கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2014

100 கதைகள் கிடைத்துள்ளன.

மைசூர் பாகு!

 

 பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன் ராமு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் புறப்பட்டான். தன்னுடைய பம்பரத்தை எடுத்துக் கொண்டு புறப்படும் பொழுது, சமையலறையிலிருந்து வந்த நெய்யின் மணம் அவனை திகைக்க வைத்தது! உடனே பம்பரத்தை சட்டை பையில் போட்டுக் கொண்டு சமையலறைப் பக்கம் போனான். அடுத்த இரண்டாம் நாள் நடக்கவிருக்கும் திருவிழாவை முன்னிட்டு, அம்மா மைசூர் பாகு தயாரித்துக் கொண்டிருந்தாள். ராமு அங்கு சென்ற பொழுது, அவனுடைய அம்மா பெரிய தட்டில் நீண்ட சதுரங்களாக


கனவில் மான் வந்தால்…

 

 விசுவின் திமிரும் உடலை கட்டுப்படுத்தி, கழுத்தை பின்னாலிருந்தபடி வசமாக கிடுக்கிப் பிடித்து நெரித்துக் கொண்டிருந்தது அந்த ஆஜானுபாகுவான உருவம். விசுவின் எதிரே அவன் வந்த குதிரை வேகமாக அவனை நோக்கி வருவது போலவும் பின்பும் மறைவது போலவும் உணர்ந்தான். அந்தக் குதிரை ஒரு வேளை ஒரு மாடர்ன் ஆர்ட்டாக இருந்தாலும் இருக்கலாம் என நினைத்தான். ச்சே… ச்சே! சோழர் காலத்தில் ஏது மாடர்ன்?! சரி! இதைப் பற்றியெல்லாம் இப்போது ஆராய விசுவிற்கு நேரமில்லை. அவன் இப்போது சோழ


நினைவுச் சின்னம்

 

 சேதுவுக்கு இன்று விடுதலை. சட்டம் வழங்கிய தண்டனை பூர்த்தியாகிவிட்டது. இனி அவன் சுதந்திர மனிதன். இனி வார்டனால் ‘டேய்…. மகனே ‘ என எழுப்ப முடியாது. கன்னத்தில் ‘பளா ‘ ரென்று அறைந்து, ‘என்ன முறைக்கிறே ? ‘ என்று கேட்க முடியாது. நீண்டுக்கொண்டே போகும் பகலும், உறக்கமே வராத இரவுகளும் இனி இல்லை. பக்கத்தில் படுத்து தன் பிரியமுள்ள மனிதர்களுக்காக ஏங்கி, சோக கதைகள் சொல்லி, கண்ணீர் விடும் சக கைதிகளின் கதைகளை இனிக் கேட்க


கேள்விகள்

 

 ”அம்மா, நீ இப்ப கோபமாவா இருக்கே?” “இல்லடா கண்ணா, ஏன்? என்ன வேணும் என் ராஜேஷுக்கு? இங்க வா.” “ம்….ஒண்ணுமில்லம்மா. வந்து…..வந்து…..” “எ பி சி டி எல்லாம் எழுதி முடிச்சிட்டியா?” “ஓ! பெருசு, சின்னது ரெண்டுமே முடிச்சாச்சும்மா.” ”குட்! அப்புறமா அம்மாக்கு காட்டு, என்ன?” ”சரிம்மா. ம்……அம்மா!” “சொல்லுடா.” ”போன வாரம் கூட என்ன உன் ஸ்கூலுக்கு கூட்டிண்டு போன இல்ல?” “ஆமா. ஒனக்கு புடிச்சிருந்ததா?” ”ரொம்ப புடிச்சிருந்தது. அப்புறம்…….போன மாசத்தில ஒரு நாள், அதுக்கு


ஒரு விதி – இரு பெண்கள்

 

 “என் கணவர் என்னை நல்லா பாத்துக்கிறார். இவர் எனக்கு மூணாவது!” எண்ணையைத் தடவி, என் உடலைப் பிடித்துவிடும்போது, தன்போக்கில் பேசினாள் அய்னுல். அவள் சொன்னவிதம் எப்படி சாதாரணமாக இருந்ததோ, அதேபோல் நானும் அதை ஏற்றுக்கொண்டேன். அதிர்ச்சியோ, அருவருப்போ ஏற்படவில்லை. “மத்த ரெண்டு பேர்?” என்று கேட்டேன். இரண்டு மணி நேரம் போகவேண்டுமே! அத்துடன், மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்திருந்த எனக்கு ஒரு புதிய உலகத்தைப் பார்ப்பது போலிருந்தது. “நம்பர் ஒன் இறந்து போயிட்டார். ரெண்டாவது ப்ளே பாய்! அப்படின்னா