தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 4,417 
 

அத்தியாயம்-20 | அத்தியாயம்-21

உடனே காயத்திரி ”ஏம்ப்பா அப்படி சொல்றே”என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.ரமேஷ் சிரித்துக் கொண்டே நான் சொல்றதே நீங்க முழுக்க கேளுங்கோ” என்று சொன்னான்.“மாமி,அந்த ‘ப்லாட்’ லே, நீங்க எல்லாமே புதுசா வாங்கிண்டு வந்த குடித்தனம் பண்ணனும் எனக்கு ஆசை.அதனாலே நீங்க வெறுமனே அம்பாள் படத்தையும்,மாமா படத்தையும்,சாஸ்திரத்து க்கு ஆவி வந்த ஒரு பாத் திரத்தை மட் டும் புது ‘ப்லாட்டுக்கு’ கொண்டு வாங்க.அப்புறமா,நீங்களும் லதாவும் அவாளோடு ‘ரத்னா ஸ்டோர்ஸ்க்குப்’ போய் ஆத் துக்கு வேண்டிய எல்லா பாத்திரங்களையும் புதுசா வாங்கிக் கொண்டு விடுங்க.கூடவே மூனு ¦ ரிய உடையாத ‘பாக்ஸையும்’ வாங்கிக் கொள்ளுங் க.உங்க மூனு பேருடைய துணிகளையும் வச்சுண்டு வர சௌகா¢யமா இருக்கும்.எல்லா பாத்திரங்களையும், ‘பாக் ஸையும்’ நான் அனுப்பி இருக்கிற ஆட்கள் ‘ப்லாட்டில்’ கொண்டு வந்து வச்சு விடு வா.நீங்க அப்ப டியே வெளிலே ஒரு நல்ல ஹோட்டல்லே சாப்பிட்டுட்டு ஆத்துக்கு வந்துடுங்க”என்று சொன்னான். காயத்தி¢ரிக்கு என்ன சொல்வது என்றே தெரிய வில்லை.அவள் முழித்துக் கொண்டு இருந்தாள்.வே றே வழி இல்லாமல் ஒத்து கொண்டு “சரிப்பா.நீ சொல்றபடியே நான் பண்றேன்”என்று சொன்னாள் காயத்திரி.

அடுத்த நாள் காத்தாலே பத்து மணிக்கு ‘அக்கவுண்ட்ஸ் ஆபீசர், பாக்டரியில் இருந்து மூனு ஆட்களைக் கூபிட்டுக் கொண்டு லதா விட்டு வாசலில் காரைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு கா லிங்க் பெல்லை அழுத்தினார்.லதா தான் வாசல் கதவைத் திறந்தாள்.புதுசா யாரோ நின்றுக் கொண்டு இருப்பத்தைப் பார்த்த லதா “உங்களுக்கு யார் வேணும்“என்று கேட்டாள்.அந்த ‘அக்கவு ண்ட்ஸ் ஆபீ சர்’ “நான் அம்பத்தூர் ‘பாக்டரிலே’ இருந்து வரேன்.சுரேஷ் சார் என்னை இங்கே அனுப்பி இருக்கார். இது தானே காயத்திரி மாமி வீடு” என்று கேட்டதும் லதா “ஆமாம்..உள்ளே வாங்கோ”என்று கூப்பிட் டாள்.அந்த ‘அக்கவுண்ட்ஸ் ஆபீசர்’ உள்ளே வந்ததும் சுரேஷ் சொன்னதை அவர்களிடம் சொல்லி, அவர்களை ரெடி ஆக சொன்னார்.காயத்திரியும் லதாவும் ரெடி ஆகி வந்தவுடன் அவர் அவர்களை அழைத்து கொண்டு ‘ரத்னா ஸ்டோர்ஸ்ஸ¤க்கு’ வந்தார்.’ரதனா ஸ்டோர்ஸ்ஸில்’ ரமேஷ் சொன்னா மாதிரி காயத்திரியும் லதாவும் ஆத்துக்கு வேண்டிய எல்லா¡ சாமான்களையும், மூனு உடையாத ‘பாக்ஸ¤ ம் வாங்கிக் கொண்டார்கள்.கடைக்காரார் அவர்கள் வாங்கின சாமான்களுக்கு பில்லைக் கொடுத்தவுட ன் அந்த ‘அக்கவுன்ட்ஸ் ஆபீசர்’ பணத்தைக் ‘காஷ் கவுண்டரில்’ கொடுத்து விட்ட பிறகு அந்த மூனு ஆட்களும் எல்லா சாமான்களையும் கொண்டு வந்து காரில் வைத்தார்கள்.பிறகு அந்த ‘அக்கவுன்ட்ஸ் ஆபீசர்’ காயத்திரியையும் லதாவையும் ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துப் போய் சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.அந்த மூன்று அட்களும் வாங்கின சாமான்க¨ளை எல்லாம் புது ‘ப்லாட்’டில் கொண்டு போய் வைத்தார்கள்.”மாமி,நீங்க வரேளா,நான் உங்களை உங்க ஆத்திலே ‘ட்ராப்’ பண்ணி விட்டு அப்புறமா நான் ‘பாக்டரிக்கு’ப் போறேன்” என்று சொன்னார்.

“நானும் லதாவும் வாங்கின இந்த சாமான்களை எல்லாம் சரியா ‘செட்’ பண்ணி வச்சுட்டு,ஒரு ஆட்டோவை வச்சுண்டு ஆத்துக்குப் போறோம்.நீங்க வேணும்னா ‘பாக்டரிக்கு’ப் போங்க”என்று சொன்னதும் அந்த ‘அக்கவுன்ட்ஸ் ஆபீசர் சுரேஷை காயத்திரி மாமி சொன்னதை போனில் சொல்லி “நான் என்ன பண்ணட்டும் சார்”என்று கேட்டார்.உடனே ரமேஷ் அந்த ‘அக்கவுன்ட்ஸ் ஆபீசரி’டம் “நீங்க அங்கேயே இருந்து அவா வேலை எல்லாத்தையும் முடிச்ச பிறகு அவா ரெண்டு பேரையும். ‘போர்ஷன்’லே விட்டுட்டு வாங்க”என்று சொன்னான்.காயத்திரியும் லதாவும் எல்லா சாமான்களையும் சரியா ‘செட்’ பண்ணி வைத்து விட்டு காரில் ‘போர்ஷனு’க்கு வந்து இறங்கிக் கொண்டார்கள்.

