நியூ அட்மிஷன் ஹெட் மாஸ்டர்

 

மேசை மீதிருக்கும் சுழலும் பூமியை சுழற்றிக்கொண்டிருந்தார் ஹெட் மாஸ்டர்

அருகில் இருந்த அலமாரியில் பதிவேடு எடுத்துக்கொண்டிருந்த உதவி ஆசிரியை “சார் சுத்துது…”

“ஆமா நான்தான்…”

உதாவி ஆசிரியை ஹெட் மாஸ்டரை பார்த்துவிட்டு “சார் நான் பேன் சுத்துறத சொன்னேன்… பவர் வந்துடுச்சு…”

“நான் இந்த பூமி சுத்துறத சொன்னேன்…”

சற்று நேரத்தில் ஒரு புதிய நபர் ஹெட் மாஸ்டர் அலுவலகத்தில் நுழைய அனுமதி கேட்கிறார். “சார் மே ஐ கம் இன்?”

“ப்ளீஸ் கம் ” எதிர் இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு… சார் என்ன விஷயமா வந்திருக்கீங்க..”

“என் பேரு மதன்..”

“நைஸ் நேம்..”

“என் பையன் பேரு வருண்..”

“வெரி நைஸ் நேம்.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே..”

“என்ன கேட்டீங்க..”

“என்ன விஷயமா வந்திருக்கீங்க..”

“7th ஸ்டாண்டர்ட் க்கு ஒரு அட்மிஷன் வேணும்..”

“நீங்க இன்னும் 7th ஸ்டாண்டர்டே முடிக்கலையா..”

“ஏன் கேட்கறீங்க..”

“அட்மிஷன் கேட்டீங்களே..”

“என் பையனுக்கு ஸ்கூல் அட்மிஷன் வேணும்..”

“ஓஹ்.. ஓகே ஓகே.. இதுக்கு முன்னாடி எங்க படிச்சான்..”

“எங்க படிச்சான்..”

“வாட் …!”

“இல்ல எங்க ஊர்… சொந்த ஊர்ல படிச்சான்..”

“எதுக்கு இப்போ இங்க வந்தீங்க..”

“ஸ்கூல் அட்மிசனுக்கு..”

“ம்… இந்த ஊருக்கு இப்போ ஏன் வந்தீங்க..”

“அதுவா எனக்கு ட்ரான்ஸபெர்… சோ..”

“டிரான்ஸபெர் வாங்குறதுக்கு முன்னாடியே இங்க ஸ்கூல்ல இடம் இருக்கான்னு கேட்டுட்டு டிரான்ஸபெர் வாங்க மாட்டீங்களா..”

“ஏன் சார்..”

“பாருங்க நீங்க டிரான்ஸபெர் வாங்கிட்டீங்க ஆனா எங்க ஸ்கூல்ல இடம் கிடைக்கிறது குதிரைக் கொம்பு..”

“நீங்க மட்டும் இடம் கொடுத்துப் பாருங்க சார்.. என் பையன் உங்க ஸ்கூலுக்கே பேர் தேடித்தருவான்..”

“எங்க ஸ்கூலுக்கு ஏற்கனவே பேர் வச்சாச்சு…” உதவி ஆசிரியையை பார்த்து கேட்டார் ஹெட் மாஸ்டர், “அம் ஐ ரைட் ?”

உதவி ஆசிரியை கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டே,” அதெல்லாம் ஆரம்பத்திலேயே வச்சிட்டாங்க சார்..”

ஹெட் மாஸ்டர் வந்தவரைப் பார்த்து, “பாத்தீங்களா நான் சொல்லல..”

“நான் நல்ல பேர் தேடித்தருவான்னு சொன்னேன்..”

“இப்ப இருக்க பெரே நல்ல பேர்தான்..”

“சார் ரொம்ப விளையாட்டா பேசுறீங்க.. இப்ப மட்டும்… ஒரே ஒரு அட்மிஷன் கொடுங்க…”

“நம்ம ஸ்கூல்ல 7th அட்மிசனுக்கு seat இருக்கா..”

உதவி ஆசிரியை கம்ப்யூட்டர் செக் பண்ணிவிட்டு… “இருக்கு சார்.. ஒண்ணே ஓண்ணு இருக்கு.. ஆனா ரொம்ப பின்னாடி சீட் ஸ்க்ரீன் மறைக்கும்..”

ஹெட் மாஸ்டர் தனக்குள் “எந்த நேரமும் சினிமா டிக்கெட் புக்கிங் பிரௌசிங்க்லயே இருக்க வேண்டியது..” பின்னர் கேட்டார் ” செக் பார் 7th அட்மிஷன்”

பின்னர் ஹெட் மாஸ்டர் வந்தவரைப் பார்த்து, “சரி உங்களுக்கு எத்தனை அட்மிஷன் வேணும் ஒண்ணா ரெண்டா?”

