தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 4,536 
 

அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 | அத்தியாயம்-23

ரெண்டு வேலைகாரிகள் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.மேஷ் அவர்கள் ரெண்டு பேருக்கும் அவர்கள் கேட்ட சம்பளம் தர ஒத்துக் கொண்டு நாளைக் கு காத்தாலே இருந்து வேலைக்கு வர சொல்லி அனுப்பினான்.அவர்கள் போனதும் காயத்திரி “இங்கே வேலைக்கு எல்லாம் வேலைக்காரி வேண்டாமே.நானும், என் லதவும்.எல்லா வீட்டு வேலையும் செஞ்சுடுவோம்”என்று சொன்னாள். உடனே ரமேஷ் “மாமி,நீங்களும் லதா வும் இனிமே வீட்டு வே லையே செய்யக் கூடாது. நிம்மதியா இருந்து வாங்கோ”என்று சொன்னான் ரமேஷ்.ரெண்டு நிமிஷம் கூட ஆகி இருக்காது மணி வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினான்.அவன் உள்ளே வந்ததும் “மணி, நீ காத்தாலே எட்டு மணிக் கு சரியா ‘ப்லாட்டு’க்கு தினமும் வரணும். எல்லாருடைய துணிகளையும் ‘வாஷிங்க் மெஷினில்’ போட்டு தோச்சு,காஞ்சதும் மடிச்சு வச்சுட்டு,மாமியும் லதாவும் சொல்ற மத்த எல்லா வேலையும் செஞ்சு விட்டு ஆறு மணிக்கு உன் வீட்டுக்குப் போகணும்.உன் அண்ணன் சொன்ன சம்பளம் உனக்கு நான் மாசா மாசம் தறேன்” என்று ரமேஷ் சொன்னதும் “சரி சார்”என்று சொல்லி விட்டு நின்று கொண்டு இருந்தான்.மறுபடியும் ‘காலிங்க் பெல்’ அடித்தது லதா வாசல் கதவைத் திறந்தாள்.வாசலில் ஒரு நடுத் தர வயது மாமி நின்று கொண்டு இருந்தாள். அந்த மாமி ‘ப்லாடு’க்கு உள்ளே வந்து “நமஸ்காரம் மாமா.நான் தான் உங்க பங்களாலே சமையல் வேலை செஞ்சு வர மாமாவின் சம்சாரம்”என்று கையை கூப்பி சொன்னாள்.உடனே ரமேஷ் அந்த மாமியைப் பார்த்து “உள்ளே வாங்கோ.நீங்க நாளைக்கு கா த்தாலே இருந்து இவா மூனு பேருக்கும், இவா கேக்கற சமையலை பண் ணணும்”என்று சொன்னதும் அந்த மாமி “சரி,நான் செய்யறேன்”என்று சொ ன்னதும் ரமேஷ் அந்த மாமியைப் பார்த்து “இப்போ மாசாந்தர மளிகை சாமான் ‘லிஸ்ட்’காய்கறிகள் ‘லிஸ்ட்டை’ப் போட்டு குடுங்க”என்று சொன்னதும் ரெண்டு ‘லிஸ்ட்டை’ போட்டு கொடுத்தாள்.

உடனே ரமேஷ் அந்த ரெண்டு ‘லிஸ்ட்டையும்’ மணி கிட்டே கொடுத்து “மணி நம்ப ‘பலாட் டுக்கு’ மூனு கட்டிடங்கள் தள்ளி இருக்கிற ‘சூப்பர் மார்கெட்லே’ நீ மளிகை ‘லிஸ்ட்டை’க் குடுத்துட்டு, பககத்லே இருக்கிற’ பழமுதிர் சோலையிலே’ காய்கறி ‘லிஸ்ட்டை’ குடு.அப்புறமா ரெண்டு பேருக்கும் நம்ம ‘ப்லாட்’ நம்பரை குடுத்துட்டு வா”என்று சொன்னதும் மணி ரெண்டு ‘லிஸ்ட்டை’ யும் வாங்கி கொண்டு போனான்.ரமேஷ் ரெண்டு கடைக்கும் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு ‘பில் பேமண்ட்டை’ சாமான்கள் வந்து சேர்ந்தவுடன் பண்ணி விடுவதாக சொன்னான்.ஒரு மணி நேரத்தில் மணி ரெண்டு ‘சூப்பர் மார்கெட்டிலிருந்தும் ‘டெலிவா¢ ஆட்கள்’ எல்லா மளிகை சாமான்களும்,காய்கறிகளையும் எடுத்து கொண்டு ப்லாட்டுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினார்கள் லதா வாசல் கதவைத் திறந்ததும் அந்த ‘டெலிவா¢ ஆட்கள்’ எல்லா மளிகை சாமான்களையும் காய்கறிகளையும் கொண்டு வந்து வைத்து விட்டு பில்லைக் கொடுத்தார்கள்.ரமேஷ் தன் செல் போன்லேயே ரெண்டு சூப்ப்ர் மார்க் கெட்டுக்கும் ‘பேமண்டை’ பண்ணினான்.சமையல் கார மாமி எல்லா மளிகை சாமான்களை அங்கே இருந்த டப்பாவிலே கொட்டி வைத்து காய்கறிகளை ‘ப்ரிட்ஜில் வைத்தாள்.ரமேஷ் அந்த சமையல் கார மாமியைப் பார்த்து “நீங்க இப்போ ஆத்துக்கு போயிட்டு நாளைக்கு காத்தாலே ஏழு மணிக்கு வந்து இவா சொல்ற எல்லா சமையலையும் பண்ணி வாங்கோ”என்று சொல்லி அனுப்பி விட்டு,மணி யைப் பார்த்து “மணி நீயும் வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு காத்தாலே இருந்து எல்லா வேலைகளை யும் செஞ்சு வா”என்று சொல்லி அனுப்பினான்.