அடுத்த தடவை ரமேஷ் காயத்திரி வீட்டுக்கு வந்து ஆனந்துக்கு ஒரு ‘கேக்’ பாக்ஸைக் கொடுத் து விட்டு,அவன் அக்குள் கட்டையை ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு,அவன் வழக்கமா உட்கா ரும் சேரில் உட்கார்ந்துக் கொண்டான்.கொஞ்ச நேரம் ஆனதும்”மாமி,அந்த ‘ரமணீயம் பில்டர்ஸ்’ இன்னும் ஒரு வருஷம் அந்த ‘ப்லாட்டில்’ எந்த வித ‘ரிப்பேர்’ வந்தாலும் அதை ‘ப்ரீயா’ பண்ணி கொடுப் பார்.நாம் கவலையேப் பட வேணாம் நான் இந்த ‘ப்லாட்டை’லதா பேர்லே ரிஜிஸ்தர் பண்ணலாம் என் று இருக்கேன்.அதைத் தவிர அந்த ‘ப்லாட்டுக்கு’ ஒரு ‘போன் கனெக்ஷனும்’, ‘காஸ் கனெக்ஷனும்’ வாங்கித் தரச் சொல்லி இருக்கேன்.இந்த மூனுக்கும் நான் அவா கிட்டே இருந்து எல்லா பேப்பர்களை யும் வாங்கி வந்து இருக்கேன்…….” என்று ரமேஷ் சொல்லி முடிக்கவில்லை காயத்திரி உடனே “ஏம்ப் பா லதா பேர்லேயா ரிஜிஸ்தர் பண்ணப் போறே.நன்னா யோஜனைப் பண்ணிக்கோப்பா.மூனு கோடி ரூபாய் குடுத்து நீ அந்த ‘ப்லாட்டை’ வாங்கி இருக்கே.உன் பேர்லேயே ரிஜிஸ்தர் பண்ணிகோப்பா, அது தான் நல்லது” என்று ஒரு வித பயத்துடன் சொன்னாள்.உடனே ரமேஷ் “மாமி,நான் நன்னா யோ ஜனைப் பண்ணித் தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கேன்.லதா பேர்லே தான் இந்த ‘ப்லாட்டை’ ரிஜிஸ்தர் பண்ண நான் தீர்மானமா இருக்கேன் மாமி.நீங்க ஒத்துண்டு லதாவை எல்லா பேப்பர்களிலும் கை எழுத்து போடச் சொல்லுங்கோ” என்று சொன்னான்.

பிறகு தன் ‘ப்ரீப்’ கேஸைத் திறந்து ராமநாதன் கொடுத்த ‘ப்லாட்டின்’ மூனு ‘செட்’சாவிக் கொத்தை எடுத்து மாமி கையில் கொடுத்து ”மாமி இந்தாங்கோ அந்தப் ‘ப்லாட்டின்’ மூனு செட் சாவி கொத்து.இதை அம்பாள் பாதத்லே வச்சு விட்டு,அப்புறமா உள்ளே எடுத்து வையுங்கோ” என்று சொ ல்லி தன் கைகளைக் கூப்பிச் சொன்னான் ரமேஷ்.காயத்திரிக்கு என்ன சொல்வது என்றே தெரிய வில்லை.அவள் அசந்துப் போய் நின்றுக் கொண்டு இருந்தாள்“மாமி, தயவு செஞ்சி நான் சொல்றதை ஏத்துண்டு லதாவை எல்லா பேப்பர்லேயும் கை எழுத்து போட சொல்லுங்கோ”என்று விடாமல் சொன் னான் ரமேஷ்.காயத்திரி வேறே வழி ஒன்றும் தெரியாமல் ரமேஷிடம் இருந்து அந்த ‘ப்லாட்டின் மூனு சாவிக் கொத்தையும் வாங்கி அம்பாள் படத்தின் பாதத்தில் வைத்து அம்பாளை வேண்டிக் கொ ண்டு வந்தாள்.கொஞ்ச நேரம் ஆனதும் காயத்திரி “லதா,இவ்வளவு பிடிவாதமா அவன் சொல்லும் போ து நான் என்ன பண்ண முடியும்.அந்த அம்பாளை வேண்டிண்டு எல்லா பேப்பர்லேயும் நீ உன் கை எழுத்துப் போட்டுக் குடு” என்று சொல்லி அம்பாள் படத்தின் முன்னால் நின்றுக் கொண்டு கையைக் கூப்பி வேண்டிக் கொண்டாள்.ரமேஷ் ‘அப்பாடா,நாம இவ்வளவு சொன்ன பிறகு ஒரு வழியா மாமி ஒத்துண்டு சாவிகளை வாங்கிண்டு அம்பாள் கால்லே வச்சுட்டு அம்பாளை வேண்டிண்டு வந்தா.லதா கிட்டேயும் சொல்லி விட்டா.இனிமே லதா கை எழுத்து போடுவதிலே ஒரு சிக்கலும் இருக்காது’என்று நினை த்து தன் மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டான் ரமேஷ்.கேக்கை சாப்பிட்டு விட்டு “அங்கிள், நான் விளையாட போயிட்டு வரேன்”என்று சொல்லி விட்டு ஆனந்த் விளையாடப் போனான்.

ரமேஷ் ஆனந்த்,தலையை வருடி விட்டு “ஆனந்த் ஜாக்கிறதையா விளையாடிட்டு வரணும், சரியா”என்று சொல்லி ஆனந்தை வெளீயே போக விட்டான்.லதாவும் காயத்திரியும் ரமேஷ் செய்ததை நினைத்து ஆச்சரியப் பட்டார்கள்.லதா பயந்துக் கொண்டெ ரமேஷிடம் இருந்து,அவன் கொடுத்த பேப்பர்களையும்,பேனாவை யும் வாங்கிக் கொண்டு வந்து தன் அம்மா பக்கத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.அவள் மனம் ‘திக்’‘திக்’ என்று அடித்துக் கொண்டு இருந்தது.நிமிர்ந்து தன் அம்மா முகத்தைப் பார்த்தாள் லதா.அம்மா முகத்தில் ஒரு சலனமும் தெரியவில்லை லதாவுக்கு.’நான் இது வரை ஒரு பேப்பர்லேயும் கை எழுத்து வரை போட்டதே இல்லையே.முதல் முதல்லே நான் போடும் கை எழுத்து ஓரு மூனு கோடி ‘ப்லாட்டுக்கா’.அவளால் இதை நினைக்கும் போதே உடம்பு பூராவும் மின் சாரம் பாய்ந்த்தது போல இருந்தது.அவள் உடம்பில் புது தெம்பு வந்தது போல் இருந்தது.‘நாம இந்த ‘ப்லாட்’ வாங்கிட்ட பிறகு ‘அவா¢டம்’ நம்ம பழைய காதலை ஞாபகப்படுத்தி,எப்படியாவது கல்யாணம் பண்ணிண்டு அவரோட அந்த வசந்த மாளிகையில் நாம் கை கோத்து வாழ்ந்து வரணும்’என்று நினை த்து சந்தோஷபட்டாள் லதா.லதா கை எழுத்து போட்டுக் கொடுத்த எல்லா பேப்ப்ர்களையும் ரமேஷ் வாங்கிக் கொண்ட பிறகு “நான் போயிட்டு வறேன்”என்று சொல்லி விட்டு தன் அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு வெளியே போனான்.லதா அவன் பின்னாலேயே போய் “அம்மா அவ்வளவு சொல் லியும்,நீங்க கேக்காம அவ்வளவு விலை ஒசந்த ‘ப்லாட்டை’ என் பேர்லெ ரெஜிஸ்தர் பண்ணி இருக் கேளே” என்று தன் கைக ளை கூப்பி நன்றி உணர்சியோடு சொன்னாள்.ரமேஷ் பதில் ஒன்னும் சொல் லாமல் “லதா நான் சரியா தான் பண்ணி இருக்கேன்.நீ நிம்மதியா இருந்து வா” என்று சொல்லி விட்டு காரில் ஏறீ ‘பாகடரி’க்குப் போனான்.

