கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

505 கதைகள் கிடைத்துள்ளன.

அவள்

 

  “சொளேர்’ என்று அனல்காற்று கத்தையாய் வீசி, முகத்தை இம்சிக்க, இமைகளை குறுக்கி மூடிக் கொண்டாள் பாலாமணி. வேர்வை முதுகில் ஊர்ந்து வழிந்தது. உடம்பும், உடையும் தொப்பலாகி இருக்க, முந்திச்சேலை எடுத்து, முகத்தையும், கழுத்தையும் அழுந்த வழித்து துடைத்தாள். “”ஏங்க… இருமாத்தூர் பஸ்சு போயிருச்சுங்களா?” “”இல்லைங்க… ஒன்றரைக்கு வர வேண்டியது… மணி ரெண்டேகால் ஆகுது, இன்னும் வந்தபாடில்லை,” பக்கத்தில் நின்ற ஆள் அங்கலாய்த்தான். பாலாமணிக்கு உடம்பும், வயிறும் தகதகத்தது. காலையில் அரை குவளை நீராகாரத்துடன் டவுனுக்கு கிளம்பியவள்,


கப்பல் கேப்டன்!

 

 காலை 9:00 மணி இருக்கும். “”சார்…” என குரல் கொடுத்துக் கொண்டே, கேட்டைத் திறந்து, உ<ள்ளே வந்தார் சதானந்தம். ஆச்சரியமாக இருந்தது. கடிகாரம் தவறான நேரத்தைக் காட்டுகிறதோ என்று சந்தேகித்து, இன்னொரு முறை பார்த்தேன். ஒன்பதடித்து ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. இந்த நேரத்தில், சதானந்தம் சாரை வீட்டிலோ, வெளியிலோ, பார்க்க முடியாது. தினமும் காலை ஏழரைக்கே கம்பெனிக்கு கிளம்பி விடுவார். அத்துடன், மதியம் 1.00 மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, சரியாக ஒண்ணரைக்கு மீண்டும் கிளம்பினால், இரவு


கதவைத் தட்டும் ஆவி!

 

 நட்ட நடு ஜாமம் என்று சொல்லப்படும் நள்ளிரவு. ஊர் அடங்கிப் போயிருந்தது. வெகு தூரத்தில், நாய் ஒன்று ஊளையிடும் சப்தம் கேட்டுக் கொண்டிருக்க, இருளின் பேரமைதியே, ஒரு வித ரீங்காரத்தை எழுப்பி, எல்லாத் திசைகளிலும் பரவ விட்டுக் கொண்டிருந்தது. நள்ளிரவு 12:00 மணி என்பது, கேட்கும் மாத்திரத்திலேயே, பயம் தரும் நேரமாகத்தான் பட்டது ராஜிக்கு. ஐயனார், தீவட்டி சுமந்து, காவலுக்கு போகிற நேரம் என, கிராமத்தில் இருக்கும்போது… ஒருமுறை அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. முகம் முழுக்க


படிக்காத நண்பன்!

 

 ரசிதம்பரம் பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது தான், முருகேசனை பார்த்தான் ராம்குமார். தன்னைப் பார்ப்பதற்குள், ஒளிய இடம் தேடுவதற்குள் பார்த்து விட்டான் முருகேசன். பார்த்தது மட்டுமல்லாமல், கட்டம் போட்ட சட்டையணிந்த முருகேசன், கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல், சப்தமாக கையசைத்தபடி, ஆனால், முகமலர்ச்சியுடன் கூப்பிட்டான். “”ஏய் ராம்குமார்…” அப்போது தான் பார்த்தது போல், பதிலுக்கு ராம்குமாரும், “”ஹாய்…” என்று, செயற்கை புன்னகையுடன், சிக்கனமாய் கையசைத்தான். ஷூ அணிந்து, மெல்லிய கோடு போட்ட முழுக்கை சட்டையை


கடமை ஒன்றே!

 

 தூக்கத்தில் கண் விழித்த பரத், அருகில் படுக்கை காலியாக இருக்க, மங்கிய இரவு விளக்கொளியில், நித்யா, ஜன்னல் அருகில் நிற்பது தெரிய, எழுந்து அவளருகில் வந்தான். “”நித்யா… தூங்கலையா, என்ன இப்படி நடுராத்திரியில் எழுந்து நின்னுட்டு இருக்கே.” “”மனசு சரியில்லைங்க. அம்மா, அப்பா ஞாபகமா இருக்கு. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம, அப்பா தனியாக, அம்மாவோடு கஷ்டப்படறத நினைக்கும் போது, மனசு சங்கடமா இருக்குங்க.” “”நாம என்ன செய்ய முடியும் நித்யா. நீயும்தான் பத்து நாட்கள் போய் இருந்துட்டு