பண்ணுவார்.உங்க அம்மாவுக்கு சக்கரை அளவு எவ்வளவு குறையறதோ அதேப் பொருத்தி தான் எல்லாம் இருக்கு” என்று வருத்தப் பட்டுக் கொண்டு சொன்னார்.

இரண்டு பேரும் பேசிக் கொண்டு வருவதையும் கவலையோடு கேட்டுக் கொண்டு இருந்தான் சாம்பசிவன்.அவன் பகவானுக்குத் தனக்கு தெரிந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி ‘தன் அம்மா உடம்பு சரியாக வேண்டும்’என்று பிரார்த்தணைப் பண்ணிக் கொண்டு இருந்தான்.
ராதாவும் சுந்தரமும் சாம்பசிவனை அவன் வீட்டில் விட்டு விட்டு,ராதா சாம்பசிவனிடம் “சாம்பு, நீ ‘பாங்லே’ பணத்தே வாங்கிண்டதும்,எனக்கு ‘போன்’ பண்ணு.நானும் அத்திம்பேரும் உங்க ஆத்து க்கு வறோம்.மூனு பேரும் ஒன்னா கிளம்பி சிதம்பரம் போவலாம்”என்று சொன்னதும் சாம்பசிவன் “நிச்சியமா சொல்றேன்க்கா.நாம் மூனு பேரும் ஒன்னாவே சிதம்பரம் போவலாம்” என்று சொல்லி விட்டு வீட்டை திறக்கப் போனான்.

சுந்தரமும் ராதாவும் அவர்கள் வீட்டுக்குப் போனார்கள்.

மணி ஏழடித்ததும் ஒரு ‘டியூட்டி நர்ஸ்’பத்மா இருந்த ரூமுக்கு வந்து “சார்,டாக்டர் இந்த அம்மாவுக்கு ராத்திரி ரொம்ப குறைவா உப்பும்,எண்னை இல்லாத சாப்பாடும் தான் தரச் சொல்லி இருக்கார்.இந்த மாதிரி சாப்பாட்டை இந்த ‘ஹாஸ்பிடல்லே’ தயார் பண்ணிக் குடுப்பாங்க.நீங்க ராத்திரிக்கு ‘கான்டீனுக்கு’ப் போய் சாப்பிட்டு விட்டு வாங்க”என்று சொன்னதும் ராமசாமி “சரிங்க, நான் ‘காண்டீன்லே’ ராத்திரி சாப்பிடறேன்” என்று சொன்னார்.

‘ஹாஸ்பிடலில்’ இருந்து ‘நர்ஸ்’ சொல்லி விட்டுப் போன பத்தாவது நிமிஷமே ஒரு ஸ்பெஷல் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஒருவர் கொடுத்து விட்டுப் போனார்.அவர் கிளம்பி போகும் போது, பத்மாவைப் பார்த்து “நீங்க இந்த சாப்பாட்டைத் தான் சாப்பிடணும்.சாப்பாடு சுவையா இல்லேன்னு, ‘காண்டீண்லே’ இருந்து ஒன்னும் வாங்கி சாப்பிடக் கூடாது.இது டாக்டர் உத்தரவு.அவர் சொல்லித் தான் நாங்க இந்த சாப்பாட்டை நாங்க உங்களுக்குத் தயார் பண்ணிக் குடுத்து இருக்கோம்” என்று சொல்லி விட்டுப் போனார்.

அவர் கிளம்பிப் போனதும் பத்மா அந்த சாப்பாட்டைச் சாப்பிட ஆரம்பித்தாள் “என்ன சாப்பாடு இது.கால் உப்புக் கூட இல்லையே இதிலே.இதே எப்படி நான் சாப்பிடறது” என்று பத்மா சொன்னதும் “பத்மா,உன் உடம்ப்லே உப்பு ரொம்ப குறையணும்.எண்ணையும் இருக்கவே கூடாது.அப்ப தான் டாக்டர் ‘டெஸ்ட்’ எடுத்தா,உன் உப்பு ‘லெவலும்’ ‘கொலெஸ்ட்ரால் லெவலும்’ கம்மியா இருக்கும் அப்படி இருந்தாத் தான்,அவர் உனக்கு நாளைக்கு ‘ஆபரேஷனை’ பண்ணுவார்.மொள்ள பொறுத்து ண்டு சாப்பிடு பத்மா” என்று நல்ல விதமாகச் சொன்னார் ராமசாமி.