லதா ஆத்துக்கு வந்ததும் வராததுமாய் காயத்திரி லதாவைப் பார்த்து “இது எண்ண அநியாயம். அவவளவு பொ¢ய ‘ப்லாட்டை’ அந்தப் பையன் ஏன் உன் பேர்லே ‘ரெஜிஸ்தர் பண்ணி இருக்கான். உன் பேர்லே ‘காஸ் கனெக்ஷனும் வாங்கி இருக்கான்.எனக்கு ஒன்னும் புரியலையே.ஏன் இந்த பையன் இப்படி பண்றான்”என்று சந்தேகத்தோடு கேட்டாள்.உடனே லதா “பாத்தியாம்மா.இந்த மாதிரி அவர் பண்றதாலே அவர் இன்னும் என்னை ஆசை படறார்.என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப் படறாம்மா”என்று சந்தோஷத்துடன் சொன்னாள்.காயத்திரி திடுக்கிட்டு “லதா,நீ ரொம்ப அவசரப்பட் டு இந்த முடிவுக்கு வந்து இருக்கே.நான் என்ன நினைக்கிறேன்னா ஆனந்த் இப்போ ஒரு ‘மைனர்’ அவன் பேர்லே இந்த ‘பால்ட்டை ரெஜிஸ்தர்’ பண்ண முடியாது ‘காஸ்’கனெக்ஷனும் வாங்க முடியாது. அதான் உன் பேர்லே ரெஜிஸ்தர் பண்ணி ‘காஸ்’ கனெக்ஷனும் வாங்கி இருக்கான்.நீ வீணா அவன் பேர்லே ஆசையே வளத்துண்டு வறே.எனக்கு என்னவோ நீ அவர் மேலே ஆசை படறது ரொம்ப சரி இல் லே.நன்னா யோஜனைப் பண்ணு”என்று சொன்னதும் லதாவுக்கு ரொம்ப கோவம் வந்தது.உடனே அ வள்“நீ சொல்றது தான் ரொம்ப தப்பும்மா.நீ இன்னும் அவரை சந்தேக கண்ணோடு பாத்துண்டு வறே ம்மா.அவர் என் மேலே இன்னும் ரொம்ப ஆசை வச்சுண்டு இருக்கார்ம்மா.நீ நன்னா யோஜனை பண்ணும்மா”என்று சொன்னவுடன் காயத்திரி அவள் மனசிலே ‘பகவானே,இந்த பொண்ணு அவசரப்பட்டு அந்த பையன் மேலே ஆசையே வளத்துண்டு வறாளே.நீ தான் அவ மனசிலே பூந்து அவ மனசை மாத்தணும்’என்று வேண்டிக் கொண்டு ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தாள்.

நாம சொன்னதுக்கு அம்மா பதில் சொல்லாம இருக்காளே’ என்று மறுபடியும் கோவப்பட்டு “என்னம்மா,நான் சொன்னதுக்கு நீ பதில் ஒன்னும் சொல்லாம இருக்கே” என்று கேட்டதற்கு காயத் திதிரிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் “எனக்கு இப்போ ஒன்னும் சொல்ல தோணலே. என்னை வெறுமனே கேட்டு தொல்லை குடுக்காதே”என்று சொல்லி விட்டு சும்மா இருந்தாள்.அதற்கு மேலே லதா ஒன்னும் பே சாமல் சும்மா இருந்து விட்டாள்.லதாவுக்கு அவ அம்மா ஒன்னும் சொல்லாம இருந்து வந்தது பிடிக்க வில்லை.அவளுக்கு கோவம் வந்தது.அந்த கோவத்தை மெல்ல அடக்கிக் கொண்டாள் லதா.

“சார்,உங்க ‘வர்க்’ எல்லாம் நல்ல படியா முடிஞ்சுடுத்து.இந்த ‘ப்லாட்’ இருக்கும் தெருக் கோடி யில் இருக்கும் ‘ராம் காஸ் ஏஜென்சி’தான் காஸ் குடுக்கும் கடை.அந்த கடைக்காரன் ரெகுலேட்டரும், ரெண்டு காஸ் சிலிண்டரும் போட்டு இருக்கான்.இந்தாங்க அவன் கடை புக்.இதிலே நம்ம காஸ் ‘கனெக்ஷன்’ நம்பர் இருக்கு.இந்தாங்க ஏர்செல் டெலிபோன் ‘கனெக்ஷன்’ அடவைஸ்.ஏர் செல் காரன் ப்லாட்டிலே போன் ‘இன்ஸ்ட்ரு மென்ட்’ வச்சு இருக்கான்.உங்க ‘ப்லாட்’ டெலிபோன் நம்பர் 6864646” என்று சொல்லி நிறுத்தினார் ‘அக்கவுண்ட் ஆபீஸர்’ மோஹன்.உடனே ரமேஷ்” ரொம்ப ‘தாங்க்ஸ்’ மிஸ்டர் மோஹன்” என்று என்று சொல்லி ரிஜிஸ்தர் பத்திரம்,காஸ் ‘கனெக்ஷன்’ ஏர் செல் டெலிபோன் ‘கனெக்ஷன்’ எல்லா பேப்பர்களையும் தன் ‘ப்ரீப்’ கேஸில் வாங்கி வைத்துக் கொண்டான் ரமேஷ்.கொஞ்ச நேரம் ஆனதும் மோஹன் “சார் எல்லாத்துக்கும் சேர்த்து நீங்க எனக்கு ஒரு லக்ஷத்து நாப்பதாயிரம் ரூபாய் தரணும்”என்று சொன்னதும் ரமேஷ் தன் ‘ப்ரீப்’ கேஸைத் திறந்து மோஹனிட ம் ஒரு லக்ஷத்து நாப்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு செக் எழுதிக் கொடுத்தான்.செக்கை வாங்கிக் கொண்டு மோஹன் “ரொம்ப தாங்க்ஸ்”என்று சொல்லி விட்டு தன் காரை ஸ்டார்ட் பண்ணி கொண்டு போனார்.