பிறகு ரமேஷ் அந்த ரெண்டு ‘சூப்பர் மார்கெட்டு’ நம்பர்களையும் லதாவிடம் கொடுத்து”லதா,நீ இனிமே ஆத்துக்கு வேண்டிய எல்லா மளிகை சாமானகளும் காய்கறிகளையும் போன்லே சொல்லிடு. அவா கொண்டு வந்து போட்டுடுவா.எனக்கு அந்த ‘சூப்ப்ர் மார்க்கெட்’மானேஜர் போன்லே ‘பில் ‘அம் மவுண்டை’ சொன்னவுடன் நான் அவாளுக்கு பணத்தே அனுப்பி விடுவேன்.நீ பணம் தரவேணாம்” என்று சொல்லி ரெண்டு ‘சூப்பர் மார்கெட்’கார்ட்டையும் கொடுத்தான்.லதா அந்த கார்டுகளை ரமேஷி டம் இருந்து வாங்கிக் கொண்டாள்.கொஞ்சம் நேரம் ஆனதும் ரமேஷ் “மாமி,நான் ஆத்து செலவுக்கு ன்னு மாசம் பதினைஞ்சாயிரம் ரூபாய் தரேன்.நீங்க ஆத்து செலவுக்கு வச்சுகோங்கோ”என்று சொன் னான்.”நீ மளிகை சாமான்கள்,காய்கறி, பழம்,இதுகளுக்கு ஆற செலவுக்கு எல்லாம் பணம் தந்து விடப் போறே.சமையகா¡ர மாமிக்கும்,வேலைகாரிகளுக்கும்,வேலைக்காரனுக்கும், மாச சம்பளமும் தந்து விடப் போறே.அப்புறமா எதுக்குப்பா இந்த பதினைஞ்சாயிரம் ரூபாய் வேறே நீ தரே’ இந்த பணம் வே ண்டாமே”என்று சொன்னாள் காயத்திரி.உடனே ரமேஷ் “மாமி அந்த செலவுக்கு எல்லாம் நான் பணம் குடுத்தாலும்,உங்களுக்கும் லதாவுக்கும் ஏதாவது அவசர செலவுக்கு பணம் வேண்டி இருக்கும். அத னால்லே இந்தப் பதினைஞ்சாயிரம் ரூபாயை வச்சுக்குங்க” என்று சொல்லி தன் ‘ப்ரீப் கேஸை’ திறந் து பதினைஞ்சாயிரம் ரூபாய் எடுத்து கொடுத்தான் ரமேஷ்.ஒன்னும் சொல்லாமல் காயத்திரி ரமேஷ் கொடுத்த பதினைஞ்சாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டாள்.பிறகு ரமேஷ் ஆனந்தைப் பார்த்து “இந்த புதன் கிழமை.உனக்கு பள்ளிகூடம் திறக்கப் போறா.நீ அம்மாவோடும்,பாட்டியோடும் காத்தா லே ஏழு மணிக்கு,உன் ‘யூனிபாரத்தை’ போட்டுண்டு ரெடியா இரு”என்று சொன்னான்.உடனே ஆனந்த “ சரி,அங்கிள்” என்று சொன்னான்.

கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் காயத்திரியைப் பார்த்து” மாமி,நான் இங்கே வந்து உங்க எல் லோரையும் அழைச்சுண்டு வட பழனி கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனையை பண்ணிட்டு,அப்பு றமா எல்லோரும் பள்ளி கூடத்துக்கு வந்து ஆனந்தை சேர்த்துட்டு வரலாம்.இப்போ நான் பங்களாவுக்கு கிளம்பறேன்.நாளைக்கு ரெண்டு ‘ப்காடா¢லும்’ நிறைய ‘மீட்டிங்க்’ இருக்கு.நான் அதுக்கு எல்லா ஏற் பாடுகளையும் பண்ணனும்.நான் அடிக்கடி உங்க கிட்டேயும் லதா கிட்டேயும் போன்லே பேசி வரேன். ஞாயித்துக் கிழமை சாயங்காலம் நான் ஆனந்துக்கு ‘கேக்கும்’ ‘சாக்லெட்டும்’ தவறாம வாங்கிண்டு வறேன்”என்று சொல்லி விட்டு மெல்ல எழுந்தான்.ரமேஷ் தலையைக் குனிந்துக் கொண்டு இருக்கும் போது லதா தன் அம்மாவின் கையை அழுத்தி “அம்மா,நான் சொன்னதை அவர் கிட்டெ கொஞ்சம் சொல்லும்மா.சும்மா இருக்கியேம்மா” என்று அம்மாவின் காதில் கிசு கிசுத்தாள்.காயத்திரி “நான் சொல் றேன்னு நீ தப்பா எடுத்துக்காதேப்பா.நீ இவ்வளவு பெரிய ‘ப்லாட்டை’ எங்களுக்கு வாங்கிக் குடுத்து இருக்கே.இங்கே நானும்,லதவும்,ஆனந்தும் இருக்கோம்.உனக்கு பிடிச்சதை எல்லாம் நாக்குக்கு சுவை யா சமைச்சுப் போட ஒரு சமையல்கார மாமியே ஏற்பாடு பண்ணி இருக்கே.நீ எதுக்கு அந்த பங்களாவு க்கு போய் தனியா இருந்து வரணும்.இங்கேயே நீ ஒரு தனி பெட் ரூமிலே இருந்து வரலாமே”என்று சொன்னாள். சிரித்துக் கொண்டே ரமேஷ்“மாமி,நீங்க சொன்னதுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’.நான் அந்த பங்களாலேயே இருந்து வரேன்.நான் என் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து வர எனக்கு அந்த தனிமை நிச் சியமா வேணும்” என்று சொல்லி மெல்ல எழுந்தான்.’நாம சும்மா இருந்தா அவர் கிளம்பி போயிடுவார். அம்மா ஒன்னும் சொல்லாம இருக்கா.வேறே வழி இல்லே.நாம தான் நம் காதலை அவர் கிட்டே சொல் லி நம்மைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லணும்’ என்று நினைத்தாள்.

