கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2021

127 கதைகள் கிடைத்துள்ளன.

சன்னலொட்டி அமரும் குருவிகள்

 

 இதற்குமுன்பு இரண்டு முறை அவனைப் பார்த்திருக்கிறான். பிரான்சில் இறங்கிய முதல் நாள், இவன் பயணித்த சென்னை – பாரீஸ் டெல்டா ஏர்லைன்ஸில் முதன்முறையாக அவனைக்கண்டு தமிழில் பேசப்போக அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். இரண்டாவது முறை. சூப்பர் மார்க்கெட்டொன்றில் வாங்கியப்பொருட்களுக்கானப் பணத்தைச் செலுத்தவென்று வரிசையில் காத்திருந்தபோது பார்த்திருந்தான். வரிசையில் நின்று ஒரு காரியத்தைச் செய்வதென்பது இவனுக்குப் பிடிக்காத விஷயம், அந்த எரிச்சலில் அவனிடத்தில் அக்கறை காட்டவில்லை. இவனுடைய நிறத்தில் யாரையாவதுப் பார்க்கச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. தவிர மொரீஷியர், பாகிஸ்தானியர்,


உறவே! உயிரே!!

 

 அன்று திங்கட்கிழமை. இரண்டுமணிக்குபிறகு போனால் முதலாளி நிற்பார்..போய் கேட்கலாம்… நீ எழுத்தாளனெண்டா கொம்பு முளைச்சிருக்கோ? விற்கக் கொடுத்த புத்தகத்தைப் பற்றிக் கேட்கப்போய்..கடைசியில கடைக்காறன் இப்படிக்கேட்டுவிட்டான். செத்துவிடலாம் போலிருந்தது. கொஞ்சமாய் சில சமயம் கனக்க கர்வம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இருக்கும். எம்மை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பப்பட்ட பிம்பத்தை யாரோ ஒருவர் உடைத்தெறிகிறபோது அத்திவாரமே ஆடிப்போவதாய் ஒரு உணர்வு கொப்பளிக்கும்.கடைசியில் தன் மீதே கோபம் வந்துவிழும்..விரக்தி தலைதூக்கும்.. ஒவ்வொரு எழுத்தையும் யாரும் விலைகூறி விற்பதில்லை..ஆனாலும் அந்த ஒவ்வொரு


பூனைத் தாய்!

 

 (கொஞ்சம் நிஜம் கொஞ்சம் கற்பனை….படித்து அழுதால் கதாசிரியர் பொறுப்பல்ல!!) கண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கனகாவின் கனவில் ஏதோ ஒரு காட்சி…. கணவன் ராஜேஷை தேடுவதுபோல்…. அது அவள் கனவை கலைத்து கண் திறக்கச் செய்தது……ராஜேஷ் எங்கே கட்டிலில் காணவில்லையே என எழுந்தமர்ந்து சோம்பலை முறித்தவாரே கழிவறையை நோக்கிப் பார்த்தாள். ராஜேஷ் கழிவறையிலிருந்து வெளிவந்து கனகாவைப் பார்த்தான். “என்ன அவ்வளவு சீக்கிரம் எழுந்துகிட்ட?….” என்றவாறு கட்டிலில் கனகாவுக்குப் பின்னால் அமர்ந்து அவள் தலையையும் கழுத்தையும் மசாஜ் செய்தான். “நீயும்


உதவி…

 

 ‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகு..! ‘- சமாச்சாரமாய் முன்னே ஜோடியாய் நடந்து சென்றுகொண்டிருக்கும் கந்தனையும் , காளியையும் கண்டு ஒதுங்கி, தாண்டித்தான் சென்றாள் கல்யாணி. அப்படி ஒதுங்கிப் போனவளை சும்மா விட மனசில்லை கந்தனுக்கு. இவன் வளைத்தும் அவள் வளையாத ஆத்திரம் அவனுக்கு. “மச்சி ! ஒரு விடுகதை போடுறேன். விடை சொல்றீயா…?” சும்மா வந்த காளியிடம் வழிய பேச்சுக் கொடுத்தான். கல்யாணி காதில் விழ வேண்டுமென்பதற்காகவே குரலை உயர்த்தி உரக்கச் சொன்னான். “சொல்றேன் ..!” இவன்


நட்பே! உன் அன்பிற்கு நன்றி…

 

 மதியழகி, அம்மா, அப்பா, என்று அழகான சிறு குடும்பம் மதியழகியை சுருக்கமாக மதி என்று அழைப்பார்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மதியழகியின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். மதியழகி தன் அப்பா அம்மாவுக்கு ஒரே செல்ல பெண். மதியழகியால் அப்பாவின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கல்லூரி போகாமல் வீட்டிலியே அடைபட்டுக்கிடந்தாள் . தன் தோழிகள் , அம்மாவின் ஆலோசனைகளை கேட்டு மதியழகி கல்லூரிப்படிப்பை முடித்தாள். மதியழகிக்கு இன்டர்வியூவில் தேர்வு செய்து ‘அமெரிக்கா’ வில் வேலைகிடைத்தது. வெளிநாட்டிற்கு செல்வதனால்


