சிங்கத்தை வெற்றி கொண்ட கொசு

 

காட்டில் படுத்திருந்த சிங்கத்திடம் போய் ஒரு கொசு பேசத் தொடங்கியது.

“என்னைவிட நீ பலசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா? அது மிகவும் தவறு.

“உன் வலிமை எப்படிப்பட்டது?. பற்களை நறநற என்று கடித்து, நகங்களால் பிராண்டுகிறாய், இது எப்படி இருக்கிறது என்றால், ஏழைப் பெண் தன் கணவனுடன் சண்டையிடுவதை போலத்தான் இருக்கிறது. சரி, வா, நாம் இருவரும் சண்டை போட்டுப் பார்ப்போம்” என்றது. உடனே இது ‘ங்கோய்’ என்று ரீங்காரம் செய்து கொண்டு சிங்கத்தின் மீது பறந்து, அதன் நாசியிலும், தாடையிலும் கடிக்கத் தொடங்கியது.

சிங்கம் கொசுவை விரட்ட, தன் நகங்களால் முகத்தைப் பிராண்டியும், தட்டியும் தோலைக் கிழித்துக் கொண்டதில், இரத்தம் வழிந்ததோடு, களைத்தும் போய் விட்டது.

வெற்றி முழக்கத்தோடு கொசு பறந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த கொசு ஒரு சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டது. சிலந்தி கொசுவின் இரத்தத்தை உறிஞ்சியது.

“வலிமை மிகுந்த சிங்கத்தையே வெற்றி கொண்டு, இப்போது ஓர் சிறிய சிலந்தி என்னை வதைத்துக் கொண்டிருக்கிறதே” என்று கொசு வருந்தியது.

- மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் தொகுப்பிலிருந்து (ஜூன் 1998). 