தைரியத்தை வர வழைத்துக் கொண்டு லதா “நீங்க அந்த பங்களாவுக்கு போகாதேள்.உங்களை நான் முதல் முதல்லே பாத்ததில் இருந்து உங்க மேலே ரொம்ப ஆசையா இருந்து வரேன்.உங்களுக்கு ஞாபகம் இல்லையா.நீங்களும் நானும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா காதலிச்சோம்.நீங்க என் னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளத் தயரா இருந்தேள்.உங்க அப்பா அம்மா மட்டும் தடுத்து இருக் காட்டா நம்ம கல்யாணம் நடந்து இருக்கும்.நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள ரொம்ப ஆசைப் படறேன்……” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது ரமேஷ் செல் போன் அடித்தது. அவன் செல் ‘போனை’‘ஆன்’ பண்ணிப் பேசினான்.ரமேஷ் பதட்டத்துடன் பேசினான்.“அப்படியா, நான் உடனே வரேன்.நீங்க அவரை அப்போலோ ஹாஸ்பிடலுக்கு உடனே கொண்டுப் போங்க.நான் இன்னும் பத்து நிமிஷத்திலே அப்போலோ ஹாஸ்பிடலுக்கு வந்து விடறேன்.நீங்க கவலை படாதீங்க ‘மாடம்’.நான் அப்போலோ ஹாஸ்பிடலுக்கு வந்து எனக்கு ரொம்ப தொ¢ஞ்ச டாக்டரைப் பாத்து அவரு க்கு உடனே ‘ட்ரீட்மெண்டுக்கு’ ஏற்பாடு பண்றேன்”என்று சொல்லி விட்டு தன் அக்குள் கட்டையை எடுத்து வைத்துக் கொண்டு “மாமி,என் பழைய ‘மானேஜிங்க் டைரக்டருக்கு’ திடீரென்று நெஞ்சை ரொம்ப வலிக்கிறதாம்.அவா ‘வைப்’ தான் இப்போ பேசினா.அவா பையன் வேறே ஊர்லே இல்லையா ம்.நான் அவரை உடனே ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’அழைச்சுண்டு வரச் சொல்லி இருக்கேன். நான் உடனே அங்கே போயாகணும்.நான் கிளம்பறேன்” என்று சொல்லி விட்டு வாசல் கதவைத் திற ந்துக் கொண்டு ‘லிப்ட்டு’க்குப் போனான் ரமேஷ்.காயத்திரி ரமேஷ் பின்னாலேயே அவன் காரில் ஏறும் வரை அவன் கூட இருந்து விட்டு அவன் கார் கிளம்பியதும் ‘ப்லாட்டுக்குள்’ வந்தாள்.

லதா முகம் கோவைப் பழம் போல் சிவந்து இருந்தது.அம்மா உள்ளே வந்ததும் லதா “இந்த நே ரம் பாத்தா அவருக்கு இந்த ‘போன் கால்’ வரணும்.எதுக்கு அந்த ‘மாடம்’ இவரைக் கூப்பிடணும்” என் று சொல்லி தன் கோவத்தைக் கக்கினாள்.உடனே காயத்திரி பாவம்,லதா.அவருக்கு திடீரென்று நெ ஞ்சு வலி வந்து இருக்கு.பையன் வேறே ஊர்லே இல்லையாம்.அவ என்ன பண்ணுவான்” என்று சொ ன்னதும் லதா கோவத்தில் “நீ கூட அவர் கூட அப்போலோ ஹாஸ்பிடலுக்குப் போய் அந்த மாமிக்கு உதவி பண்ணேன்.ஏன் ‘ப்லாட்டுக்குள்ளே’ திரும்பி வந்தே” என்று கத்தினாள் லதா.லதாவின் கோ வத்தைப் பார்த்த காயத்திரி ஒன்னும் பேசாமல் தன் வேலையைக் கவனிக்க போய் விட்டாள்.லதா இவ் வளவு கோவப் பட்டு காயத்திரி பார்த்ததே இல்லை.‘சரி அவள் கோவம் தணிஞ்சு வரட்டும்’என்று நினைத்து காயத்திரி சும்மா இருந்து விட்டாள்.கொஞ்ச நேரம் ஆனதும்“நாம என்ன பண்றது லதா.நீ அவன் கிட்டே பேசிண்டு இருக்கும் போது அவனுக்கு அவசர ‘போன்’ வந்துட்டது.அவன் என்னடா ன்னா என்னமோ ‘என்னுடைய ஆன்மீக வாழ்க்கைக்கு அந்த தனிமை நிச்சியமா எனக்கு வேணும்’ன் னு சொல்றானே.அதனாலே நான் சும்மா இருந்துட்டேன்.நீ பொறுமையா இருந்து வா.நாம மறுபடியும் அடுத்த வாரம் அவன் நம்மாத்துக்கு வரும் போது நான் ‘லதா ரொம்ப ஆசை படறாப்பா,நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு சொல்லி பாக்கறேன்.

“கல்யாணம் பண்ணிக்கிறதும்,பண்ணிக்காததும்,அவன் கையிலே தானே லதா இருக்கு.அந்த அம்பாள் அனுக்கிரஹம் இருந்தா நடந்துட்டு போறது.வா நாம ‘ப்ரிட்ஜ்’லே இருக்கிற ஸ்வீட்டை சாப் பிட்டுட்டு,தயிரை எடுத்து மோர் பண்ணி குடிக்கலாம்” என்று சொல்லி லதாவை எழுப்பினாள் காயத் திரி.மூனு பேரும் ரெண்டு ஸ்வீட்டை சாப்பிட்டு விட்டு, ’ப்ரிட்ஜி’ல் இருந்த தயிரை மோர் பண்ணிக் குடித்தார்கள்.ஒரு அரை மனி நேரம் ஆனதும் ஆனந்த் ‘எனக்கு தூக்கம் வறது”என்று சொல்லி விட்டு பெட் ரூமுக்கு போனான்.அவன் போனவுடன் லதா அம்மா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள் அம்மா மடிலே படுத்துக் கொண்டு “அம்மா,நான் அவர் பேர்லே ரொம்ப ஆசையா இருக்கேன்ம்மா. எப் படியாவது நான் அவரைக் கல்யாணம் பண்ணிண் டே ஆகணும்.நீதாம்மா எனக்கு ‘ஹெல்ப்’ பண்ண னும்”என்று அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள் லதா.“சரி லதா,நான் சொல்றேன்” என் று சொல்லி விட்டு லதாவை அழைத்துக் கொண்டு ஆனந்த் படுத்துக் கொண்டு இருந்த ‘பெட் ரூமு’க் குப் போனாள் காயத்திரி.