பத்மா பிடிக்காமல் அந்த ‘ஹாஸ்பிடல்’ சாப்பாடை சாப்பிட்டு முடித்தாள்.பத்மா சாப்பிட்டு முடித்ததும் ராமசாமி ‘கான்டீனுக்கு’ப் போய்,நாலு இட்லியை சாப்பிட்டு விட்டு மோரை வாங்கிக் குடித்து விட்டு வந்தார்.

பத்மாவைப் பார்த்து “சுவாமியே வேண்டிண்டு தூங்கு.நானும் சுவாமியே வேண்டிண்டுப் படுத்த க்கறேன்” என்று சொல்லி விட்டு பத்மாவுக்கு போர்வைப் போட்டு போர்த்தி விட்டு,அவர் தனக்குப் போடப் பட்டு இருந்த சின்ன ‘பெட்டில்’ படுத்துக் கொண்டார்.

சுந்தரமும் ராதாவும் வீட்டுக்கு வந்ததும் கணேசனும்,கமலாவும் ”சுந்தரம்,பத்மாவுக்கு ‘ஆபரே ஷன்’ ஆயிடுத்தா.அவ இப்போ நார்மலா இருக்காளா.சாதாரண ‘பெட்’லே கொண்டு வந்து விட்டு இருக்காளா”என்று ‘கோரஸாக’க் கேட்டார்கள்.

சுந்தரம் அம்மா அப்பாவிடம் ஹாஸ்பிடலில் நடந்த பூரா சமாசாரத்தையும் விவரமாகச் சொன்னான்.சுந்தரம் சொன்ன சமாசாரத்தைக் கேட்டதும் மிகவும் வருத்தப் பட்டாட்கள் கணேசனும், கமலாவும்.

கொஞ்ச நேரம் ஆனதும் கணேசன் “எதையும் சின்னதா இருக்கும் போதே கவனிச்சுக்கணும். பத்மா ரொம்ப அசட்டையா இருந்துண்டு வந்து இருக்கா.அவ ‘ப்ராப்லெம்’ இப்போ பெரிசாயிடுத்து. தெரியாமலா நம்ம பெரியவா எல்லாம் ‘நகத்தைக் கொண்டு வெட்டா விட்டா,கோடாலி கொண்டு வெட்ட நேரிடும்’ என்கிற பழமொழியே சொல்லிட்டு போய் இருப்பா” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

தன் கணவர் சொன்னதைக் கேட்டு கமலா மிகவும் கவலைப் பட்டு “நீங்கோ சொல்றது ரொம்ப நியாயமான பேச்சு.பத்மா இப்படி அசட்டையா இருந்துண்டு வந்து இருக்க கூடாது.அவளுக்கு கொஞ்சமா மூச்சு விடக் கஷ்டமா இருக்கும் போதே,அவ மாப்பிள்ளே கிட்டே சொல்லி இருக்கணும். அப்படி சொல்லி இருந்தா மாப்பிள்ளே உடனே கவனிச்சு இருப்பார்” என்று சொல்லி வருத்த பட்டாள்.

அடுத்த நாள் காலையிலே ராமசாமி எழுந்ததும் ‘பாத் ரூமு’க்குப் போய் பல்லை தன் கையாய் குழப்பித் தேய்த்து விட்டு ‘காண்டீனுக்கு’ப் போய் ‘காபி’யை குடித்து விட்டு வந்தார்.பத்மா தன் பல்லை கையால் தேய்த்து விட்டு வந்ததும், ’ஹாஸ்பிடல்’ சிப்பந்தி ஒருவர் பத்மாவுக்கு சக்கரை இல்லாத ‘காபி’யேக் கொடுத்துப் போனான்.

பத்மா அந்த சிப்பந்தியைத் திட்டிக் கொண்டே அந்த சக்கரை இல்லாத காபியைக் குடித்து முடித்தாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் ‘ஹாஸ்பிடல்’ சிப்பந்தி ஒருவர் ஒரு தட்டில் மூன்று இட்லிகளையும், கொஞ்சம் சாம்பாரையும் கொண்டு வைத்து விட்டுப் போனான்.பத்மா அந்த இட்லியைஒரு விண்டு சாப்பிட்டாள்.அந்த இட்லியிலே கால் உப்பு தான் இருந்தது.கோவம் வந்த பத்மா அடுத்த இட்லி துண்டை விண்டு சாம்பாரிலே தோய்த்து சாப்பிட்டாள்.”என்ன இட்லி இது.கால் உப்பு கூட இல்லே. சாம்பார் அதுக்கு மேலே மோசமா இருக்கு.அதிலேயும் கால் உப்பு தான் போட்டு இருக்கா.எப்படி சாப்பிடறது இந்த மூனு இட்லியே” என்று கோவத்துடன் சொன்னாள்.

