கொடையாளன் பண்பு

 

பண்டைத் தமிழகம். அப்பப்பா! பொறி பறக்கும் பாலை நிலம்; போக முடியாத நீண்ட வழி கடக்க முடியாத பெருங் காடுகள்.

அக்காடுகளின் இடையே, வில்லேர் உழவர் வாழ்கின்றனர். அவர்கள் யாருக்கும் அஞ்சாத மறவர்கள். ஆறலைகள்வர். வழிப்பறி செய்வதே அவர்கள் தொழில். மக்கள் பொருள் தேடும் பொருட்டு, அயல்நாடு செல்வது உண்டு. அவர்கள் அப்பாலை நிலத்தைக் கடந்து செல்ல வேண்டும். பரற்கற்கள் பாதத்தைப் புண்ணாக்கும்; உடலைக் கிழிக்கும் முட்புதர்கள் நிறைந்த இத்தகைய நீண்ட வழிகளைக் கடந்து சென்றுதான் பொருள் தேட வேண்டும்.

வணிகக் கும்பல் ஒன்று அவ்வழியே சென்றது. கோடை கடுமையாக எரித்துக் கொண்டிருந்தது… பாலை நிலம் கொதித்துக் கொண்டிருந்தது….

ஆனால், அவ்வெம் பாலையைக் கடந்து சென்ற வணிகர்கள் பட்ட பாட்டை என்னென்பது. திடீரென்று அக்கும்பலின் மேல், அம்புகள் பாய்ந்தன. அவர்கள் அய்யோ அம்மா என்று அலறினார்கள். அம்புபட்ட வணிகர்கள் கீழே வீழ்ந்தனர். கதறித் துடிதுடித்து இறந்தனர்.

மறைந்திருந்து அம்பெய்திய மறவர்கள், விற்களுடன் ஓடிவந்தனர். வீழ்ந்தோரிடமிருந்த பொருட்களைக் கவர்ந்தனர், பிணங்களின் மேல் கற்களை அடுக்கி, மறைத்து விட்டுச் சென்றனர்.

ஆனால், “யாரும் பிணங்களைப் பார்க்கக் கூடாது” என்பது அவர்கள் எண்ணம். ஆனால், பிணங்கள் அழுகி நாற்றம் எடுக்கத் தொடங்கினதும், கழுகும் பருந்தும் சூழ்ந்து கொண்டன. ஆயினும், கற்குவியல்களின் மேலே அமர்ந்து குரலெடுத்துக் கூவி வருந்தின.

பாலைநிலக் கொடிய வழிகளின் காட்சியைப் பார்த்தீர்களா? என்ன கொடுமை, எவ்வளவு துன்பம்!

இத்தகைய கொடிய வழிகளைக் கடந்து உயிரோடு வந்தனர் சிலர். எதற்காக வந்தனர்? அரசனைக் காண்பதற்காக ! அவர்கள் யார்? இரவலர்கள்! மனக்குறிப்பை முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே, அறிந்து கொடுத்து மகிழும் கொடையாளனாகிய வழுதியின் அருளை எண்ணியே புலவர்கள் இத்தகைய கொடிய வழியிலும் நடந்து வந்துள்ளனர்.

அவர்கள் கூறும் பாலையின் கதை, அப்பப்பா, எவ்வளவு பயங்கரம், பாலையில் படுகொலை.

- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம் 

தொடர்புடைய சிறுகதைகள்
"விறலியே, உன் நாட்டியக்கலை சிறந்தது என்பதை அறிந்தோம். ஆனால், உங்கள் நாட்டில் போர்க் கலை தெரிந்தோர் இருக்கின்றனரா? என்று அரசன் கேட்டார், அதற்கு விறலி , "கேளும் எங்க நாட்டிலே தினவெடுத்த தோளுடைய வீரர் பலர். அவர்கள் அடிபட்ட பாம்பு போல் சீறி ...
மேலும் கதையை படிக்க...
நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் பார்க்கச் சென்றார். இன்முகத்தோடு வரவேற்றான். மகிழ்ந்து உரையாடத் தொடங்கினார். ''அரசே உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. உன்னிடம் வருவோர் அனைவரையும் ஒரே தன்மையாக வரவேற்பதில்லை நீ" எல்லோரையும் நன்கு வரவேற்கிறேனே. இப்போது தானே உங்கள் கண்முன் பாணர்களுக்குப் பரிசளித்தேன் ...
மேலும் கதையை படிக்க...
பாண்டியன் அறிவுடைய நம்பி தன் ஆருயிர் நண்பர் வீட்டிற்குச் சென்றார். அன்று அங்கு அரசனுக்கு விருந்து. அழகான வீடு. ஏழடுக்கு மாளிகை. பொன் மணிகள் எல்லாம் நிறைந்திருக்கின்றன. அரசனோடு விருந்துண்ணப் பலர் வந்திருக்கிறார்கள். உணவு பரிமாறப்படுகிறது. அரசன் உண்ட பின்னரே பிறர் உண்ண ...
மேலும் கதையை படிக்க...
"ஒளவையே" காலையில் உன்னைத் தேடினேன் காணவில்லை. எங்கே போயிருந்தாய் " என்றான் மன்னன் அதிகமான். "ஆற்றில் புது வெள்ளம் வந்திருக்கிறது'' "வயல்களுக்குத் தண்ணீர் திறந்து விட்டிருக் கிறார்களா?" "ஆமாம் வயலில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்" ''அப்படியானால் அச்சமில்லை . நெல்லும் நீருமே நம் நாட்டிற்கு உயிர்." "இல்லை அரசே இல்லை. ...
மேலும் கதையை படிக்க...
சேரன் சேரலாதனுக்கும் சோழன் பெருவளத் தானுக்கு மிடையே போர் நிகழ்ந்தது. பெருவளத்தான் எய்த கணை, சேரலாதன் மார்பிற் புகுந்து கிழித்து, முதுகில் ஊடுருவிச் சென்றது. அம்பு பட்டதற்குத் துடிக்காத சேரலாதன் அது முதுகில் ஊடுருவியதற்குத் துடித்தான்.... மார்பிற் புண்படுதல் வீரர்க்கு அழகு; முதுகிற்புண் பட்டால்... வெட்கம், ...
மேலும் கதையை படிக்க...
போர்க் கலை தெரிந்தோர் உண்டோ?
அறனோ? திறனோ?
மயக்கும் மக்கள்
உலகிற்கு உயிர் எது?
வீரனுக்கு அழகு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)