“என்னோட ஒரே பையனுக்கு ஒரே ஒரு அட்மிஷன் வேணும்..”

“ஓ. கே”

“சரி… உங்க ஸ்கூல்ல என்னென்ன கோ-ஆக்டிவிட்டீஸ் இருக்கு..”

“சாரி நீங்க கோபப்படுற மாதிரி ஆக்டிவிட்டீஸ் எல்லாம் இங்க எதுவும் இல்ல..”

“நான் என்ன கேட்டேன்..”

“அதான் கோபப்படுற மாதிரி…. ”

“கேம்ஸ் ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் இப்படி என்னென்ன இருக்குன்னு கேட்டேன்..”

“அதுக்கு ஏன் கோபப்படுறீங்க..”

“சரி கோபப் படாமகேட்குறேன் சொல்லுங்க..”

“சரி கேளுங்க சொல்றேன்..”

“என்னென்ன அவுட் டோர் கேம்ஸ் இருக்கு..”

“சாரி நாங்க பிள்ளைங்க மேல ரொம்ப கவனமா இருப்போம்… ஸ்கூல் காம்பௌண்ட விட்டு வெளில எல்லாம் அனுப்பமாட்டோம்..”

“ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்காவது அனுப்புவீங்களா…”

“இப்ப… நீங்க காமெடி பண்றீங்க..”

வந்தவர் அமைதியாக முறைத்துப் பார்க்கிறார்

ஹெட் மாஸ்டர் தொடர்ந்தார் “வேற கேள்வி இருக்கா..”

“ரொம்ப தேங்க்ஸ்..”

“ஓகே ஆபீஸ் க்கு போங்க நான் கால் பண்ணி சொல்லிடறேன் நீங்க மத்த பார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு அட்மிஷன் வாங்கிக்கோங்க..”

“ரொம்ப தேங்க்ஸ்..” போன் எடுத்து டைப்செய்கிறார்.

“என்ன பண்றீங்க..”

“என் பையனுக்கு ஸ்கூல் அட்மிஷன் கிடைச்சத FaceBook ஸ்டேட்டஸ் போட்டிட்டிருக்கேன்..”

“போடுங்க போடுங்க… நம்ம ஸ்கூலப் பத்தி நாலு பேருக்கு தெரியட்டும்..”

******

வந்தவரை அனுப்பிய பின்னர் ரௌண்ட்ஸ் கிளம்பினார் ஹெட் மாஸ்டர், சற்று நேரத்தில் எதிரில் அட்மிஷன் கேட்டு வந்தவர் எதிர்பட, “அட்மிஷன் வாங்கிட்டிங்களா..”

” இல்ல சார்.. ”

“வொய்..”

“நீங்க சொல்றதுக்காகவெல்லாம் அவுங்க அட்மிஷன் கொடுக்க மாட்டங்களாம்..”

“என்ன சொல்றீங்க..”

“ஆமா… அப்படித்தான் ஆபீசுல சொன்னாங்க..”

“மறுபடி சொல்லுங்க..”

“நீங்க சொல்றதுக்காகவெல்லாம் அவுங்க அட்மிஷன் கொடுக்க மாட்டங்களாம் ..”

“ஏனாம்..”

வந்தவர் கையில் இருக்கும் போனிலிருந்து facebook அலெர்ட் வருகிறது… எடுத்துக் பார்க்கிறார்… “உங்க பேச்சை நம்பி FaceBook ஸ்டேட்டஸ் போட்டேன்… ஊர்ல FaceBook பாக்காதவனெல்லாம் இன்னிக்கு பார்த்திருப்பான் போல…. 500 லைக்ஸ் தாண்டி போய்ட்டிருக்கு… ஏகப்பட்ட கமெண்ட்ஸ் க்ரீட்டிங்ஸ்… ம்….” எரிச்சலாக முறைக்கிறார்..”

“ஏன் அட்மிஷன் தரமாட்டாங்க..”

“ஏன்னா நீங்க இந்த ஸ்கூல் ஹெட் மாஸ்டர் இல்லையாம்…”

எதிரில் மூச்சிரைக்க ஓடி வந்தார் ஹெட் மாஸ்டரின் அந்த ஆபீஸ் அசிஸ்டன்ட், “சார்… உங்கள எங்கெல்லாம் தேடுறது.. வழக்கம்போல மறந்துட்டு… நம்ம ஸ்கூலுக்கு போகாம.. வேற ஸ்கூலுக்கு வந்திருக்கீங்க…! 