படுக்கையில் படுத்துக் கொண்டு காயத்திரி “நேத்து வரைக்கும் நாம் மூவரும் ஒரே ஹாலில் வெறும் பாய்லே படுத்துண்டு வந்தோம்.இன்னைக்குப் பார் ஏ.ஸி இருக்கு,இலவம் பஞ்சு மெத்தை. இலவம் பஞ்சு தலையனை இருக்கு.சாதா போர்வை இருக்கு,கம்பளிப் போர்வை இருக்கு.ஒன்னுக்கு மூனு ‘பெட்ரூம்’ இருக்கு.எல்லா ‘பெட் ரூமி’லேயும் காட்ரெஜ் பீரோ இருக்கு பெரிய ‘கிச்சன்’ இருக்கு. ‘பிரிட்ஜ்’,‘கிரைண்டர்’,‘சுமீத்’ எல்லாம் இருக்கு.சமையலுக்கு ஒரு மாமி இருக்கா.ஆத்து வேலை செய் ய ரெண்டு வேலைகாரி இருக்கா.வேண்டிய சாமான்கள் வாங்கி வந்து,நம்ப துணிகளை தோச்சு மடிச்சு வைக்க ஒரு ஆள் இருக்கான்.இந்த ராஜ போக வாழ்க்கை நமக்குக் கிடைச்சு இருக்கு.கிஹப்பிரவேசத் துக்கு வந்து இருந்த அத்தனை பேரும் ஒரு வாய் வச்சா மாதிரி ‘ப்லாட்’ தேவலோகம் போல இருக்கு ன்னு புகழ்ந்தா தொ¢யுமோ லதா.இந்த ‘ப்லாட்டிலே’எல்லா வசதியும் பண்ண தொன்னுறு லக்ஷ ரூபாய் ஆச்சாமே.அந்தப் பையன் நமக்கு இப்படி ஒரு சௌகா¢யமான வாழ்க்கையே அமைச்சுக் குடுத்து இரு க்கானேன்னு நினைச்சா,அவன் ரொம்ப வருஷம் நன்னா,சௌக்கியமா இருந்து வரணும்’ன்னு மன சார ஆசீர்வாதம் பண்ணனும்ன்னு எனக்குத் தோண்றது“என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண் ணிரைத் தன் புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டாள். உடனே லதா”அம்மா,நான் இன்னும் சின்னப் பொண்ணு.எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலே.அதனால்லெ தான் நான் அவரைக் கல்யாணம் பண்ணிண்டு,நீ சொன்ன இந்த சுகத்தை எல்லாம் நிறைய வருஷம் ஆசை தீர அனுபவிச் சு வரணும்ன்னு ஆசையா இருக்கும்மா” என்று சொல்லி அம்மாவின் கையைப் பிடித்து கெஞ்சினாள். ”எனக்குப் புரியறது லதா.நாம ரெண்டு பேரும் சொல்லிப் பார்க்க லாம்.அப்புறம் அம்பாள் சங்கல்ப்பம். அவ அனுக்கிரஹம் இருந்தா,நிச்சியமா கல்யாணம் நடக்கும்” என்று சொன்னாள் காயத்திரி.

அப்போலோ ஹாஸ்பிடலில் இருந்து பங்களாவுக்கு வந்து தன் கை கால்களை எல்லா கழுவிக் கொண்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு வந்து சமையல் கார மாமா ‘ஹாட் பாக்கில்’ பண்ணி வைத்து இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு படுக்கப் போனான்.அவனுக்குத் தூக்கம் வரவில்லை.லதா சொன்னதை ஞாபகத்துக்கு வத்தது ரமேஷ்க்கு.’என்னடா இந்தப் பொண்ணு.நான் சுரேஷ்’ன்னு என்னை அறிமுகம் பண்ணிண்டு இருப்பதாலே தானே லதா தன் காதலை எனக்கு ஞாப கப் படுத்தி அவள் என்னை கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ஆசைப் படுகிறேன்னு சொன்னா.நான் என்ன பண்றது இப்போ.இவா குடும்பத்துக்கு உதவி பண்ணீ வந்து,ஆனந்தனுக்கு ஒரு நல்ல வாழக் கையே அமைச்சுத தரணும் என்கிற ஆசையாலே தானே நான் இந்த ‘பொய்யே’ சொன்னேன்.அந்தப் ‘பொய்’ இப்படி விபா£தமா ஆயிடுத்தே.எனக்கு துளி கூட இந்த கல்யாண ஆசையே இல்லையே.என்ன சொல்லி நான் லதாவை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்றது’என்று தொ¢யாமல் மனம் புழுங்கினான் ரமேஷ்.

‘நான் ரமேஷ்.சுரேஷ் இல்லே.உன்னையும்,உன் அம்மாவையும்,ஏமாத்தி கெடுத் த ‘மஹா பாவி’ன்னு எனக்கு நன்னா தொ¢யுமே.லதா எப்படி கல்யாணம் பண்ணீப்பேன். நான் கல்யாணத்து க்கு ஒத்துண்டா,நீ.‘சுரேஷ் தான் நம்மை கல்யாணம் பண்ணீண்டு இருக்கார்’ன்னு தானே நீ நினை ச்சு காலம் பூராவும் சந்தோஷ பட்டுண்டு வருவே.ஆனா நான் காலம் பூராவும் ‘இப்படி உண்மையே சொல்லாம மறைச்சு வந்து லதாவை ஏமாத்தி வரோமே’ன்னு தானே வெந்து சாகணும்.நான் இனிமே எந்த தப்பும் பண்ணாம எல்லோருக்கும் நிறைய தான் தர்மம் பண்ணி வந்து,சதா அந்த பகவானை நினைச்சு வந்து,ஆன்மீக வாழ்க்கைலே இருந்து வந்துண்டு,பகவான் எனக்கு போட்டு இருக்கிற ஆயு சை முடிச்சுண்டு இந்த உலகத்தை விட் டுப் போகணும்ன்னு தானே முடிவு பண்ணீ வாழ்ந்துண்டு வறேன்.இந்த மாதிரி வாழ்ந்து வரும் நான் எப்படி லதா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறது.உனக்கு ம்,ஆனந்துக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுத்துட்டு,ஆனந்துக்கு படிக்க எல்லா உதவிக ளையும் பண்ணிட்டு,உங்க எல்லோர் வாழ்க்கைலே இருந்து விலகி,தூரப் போய் இருந்து வாழ்ந்து வரத் தானே நான் நினைச்சுண்டு இருக்கேன்.இப்போ நீ என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளணும்ன் னு ஆசைப் படறயே. நான் என்ன பண்ணுவேன்.இப்ப நான் உன் கிட்டே‘நான் ‘சுரேஷ்’ இல்லை. ‘ரமேஷ்’ ன்னு சொல்ல முடியாதே.இந்த உண்மையைச் சொன்னா,நீயும் உன் அம்மாவும் என்னை கண்ணெடுத்தும் பாக்க மாட்டாளே.எங்களுக்கு இந்த ‘ப்லாட் டும்’வேணாம்,இந்த சொகுசான வாழ்க்கையும் வேணாம்,உன் பணமும் எங்களுக்கு வேணாம்ன்னு சொல்லிட்டு.என் ஆனந்தையும் அழை ச்சுண்டு,என் வாழக்கைலே இருந்து தூர எங்கோ போய் விடுவேளே.என் ஆனந்த் எனக்கு வேணுமே என் ஆனந்தை நான் நிரந்தரமா இழக்க விரும்பலையே.நான் என்ன பண்ணட்டும் பகவானே.என் னை இந்த இக்கட்லே மாட்டி விட்டு இருக்கியே.நீ தான் எப்படியாவது என்னை காப்பாத்தணும்’என் று வேண்டிக் கொண்டான் ரமேஷ்.பகவானை வேண்டிக் கொண்டானே ஒழிய அவனுக்கு தூக்கம் வரவில்லை.

