பேகனின் பெருமை

 

பரிசில் பெற்றுத் திரும்பிய பரணர், ஒரு பாணனைக் கண்டார். பேகன் சிறப்பைப் பாணனுக்குக் கூறினார்.

“விறலி சூடும் மாலையும் பாணன் சூடும் பொற்றாமரையும் மார்பில் புரளக் கடுந் தேரை நிறுத்திக் காட்டிடை இளைப்பாறுகின்ற நீங்கள் யார்?” என்றுகேட்கும் இரவலனே, சொல்லுகின்றேன் கேள்:

பேகனைக் காண்பதற்கு முன், நான் ஏழையாய் இருந்தேன். நான் பேகனைக் கண்ட பின்னரோ, எனக்குத் தேரும் கிடைத்தது. சீரும் கிடைத்தது.

பேகன் எப்படிப்பட்டவன் என்று கேள்:

ஒரு நாள் மயில் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான் பேகன். அதன் ஆட்டத்தில் மனதைப் பறிகொடுத்தான். தன் பொன்னாடையை எடுத்து, மயிலின் மேனியைப் போர்த்தினான்… மயில் உடுத்தாது என்று தெரிந்தும் பரிசு கொடுத்த பேகன், உடுக்கவும் உண்ணவும் ஏங்கும் உனக்குப் பரிசு தராமல் இருக்க மாட்டான். எனெனில் அவன் மறுமையை நோக்கிக் கொடுப்பவன் அல்லன்; இரவலர் வறுமையை நோக்கிக் கொடுப்பவன் என்றார் பரணர் பேகனின் பெருமையை நோக்கிச் சென்றான் பாணன்.

- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம் 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு குழந்தை பிறந்தது. அது, குருடு! அழகிய காட்சியைப் பார்க்க முடியாது. மற்றொரு குழந்தை பிறந்தது! அது, உருவமற்ற பிண்டம். கை இல்லை . கால் இல்லை. கண் இல்லை. வாயும் கூட இல்லை. மற்றும் சில குழந்தைகள் பிறந்தன. அவை, ...
மேலும் கதையை படிக்க...
மறக்குல மங்கை . ஒரே புதல்வன். அவனும் கைக்குழந்தை; போர் முரசு முழங்கியது. கணவன் விடை பெற்றுப் போய்விட்டான். போர் முடிந்தது. சிலர் திரும்பினர். யானை, பரி, தேர் மீது வந்தனர். கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு வரும் குதிரைகளை யெல்லாம் பார்க்கிறாள். தன் கணவன் ...
மேலும் கதையை படிக்க...
"வாருங்கள் புலவரே'' என்று கை கூப்பி வரவேற்றான் பேகன். 'பேகனே, இது கேள்" என்று தொடங்கினார் கபிலர். "வழியே நடந்து வந்தோம். வருத்தம் மிகுந்தது பசி வாட்டிற்று. சிற்றூர்க்குச் சென்றோம். ஒரு வீட்டில் தலை வாசலில் நின்று உன்னைப் புகழ்ந்தோம். உன் மலையைப் பாடினோம். ...
மேலும் கதையை படிக்க...
மருதன் இளநாகனார் நன்மாறனைப் பார்க்கச் சென்றார். வரவேற்றான் மன்னன். நல்ல விருந்தளித்தான். உள்ளம் மகிழ்ந்தார் புலவர். அரசனுக்குச் சிறந்த உறுதிப்பொருளைக் கூறத் தொடங்கினார். அரசே , சினங்கொண்ட கொலை யானை உன் நாட்டைக் காக்காது. திக்கைக் கடக்கும் குதிரைப் படை உன் அரசை ...
மேலும் கதையை படிக்க...
அழகிய காடு. வானளாவிய மரங்கள் தண்ணீர்த் கடாகங்கள். ஆடும் மயில்கள். பாடும் குயில்கள். பற்பல விலங்குகள். எங்கும் எழில் தவழ்கிறது. குன்று போன்ற யானைகள் உலவுகின்றன. எங்குப் பார்த்தாலும் யானைக் கூட்டம். இந்தக் காட்டில் இத்தனை யானைகளா? அற்புதம்தான். எங்கிருந்து வந்தன இத்தனை யானைகள் இந்தக் காடு ஆய் வள்ளலின் மலையைப் பாடியிருக்குமோ? ஆயின் ...
மேலும் கதையை படிக்க...
குறைப்பிறவிகள்
கணவன் ஊர்ந்த குதிரை
மலையைப் பாடினோம்,மங்கை அழுதாள்!
நல்லறத்தை நம்பு
காடும் பாடியதோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)