தொடர்புடைய சிறுகதைகள்
அழைப்பு மணி ஓசை கேட்கிறது. அடுப்படியில் இருந்து பிரேமி, என்னங்க காலிங் பெல் சத்தம் கேட்கலியா... கதவைத் திறந்தா என்ன... ம்... பெல் சத்தம் உனக்கும்தானே கேட்குது... நீ போய் கதவை திறயேன்... அறைக்குள் இருந்து பதில் கொடுத்தான் பிரகாஷ். அழைப்பு மணி மீண்டும் ...
மேலும் கதையை படிக்க...
பேருந்து நிலையத்திலிருந்து வேகமாக வீடு வந்த பிரகாஷ் முதல் வேலையாக தன் கைபேசியில் பிரவீன் எண்ணைத் தேடி அழைத்தான். "என்னடா..." "டேய்.. எனக்கு உடனடியா... ஒரு கவிதை எழுதணும்..." "என்னமோ சர்வர்கிட்ட சாப்பாடு ஆர்டர் பண்ற மாதிரி சொல்ற.." "எப்படி வேண்ணா வச்சுக்க.... பட் ஐ நீட் ...
மேலும் கதையை படிக்க...
"மாப்ளெ சீக்கிரம் எழுந்திரிடா, இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர் அட்மிஷன், நிறைய கலருங்க வரும் எல்லாருக்கும் நாமதான் ஆரத்தி எடுக்கணும்", எழுப்பினான் சேகர், புரண்டு படுத்த கவிதாஞ்சனுக்கு இவற்றில் அவ்வளவாக ஆர்வம் இல்லை, "நல்ல கனவைக் கலைச்சுட்டியே..., போடா...", மறுபடியும் போர்வையை இழுத்துப் ...
மேலும் கதையை படிக்க...
சமையற்கட்டில் தேநீர் ஆற்றிக்கொண்டிருந்தான் பிரகாஷ். குடித்துவிட்டு நாளை இன்டெர்வியுவிற்கு நன்றாக தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆற்றிய தேநீரை ஒரு குவளையில் எடுத்துக்கொண்டு தன் அறை நோக்கிச்சென்று கொண்டிருந்தான், எதிர்பாராத விதமாக எதிரில் நண்பன் சினேகன் வரவைப்பார்த்து "வாடா இப்பதான் ...
மேலும் கதையை படிக்க...
கொட்டும் மழையில் மெட்டியில்லாத இரு பாதங்கள் மெல்லத் தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களாகப் பார்த்துப் பார்த்து நடக்க, மாலை இளம் இருட்டு, ஒதுங்கிநிற்க ஒத்துழைக்காத காரணத்தால் நனைந்துகொண்டே வீட்டை அடைந்தாள் வித்யா. "ஏம்மா இப்படி நனைஞ்சிட்டு வர்றியே போகும்போதே குடை கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
எதையோ மறந்து விட்டேனே... என்ற சிந்தனையிலேயே நடந்து சென்றுகொண்டிருந்தார் சிவநேசன். கையில் ராஜன் மளிகைக் கடையில் வாங்கிய பொருட்கள் இட்டு வைத்த பை... அப்படி என்ன மறந்திருப்பேன்... வழியில் பேருந்து நிழற்குடையின் நிழலில் நின்று அங்கிருக்கும் சிமெண்ட் இருக்கையில் பையினை வைத்து ...
மேலும் கதையை படிக்க...
வெள்ளிக் கிழமை மாலை, மாஸ்டா வின் வேகம் மணிக்கு 80 மைல் என்று பறந்து கொண்டிருந்தது காரை செலுத்திக்கொண்டிருந்த விவேக்கின் மனவேகம் அதனினும் மேலாய் குதித்தோடிக் கொண்டிருந்தது காரணம் தான் அந்த மூன்றாவது குறுஞ்செய்தியை அனுப்பிவிட வேண்டுமென்பதே. இரண்டு குறுஞ்செய்திகள் வந்துவிட்டது ...
மேலும் கதையை படிக்க...
“நடேசா வாக்குச் செலுத்தீட்டியா..” பக்கத்துத் தேநீர்க்கடையிலிருந்து வந்த குரலுக்கு, காய்கறி முருகனின் மிதிவண்டியின் பின் சக்கரத்தின் மென் சக்கரத் துளையை நீக்கிக் கொண்டிருந்த நடேசன் நிமிர்ந்து பார்த்தான் அது வாத்தியார் அசோகன். அவரிடம்தான் நடேசன் ஆறு முதல் எட்டு வரை படித்தான். ...
மேலும் கதையை படிக்க...
பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர்
கவிதை சொன்னா காதல் வரும்!
இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள்
யாருக்கு இண்டெர்வியூ?
மெல்லச் சிரித்தது அல்லிக்குளம்!
அப்பாவின் துணை
3வது குறுஞ்செய்தி
தரைச் சீட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)