காலையிலே எழுந்த காயத்திரி பல்லைத் தேய்த்து விட்டு ‘கீசர்’ ஸ்விட்சைப் போட்டாள்.வென் னீர் கொதிக்க கொதிக்க வந்தது.காயத்திரி ‘பாத் ரூமை’ விட்டு வெளியே வந்து லதாவைப் பார்த்து “பாரு லதா.இத்தனை நாளும் நாம ஒரு அலுமினியம் பாத்திரத்தில் கொஞ்ச வென்னீர் வச்சு ஏதோ கொஞ்சம் சிலுப்பு போக அதை பச்சைத் தண்ணி பக்கெட்டில் கொட்டி குளிச்சுண்டு வந்தோம்.இங்கே பாறேன்.கொதிக்க கொதிக்க வென்னீர் வந்துண்டு இருக்கு நான் குளிச்சு விட்டு வறேன்.நீயும் எழு ந்து இந்த ‘கீஸா¢ல்’ வர வென்னீரை திறந்து நன்னா உடம்புக்கு ஆசை தீர குளி” என்று சொன்னாள். அம்மா சொன்னாளே ஒழிய லதாவுக்கு அதில் எல்லாம் துளி கூட ஆசை இல்லை.எப்போ அவர் வரு வார்,அவர் கிட்டே நாம பிடிவாதம் பிடிச்சு அவரை கல்யாணம் பண்ணிக் கொண்டே ஆகனும் என்ப தில் மிகவும் தீவிரமாக இருந்தாள்.
கோவிலுக்குப் போய் விட்டு வந்து ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு ‘பாக்டா¢க்கு’க் கிளம்பிப் போ னான் ரமேஷ்.’பாக்ட ரியில்’அவனால் எந்த வேலையையும் சரியா கவனித்து வர முடியவில்லை.’லதா கேட்டதை எப்படி சமாளிக்கப் போறோம்’ என்கிற கவலை அவனை வாட்டி வந்தது.‘இத்தனை நாள் லதா ஆத்லே போன் இல்லே.நாம் அவளுடன் பேச முடியாம கஷ்டப் பட்டோம்.இப்போ லதா ஆத்லே போன் இருக்கு.ஆனா நாம பேசினா,அவ போன்லேயே கல்யாணத்தைப் பேசினா என்ன பதில் சொல் றது’ என்று நினைத்து ரமேஷ் போனில் பேசாமலலே இருந்து வந்தான்.தன் செகரட்டா¢யை கூப்பிட்டு “நீங்க இந்த அடரஸ்லே இருக்கிற ‘ப்லாட்’டுக்குப் போய் அங்கே காயத்திரி மாமி இருப்பா.அந்த மாமி கிட்டே அவ இருந்து வந்த பழைய ஆத்லே இருக்கிற இருக்கிற பழைய சாமான்களை எல்லாம் எடுத்து ண்டு ஒரு சேவா சதனுக்குப் போய் குடுத்துட்டு,பழைய ஆத்து சாவியை ஓனர் கிட்டே குடுத்து விடச் சொல்லுங்கோ.அந்த பழைய ஆத்துக்கு என்ன வாடகை பாக்கி இருக்கோ அதையும் நீங்க குடுத்து செட்டில் பண்ணிட்டு வாங்கோ”என்று சொல்லி அனுப்பினான்.அந்த செகரட்டா¢யும் காயத்திரி ‘ப்லா ட்’டுக்கு வந்து ரமேஷ் சொன்னதை சொன்னான்.உடவே காயத்திரி,லதாவையும்,ஆனந்தையும் கூட் டிக் கொண்டு அவர்களுடைய பழைய போர்ஷன்லே இருந்த சாமான்களை எல்லாம் எடுத்து செகரட் டா¢ கிட்டே கொடுத்து விட்டு ‘போர்ஷனை’ நன்றாக பூட்டி விட்டு,‘சேகர் நர்ஸிங்க் ஹோம்’ போய் போர்ஷன் சாவியை கொடுத்து விட்டு,டாக்டர் சேகருக்கு தன் நன்றியை சொன்னாள்.செகரட்டா¢ அவ ர்கள் மூனு பேரையு ம் ‘ப்லாட்டில்’ கொண்டு வந்து விட்டு விட்டு ‘சேவா சதனு’க்குப் போய் அந்த பழைய சாமான்களை எல்லாம் கொடுத்து விட்டு ‘பாக்டா¢’க்கு வந்து ரமேஷிடம் எல்லா விவரத்தை யும் சொன்னார்.

புதன் கிழமை காலையிலே ஆறு மணிக்கு எழுந்து குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள எல்லாம் சொல்லி விட்டு,ரெடி ஆகி விட்டு காரில் ஏறீ காயத்திரி ‘பலாட்’டுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினான்.லதா தான் வாசல் கதவைத் திறந்தாள்.சுரேஷைப் பார்த்ததும் சந்தோஷத்துடன் “வாங் கோ,உள்ளே வாங்கோ”என்று சொல்லி வரவேற்றாள்.அவளும் காயத்திரியும் நல்ல பட்டுப் புட வையை கட்டிக் கொண்டு இருந்தார்கள்.ஆனந்த் அவன் ‘ஸ்கூல் யூனிபாரத்தை’போட்டுக் கொண்டு ‘சாக்ஸ¤ ம்,ஷ¥வையும்’ போட்டு கொண்டு இருந்தான்.உள்ளே வந்த ரமேஷ், ”நீங்க மூனு பேரும் ரெடியா இருக்கேளே. வாங்கோ வடபழனி கோவிலுக்குப் போய் ஆனந்தன் பேர்லே ஒரு அர்ச்சனை பண்ணிண்டு வரலாம்”என்று சொல்லி விட்டு வெளீயே போனான்.ரமேஷ் எல்லோரையும் தன் காரில் அழைத்துக் கொண்டு வட பழனி கோவிலுக்கு போய் ஆனந்தன் பேருக்கு ஒரு அர்ச்சனையை பண்ணி விட்டு பத்மா சேஷாத்ரி பள்ளீகூடத்துக்கு வந்து ‘பிரின்ஸிபாலை’ சந்திச்சு ஆனந்தனை பள்ளிக் கூடத்திலே சேர்த்து விட்டு,ஒண்ணாம் ‘க்லாஸ்’’புக்ஸ்’ ‘நோட் புக்ஸ்’ எல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டு,லதாவை யும்,காயத்திரியையும் ‘ப்லாட்டிலே’ இறக்கி விட்டு வீட்டு,அவசரமாக ‘பாக்டா¢க்கு’ போய் விட்டான். ’அவரோட ஒரு வார்த்தை கூட பேச முடியலையே’ என்று லதா மிகவும் வருத்தபட்டாள்.