‘‘பாக்டரியை’ விட்டு நாலு மணிக்கு கிளம்பி ரமேஷ் நேரே லதா வீட்டுக்கு வந்து காலிங்க் பெ ல்லை அழுத்தினான்.வாசல் கதவை காயத்திரி தான் திறந்தாள்.சுரேஷைப் பர்த்ததும் அவளுக்கு ஆச் சரியமாய் இருந்தது.அவள் “வாப்பா, உள்ளே வாப்பா”என்று ரமேஷை சிரித்த முகத்தோடு வரவேற்றாள். ’லதாவை காணோமே,மாமி தானே வாசல் கதவைத் திறந்து இருக்கா.இந்த சமயத்லே லதா எங்கே போய் இருப்பா’ என்று எண்ணம் இட்டவாறே காலை மெல்ல தன் அக்குள் கட்டையை ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு அவன் வழக்கமாக உட்காரும் சேரில் உட்கார்ந்தான்.ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது லதா பாத் ரூம் கதவைத் திறந்துக் கொண்டே”யார்ம்மா,காலிங்க் பெல் அடிச்சது” என்று கேட்டுக் கொண்டே வெளீயே வந்தாள்.ரமேஷூக்கு சந்தோஷம் தாங்கவில்லை.சுரேஷ் சேரில் உட்கா ர்ந்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த லதாவுக்கு வெட்கமாக இருந்தது.சமாளித்துக் கொண்டு உட னே லதா “வாங்கோ,வாங்கோ”என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் சொருகி இருந்த தன் புடவை யை எடுத்து கீழே விட்டாள்.ரமேஷ் “மாமி, ‘ப்லாட்டை’ லதா பேர்லே ரிஜிஸ்தர் பண்ணி ஆச்சு.லதா இந்தா அந்த ‘ப்லாட்’ ‘டாக்குமெண்ட்’.இதை அம்பாள் பாதத்திலே வச்சு,நன்னா வேண்டிண்டு வை” என்று சொல்லி தன் ‘ப்ரீப்’ கேஸை திறந்து ‘ப்லாடாக்குமெண்ட் பத்திரங்களை’ எடுத்து லதாவிடம் கொடுத்தான்.

லதாவும் அந்தப் பத்திரங்களை ரமேஷிடம் இருந்து வாங்கிப் போய் அம்பாள் பாதத்தில் வை த்து விட்டு அம்பாளை நன்றாக வேண்டிக் கொண்டாள்.பிறகு ரமேஷ் தன் ‘ப்ரீப் கேஸீல்’ இருந்து “மாமி,நம்ம ‘ப்லாட்’ இருக்கும் தெருக் கோடியில் இருக்கும் ‘ராம் காஸ் ஏஜென்சி’ தான் நமக்கு காஸ் குடுக்கும் கடை.அந்த காஸ் கடைக்காரன் ஒரு ரெகுலேட்டரும்,ரெண்டு காஸ் சிலிண்டரும், நம்ம ‘ப்லாட்லே’ போட்டு இருக்கான்.இந்தாங்க அவன் கடை புக்.இதிலே நம்ம காஸ் கனெக்ஷன் நம்பர் இருக்கு.இந்தா ங்க ஏர்செல் டெலிபோன் ‘கனெக்ஷன் அடவைஸ்’.ஏர்’செல்காரன் நம்ம ‘ப்லாட்டிலே’ போன் ‘இன்ஸ் ட்ருமென்ட்’ வச்சு இருக்கான்.நம்ம ஆத்து டெலிபோன் நம்பர் 6864646” என்று சொ ல்லி எல்லா பேப்பர்களையும் காயத்திரியிடம் கொடுத்தான்.காயத்திரி அவை களை ரமேஷிடம் இரு ந்து வாங்கிப் போய் ஜாக்கிறதையாக வைத்தாள்.லதா காபி போட்டுக் கொண்டு வந்து ரமேஷிடம் கொடுத்தாள். ரமேஷூம் லதா கொண்டு வந்துக் கொடுத்த காபி¢யை ரசித்துக் குடித்தான்.காபியை குடித்து விட்டு டவரா டம்லரை லதா கையில் கொடுத்தான்.”மாமி, நான் சீக்கி ரமா ஒரு வாத்தியாரைப் பார்த்து ப்லாட்டுக்கு ‘கிருஹபிரவேசம்’ பண்ண ஏற்பாடு பண்ணிட்டு,ஒரு சமையல்கார மாமியையும், ரெண்டு வே¨லாரியையும்,ஒரு வேலைகாரனையும் ஏற்பாடு பண்ணி விடறேன்.’கிருஹ பிரவேசம் நட ந்த அன்னிலே இருந்து நீங்களும் லதாவும் ஆனந்தனும் அந்த ‘ப்லாட்லே’ இருந்து வாங்கோ”என்று சொன்னான்.காயத்திரியும் லதாவும் மலைத்து போய் நின்று கொண் டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் காயத்திரி தன்னை சுதாரித்துக் கொண்டு “சமையல் வேலையை நான் கவனிச்சுண்டு வறேனே.அதுக்கு நீ ஒரு சமையல் வேலைக்காரியை போடணும்” என்று ஆச்சரியத்து டன் கேட்டாள்.உடனே ரமேஷ்” நீங்க இத்தனை வருஷமா சமைச்சது போறும் மாமி.இனிமே நீங்க ளும்,லதாவும் சமையல் வேலை எல்லாம் பண்ணாம வேளா வேளைக்கு நன்னா சாப்பிட்டு வந்துண்டு இருங்கோ” என்று சொல்லி சிரித்தான்.காயத்திரி அதற்கு மேலே ஒன்னும் பேசாமல் சும்மா இருந்து விட்டாள்.கொஞ்ச நேரம் போனதும் ரமேஷ் “எனக்கு ‘பாகடரி’லே முக்கியமான வேலை இருக்கு. நான் போயிட்டு வறேன்”என்று சொல்லி விட்டு தன் அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு மெல்ல எழுந்து வாசலுக்குப் போனான்.அவன் பின்னாலேயே லதா போய் ரமேஷ் காரில் ஏறிக் கொண்டதும் அவனை பார்த்து ”நீங்க ஏன் இப்படி எல்லாம் பண்றேள்.எனக்கும் அம்மாவுக்கும் ஒன்னும் புரிய¨லை. நாங்க ரெண்டு பேரும் நீங்க பண்ணீண்டு வறதை பாத்தா மலைச்சு போய் நின்னுண்டு இருக்கோம்” என்று சொன்னாள்.ரமேஷ் சிரித்துக் கொண்டே“நீயும்,உன் அம்மாவும்,ஆனந்தும்,அந்த ‘ப்லாட்’லே ஒரு கஷ்டமும் இல்லாம இருந்து வரணும்ன்னு தான் எல்லாம் செஞ்சு வறேன்.எனக்கு ரொம்ப நேரம் ஆயிடுத்து நான் போய் வறேன்” என்று சொல்லி விட்டு டிரைவரை காரை ‘ஸ்டார்ட்’ பண்ண சொன் னான்.கார் கிள்ம்பியதும் அவனுக்கு ‘டா’ ‘டா’ காட்டி விட்டு ‘போர்ஷனு’க்கு வந்தாள் லதா.

