தன்னை மறந்த கொல்லர்

 

முன்னொரு காலத்தில் சாந்தப்பன் என்ற கொல்லன் இருந்தான். ஊருக்கு வெளியே அவன் உலைக்களம் இருந்தது. பொறுப்பாகத் தொழில் செய்ததால் அரண்மனை வேலையை அவனிடம் ஒப்படைத்தனர். அவன் வீரர்களுக்கு வாள், வேல், கவசம் போன்றவற்றை செய்துக் கொண்டிருந்தான்.
அப்போது அந்நாட்டு அரசர் வீரர்கள் சூழ ஆரவாரமாக அந்த வழியாக வந்தார். வேலையிலேயே கவனமாக இருந்த அவன் அரசர் வந்ததை அறியவில்லை. அரசரின் பார்வை தற்செயலாக உலைக்களத்திற்குள் சென்றது. அங்கே ஒருவன் தனக்கு வணக்கம் செய்யாமல் அமர்ந்து இருப்பதைப் பார்த்தார்.
குதிரையில் இருந்து கோபத்துடன் இறங்கிய அவர் உலைக்களத்திற்குள் சென்றார். அப்போதும் அவன் அரசர் வந்ததைக் கவனிக்கவில்லை. வாள் முனை கூர்மையாக உள்ளதா என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். தான் வந்ததை அறிவிக்க நினைத்த அரசர் மெல்ல முனகினார்.
குரல் கேட்டுத் தலை நிமிர்ந்து பார்த்தான் அவன். அரசரும் வீரர்களும் நிற்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான்.

ThanaiMarantha

“”அரசே! என்னை மன்னியுங்கள். இந்த வாளைக் கூர்மைப்படுத்துவதிலே கவனமாக இருந்தேன். தாங்கள் வந்ததை நான் கவனிக்கவில்லை!” என்றான்.

“மரியாதை தெரியாத அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ தெரியவில்லையே!’ என்று மற்றவர்கள் நினைத்தனர்.

“”கொல்லரே! உம் கடமை உணர்வைப் பாராட்டுகிறேன். நீர் வலிமையான படைக் கருவிகளைச் செய்து தருவதால்தான் நம் வீரர்கள் போர்களத்தில் வெற்றி பெறுகின்றனர். உம்மைப் போன்றவர்களின் கடமை உணர்வினால் நம் நாடு பாதுகாப்பாக உள்ளது!” என்று பாராட்டிவிட்டு அங்கிருந்து சென்றார் அவர்.

குட்டீஸ்… இந்தக் கொல்லர் என்ன மாதிரி கவனமா இருந்து வேலை செய்கிறார் பார்த்தீர்களா? இதே போலவே நீங்களும் படிக்கும்போது கவன சக்தியை சிதறவிடாமல் இருந்து படிக்கணும். சரியா?

- செப்டம்பர் 03,2010 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும் வந்து வேண்டிக் கொண்டனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ""இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்'' என்பது போல் சொல்கின்றனர்... இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு காலை நேரம். ஆண் நரியும் பெண் நரியும் ஒரு அழகிய குகைக்குள் நுழைந்தன. அந்தக் குகை பெண் நரிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அது ஒரு புலியின் குகை. அந்த குகையில் வசிக்கும் புலி காலை நேரமானதும் புறப்பட்டு வெளியே ...
மேலும் கதையை படிக்க...
வளர்ப்பு மகன்!
""கமலா! நாம் ஆற்றில் கண்டெடுத்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி விட்டான். இரண்டு கண்ணும் இல்லை என்ற ஒரு குறையை தவிர வேறு குறை இல்லை. வளர்ந்து இருபது வயது வாலிபனாய் எவ்வளவு அழகாக இருக்கிறான் பார்த்தாயா! எல்லார் போலவும், ஓடவும், ஆடவும், ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேர். அண்ணனுக்கு படிப்பு வரலை.அதனால அவன் ஆடு மாடுகளை வயலுக்கு அழைத்துச் சென்று மேய்க்கத் தொடங்கினான். தம்பி கெட்டிக்காரன்.அவன் பள்ளிக்கூடம் சென்று படித்து வந்தான்.வகுப்பிலும் அவன் தான் முதலிடம். அவர்களுடைய அம்மா பெரிய மகன் அலைந்து திரிந்து மாடுகளை ...
மேலும் கதையை படிக்க...
பொற்காசு
முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான். அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த ...
மேலும் கதையை படிக்க...
சந்தேகம்
அழகிய குகை
வளர்ப்பு மகன்!
மெத்தப் படிப்பும்….உருகிய வெண்ணையும்…
பொற்காசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)