மெல்ல மத்த வார நாட்களைப் பிடித்துத் தள்ளீனான் ரமேஷ்.ஞாயித்துக் கிழமை வந்தது. அவன் காலையிலே எழுந்து குளித்து விட்டு சுவாமி மந்திரங்களை எல்லாம் சொல்லி விட்டு கருமாரி அம்மன் கோவிலுக்குப் போனான்.அம்மன் சன்னிதானத்தில் ‘என்னை இந்த இக்கட்டில் இருந்து எப் படியாவது காப்பாத்து தாயே,என்னை ஆனந்திடம் இருந்து நிரந்தரமா பிரிச்சு¢டாதே’ என்று மனம் உருகி வேண்டிக் கொண்டு பங்களாவுக்குத் திரும்பி வந்தான் ரமேஷ்.மணி மூனு அடித்ததும் கார் டிரைவர் வந்து காரை காரேஜில் இருந்து வெளியே எடுத்துப் போர்ட்டிகோவில் நிறுத்தி விட்டு பங்களா வுக்குள் வந்து “சார் நாம கிளம்பலாமா” என்று கேட்டான்.ரமேஷ் “இதோ வந்து விடறேன்”என்று சொ ல்லி விட்டு தன் ரூமுக்குப் போய் டிரஸ் மாற்றிக் கொண்டு வந்தான்.”போகலாம்” என்று சொல்லி விட்டு தன் அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு வாசலுக்கு வந்து காரில் ஏறிக் கொண்டான். ரமேஷ் காரில் ஏறியதும் கார் டிரைவர் காரை ‘கேக் ஷாப்’பில் நிறுத்தி விட்டு ‘கேக்கையும்’ ‘சாக்லெட் டையும்’ வாங்கிக் கொண்டு வந்து காரில் ஏறினான்.டிரைவர் காரை லதா ‘ப்லாட்டுக்கு’ ஓட்டி வந்து நிறுத்தினான்.

காரில் இருந்து ரமேஷ் மெல்ல கீழே இறங்கி ‘லிப்ட்’ ஏறி,’எல்லாம் நல்ல படியா நடக்க வேணும் பகவானே’ என்று வேண்டி கொண்டு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினான்.அவன் மனம் கலக்கமாய் இருந்தது.காயத்திரி தான் வாசல் கதவைத் திறந்தாள்.சமையல்கார மாமி வெளியே போக ரெடியாக இருந்தாள்.ரமேஷைப் பார்த்ததும் அந்த சமையல் கார மாமி “நமஸ்காரம் மாமா.நான் ராத் திரிக்கு எல்லாம் சமையலும் பண்ணி வச்சுட்டேன்.என் அப்பாக்கு உடம்பு சரி இல்லே.அதான் நான் ஆத்துக்கு கொஞ்சம் சீக்கிரமா கிளம்பறேன்” என்று சொன்னாள்.உடனே ரமேஷ்”சரி மாமி,நீங்க கிளம்பிப் போங்க.உங்க அப்பா உடமபை நன்னா கவனிச்சுண்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு ‘ப்லா ட்டுக்கு’ உள்ளே வந்து,தன் அக்குள் கட்டையை ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு,சோபாவில் உட் கார்ந்தான்.டிரைவர் ‘கேக் சாக்லெட்’டப்பாவையும்,’கேக்’ டப்பாவையும் ரமேஷிடம் கொடுத்து விட்டு கீழே போனான்.ஆனந்த் ரமேஷிடம் ஓடி வந்து அவன் கொண்டு வந்து இருந்த ‘சாக்லெட்’ டப்பாவை யும்,கேக்’ டப்பாவையும் வாங்கி கொண்டு போய் அதை டேபிளின் மேல் வைத்துக் கொண்டு பாக்கெட் டை பிரித்து,ஒரு துண்டு ‘கேக்கை’அவன் சாப்பிட்டு விட்டு,ஒரு துண்டை பாட்டிக்குக் கொடுத்து விட்டு,தன் அம்மாவிடம் ஒரு துண்டைக் கொடுத்தான்.

லதா ஆனந்தை பார்த்து “எனக்கு ‘கேக்கும்’ வேணாம்,ஒன்னும் வேணாம்.தூர போ. எல்லாத் தையும் நீயே சாப்பிடு”என்று கோவமாகச் சொன்னாள்.அப்போது தான் ரமேஷ் லதாவைக் கவனித்தா ன்.லதா ஒரு சாதாரன பழைய புடவையை கட்டிக் கொண்டு ஒரு ஓரத்தில் முகத்தை தரையை பார்த்த வண்ணம் உட்கார்ந்து கொண்டு இருந்தாள்.எப்போதும் அவள் முகத்தில் இருந்து வந்த சந்தோஷம் இல்லை.ரமேஷ¤க்குப் புரிந்து விட்டது.‘சரி,லதாவுக்கு நாம் போன வாரம் பதில் ஒன்னும் சொல்லாம போன கோவம் இன்னும் தணியலே போல இருக்கு’என்று நினைத்து லதாவைப் பார்த்து “ஏன் லதா ஒரு மாதிரியா இருக்கே.உனக்கு உடம்பு சரி இல்லையா”என்று கேட்டான்.லதா பதில் ஒன்னும் சொல் லாமல் சும்மா இருந்தாள்.ஆனநத் தனக்குக் கொண்டு வந்துக் கொடுத்த ‘கேக்’ துண்டை வாங்கி சா ப்பிட்டான் ரமேஷ்.அவன் மனம் தவித்தது.‘பகவானை மறுபடியும் வேண்டிக் கொண்டு ‘பாக்கலாம் என்ன ஆறது’என்று நினைத்து அவன் சும்மா உட்கார்ந்து கொண்டு இருந்தான்.