லதா வந்ததும் காயத்திரி “என்ன இது லதா,இந்த பையன் பண்றது எல்லாம் எனக்கு ரொம்ப புதிரா இருக்கு”என்று கேட்டதும் உடனே லதா “நானும் இதை தாம்மா அவர் கிட்டே கேட்டேன்.அவர் அதுக்கு சிரிச்சுண்டே ‘நீயும்,உன் அம்மாவும்,ஆனந்தும் அந்த ப்லாட்லே ஒரு கஷ்டமும் இல்லாம இருந்து வரணும்ன்னு தான் எல்லாம் செஞ்சு வறேன்’ன்னு சொல்லிட்டு கிளம்பிப் போயிட்டார்ம்மா” என்று சொன்னதும் காயத்திரி “அவன் ஏதோ ப்லான் வச்சுண்டு வறான்.உனக்கும் எனக்கும் அது தெரியலே.அவ்வளவு தான்”என்று சொல்லி வேலையை கவனிக்க போய் விட்டாள்.லதா மட்டும் தன் மனதில் ‘எல்லாம் நாம ஆசைப் படறாப் போல தான் முடியப் போறது’ என்று நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டு வந்தாள்.”நாம அவரை கல்யாணம் பண்ணிக் கொள்ளணும்ன்னு ஆசைப்படறோம். அவர் இதை ஒத்துக் கொள்ளணுமே.அப்பத் தானே நம் கல்யாணம் நடக்கும்.அம்மா சொல்றா மாதிரி அவர் வேறே ஒரு பணக்கார பொண்ணை கல்யாணம் பண்ணிண்டுவாரா’ என்று நினைக்கும் போது அவள் கண்கள் கலங்கியது.

அடுத்த நாளே ரமேஷ் பாலாட் ‘கிருஹபிரவேசத்துக்கு’ஒரு வாத்தியாரை ஏற்பாடு பண்ணி அவரையே எல்லா வைதீக சாமான்களையும் வாங்கிக் கொண்டு வரச் சொன்னான்.தன் சமையல் கார மாமாவிடம் வேறே எங்கேயோ சமையல் வேலை செய்துக் கொண்டு வந்த அவர் சம்சாரத்தை ‘ப்லாட் டிலெ’ சமையல் வேலை பண்ணி வர ஏற்பாடு பண்ணினான்.வேலை இல்லாம இருந்து வந்த தன் கார் டிரைவா¢ன் தம்பியை ப்லாட்டிலெ வேலை செஞ்சு வர ஏற்பாடு பண்ணினான் .’ப்லாட் சூப்ப்ர்வைஸ ர்’ கிட்ட போன் பண்ணீ ப்லாட்டுக்கு தினம் ரெண்டு பாக்கெட் பால் போட ஏற்பாடு பண்ணினான். அதற்கு உண்டான பணத்தை அவர் பாங்க் ‘அக்கவுண்ட்டில்’ போட்டான்.கூடவே காத்தாலே ‘ப்லா ட்டை’ பெருக்கி துடைக்க ஒரு வேலைகாரியையும்,பத்து பாத்திரம் தேய்க்க ஒரு வேலைகாரியையும் ஏற்பாடு பண்ணினான்.வாத்தியார் வர ஞாயித்துக் கிழமை நாள் நன்றாக இருக்கிறது என்று போன் பண்ணவே,அதற்கு ஒத்து கொண்டு அவரையே ‘கிருஹபிரவேசத்துக்கும்’ ‘புண்யாவசனத்துக்கும்’ வேண்டிய வைதீக சாமான்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வரச் சொன்னான்.கூடவே அன்னைக்கு காத்தாலே இருபது பேருக்கு நல்ல ‘ஹெவி டிபனும்’, மத்தியானம் சாப்பாட்டுக்கு நல்ல கல்யாண சா ப்பாடும் போட ஒரு நல்ல ‘கேடரிங்க்’ ஆளை ஏற்பாடு பண்ண சொன்னான்.உடனே அந்த வாத்தியார் எல்லா ஏற்பாடும் பண்ணுவதாய் சொல்லி விட்டார்.அந்த ‘பாலாட்டிலே’ நாம் எல்லா சௌகா¢யமும் பண்ணிட்டோம்.வாத்தியார் ‘கிரஹப்பிரவேசம்’ பண்ணிட்டார்னா,லதாவும்,ஆனந்தும்,அவ அம்மாவும் அந்த ‘பாலாட்’லே ஒரு கஷ்டமும் இல்லாம சந்தோஷமா இருந்து வருமா’ என்று நினைத்து சந்தோ ஷப் பட்டான்

ரமேஷ் வழக்கம் போல ஒரு ‘பிஸா’ பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்து காயத்திரி ஆத்துக்கு வந்து காலிங்க் பெல்லை அழுத்தினான்.லதா கதவைத் திறந்து “வாங்கோ” என்று சொல்லி எங்கோ இருந்த மர சேரை அவர் உட்கார சௌகா¢யமாக போட்டாள்.ரமேஷ் தன் அக்குள் கட்டையை ஒரு ஓர மாக சய்த்து வைத்து விட்டு லதா போட்ட மர சேரில் மெல்ல உட்கார்ந்தான்.ஆனந்திடம் அவன் வாங் கிக் கொண்டு வந்த ‘பிஸா’ பாக்கெட்டை கொடுத்தான்.ஆனந்த் அந்த பாக்கெட்டை வாங்கிக் கொண்டு “ரொம்ப தாங்ஸ் அங்கிள்”என்று சொல்லி விட்டு பாக்கெடை பிரிக்க ஆரம்பித்தான்.ஆனந்த் கொடு த்த ‘ப்ஸா’ துண்டை வாங்கிக் கொண்டு “மாமி,வர வாரம் ஞாயித்துக் கிழமை நம்ம ‘ப்லாட்’ ‘கிருஹப் பிரவேசத்துக்கும்,புண்யாவசனத்துக்கும்’ நாள் ரொம்ப நன்னா இருக்கு’ன்னு எங்க வாத்தியார் சொன் னார்.அன்னைக்கு காத்தாலே எட்டு மணிக்கு மேலே அமிர்த்த யோகம் வரதாம்.நாம எல்லாம் ஒரு ஏழரை மணிக்கு ‘ப்லாட்டு’க்குப் போய் எட்டு மணிக்கு ‘ப்லாட்டிலே’ பால் காய்ச்சிக் குடுச்சுட்டு, ’டிபனை’ சாப்பிட்டுட்டு,ஒன்பது மணிக்கு ரெடியா இருந்தோம்ன்னா வாத்தியார் ‘கிருஹப்பிரவேச த்தை’ ஆரம்பிச்சு,‘கணபதி ஹோமம்’,’நவக்கிரஹ ஹோமம்’ எல்லாம் பண்ணி முடிக்க ஒரு பன்னன்டு மணி ஆயிடும்.அப்புறமா எல்லோருக்கும் சாப்பாடு போடலாம் நான் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன்.நீங்களும் லதாவும் ஆனந்தும் காத்தாலே ரெடியா இருங்க.நான் காரில் வந்து உங்களே ‘ப்லா ட்டுக்கு’ அழைச்சுண்டு போறேன்.நீங்க சுவாமி படத்தையும்,மாமா படத்தையும் ஒரே ஒரு ஆவி வந்த பாத்திரத்தையும்,உங்க மூனு பேருடைய துணிமணிகளை புதுசா வாங்கி வந்த பெட்டியில் எடுத்து வச்சுக்குங்கோ”என்று சொன்னான் ரமேஷ்.