ஒன்பதாவது ஆள்

 

 ஞாயிற்றுக்கிழமை காலை. நரேன் தன் மனைவி காயத்ரி, மகள் ஹரிணியை சென்னை சென்ட்ரலுக்கு கூட்டிச் சென்று பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ஏஸி ரயிலில் ஏற்றிவிட்டான். சரியாக ஏழரை மணிக்கு ரயில் கிளம்பியதும் ‘என் பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா; அடுத்த நாலு நாளைக்கு எனக்கு முற்றிலும் சுதந்திரம். தினமும் விதவிதமா ஒருத்தி’ என மனசுக்குள் நரேன் குதூகலித்தான். பார்க்கிங் வந்து காரைத் திறந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்தபோது, பின்புற இடது கதவு தானாகத் திறந்து மூடிக்கொண்டது. நரேன்


சிதைந்த கூடு

 

 சிந்தாமணி பொய்யாகி விட்டாள்! நேற்றுவரை எல்லா நிஜங்களுக்கும் நிஜமாக இருந்து, இன்று எல்லாப் பொய்களுக்கும் பொய்யாகிப் போனவள் ஊர்க் கோயில் மூன்றடிக் குழியிலே உறங்குகிறாள். என் நெஞ்சில் மண்ணை அள்ளிப்போட்ட அந்தச் சண்டாளியை நானும் வஞ்சம் தீர்த்துக்கொண்டேன் மூன்று பிடி மண்ணை அந்தக் கழுதையின் நெஞ்சில் வாரி இறைத்தேன். ஆனால் அது மண்ணா ? இல்லை. என் கண்களிலிருந்து திரண்ட வெம்பனித்திரள். வெயிலில் வெடித்து விடுகிற வெறும் பனித்துளி கூட அல்ல அது. என் நெஞ்சைக் கிழித்துப்


சைக்கிள்

 

 வீட்டுக்கு எதிரே தெரிந்த கூட்டத்தை பார்த்ததும் ‘பகீர்’ என்றது. கிட்டத்தில் போனதும் தான் எதிர் வீட்டில் கூடியிருந்த கூட்டம் என்று தெரிந்தது. ரூபவதியின் கணவர் கத்திக் கொண்டிருந்தார். ‘அடிப்பேன், வெட்டுவேன், குத்துவேன், கூறு கூறாகக் கிழித்துப் போடுவேன்’ என்றும் இன்னும் பிரசுரிக்க முடியாத வகையிலும் வசைகள் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருந்தன. பக்கத்துத்தெரு சண்முகத்தின் மனைவிதான், ரூபவதியின் கணவனோடு மல்லுக்கு நின்று கொண்டிருந்தாள். இரண்டு பேரையும் ஒரு பத்து பதினைந்து பேர் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். விட்டால்


நாசகாரக் கும்பல்

 

 அம்பி, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். எதிரே சேறும் சகதியுமாயிருந்த வராகக் குளத்தை தூர்த்துக் கொண்டிருந்தார்கள். எதற்காகத் தூர்க்கவேண்டும், சேறும் சகதியுந்தானே வராகருக்கு ஏற்றதொரு இடம் என்று நினைத்தான் அம்பி. ஆனால் பாசி படர்ந்த அவ்விடத்திலிருந்து புறப்பட்டு ஊரில் வியாதியைப் பரப்பும் கொசுவுக்கு வராகர் ஒரு வழி செய்வாரானால், அவர் உவக்கும் இடத்தை அப்படியே விட்டு வைத்திருக்கலாம்… “கொசு ஓர் அரக்கன்; அவனை அழிக்க ஒரு புது அவதாரம் தேவை…’ அம்பியின் கற்பனை அவனுக்கே சிரிப்பைத் தந்தது.


நெருடலை மீறி நின்று

 

  சந்தோஷமாயிருக்கிறது. ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது. இருபத்துநாலு வயசில் இன்றுதான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது. இன்னும் அந்த மோட்டார் பைக் சத்தம், தூக்கித் தூக்கிப் போடுகிற அனுபவம், அறுபது மைல் வேகத்தில் புடவைத் தலைப்பை அடக்க முடியாமல் தலைமுடியைக் கோத முடியாமல் காலை மாற்றிக்கொள்ள முடியாமல், பிடித்த பிடியை விடமுடியாமல், நெஞ்சு முழுக்க பயத்தோடும், ஆனந்தத்தோடும் சவாரி செய்தது இன்னும் உடம்பு முழுக்கப் பரவிக் கொண்டிருக்கிறது. லேசான பெட்ரோல் வாசனையும், சூடான எஞ்சின் நெடியும், ஷேவிங் க்ரீம் மாதிரி