காயத்திரி தான் முதலில் பேச ஆரம்பித்தாள்.”ஏம்ப்பா,போன ஞாயித்துக் கிழமை சாயங்காலம் அவசரம் அவசரமா அப்போலோ ஹாஸ்பிடலுக்குப் போனியே.அவர் உடம்பு இப்போ கொஞ்சம் தேவ லாமா”என்று கேட்டாள் காயத்திரி.உடனே ரமேஷ்”மாமி,அவருக்கு ஆஞ்சியோ பண்ணீப் பாத்து,அவர் ‘ஹார்ட்டிலே’ ரெண்டு இடத்திலே ‘ப்லாக்’ இருக்குன்னு சொல்லி அவருக்கு உடனே ‘பைபாஸ் சர்ஜா¢’ ‘பண்ணணும்னு சொல்லிட்டா.அவா பையன் அமெரிக்காலே இருந்து அடுத்த வாரம் சென்னக்கு வரா னாம்.அவன் வந்த பிறகு அவா அவனைக் கேட்டுண்டு ‘பை பாஸ் சர்ஜா¢’ ஆபரேஷனை வச்சுக்கலாம்ன்னு முடிவு பண்ணீ இருக்கா அந்த ‘மேடம்’”என்று சொன்னான்.கேக்கை பாதி சாப்பிட்டு விட்டு மீதியை ‘டேபிள்’ மேலேயே வைத்து விட்டு ஆனந்த் ரமேஷிடம் வந்து “அங்கிள்,எனக்கு இங்கே ‘ப்ரெண்ட்ஸ்’ நிறைய இருக்கா.நான் அவாளோடு விளையாடப் போறேன்”என்று சொன்னான். ரமே ஷ் ஆனந்த் கையை பிடித்து கொண்டு “ஆனந்த்,மீதி கேக்கை இப்படி ‘டேபிள்’ மேலேயே வச்சுட் டு போககூடாது.இந்த ஆத்லே ‘பிரிட்ஜ்’ இருக்கு.மீதி கேக்கை நீ ‘ப்ரிட்ஜில்’ வச்சுட்டுப் போகணும். அப்போ தான் மீதி இருக்கும் ‘கேக்’ கெட்டு போகாம இருக்கும்.மீதி கேக்கை ‘ப்ரிட்ஜில்’ வச்சுட்டு நீ விளையாடப் போ”என்று சொன்னதும் ஆனந்த் மீந்த கேக்கை ‘ப்ரிட்ஜில்’ வைத்து விட்டு போனான்.

ஆனந்த் விளையாடப் போனப் பிறகு பார்த்து லதா எழுந்து வந்து “நான் போன வாரம் உங்க கிட்டே என் காதலைப் பத்திச் சொன்னேன்.அப்போ தான் நீங்க ஏதோ அவசரம்ன்னு உடனே போயி ட்டேள். அப்புறமா ஒரு வாரம் ஓடிடுத்து.இந்த ஆத்லே போன் இருக்கு.நீங்க எனக்கு போன்லே கூப்பி ட்டு பேச கூடாதா.நீங்க போன்லே பேசுவேள்ன்னு எதிர்பாத்து,எதிர்பாத்து ரொம்ப ஏமாந்துபோனேன்” என்று கண்களில் கண்ணீர் தளும்பச் சொன்னாள்.ரமேஷ் பதில் ஒன்னும் சொல்லாமல் தன் தலை யை தொங்கப் போட்டுக் கொன்டு இருந்தான்.லதா கேட்டதற்கு என்ன பதில் சொல்றது என்று தொ¢ யாமல் முழித்துக் கொண்டு இருந்தான்.

லதா “இங்கே பாருங்கோ.நீங்களும் நானும் உயிருக்கு உயிரா காதலிச்சோம்.நீங்களும் உங்க அம்மா அப்பா கிட்டே ‘லதாவை எனக்குக் என்னைக் கல்யாணம் பண்ணி கொடுங்கோகன்னு’ கேட் டது மறந்துப் போயிடுத்தா சொல்லுங்க.உங்க அப்பா அம்மா என்னை உங்களுக்கு கல்யாணம் பண் ணிக் கொடுக்காத போது,நீங்க என் கிட்டே வந்து ‘கவலைப்படாதே லதா.நான் மெல்ல உன் அப்பா அம்மாவை சம்மதிக்க வச்சு,உன்னை நிச்சியமா கல்யாணம் பண்ணிறேன்’ன்னு சொன்னேளே.அது கூட உங்களுக்கு மறந்துட்டதா.’லதா இந்த குடும்ப ஸ்டேஸ்ஸ¤க்கு சரி இல்லைன்னு அவா சொல்லி வேறே ஒரு பணக்கார பொண்ணேப் பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வக்கிறேன்’ன்னு உங்க அம் மா சொன்ன போது,’நீங்க எனக்கு வேறே எந்தப் பொண்னும் வேணாம்,பண்ணிண்டா நான் லதாவைத் தான் பண்ணிப்பேன்,எனக்கு நீங்க வேறே எந்த பொண்ணையும் பாக்க வேணாம்’ன்னு சொன்னது கூடவா உங்களுக்கு மறந்து போச்சு.நான் உங்க மேலே என் உயிரையே வச்சு இருக்கேன்.என் னை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்கோ,ப்ளீஸ்”என்று சொல்லி அழுதாள்.உடனே காயத்திரி “ஒரு வார மா லதா இதையே சொல்லிண்டு வராப்பா.அவ இந்த எட்டு மாசமா உன் மேலே வச்சு இருந்த பழைய ஆசையை அடிக்கடி ஞாபகப் படுத்தி என்னை நச்சரிச்சுண்டு வறா. நீ அவளை கல்யாணம் பண்ணிக்கோப்பா” என்று கொஞ்சம் பயத்தோடு சொன்னாள்.ரமேஷ் யோஜனைப் பண்ணீனான். ’இந்த லதா,நம்ப அப்பா, அம்மா இருக்கும் போது பங்களாலே நடந்து எல்லாத் தையும் ஒன்னு விடாம ஞாபகம் வச்சுண்டு கேக்கறாளே.எனக்கு மறந்து போச்சான்னு வேறே கேக்கறாளே.போறாத குறைக்கு காயத்திரி மாமியும் இப்படிக் கேக்கறாளே,என்ன பண்றது’ என்று யோஜனைப் பண்ணினான்.