உடனே காயத்திரி “நீ கிருஹப் பிரவேசத்துக்கு இவ்வளவு ஏற்பாடு பண்ணி இருக்கயேப்பா. கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொன்னாள்.லதாவுக்கு சுரேஷ் சொன்னதைக் கேட்டு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.அந்த ‘ப்லாட்டுக்கு’ ‘கிருஹப் பிரவேசம்’ ஆயி¢ட்டா,நாம அந்த தே வலோக ‘ப்லாட்டிலே’ வாழ்ந்து வரலாம்’என்று ஆசைப் பட்டாள்.நாம அந்த ‘ப்லாட்டுக்கு’ப் போயிட் டா மெல்ல நம்ம காதலை சுரேஷ் கிட்டே சொல்லி,அவர் ஒத்துண்டவுடன்,அவரை கல்யாணம் பண் ணிக்கணும்’என்று தன் மனதில் திட்டம் போட்டாள்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு ரமேஷ் “அப்போ நான் கிளம்பறேன் மாமி.ஞாயித்துக் கிழமைக் காத்தாலே ஒரு ஏழரை மணிக்கெல்லாம் நம்மாத்துக்கு வந்து விடறேன்.நீங்க மூனுபெரும் ரெடியா இருங்கோ”என்று சொல்லி விட்டு மெல்ல எழுந்து தன் காலை ஊனி வைத்து,அக்குள் கட்டையை எடுத்து வைத்துக் கொண்டு மெல்ல நடந்து வாசலுக்கு வந்தான்.லதா அவன் கூடவே கார் வரைக்கும் போய் அவனை ஒரு காதல் பார்வைப் பார்த்து விட்டு அவனுக்கு ‘ டா’‘டா’க் காட்டி விட்டு வேகமாக வீட்டுக்கு ‘போர்ஷனுக்கு வந்தாள்.

ரமேஷ் ரமணீயம் பில்டர்ஸ் M.D. ராமநாதன்,அவர் ‘வைப்’,வினோத் அவர் வைப்,தன்னுடை ய ரெண்டு ‘மானேஜிங்க் டைரக்டர்கள்’,அவர்கள் ‘வைப்’,’அக்கவுண்ட்ஸ் ஆபீசர்’,அவர் ‘வைப்’, ‘ரமணீயம் பில்டர்ஸ்’ ‘அக்கவுண்ட்ஸ் ஆபீஸர்’ மோஹன்,அவர் ‘வைப்’,எல்லோருக்கும் போன் பண் ணி,ஞயிற்றுக் கிழமை ‘ப்லாட்டுக்கு’ நடக்கும் கிருஹப் பிரவேசம் வருபடி அழைத்தான்.அவர்களும் நிச்சியம் வருவதாக சொன்னார்கள்.ஞாயிற்றுக் கிழமை காலே ரமேஷ் எழுந்து குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு எழு மணிக்கு கிளம்பி லதா வீட்டுக்கு வந்து .காலிங்க் பெல்லை. அழுத்தினான்.லதா தான் வந்து வாசல் தவைத் திறந்தாள்.லதா ரமேஷ் வாங்கிக் கொடுத்து இருந்த ஒரு புது பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு இருந்தாள்.லதாவை இந்த மாதிரி ஒரு புது பட்டுப் புடவையில் பார்த்த ரமேஷூக்கு ரொம்பவும் சந்தோஷமாய் இருந்தது.அவன் உடனே “நீ இந்த பட்டுப் புடவைலே ரொம்ப அழகா இருக்கே லதா”என்று சட்டென்று சொல்லி விட்டான்.லதாவுக்கு சுரேஷ் தன்னை இப்படி புகழ்ந்தது ரொம்ப பிடித்து இருந்தது.

லதா சந்தோஷப பட்டு “வாங்கோ, வாங்கோ,உள்ளே வாங்கோ” என்று சொல்லி சுரேஷை உள் ளே வரவேற்றாள்.ரமேஷ் மெல்ல தன் காலை ஊனி வைத்து உள்ளே வந்து தன் அக்குள் கட்டையை ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு அவன் வழக்கமாக உட்காரும் சேரில் உட்கார்ந்தான்.காயத்திரியு ம் ஒரு பட்டுப் புடவைக் கட்டிக் கொண்டு இருந்தாள்.ரமேஷ் தன் டிரைவரை கூப்பிட்டு மூனு பாக்சை யும்,படங்களையும்,ஆவி வந்த பாத்திரத்தையும் காரில் வைக்க சொன்னான்.”கிளம்பலாம்ப்பா” என்று மாமி சொன்னதும் ரமேஷ் மெல்ல எழுந்து தன் அக்குள் கட் டையை எடுத்து வைத்து கொண்டு வாச லுக்கு வந்தான்.காயத்திரி ஆனந்தையும் அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.எல்லாரும் வெளி யே வந்ததும் லதா வாசல் கதவைப் பூட்டிக் கொண்டு கார் கிட்டே வந்தாள்.ரமேஷ் காரின் முன் சீட்டி ல் ஏறிக் கொண்டான்.காயத்திரியும்,ஆனந்தும்,லதாவும் பின் சீட்டில் ஏறிக் கொண்டதும்,டிரைவர் காரை ‘ஸ்டார்ட்’ பண்ணி ‘ப்லாட்டுக்கு’க் கொண்டு வந்து நிறுத்தினான்.காரை விட்டு கீழே இறங்கி யதும் ரமேஷ் ‘ப்லாட்டின்’ முகப்பில் ரெண்டு வாழை மரம் கட்டி நிறைய கலர் துணிகள் போட்ட பந் தல் போடப் பட்டு இருந்ததைப் பார்த்து சந்தோஷப் பட்டான் காயத்திரியும்,ஆனந்தும்.லதாவும் கீழே இறங்கினார்கள்.லதாவுக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது. ரமேஷ் எல்லோரையும் அழைத்துக் கொ ண்டு ‘லிப்ட்டில்’ ஏறி வந்து,காயத்திரி மாமியை ‘ப்லாட்’ கதவைத் திறக்கச் சொன்னான்.எல்லோரு ம் ‘ப்லாட்’ உள்ளே போனார்கள்.‘ப்லாட்டில்’ இருந்து நாதஸ்வர ஓசை கணீரென்று கேட்டுக் கொண் டு இருந்தது.டிரைவர் மூனு ‘பாக்ஸ்’ளையும்,பாத்திரத்தையும்,கொண்டு வந்து உள்ளே வைத்தான்.