தொடர்புடைய சிறுகதைகள்
புலவர் மோசிசாத்தனார் தன் வழியே சென்று கொண்டிருந்தார். வழியின் இருமருங்கும் நொச்சி மரங்கள். கொஞ்ச தூரம்தான் போயிருப்பார். இளமங்கை யொருத்தி ஓடிவந்து நொச்சிப் பூவைக் காதலுடன் பறிப்பதைக் கண்டார். பறித்து இடையில் சொருகிக் கொண்டு சிட்டுப்போல் பறந்து விட்டாள். மேலும் சிறிது தூரம்தான் ...
மேலும் கதையை படிக்க...
தெரு வழியே நடந்து சென்ற பக்குடுக்கை நன் கணியார் புதுப்பது அனுபவங்கள் அடைந்தார். என்னே வாழ்க்கை . என்னே உலகம். ஒரு வீட்டிலே சாப்பறை கேட்கிறது! மற்றொரு வீட்டிலே முழவு முழங்குகிறது. ஒரு வீட்டில் திருமணம்! அடுத்த வீட்டிலே பிணம்! மணமாகிய பெண்டிர் மகிழ்கின்றனர்; ...
மேலும் கதையை படிக்க...
குடியானவன் ஒருவன், வெள்ளரிக்காயைத் திருடுவதற்காக, ஒரு தோட்டத்துக்குச் சென்றான். ஒரு மூட்டை வெள்ளரிக் காய்களைப் பறித்துக் கொண்டு போய் விற்றால் பணம் கிடைக்கும். கிடைத்த பணத்திற்கு கோழி வாங்குவேன். என்று அவன் கற்பனை செய்தான். மேலும், அவன் யோசனை செய்யலானான்; கோழி, ...
மேலும் கதையை படிக்க...
குற்றம் புரிந்த நண்பரைப் பொருத்தருள்வான் பிறருடைய வறுமையைக் கண்டு, நாணம் அடைவான் மூவேந்தர் அவைக்களத்தில் மேம்பட்டு நடப்பான்! அவன் பெயர் ஏறைக்கோன்! அவன் எங்கட்குத் தலைவன்... உங்கட்கும் தலைவர்கள் உண்டல்லவா? அவர்களின் பண்புகளைக் கூறுங்கள் பார்க்கலாம்! அவர்களுக்கு இத்தகுதி இல்லை என்பதை நன்கு அறிவேன். எங்கள் ...
மேலும் கதையை படிக்க...
நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் பார்க்கச் சென்றார். இன்முகத்தோடு வரவேற்றான். மகிழ்ந்து உரையாடத் தொடங்கினார். ''அரசே உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. உன்னிடம் வருவோர் அனைவரையும் ஒரே தன்மையாக வரவேற்பதில்லை நீ" எல்லோரையும் நன்கு வரவேற்கிறேனே. இப்போது தானே உங்கள் கண்முன் பாணர்களுக்குப் பரிசளித்தேன் ...
மேலும் கதையை படிக்க...
வேல் முனையால் நெற்றி வியர்வையைத் துடைத்து நின்று வெஞ்சினங் கூறினான் வேந்தன். பெண் கேட்க வந்தவன் அவன். மகட் கொடை மறுக்கும் தந்தையும் மறச் சொற்கள் கிளத்தினான்! இது, போர் வரும் என்பதற்கு அறிகுறி! மன்னன் மகள் ஓடி வந்தாள். "அப்பா என்னால்தானே இவ்வளவு கேடு” ...
மேலும் கதையை படிக்க...
பரிசில் பெற்றுத் திரும்பிய பரணர், ஒரு பாணனைக் கண்டார். பேகன் சிறப்பைப் பாணனுக்குக் கூறினார். "விறலி சூடும் மாலையும் பாணன் சூடும் பொற்றாமரையும் மார்பில் புரளக் கடுந் தேரை நிறுத்திக் காட்டிடை இளைப்பாறுகின்ற நீங்கள் யார்?” என்றுகேட்கும் இரவலனே, சொல்லுகின்றேன் கேள்: பேகனைக் காண்பதற்கு ...
மேலும் கதையை படிக்க...
கன்றுகளும் பெண்மானும் சூழ்ந்து நிற்கக் கலைமான் நிற்கிறது. வேடன் வருகிறான். கலைமான் நடுக்கம் கொள்கிறது. தான் மட்டுமே நின்றால் விரைவாக ஓடிவிடலாம். தன் கன்றுகள் தப்ப வேண்டுமே, தன் காதலி பிழைக்க வேண்டுமே என்று அஞ்சி ஓடுகின்றது. இந்தக் காட்சி புலவர் ...
மேலும் கதையை படிக்க...
பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன், அவனைக் காட்டிலும் பெரிய பையனை அடிக்க முற்பட்டான். சிறுவனின் அடிகள் தன் மீது விழாமல் தடுத்துக் கொண்டிருந்தான் பெரிய பையன். ஆனால், அவன் சிறுவனை ஒரு அடிகூட அடிக்கவில்லை . அதைக் கவனித்த ஒருவர், பெரிய பையனிடம், ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ஊரில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றார். அவர் குளிக்கும் போது திடீரென வெள்ளம் வந்து ஆசிரியரை இழுத்துச் சென்றது. "என்னை யாராவது காப்பாற்றுங்கள்" என்று பலமுறை கூச்சலிட்டார். அவருக்கோ நீந்தத் தெரியாது. அப்போது, ஆற்றின் கரையில் வேட்டி துவைத்துக் கொண்டிருந்தவன் ...
மேலும் கதையை படிக்க...
காதல் நன் மரம்
துன்ப உலகம்
குடியானவனின் மனக்கோட்டை
ஏறைக் கோன் குணம் எவர்க்கு வரும்?
அறனோ? திறனோ?
மரம்படு சிறு தீ
பேகனின் பெருமை
தனி வாழ்வும் குடும்ப வாழ்வும்!
பண்புள்ள பையன்
ஆற்றிலே மூழ்குவதே நல்லதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)