கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2012

332 கதைகள் கிடைத்துள்ளன.

யாரும் இழுக்காமல் தானாக…

 

 சொப்பனத்தில் அப்பா வந்திருக்கிறார். எழுந்திருக்கும்போதே நீலாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. பச்சைக் கட்டம் போட்ட போர்வையை ஒரு தடவை கசக்கினாற்போலப் பிடித்து, முகத்தோடு ஒத்திக்கொண்டாள். பட்டாசலில் கிடக்கிற அப்பா போட்டோவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அப்பாவுக்கு ஜெமினி கணேசன் மாதிரி ஜாடை. ஜாடை என்றால் மூக்கு, முழி எல்லாம் இல்லை. சுருட்டை சுருட்டையாகத் தலைமுடி அப்படி. மீசையை வைத்திருப்பதும் வட்டக் கழுத்து ஜிப்பா போடுவதும் அப்படி. அம்மாவின் தோளைப் பிடித்துக்கொண்டு அப்பா நிலாவைப் பார்க்கிறது மாதிரியான பக்கவாட்டுப்


ஓர் உல்லாசப் பயணம்

 

 எப்போது நினைத்தாலும் போகலாம். அவ்வளவு பக்கத்தில்தான் இருக்கிறது வாய்க்கால். குளிக்கிறதற்காகப் புறப்பட்டவர்தான் இங்கேயே நின்றுவிட்டார். நடையிறங்கக் கால் வைக்கும்போது, மேட்டுப்பள்ளிக்கூட வாத்தியார் எதிரே குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார். பாலாய்த் தேய்த்துக் குளிப்பாட்டிவிட்ட பசுவும் கன்றுக்குட்டியும் தன்னடையாய் முன்னே போய்க்கொண்டிருந்தன. இவரைப் பார்த்ததும், ஒன்றே ஒன்றை மாத்திரந்தான் கேட்பதற்கு நேரம் இருந்தது போல் ‘என்ன பையனை விறகுக் கடையில பார்த்தேனே, குற்றாலம் எக்ஸ்கர்ஷனுக்கு அனுப்பலையா?’ என்று நடையில் நின்றவரைப் பார்த்துக் கேட்டார். பசு தந்திப் போஸ்ட் பக்கம் போய்


கரிய முகம்

 

 கதவு தட்டப்பட்டது. ‘சார் சார் ‘ என்று அழைக்கும் குரலில், ரகசியம் இருந்தது. ரேடியம் அலாரம் மணி இரண்டு இருபதைக் காட்டியது. வெளியே இருட்டும், குளிரும் கண்ணாடி வழித்தெரிந்தன. போர்வையை விலக்கிக் கொண்டு, கதவின் அருகில் போனேன். கதவை ஒட்டி, சாருவும், குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சப்தம் கேட்டு அவர்கள் எழுந்து விடக்கூடாது, மெதுவாகக் கதவைத் திறந்தேன். வீட்டுக்காரர் நின்றிருந்தது புகைப்படம் போல் தெரிந்தது. நான் குடியிருந்தது இரண்டு மாடிவீடு. தரைப் பகுதியில் வீட்டுக்காரர் உறவினர் குடும்பமும்,


காரணங்கள் அகாரணங்கள்

 

 கூட்டத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார் கேசவன். அந்தக் கோயிலுக்குப் பெரும் கூட்டம் வரும் என்பது அவருக்குத் தெரியும். சில வருஷங்களுக்கு முன் அங்கு வந்திருந்தபோது, அவரே கூட்டம் கண்டு வியந்திருக்கிறார். இப்போது அவர் கண்ட கூட்டத்தைக் கற்பனை செய்திருக்கவில்லை அவர். ஊரிலிருந்து புறப்பட்டுச் சமதளத்தில் பேருந்து பயணம் செய்து, பிறகு வேறொரு பேருந்தில் ஏறி மலையின் விலாவில் சுற்றிச் சுற்றிப் பயணம் செய்து, கோயில் இருக்கும் சமதளத்துக்கு வந்து சேர்ந்திருந்தார். கோயில் நிர்வாகம் நடத்தும் சுத்தமான விடுதியில்


ஒரு மனுசி

 

 அம்மணியம்மா ஆப்பக் கடையிலிருந்து கொலையே நிகழ்வது போன்ற பெருங் கூச்சல் எழுந்து, சேகரின் தூக்கத்தைக் கலைத்தது. அவன் எழுந்து, பாயில் அமர்ந்து கண்களைக் கசக்கிவி்ட்டுக் கொண்டான் கண்கள் எரிந்தன. இடுப்பில் தொங்கி வழிந்த கைலியைச் சரி செய்துகொண்டான். கையை ஊன்றிக் கொண்டு எழுந்தான். தலை சுற்றுவதுபோல் இருந்தது. முந்தின இரவு சாப்பிடாதது நினைவுக்கு வந்தது. கூஜாவில் இருந்து தண்ணீர் கவிழ்த்துக் குடித்தான். வயிறு குளிர்ந்ததுமாதிரி இருந்தது. ஆணியில் மாட்டியிருந்த சட்டைப்பையைத் துழாவினான். ஒரு சார்வினார் சிகரெட்டும் முப்பத்தஞ்சு