கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2020

79 கதைகள் கிடைத்துள்ளன.

எம் மூஞ்சிலே எப்பவும் முழிக்காதே…

 

 “ஏய் நில்லு….. யாரடி உன்னை இப்படி அடிச்சது……” “யாரும் இல்லை……” “கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு மரியாதையா சொல்லு….ஸ்கூல்ல ஏதாவது ரவுடித்தனம் பண்ணி அடி வாங்கினியா ……’ ‘அதெல்லாம் இல்ல……’ ‘கொன்னே புடுவேன் மரியாதையா நெஞ்ச தொட்டு சொல்லு என்ன நடந்துச்சு…’ ‘ஆஞ்ஞே … யாரும் அடிக்கல்லே அத்தே….. ‘ ‘மரியாதையா சொல்லிடு அடிச்சு கொன்னுடுவேன்….ம்… இல்லை… நீ சரிப்பட மாட்டே ஒரு நிமிஷத்துல பாரு இப்ப என்ன நடந்துச்சின்னு கண்டு பிடிக்கிறேன்…… தாயாரு அந்த பெல்ட்டை எட்றி…..


மனம் குளிருதடி

 

 யாழினியின் அலைபேசி பைக்குள் அதிர்ந்தது. அதிர்வலைகள் வெளியேறி மேசையையும் கொஞ்சம் அதிரச் செய்தது. கிளையன்ட் மீட்டிங்கில் இருந்தாள். எடுக்காமல் எதிரிலிருந்தவரிடம் பேசிக்கண்டிருந்தாள். மீண்டும் அதிர்ந்தது. அதில் கவனம் செலுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தாள் அது நிற்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து அதிர்ந்து. எதிரில் இருந்த அவருக்குப் பதட்டம் கூடியது. ‘மிஸ். யாழினி முதல்ல அதை எடுங்க. தொடர்ந்து யாரோ கூப்பிடுறாங்கன்னா எமர்ஜன்ஸியா இருக்கும்’. எடுத்தாள். விடுதியிலிருந்து மீனா. குரலில் ஒரு அவசரம். பதட்டம். ‘நந்தினி சூசைட் அடெம்ப்ட்பா. விஜயா ஆஸ்பத்திரிக்கு


வேல்விழி

 

 சிரித்து பின் அழுது அவள் சொன்னது என்ன? வேல்..! வேல்..! கார்திகேயன் தன் மகளை அழைத்தார். ஏன் அப்பா கூப்பிட்டீர்கள்? “உன்னைக் ஹாஸ்டலில் விட்டுவிட்டு நான் நேரத்தோடு திரும்ப வரனும். ரெடியாகி விட்டாயா? காரை ஷெட்டிலிருந்து எடுக்கட்டுமா? வேல்விழியின் அம்மா, அகிலாண்டேஸ்வரி, “எங்கே இந்த கோபியும், கோதையும் தொலைஞ்சு போனாங்க.” என புலம்பிக்கொண்டே தன் மகளுடைய ஸூட்கேஸ்களை தூக்கிக்கொண்டுவந்து ரெடியாக வாசல் அருகே வைத்தாள். ஒவ்வொரு வார விடுமுறைக்கும்கூட வேல்விழியை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவார் கார்த்திகேயன். வேலின்


அவள் பெயர் ராணி

 

 அப்போது தான் ராணி அலுவலக வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருந்தாள். சற்று ஓய்வு எடுக்கலாம் என எண்ணியவளுக்கு வீட்டில் இருந்த வேலைகளை பார்த்து தலையே சுற்றியது. மலை போல குவிந்திருந்த அழுக்கு துணிகள் ஒரு புறம் குவிந்து கிடக்க. மறுபுறம் கழுவாத பாத்திரங்கள் மகன் டிவியிலும். மகள் செல்போனிலும் மூழ்கி கிடந்தார்கள். எரிச்சலுடன் தனது பிள்ளைகளை திட்டி கொண்டே கொஞ்சம் நேரம் கட்டிலில் சாய்ந்தாள். பிறகு முகம் கழுவி வேலைகளை முடித்து பிள்ளைகளுக்கு மாலை சிற்றுண்டி தயார்


தேதி பதினாறு

 

 அந்த ஊரில் புருசோத்தம் ஜோசியரை பார்க்க பெரிய பெரிய பணம் படைத்தவர்கள் முதல், பெரிய அதிகாரிகள் வரை காத்திருப்பர். அவரின் வாக்குக்கு அவ்வளவு மரியாதை. இதற்கும் புருசோத்தம் ஜோசியர் ஒருநாள் பொழுது முழுக்க பத்திலிருந்து பதினைந்து பேரை மட்டுமே பார்த்து ஜாதகம், ஜோசியம் சொல்லுவார். இதுதான் நடக்கும் என்று பட்டவர்த்தனமாக சொல்லி விடுவார். அது அப்படியே நடக்கவும் செய்யும். இதனால் எல்லோரும் அவரை நம்பினார்கள். அவரை பார்க்க அனுமதி வேண்டி கால் கடுக்க காத்திருந்தார்கள். அவர் திருமணமே