கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 9, 2012

49 கதைகள் கிடைத்துள்ளன.

ஏன் ஆறறிவு?

 சிங்கம் தன் கதையைச் சொன்னது. பல வருடங்களுக்கு முன், மரச்சிங்கம் உயிருள்ள சிங்கமாக அந்தக் காட்டை ஆண்டுகொண்டிருந்தது. விலங்குகள் நட்பாக வாழ்ந்துகொண்டிருந்தன. மரச்சிங்கத்தின் தந்தை காலத்தில் இருந்தே காட்டில் நல்லாட்சிதான் நடந்தது. மரச்சிங்கத்துக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்கும்போதுகூட, ‘‘குழப்பம் இல்லாமல் இத்தனை வருடங்கள் ஆண்டு வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் இந்தக் காட்டை மதிப்பதுதான். தேவைக்கு மட்டும் வேட்டையாடு. மாமிசம் உண்ணும் சிறுத்தை, புலி போன்ற மற்ற விலங்குகளிடமும் இதே நடைமுறையைச் சொல்லி வை. அப்போதுதான்

பன்றியைக் கொன்று விடு!

 ஊரில் அனைவருக்கும் அந்தத் துறவியைப் பிடிக்கும். ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு சிறிய குடிசையைப் போட்டுக்கொண்டு தன் சிஷ்யனோடு எளிமையாக வாழ்ந்துவந்தார். தன்னைத் தேடி வருபவர்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லி ஆசீர்வதிப்பார். ஒரு நாள் அவர் தியானம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அவரது மனக்கண்ணுக்கு ஒரு விஷயம் தெரிந்தது. திடுக்கிட்டவராகக் கண் விழித்த துறவி, தன் சிஷ்யனை அழைத்தார். ‘‘அப்பனே, இதுநாள் வரை என்னிடம் நல்லுரைகள் பலவற்றைக் கற்றுகொண்டாய். குருவான எனக்கு என்ன தட்சணை தரப் போகிறாய்?’’ என்று

‘டூர்’ போனானா குமார்?

 குமார் ஐந்தாம் வகுப்புக்கு செல்கிறான். முதல் நாளில் இருந்தே அவன் கனவு அந்த வருட சுற்றுலாவிற்கு போவதுதான். அப்பா ஆட்டோ ஓட்டுனர். அம்மா, வீட்டின் அருகே இருக்கும் துணிக்கடையில் வேலை செய்கிறாள். குமார், முத்தையா மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறான். முத்தையா என்கின்ற பெரியவர் ஒருவர் இந்தப் பள்ளியை நிர்வகிக்கிறார். நல்ல மனம் படைத்தவர். குமார் போன்ற ஏழை மாணவர்களுக்கு புத்தகத்திற்கான கட்டணம் மட்டும் வாங்கிக்கொள்வார். குமார் ஓரளவு சுமாராகத்தான் படிப்பான். அவர்கள் பள்ளியிலிருந்து வருடா வருடம் சுற்றுலாவுக்கு

நீச்சல்

 பால்காரர் முருகனிடம் எருமை ஒன்றும் நான்கு பசு மாடுகளும் இருந்தன. அவருடைய கிராமத்திலும், சுற்றி உள்ள சிறு சிறு கிராமங்களிலும் பாலை விற்றுவந்தார். தினமும் அதிகாலையிலேயே எழுந்து தொழுவத்தைச் சுத்தம் செய்வார். மாடு கன்றுகள் குடிப்பதற்குத் தண்ணீரும், சாப்பிட வைக்கோலும் வைப்பார். பாலைக் கறந்தவுடன் குடத்தில் எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர் வீடுகளுக்குச் சென்று கொடுப்பார். முருகனின் மனைவி வள்ளியும் அதிகாலையிலிருந்தே தன் கணவனுக்கு உதவி செய்வாள். பாலில் தண்ணீர் கலக்காமல் நேர்மையுடன் விற்றுவந்தார் முருகன். அதனால் கிராமத்து மக்கள்

காகத்தின் அறிவுரை!