கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2015

38 கதைகள் கிடைத்துள்ளன.

நீயே சொல்லு சார்…!

 

 நேத்து சாயங்காலம், நான் ரெண்டு பேரைக் கொன்னுட்டேன்னு சொன்னா உனக்கு ஆச்சரியமா இருக்கும் சார்! அதுவும் எனக்குத் தெரிஞ்ச வழியிலே ரொம்பக் கொடூரமாத்தான் கொன்னேன்னு உங்கிட்டே சொல்றதுலே எனக்கொண்னும் சங்கடமில்லே சார். இன்னைக்கு காலையிலே, நீ கூட பேப்பரிலே பாத்திருப்பே. ஆனா, நான் அவங்களைக் கொன்னது சரியா, தப்பா?ன்னு நீதான் ஒரு நியாயத்தைச் சொல்லணும் சார்… கண்டிப்பா சொல்லுவியா சார்… இந்த மருதாச்சலம் பயலுக்கு அடியாளா இருந்த ரெண்டு பேரைத்தான் நான் கொன்னுட்டேன். இப்ப அதுக்கு பதிலா


சண்முகம் மாமா

 

 “”என்னங்க, நியூஸ் கேட்டதுலருந்து என்ன நீங்க பேயறைஞ்சா மாதிரி ஆயிட்டீங்க. உங்க மாமா டெத்துக்கு எப்ப போறதுன்னு சொல்லுங்க…” புடவை கொசுவத்தை சரிசெய்தபடியே கேட்டாள் சுதா. “”அதான் எனக்கும் ஒண்ணும் புரியல சுதா. சாதாரண நாளா இருந்தா கூட பரவாயில்ல. ஒருநாள் வியாபாரம் ஒழிஞ்சு போவட்டும்னு கடைய பூட்டிட்டு கிளம்பிரலாம். ஆறு மாசமா தள்ளிப் போயிட்டே இருக்கிற விஷயம்… இன்னிக்குத்தான் ஒரு முடிவு ஏற்படும்னு நம்பிக்கிட்டிருக்கேன். அந்த சேட்டு வேற ராஜஸ்தான்லருந்து மூணு வாரம் கழிச்சு இன்னிக்குதான்


கத்தரி, வெண்டை, காலிப்பூ வேய்…

 

 காலை எழுந்தது முதலே என்ன சமையல் செய்வது? என்ற கேள்விதான் மனசுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் எந்தக் காய்கறியும் இல்லை. காலையில் சட்னி அரைக்கக் கூட தேங்காயும், பச்சை மிளகாயும் வாங்கி வந்தால்தான் உண்டு. ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த என் கணவரிடம் சென்று, “”என்னங்க… வீட்ல எந்தக் காய்கறியும் இல்ல… வாங்கிட்டு வர்றீங்களா?’ என்று கேட்டதுதான் தாமதம்… “”போம்மா.. எனக்கு காய்கறியெல்லாம் பாத்து வாங்கத் தெரியாது… நீயும் வர்றதானா சொல்லு… போகலாம்” என்றார். “” சரி


சொல்லாத சொல்லுக்கு

 

 சங்கர் அதை எதிர்பார்க்கவில்லை. முகம் குப்பென்று வியர்த்தது. பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம், “”என்னதிது குமார்?” என்றான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. “”என்ன பண்ண அவரை?” என்றேன். அந்த நபர், நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கையில் இருந்து இரண்டு வரிசை முன்னால் இருந்த இருக்கையின் கம்பியில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். வலது கையால் மேலிருந்த கம்பியைப் பிடித்திருந்தான். இடது கையில் ஏதோ ஓர் வாரப் பத்திரிக்கையைச் சுருட்டி வைத்திருந்தான். வலது தோளில்


சைக்கிள்

 

 ஒரு நாள் என் மகனின் சைக்கிள் திருடுபோனது. அப்பார்ட்மெண்டின் கீழே நிறுத்தப்பட்டிருந்த போது வாட்ச்மேன், கேட், பூட்டு, இத்யாதி…இத்யாதி என்று பல பாதுகாப்புகள் இருந்தும் சுலபமாகத் திருடிவிட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கம்ப்ளெயிண்ட் கொடுக்கும் தைரியம் இல்லாததால், அப்படியே விட்டு விட்டேன். “”ஏன் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலை?” என்று மறுநாள், சின்ன மாமனார் வந்திருந்த போது கேட்டார். “”அதெல்லாம் வெட்டி வேலை. மதுரைல ஒருநாளைக்கு எத்தனை சைக்கிள் காணாமல் போகிறது தெரியுமா? அத்தனை சைக்கிளையும் தேடிக் கண்டு பிடிக்கணும்னா