‘ப்லாட்டுக்கு’ உள்ளே வந்ததும் ரமேஷ் காயத்திரி மாமியை பார்த்து “மாமி,மணி எட்டடிச்சதும், நீங்க பாலைக் காய்ச்ச ஆரம்பியுங்க.பால் காயறதுக்குள்ளாற வாத்தியார் வந்துடுவார்.அவர் வந்ததும் காய்ச்சின பாலை சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணிக் கொடுத்தார்ன்னா,நீங்க அந்த பாலை எங்க மூ னு பேருக்கும் குடுத்து நீங்களும் குடியுங்கோ”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது “இதோ நான் வந்து விட்டேன்”என்று சொல்லிக் கொண்டு வாத்தியார் ப்லாட்டுக்கு உள்ளே வந்தார்.அவர் கூட இன்னும் ஐஞ்சு வாத்தியார்கள் வந்தார்கள்.காயத்திரி மாமி தான் கொண்டு வந்து இருந்த ஆவி வந்த பாத்திரத்தில்,பால் பாக்கெட் ரெண்டையும் உடைத்து பாலைக் கொட்டி புது காஸ் அடுப்பில் வை த்துக் காய்ச்சினாள்.அவளுக்கு அந்த ‘கிச்சனை’ப் பார்த்ததும் அவளுக்கு லலிதா மாமி வீட்டில் இருந் த ‘கிச்சன்’ போல் விசாலமாக எல்லா வசதிகளுடன் இருந்தது ஞாபதகத்துக்கு வந்தது.’இந்த ‘ப்லாட்’ நம்முடைய பொண்ணு லதாவுடையது’ என்று நினைக்கும் போது அவளுக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.லதா தன் அம்மாப் பக்கத்தில் நி¢ன்றுக் கொண்டு இருந்து ‘கிச்சனை’ பார்த்துக் கொண்டு இருந்தாள்.அவளுக்கும் இந்த ‘ப்லாட்டுக்கு’த் தான் சொந்தக்காரின்னு நினைக்கும் போது ரொம்ப பெருமையாய் இருந்தது. இந்த ‘ப்லாட்டை’தனக்கு வாங்கிக் கொடுத்த சுரேஷூக்கு தன் மனதில் நன்றி சொன்னாள்.பால் காய்ந்ததும் காயத்திரி பாலை கீழே இறக்கி வைத்து விட்டு வாத்தியரைக் கூப் பிட்டாள்.உடனே வாத்தியார் வந்து அந்தப் பாலை சுவாமி படத்தின் முன்னால் வைத்து நைவேத்திய ம் பண்ணி முடித்ததும் காயத்திரி தான் கொண்டு வந்து இருந்த சக்கரையையும் போட்டு,புதியதாக வாங்கி வந்த எவர் சில்வர் பவரா டம்லா¢ல் எல்லா வாத்தியார்களுக்கும் ரமேஷூக்கும் கொடுத்தாள்.

பிறகு அவளும்,லதாவும்,ஆனந்தும் பாலை குடித்தார்கள்.‘காடரிங்க்’ ஆட்கள் வந்து இருந்த எல்லோருக்கும் அவர்கள் கொண்டு வந்த ‘டிபனை’க் கொடுத்தார்கள்.ரமேஷ் பாலை குடித்துக் கொ ண்டு இருக்கும் போது ‘பழைய மானேஜிங்க் டைரக்டரும்’ அவர் மணைவியும் ப்லாட்டுக்கு வந்தார் கள்.ரமேஷ் உடனே எழுந்து அவர்களை உள்ளே வரவேற்று ‘காடரிங்க்’ ஆட்களை அவர்களுக்கு கா ப்பி ‘டிபன்’ தரச் சொன்னான்.கொஞ்ச நேரத்திற்குள் ரமேஷ் ‘பாக்டரி’ ‘மானேஜிங்க் டைரக்டர்கள், ‘அக்கவுண்ட்ஸ் ஆபீஸர்’ அவர்கள் மணைவிகள் எல்லோரும்‘ப்லாட்டுக்கு’ உள்ளே வந்தார்கள். ’ரமணீயம் பில்டர்ஸ்’ M.D’அவர் மணைவி ’அக்கவுண்ட்ஸ் ஆபீசர்’ அவர் மணைவி,வினோத்,அவர் மணைவி எல்லோரும் ‘ப்லாட்டில்’ ஒன்றாக நுழைந்தார்கள்.‘காடரிங்க்’ ஆட்கள் எல்லோருக்கும் ‘டிபன்,’ காபி,கொடுத்தார்கள்.வாத்தியார் ஹோமம் பண்ண ஏற்பாடுகள் பண்ணிக் கொண்டு இருந் தார்.ஏற்பாடு எல்லாம் பண்ணி முடிந்த பிறகு வாத்தியார் ரமேஷைப் பார்த்து “ஆரம்பிக்கலாமா” என்று கேட்டதும் “ஆரம்பிக்கலாம்“என்று ரமேஷ் சொன்னவுடன்,எல்லா வாத்தியார்களும் கணீரென்று மந் திரங்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்.

வாத்தியார் எல்லா ஹோமங்களையும் முடித்து விட்டு சுவாமிக்கு கற்பூரம் ஏற்றி எல்லா சுவாமிக ளுக்கும் காட்டி விட்டு வந்தவாளுக்கு எல்லாம் காட்டினார்.எல்லோரும் வாத்தியார் காட்டினக் கற்பூ ரத்தை கண்ணில் ஒத்திக் கொண்டார்கள்.பிறகு ஒரு வாத்தியார் ‘புன்யாஹவாசனம்’பண்ணின ஜலத் தை ‘ப்லாட்டு’ பூராவும் தெளித்தார்.பிறகு எல்லாருக்கும் ‘புண்யாஹவ சன’ ஜலத்தைக் கொடுத்தார். எல்லோரும் அந்த ஜலத்தை வாங்கி சாப்பிட்டார்கள்.பிறகு ஒருத்தர் ஒருத்தராய் அவர்கள் வாங்கி வந் த ‘கிப்டை’ வாத்தியார் இடம் கொடுத்து ஓதிக் கொடுத்தார்கள். ஒரு ‘பழைய மானேஜிங்க் டைரக்டர்’ ஒரு வெள்ளிக் குத்து விளக்கை கொடுத்தார்.ஒரு ‘பாக்டரி’ ‘மானே ஜிங்க் டைரக்டர்’ எவர்சில்வர் ‘டின்னர்’ செட்டை பரிசாக கொடுத்தார்.இன்னொருத்தர் ஒரு பொ¢ய அலமேலு வெங்கடாஜலபதி தஞ்சாவூர் ‘பெயின்டிங்கை’ பரிசாகக் கொடுத்தார்.வினோத் ஒரு பொ¢ய ‘ஹாட்பாக் செட்டை’ கொடுத்தார். ‘அக்கவுண்ட்ஸ் ஆபீசர்கள்’ ரெண்டு பொ¢ய வெள்ளித் தட்டை பரிசாகக் கொடுத்தார்கள்.ரமேஷ் எல்லா பரிசையும் லதாவிடம் கொடுத்தான்.லதா அவைகளை எல்லா ம் கொண்டுப் போய் உள்ளே வைத்தாள்.லதா அவைகளை ‘காட்ரெஜ்’ பீரோவில் வைத்து பூட்டினாள்.

