கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 14, 2013

8 கதைகள் கிடைத்துள்ளன.

கெட்ட வார்த்தை

 

 Warning: Strong Sexual/Abuse Dialogue. நிறைய கேட்ட வார்த்தைகள் இக்கதையில் பயன்படுத்தப் பட்டுள்ளது. கல்லூரியில் சேர்ந்திருந்த புதிதில் உடன் படிக்கும் நண்பர்களை மச்சான் மாப்பிள்ளை என்றழைக்கக்கூட எனக்கு வாய் வராது.பள்ளியிலிருந்து,தயிர் சாத அந்தஸ்தை மட்டும் கடந்த ஒரு அரை வேக்காடாகத்தான் நான் வெளியேறியிருந்தேன்.(என்னை விட மட்டமாக இன்னமும் பருப்பு சாதமாகவே காலத்தை கழிப்பவர்களும் எங்களிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்). ஆனால் வளரும் தலைமுறையினரிடையே இந்த சப்பைத்தனம் துளியும் இருக்காதென தெளிவாக அறிய முடிகிறது. நேற்று கல்லூரியின் பின் வாசல்


வழிப்போக்கன்

 

 துளித்துளியாய் வியர்வை கோர்த்து, நெற்றிப் பாறையில் ஒரு குட்டி அருவியாய் ஓடி என் காதுப் பள்ளத்தில் பாய திடுக்கிட்டு எழுந்தேன். தலைக்குப் பின்புறம் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த ஏர் கூலர், மின்சாரம் தடைப்பட்டு நின்றிருக்கிறது. காரை பெயர்ந்து விழுந்துவிடும் நிலையிலிருந்த விட்டத்தை சில நிமிடங்கள் வெறித்து கொண்டிருந்தேன். வியர்வையில் நனைந்தபடி பக்கத்தில் சோனி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். இன்றோடு இந்த நொய்டாவிற்கு வந்து ஆறு நாட்களாகி விட்டது. நான் புதிதாய்ச் சேர்ந்திருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டது.


மச்சம்

 

 மச்சம் குறித்த முதல் அக்கறை அவனுக்கு வந்தது சில மாதங்களுக்கு முன் ஒரு திங்கள்கிழமை அதிகாலையில்தான். விடுமுறை முடிந்து அலுவலகம் கிளம்பவேண்டி முகச்சவரம் செய்ய கண்ணாடியைப் பார்த்தவனுக்கு நம்பவே முடியாத ஆச்சர்யம்,, சரியாக அவனது இடது கன்னத்தில் இதழ்களுக்கு மிக அருகில் சின்னதாய் ஒரு மச்சம். ஏதாவது அழுக்காயிருக்குமோ என ஒரு முறைக்கு இரண்டு முறை முகம் கழுவிப் பார்த்தும் அந்தக் கருப்பு அதே அழுத்தத்துடன் இருந்தபோதுதான் இது மச்சம் தானென நம்பவேண்டியதாகிப் போனது, அதெப்படி இருப்பத்தி


வினோதனின் காதல்

 

 ஏழு மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடம் மிக பிரம்மாண்டமானதாயிருந்தது. அந்த நகரத்தின் அடையாளமே அந்தக் கட்டிடம் தான்.அதன் பெயர் வியா. அந்த நகரத்திற்கு அன்றாடம் வருகிறவர்களில் பெருமளவினர் அந்த வியா என்னும் வியாபாரஸ்தலத்துக்கு வருகை புரிவதற்குத்தான் வருகின்றனர் என்பது திண்ணம்.அதன் உரிமையாளன் பேர் வினோதன்.அவன் தன் வினோதமானபலசெய்கைகளுக்காகஉலகப்புகழ்அடைந்திருந்தான்.என்றாலும் கூடஅவன் குறித்து உலாவிய கதைகளைத் தாண்டிலும் வியா-வின் புகழ் நாளுக்கு நாள் கூடியபடி இருந்ததே ஒழிய குறையவில்லை. அதன் முதற்தளத்தில் இந்த உலகத்தில் புழக்கத்தில் இருக்கிற அத்தனை பொருட்களும்


எச்சில் குவளை

 

 காயத்ரியின் இரு உதடுகளும் பிரிந்து தரையில் அழுத்திக் கொண்டிருக்க முகம் பாதி புதைந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். யாராவது தூக்கி நிமிர்த்தி உட்கார வைக்கும்வரை அவள் அப்படியே கிடப்பாள். தரையின் குளிர்ச்சியும் வாயிலிருந்து ஒழுகி பின்னர் முகத்திலும் தரையிலும் காய்ந்து ஒட்டிப்போன எச்சிலும் என சட்டென அவளைத் தரையிலிருந்து பிரித்துப் பார்ப்பவருக்கு அசூசையாக இருக்கும். “ஏய்ய்ய்ய்..சூச்சு” காயத்ரிக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதன் சமிக்ஞை அது. 5 நிமிடம் விடாமல் அழைப்பாள். யாரையாவது. பெயரெல்லாம் அவளுக்கு முக்கியம்