கொஞ்ச நேரம் ஆனதும் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு “மாமி,என் அப்பா அம்மா,என் கூடப் பிறந்தவன் மூனு பேரும் அந்த ‘ஆக்ஸிடெண்ட்டில்’ செத்துப் போய்,எனக்கு ஒரு கால் போய், அக்குள் கட்டையை வச்சுண்டு நடக்கணும்ன்னு ஆன பிறகு,எனக்கு இந்த வாழ்க்கை வாழ்ந்து வரணு ம் என்கிற ஆசையே போயிட்டது.நானும் அவளோட இந்த லோகத்தே விட்டு போய் இருக்கணும். போ கலே.அது என் துரதிர்ஷ்டம்.என்ன பண்றது.பகவான் குடுத்த இந்த உயிரை மாய்ச்சிக்கறது ரொம்ப தப்புன்னு எனக்கு தோணித்து.அவர் எனக்கு இந்த லோகத்லெ எத்தனை வருஷம் உயிரோடு வாழ்ந் து வரணும்ன்னு போட்டு இருக்காரோ,அத்தனை வருஷம் வாழ்ந்து வரணும்ன்னு நான் என்னைத் தேத்தறவு பண்ணீண்டு,அந்த பகவானை சதா வேண்டிண்டு வாழ்ந்து வந்துண்டு இருக்கேன்.என் கிட்டே இருக்கிற பணத்லே நான் ஏழைகளுக்கு இனிமே நிறைய தானம்,தர்மம்,எல்லாம் பண்ணீட்டு, சதா அவரை நினைச்சுண்டு வந்து,ஆன்மீகத்திலே என் காலத்தை நான் கழிச்சுட்டு,’அவர்’ என்னை எப்போ ‘வான்னு’ கூபிடுகிறாரோ,அப்போ என் கண்ணை மூடணும்’ன்னு நினைச்சு வாழ்ந்துண்டு வறேன்”என்று சொல்லி தன் கண்களை கை குட்டையால் துடைத்து கொண்டான்.காயத்திரிக்கு அவன் அழுவதைப் பார்த்தா ரொம்ப பா¢தாபமா இருந்தது.

உடனே லதா “உங்களுக்கு ‘ஆக்சிடெண்ட்’ ஆனப்போ நீங்க தனிச்சுப் போய் தங்கிட்டேள். நான் இல்லைன்னு சொல்லலே.ஆனா இப்போ உங்களே காதலிச்ச நான் இங்கே இருக்கேனே.என் அம்மா கூட இருக்கா.எல்லாத்துக்கும் மேலே ஆனந்த் இருக்கான்.அப்படி இருக்கும் போது,நீங்க ஏன் தனிமைலே இருந்து வரணும் சொல்லுங்க.நான் உங்களுக்கு என் வாழ்க்கையைப் பத்தி கொஞ்சம் சொல்றேன்,நிதானமா கேளுங்கோ”என்று சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் சொல்ல ஆரம்பித்தாள்.ரமேஷ் ‘லதா,அவ வாழ் க்கையை பத்தி என்னச் சொல்லப் போறா, நம்மை நிதானமா கேளுங்கோன்னு சொல்றாளே’என்று நினைத்து அவள் என்று லதா வாயையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“உங்க தம்பி என்னை ‘நயவஞ்சகமா ‘கெடுத்து’ விட்ட பிறகு எனக்கு வாழ்ந்து வரவே பிடிக்க லே.நான் ஆசையா காதலிச்ச நீங்களும் எனக்குக் கிடைக்காம போய் விடவே,நான் இந்த லோகத்தே விட்டு போய் விட தீர்மானிச்சேன்.அப்போ தான் என் அம்மாவுக்கு மயிலாபூர்லே ஒரு ‘மெஸ்’லே வே லை கிடைச்சது.எங்களுக்கு தங்க ஒரு சின்ன இடமும் கிடைச்சது.என் அம்மா எல்லாத்தையும் மறந்துட்டு,பழையபடி வாழ்ந்து வந்தா.ஆனா எனக்கு மட்டும் எல்லார் எதிரிலும் எனக்கு ஏற்பட்ட ‘அமா னத்தை’சுமந்துண்டு வாழ்ந்து வரவே பிடிக்கலே.நான் என் உசிரை மாய்ச்சிக்க தீர்மானிச்சேன்.தூக்கு போட்டுண்டோ,ஓடற வண்டி முன்னாலே விழுந்தோ,இல்லை தூக்க மாத்திரை சாப்பீட்டோ இந்த லோகத்தே விட்டு போயிடலாம்ன்னு நினைச்சு என் அம்மா கிட்டே சொன்னேன்.ஆனா என் அம்மா என்னைப் பாத்து ‘உனக்கு இப்படி ‘நடந்துட்டதே’ன்னு ஆத்திரத்லேயோ,கோவத்திலேயோ ‘ஏதாவது’ பண்ணிண்டுடாதே லதா.உன் அப்பா தான் என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டார்.நீயும் என்னை வீட்டுட்டு போயிடாதே’ன்னு சொல்லி என் கையை பிடிச்சுண்டு ரொம்ப அழுதா.என் அம்மா இப்படி அழுததே நான் அது வரைக்கும் பாத்ததே இல்லே.’நான் போயிட்டா,என் அம்மா தனியா தானே இந்த லோகத்லே தவிச்சு வரணும்’ன்னு நினைச்சு தற்கொலை பண்ணிக்கிற எண்ணத்தை கை விட்டுட்டு அம்மாவோடு இருந்துண்டு வறேன்”என்று சொல்லி லதா தொடர்ந்தாள்.”என் அம்மா எனக்கு நல்ல ஒரு ஏழை பையனா பாத்து கல்யாணம் பண்ணி வக்கிறதலே ரொம்ப குறியா இருந்தா.ஆனா நான் பிடிவாதமா யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட் டேன்ன்னு அம்மா கிட்டே தீர்மானமா சொல்லிட்டேன்.இது நடந்த கொஞ்ச நாள்ளே,நான் ‘கர்ப்பமா’ இருப்பது எனக்கும்,என் அம்மாவுக்கு தொ¢ஞ்சது.உடனே என் அம்மா என்னை அந்த ‘கருவை’ கலை ச்சுட சொன்னா.ஆனா நான் கருவைக் கலைச்சுக்க மாட்டேன்ன்னு பிடிவாதம் பிடிச்சு வந்து ஆனந் தை பெத்துண்டேன்.ஆனந்தை நன்னா வளத்து வந்து,அவனை நன்னா படிக்க வைக்க வேணும்ன்னு விரும்பினேன்.அவன் கொஞ்சம் பெரியவனா ஆன பிறகு,ஒரு வேலை பண்ணி வந்து,என் அம்மா காலத்துக்கு அப்புறம் ஆனந்துக்கு துணையா இருந்து வந்து அவன் பெரியவனா ஆன பிற்பாடு, அவ னுக்கு ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டு,நான் நிம்மதியா கண்ணை மூடணும்ன்னு முடிவு பண்ணேன்”என்று சொல்லி மறுபடியும் தன் கண்களை துடைத்து கொண்டாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *