கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2015

20 கதைகள் கிடைத்துள்ளன.

பயணிகள்

 

 லண்டன் 1999 ‘ஏப்ரல்மாதத்திலும் இப்படி ஒரு குளிரா?’ஜெனிபர்,அந்தப் பஸ்சின் கொண்டக்டர்,மேற்கண்டவாறு முணுமுணுத்துக்கொண்டு பஸ்சில் ஏறிய ஒரு முதிய ஆங்கிலப் பெண்ணுக்குக் கைகொடுத்து அவள் பஸ்சில் ஏற உதவி செய்தாள். அந்த ஆங்கிலேய மூதாட்டி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள்,அவளுக்கு எழுபது வயதாகவிருக்கலாம். சுருக்கம் விழுந்த முகத்தோற்றம். மழையோ குளிரோ,வீட்டுக்கு வெளியே போகும்போது,ஆங்கிலேயப் பெண்கள் எந்த வயதிலும்,தங்களை அலங்கரித்துக் கொள்ளத் தவற மாட்டார்கள். அந்த ஆங்கில மாதும் தனது தளர்ந்த முகத்திற்குத் தகுந்த விதத்தில் மேக் அப் போட்டிருந்தாள்.கையில் ஒரு


மணம் கமழும் மலர்கள்

 

 (இது மெல்லிய மலர் உன் மனது கதையின் தொடர்) ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருந்தது. புவனா ! இவ்வளவு நெருக்கமா ஒரு பெண்ணோடு உட்கார்ந்ததே இல்லை! அப்படி இருந்தா எப்படி என்று இப்பதான் புரியறது! உங்க வீடு வரை கூட ஸ்கூட்டர் ஓட்ட முடியாது! இனிமே இப்படிதான் இருப்பாயா? நான் ஆபீஸ் மற்ற வேலை எல்லாம் பார்க்க முடியுமா? வெங்கட்! என்னை ரொம்ப கேலி பண்ணாதே! எதோ நான் நினைச்சபடி யாருக்கும் எளிதில் கிடைக்காத பொருள்போல நீ எனக்குக்


அணைப்பு

 

 எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். நேற்று ஒரு மோசமான நாளாக இருக்கும் என்று அம்மினி காலையிலேயே நினைத்திருந்தாள். அது எப்படி மோசம் என்று அவளுக்குத் தெரியவில்லை. சமிக்ஞை சொல்லும் எந்தக்கனவும் அவள் காணவில்லை.பள்ளிக்குடம் ஏதோ கனவில் வந்து போயிருந்த்து. காலையில் எழுந்தபோது முன்வாசலுக்கு வந்த போது அப்படியெதுவும் அபசகுணம் தென்படவில்லை. குறிசொல்பவன் அந்த வீதியில் அலைந்து கொண்டிருந்தான், ஆனால் அவன் ஏதாவது சொல்லி விட்டுப்போனானா திரியவில்லை.


மென்காற்றாய்…

 

 சொல்லாமல் கொள்ளாமல் உள்ளே நுழைந்த காற்று திறந்திருந்த கதவை தனது சின்னக்கால்களால் சற்றே பலமாய் எட்டி உதைத்து விட்டு வந்த வழியாகவே திரும்பிச்சென்று விடுகிறது. அவசரத்தில் அது எந்தக்காலால் உதைத்தது எனப்பார்க்க மறந்தே போகிறான். எந்தக்காலாய் இருந்தால் என்ன, எட்டி உதைத்தது உதைத்ததுதானே?பட்ட மிதி பட்டதுதானே,,,,?எட்ட நின்று சட்டென்று அடித்தால் என்ன,,,?அல்லது பக்கம் வந்து லேசாக கன்னம் வருடி செல்லமாய் தட்டிபோனால் என்ன, என இல்லாமல் மெல்ல வந்து கிள்ளிப் போ,,மெல்ல வந்து கிள்ளிப்போ,,,,, என்கிற மனப்பாட்டுடன்


காலம் கெடவில்லை

 

 “வாசல்ல எதுக்குடி மசமசன்னு நிக்கற, சந்தியவன வேளையாறது… போய் சாமிக்கு விளக்கேத்துடி. வயசுக்கு வந்த பொண்ணு, காலங்கெட்டுக் கிடக்கறது தெரியாம, இப்படி போறவங்க வர்றவங்களையெல்லாம் பார்த்துக்கிட்டு வாசல்ல நிக்கலாமா?” மங்களம் பாட்டி, தன் மகன் வயிற்றுப் பேத்தி லலிதாவை விரட்டிக் கொண்டிருந்தாள். லலிதாவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. தான் வாசலில் நிற்பதை அனுமதிக்காத பாட்டி, அலுவலகத்திற்குச் சென்று தன்னை சம்பாதிக்க அனுப்புவது மட்டும் எப்படி? மாதா மாதம் சுளையாக வரும் சம்பளத்திற்காகவா என எண்ணிக் கொண்டாள். சாமிக்கு


இவனும் ஒரு போராளி

 

 “படக்”கென சத்தம் கேட்டு கீழே குனிந்து பார்த்த பாலு, சே என்று அறுந்து போன செருப்பை உதறினான்.இன்னும் ஒரு மாதம் தாக்கு பிடிக்கும் என நினைத்து இருந்த செருப்பு தன் ஆயுளை முடித்திருந்தது, இன்னொரு காலில் இருந்த செருப்பையும் கழட்டி புதரில் எறிந்தான்.இனி ஒரு கிலோ மீட்டர் நடந்து அன்னுர் பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். நடக்க ஆரம்பித்தான். வெறும் காலில் நடப்பது ஆரம்பத்தில் மிகுந்த வேதனை கொடுத்தாலும்  நடக்க நடக்க பழக்கமானது.இவன் பேருந்து நிலையம் அருகில்


தோற்றுப் போகக்‍ கற்றுக்‍ கொள்வோம்

 

 வாரத்திற்கு 10 நாட்கள் சண்டையிட்டு நிம்மதியை கெடுக்‍க வேண்டும் என்பதுதான் அவளின் எண்ணம், லட்சியம், கொள்கை, கோட்பாடு, நியாயம், தர்மம், நீதிநெறி, நம்பிக்‍கை, எல்லாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாரத்திற்கு 7 நாட்கள் மட்டுமே நிர்ணயிக்‍கப்பட்டு விட்டது. சண்டை என்று வந்துவிட்டால் “சிவகங்கைச் சீமையிலே படத்தில் வரும் எஸ்.எஸ்.ஆரைப் போல் பொங்கி குமுறுகிறாள். சுமார் 40 பக்‍க வசனங்களை மனப்பாடம் செய்யாமல் முன் தயாரிப்பின்றி, தங்குதடையின்றி சரளமாக மடைதிறந்த வெள்ளம்போல் கொட்டித் தீர்க்‍கின்றாள். அவள் ஆவேசமாக சண்டையிடுகையில் அவளது


ஊற்று

 

 “தாத்தா, நான் இங்க நட்டிருந்த செடிய எங்க தாத்தா?– பேரன் விதுரின் பதட்டமான சத்தம் கேட்டு அதிர்ந்தார் நாகசுந்தரம். எதைப் பார்த்துவிடக் கூடாது என்று மனதில் நினைத்திருந்தாரோ அதை அவன் பார்த்து, கேட்டும் விட்டான். மறக்காமல் அங்கே போய் நின்றிருக்கிறானே? அதையே நினைத்துக் கொண்டு வந்திருக்குமோ பிள்ளை? அடப் பாவமே…! மனசு பதறியது இவருக்கு. தாத்தா…தாத்தா…நில்லாத குரலுக்குச் சொந்தக்காரராய், கொல்லைப் புறம் பார்த்து ஓட்டமெடுத்தார் நாகு. “இதோ வந்துட்டேன்டா குழந்தே…..” பார்த்துப் போங்கோ…வழுக்கிடப் போறது….என்றாள் மீனாட்சி. எந்தப்


சக்சஸ்

 

 கோவை ரயில்வே ஜங்ஷனுக்கு எதிரில் சாந்தி தியேட்டருக்கு பக்கத்து சந்து தான் கோபாலபுரம். அங்கு இருக்கும் இரண்டு தெருக்கள் முழுவதும் திரைப் பட விநியோகஸ்தர்கள் தான்! அன்று காலை ஒன்பது மணிக்கு ‘ஆத்தா கிரியேஷன்’ அலுவலகத்தில் ஒரே சத்தம்! மானேஜர் தன் உதவியாளரை திட்டிக் கொண்டிருந்தார். “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இங்கே ராத்திரி நீ இருந்து என்ன கிழிக்கிறே?…..வால் போஸ்ட் ஒட்டற பசங்களுக்கு என்ன தெரியும்?……நீ சொன்ன கட்டை எடுத்திட்டுப் போய் விடிய விடிய ஒட்டிட்டு


வாட்ஸ் அப்பில் (லாக் அப்பில்) ராஜாராமன்

 

 ராஜாராமன் அம்மாஞ்சி என்று நினைத்தால் அது உங்கள் தப்பு. டிரைவிங் லைசென்ஸ் வாங்க எட்டு போட வேண்டும் என்று பாழாய்ப்போன அந்த RTO சொல்ல ஆரம்பித்தது வினை… “எட்டு தலை கீழாய்ப்போடுவேன்..”. என்றான். நம்ம ஆள் “எட்டை எப்படிப் போட்டாலும் எனக்கு ஒன்று தான்” என்று RTO சொல்லி விட்டான். பிடித்தது சனியன்… எட்டு எப்படி ஒன்றாகும் என்பது ராஜாராமன் கேள்வி. சரி அடுத்து ஒற்றைச் சக்கரத்தில் இவன் எட்டு போட அது எட்டு இல்லை… நாலு