வாத்தியார்கள் சாப்பிட்டு முடிந்ததும் ரமேஷ் எல்லா வாத்தியார்களுக்கும் ,தேங்காய், வெத்தி லை பாக்கு பழம்,எல்லாம் வைத்து தக்ஷணை கொடுத்து சம்பாவனை பண்ணி, அவர்களுக்கு ‘காட ரிங்க்’ ஆட்கள் கொண்டு வந்து இருந்த ‘கிருஹப்பிரவேச’ தாம்பூலப் பையைக் கொடுத்து அவர்களை கௌரவித்தான்.வாத்தியார்கள் கிளம்பிப் போனதும்’ காடரிங்க்’ ஆட்கள் எல்லோருக்கும் பொ¢ய வா ழை இலைப் போட்டு சாப்பாடு பறி மார ஆரம்பித்தார்கள்.ரமேஷூம் ‘பழைய மானேஜிங்க் டைரக்டரும் ‘டேபிளில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.மூனு கா¢,பச்சடி,ஸ்வீட் பச்சடி,அவியல்,வறுவல்,கலந்த சாத ம்,அப்பளம்,சாம்பார், மோர் குழம்பு, ரசம்,வடை,பாயசம்,ரெண்டு ஸ்வீட்,தயிர், ஐஸ்க்ரீம் வாழைப் பழம் எல்லாம் போட்டு சாப்பாட்டை அமர்க்களப் படுத்தி இருந்தார் காடரிங்க் ஓனர்.சாப்பாட்டை இவ்வளவு ‘ஜாம்’,‘ஜாம்’ என்று பண்ணி இருந்ததை சாப்பிட்ட எல்லோரும் ‘காடரிங்க்’ ஓனரை வெகுவாகப் பாரா ட்டினார்கள்.எல்லோரும் சாப்பிட்டு எழுந்ததும் ரமேஷ் எல்லோருக்கும் ‘கிருஹப் பிரவேச’ முஹ¥ர்த்த ப் பையை பவ்யமாகக் கொடுத்து விட்டு அவர்கள் ‘கிருஹப்பிரவேசத்துக்கு’ வந்ததற்கு நன்றி சொல்லி விட்டு தன் அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு அவர்களுடன் கார் வரைக்கும் கூடப் போய் அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு ‘ப்லாட்டுக்குள்’வந்தான்.காயத்திரி ‘ராத்திரி சாப்பாடு சமை க்க வேணாமே’ என்று நினைத்து,‘காட்ரிங்க்’ ஆட்களிடமிருந்து ராத்திரி வேளைக்கு வே ண்டிய சாப் பாட்டையும்,கொஞ்சம் ஸ்வீட்டுகளையும் வாங்கி வைத்துக் கொண்டாள்.‘காடரிங்க் ஒனர் போன பிறகு,ரமேஷ் காயத்திரி மாமியை பார்த்து” மாமி,நீங்களும் லதாவும் ஒரு மணி நேரம் பெட் ரூமில் ‘ரெ ஸ்ட்’ எடுத்துண்டு வாங்கோ.நான் ஆனந்துடன் டீ.வீ.யில் குழந்தை ‘ப்ரோக்கிராம்’ பாத்துண்டு இருக் கேன்”என்று சொல்லி காயத்திரி மாமியையும் லதாவையும் பெட் ரூமுக்கு அனுப்பி வைத்து விட்டு ஆனந்துடன் ‘டீ.வீ’.யில் ஒரு குழந்தை ‘ப்ரோகரா¡மை’ப் பார்த்துக் கொண்டு அதைப் பத்தி விவா¢த் துக் கொண்டு இருந்தான்.

‘பெட்ரூமுக்கு’ப் போன லதா அம்மாவைத் தூங்க விடவில்லை.அம்மாவை “அம்மா,நாம ‘பெட்’ ரூமை விட்டு வெளியே போகும் போது, நீ அவா¢டம் என் ஆசையைச் சொல்லி என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லணும்மா”என்று நச்சரித்துக் கொண்டு இருந்தாள்.காயத்திரி “நான் எப்படி அவன் கிட்டே திடீரென்று உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றது.அவன் என்னை என்ன நினைச்சுப்பான்.கிருஹப் பிரவேசத்துக்கு வந்த அவன் ‘ப்ரெண்ட்ஸ்களை’ பாத்தியா.எல்லோரும் காரும் கலப்பையும்,விலை ஒசந்த பட்டுப் புடவையும் கட்டிண்டு,இங்கிலீஷ்லே பேசிண்டு இருந்தா. நாம ரெண்டு பேரும் அவா கால் தூசுக்குக் கூட காண மாட்டோம்.அப்படி இருக்கும் போது நான் திடீர்ன்னு அவன் கிட்டே போய் ‘நீ என் பொண்ணு லதாவைக் கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு எப்படி சொல்றது.எனக்கு பயமா இருக்கு”என்று சொன்னாள்.லதாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.”என்னம்மா, நீ இப்படி சொல்லி தட்டிக் கழிக்கிறே.நான் உன்னை தானேம்மா இது நாள் வரைக்கும் நம்பிண்டு இரு ந்தேன்.நீ இப்போ வந்து இப்படிச் சொன்னா எப்படிம்மா.நீ அவர் கிட்டே எனக்காகச் சொல்லித் தான் ஆகணும்மா”என்று பிடிவாதம் பிடித்தாள் லதா.காயத்திரி ஒரு வழியும் தெரியாமல் தவித்தாள்.அவளு க்கு என்னப் பண்ணுவது என்று தெரியவில்லை.மணி நாலடித்ததும் காயத்திரி ‘பெட் ருமை’ விட்டு வெளியே வந்தாள்.லதாவும் அம்மா பின்னாலேயே மெல்ல வந்தாள்.வாசல் ‘காலிங்க் பெல்’ அடித்தது. ’காலிங்க் பெல்’ சத்தம் ஒரு பாட்டு மாதிரி பாடியது.லதா போய் வாசல் கதவைத் திறந்தாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *