கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 12, 2013

26 கதைகள் கிடைத்துள்ளன.

அற்புதம் புரிதல்

 

 நான் என்னைப் பெரிய பராக்கிரமசாலி, தொழிற்சங்கவாதி என நினைத்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் மேலே போய், இயேசுவைப் போல அற்புதங்கள் புரியும் வல்லமை கூட எனக்கு உண்டு என நம்பினேன். எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் வரும் வரைக்கும், நாம் நம்மை இப்படிதான் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் என் மனைவியோ, இந்தப் பம்மாத்து நினைப்புகளை எல்லாம் நம்புவது இல்லை. சும்மா வேலையில்லாது உட்கார்ந்திருந்தாலும் பரவாயில்லை, தொழிற்சங்க வேலைகளை நான் பார்க்கக்கூடாது என்பது எனது நிர்வாகத்தின் சித்தம். ஆகவே லக்னோ


பணமா! பாசமா!

 

 திவ்யா..நீ இன்னுமா ரெடியாகுற?மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட போறாங்க..என்றபடியே மாடிக்கு சென்றாள் வசந்தி. அம்மா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை.ஏம்மா எவ்வளவு சொல்லியும் புரிஞ்சுக்க மாட்டேங்குற. நான் இன்னும் மேல படிக்கணும்மா. என்னடி திவ்யா சொல்ற..பொம்பளை பிள்ளையா பொறந்தா இன்னொருத்தங்க வீட்டுக்கு போய் தான்ம்மா ஆகணும். இல்லம்மா எனக்கு அக்காவோட வாழ்க்கையில் உள்ள பிரச்சனையைப் பார்த்து பார்த்து பயம் தான் அதிகரிக்குது. இவ்வளவு தானா? நான் கூட பயந்து போயிட்டேன். உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சா தான் இந்தக்


மனதின் உயரம்….

 

 ‘வாங்க, வாங்க, உள்ளுக்க‌ வந்துருங்க…யப்பா தம்பி ஒன்னத்தே சொல்றாக… பெராக்கு பாத்துக்கிட்டு அப்புறமேட்டு நிக்கலாங்… வாறவுகளுக்கு வளி வேணுல்லா… ‘ கண்டக்டர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். சில திடீர் சமயங்களில், வெறும் நாலு இட்லி சாப்பிட்டதற்கே வயிறு நிரம்பி எருக்களிப்பது போல், விசேஷ நாள், விடுமுறை நாள் இல்லாத இன்று கூட ஏகக் கூட்டம் பஸ்ஸில். பிதுங்கி வழிந்தது. தாமரை, மல்லிகாவின் மடியிலிருந்து கொண்டு என்னைப் பார்த்து சிரித்தாள். வாயில் எச்சில் ஒழுக, என்னைப் பார்த்து, ‘ங்கா….’


சொர்க்கமும் நரகமும்!

 

 ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான். முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க


உண்மை மதிப்பு!

 

 விறகுவெட்டி வீழிநாதன், ஒருசமயம் ஒரு மன்னனை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றினான். மன்னன் மகிழ்ந்து வீழிநாதனுக்கு ஒரு காட்டினைப் பரிசாக அளித்தான். மரக்கட்டைகளை வெட்டி விற்கலாம் என்று. வீழிநாதனுக்கு மரக்கட்டைகளை வெட்டிக் கடைத்தெருவுக்குச் சுமந்து செல்வது சிரமமாக இருந்தது. அக்கட்டைகளைச் சுட்டுக் கரியாக்கினான். பிறகு அதை மூட்டையாகக் கட்டிச் சுமந்துகொண்டு சென்றான். இப்படிச் செய்வது அவனுக்கு சுலபமாக இருந்தது. கரியைக் கொண்டு போய் விற்று பிழைப்பு நடத்தி வந்தான். மழைக்காலம் வந்தது. விறகுக் கட்டைகளைச் சுட்டுக் கரியாக்க