பத்மாவுக்கு பிடிக்காததால் மீதி இட்லிகளை சாப்பிடாமல் அப்படியே வைத்து விட்டாள்.

ராமசாமி பொறுமையாக “பத்மா உனக்கு உடம்லே ‘ப்ராப்லெம்’ இருக்கு.அதான் டாக்டர் உப்பு குறைவான சாப்பாட்டை உனக்குத் தரச் சொல்லி இருக்கார்.கொஞ்ச பொறுத்துண்டு அதே சாப்பிடு. உனக்கு ‘ஹார்ட் ஆபரேஷன்’ நல்ல படியா ஆயி,நீ ஆத்துக்கு வந்தபபுறம்,நீ எல்லாத்திலேயும் நிறைய உப்புப் போட்டுண்டு சாப்பிடலாம்” என்று நல்ல விதமாகச் சொன்னார்.

“என்ன உடம்போ,என்ன ‘டெஸ்டொ’ என்ன ‘ஆபரேஷனோ’.நேக்கு ஒன்னும் பிடிக்கலே” என்று சொல்லி விட்டு,மீதி இட்லிகளை சாப்பிடாமலே திரும்பிப் படுத்துக் கொண்டாள் பத்மா.

அடுத்த நாள் சாம்பசிவன் எழுந்து பல்லைத் தேய்த்துக் கொண்டு,குளித்து விட்டு,நெற்றியிலே விபூதியை இட்டுக் கொண்டு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு காலை சந்தியாவந்தனத்தை முடித்துக் கொண்டு,சுவாமிக்கு தனக்குத் தெரிந்த எல்லா மந்திரங்களையும் சொல்லி விட்டு, ‘அம்மாவுக்கு ‘ஹார்ட் ஆபரேஷன்’ நல்ல படியா முடிஞ்சு,அம்மா ஆத்துக்கு சௌக்கியமா திரும்பி வரணும்’ என்று வேண்டிக் கொண்டான்.

பிறகு சமையல் ரூமுக்குப் போய் ‘காபி’ப் போட்டுக் குடித்து விட்டு,கொஞ்சமா ரவா உப்புமா வைக் கிளறிச் சாப்பிட்டு விட்டு,வேஷ்டியை மாற்றி,ஒரு ‘புல் பாண்டையும்,’ ‘ஷ்ர்ட்டைப் போட்டுக் கொண்டு ‘பாங்கு’க்குப் போய் அப்பா கொடுத்த ‘செக்கை’க்’ கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டான்.
‘பாங்கை’ விட்டு வெளீயே வந்து சாம்பசிவன் அக்காவுக்கு போன் பண்ணினான்.

அக்கா ‘போன்’லே வந்ததும் “அக்கா,நான் பணம் ‘ட்ரா’ பண்ணி விட்டேன்.நான் பாங்க வாசல்லேயே நின்னுண்டு இருக்கேன்.நீங்களும் அத்திம்பேரும் வந்ததும் மூனு பேரும் ‘பஸ்’ ஸ்டாண்டுக்குப் போவலாம்” என்று சொன்னதும் ராதா “சரி சாம்பு,நாங்க இன்னும் பத்து நிமிஷத்லே ‘பாங்க்’ கிட்டே வந்துடறேன்.நாம எல்லாம் ஒன்னா கிளம்பிப் போலாம்” என்று சொல்லி ‘போனைக் கட்’ பண்ணீனாள்.

டாக்டர் சரியாக ஒன்பது மணிக்கு வந்து பத்மா ரூமுக்கு வந்து “எப்படி இருக்கீங்க மேடம். ‘நைட்’நல்லா தூங்கினீங்களா” என்று கேட்டு விட்டு அங்கே இருந்த ‘நர்ஸை’க் கூப்பிட்டு “நர்ஸ், இவங்க ‘சுகர் லெவலையும்’’ கொலஸ்ட்ரால் லெவலையும்’ கொஞ்சம் ‘செக் அப்’ பண்ணிட்டு சொல்லுங்கோ” என்று சொன்னதும் அந்த ‘நர்ஸ்’ பத்மாவின் கொஞ்ச ரத்தத்தை எடுத்துக் கொண்டு போனாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *