எலுமிச்சம்பழத்தின் ஆசை

 

ஒரு பெரிய தோட்டம் இருந்தது, அந்த தோட்டத்தில் ஏராளமான

காய்கறிகள்,பழங்கள் காய்த்து இருந்தன.

ஒரு பக்கம் கத்தரிக்காய், முட்டைக்கோஸ்,தக்காளி, பாகற்காய், போனறவைகளும், மறு புறம் ஆங்கில வகை காய்கறிகளான பீட்ரூட், நூல்கோல்,

காலி பிளவர், போன்ற காய்கறிகளும் பயிரிடப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம்

அன்னாசி, எலுமிச்சை,பிளம்ஸ், போன்ற பழ வகைகளும் பயிரிடப்பட்டிருந்தன.

தினமும் ஆட்கள் அந்த தோட்டத்துக்குள் வந்து காய்கறிகளையும், பழங்களையும்,பறித்து வண்டியில் எடுத்து சந்தைக்கு கொண்டு செல்வர்.

ஒரு நாள் காய்கறிகள் அனைத்தும் ஏற்றப்பட்டு விட்டன. பழ செடிகள் வரிசையில் இருந்த எலுமிச்சை செடிகளில் எலுமிச்சை பழம் நன்கு பழுத்து மஞ்சள் கலராய் பார்ப்பதற்கு அழகாய் இருந்தது. அதில் இருந்த ஒரு எலுமிச்சை பழம் தானும் வெளியே போக வேண்டும், எப்படியும் தன்னை வண்டியில் ஏற்றுவார்கள் என எதிர்பார்த்திருந்தது. கடைசி வரை வண்டியில் ஏற்றாததால் ஏமாற்றத்தில் அதன் நிறம் கூட மங்கலானது போல தெரிந்தது. வண்டி கிளம்ப போகும்போதுதான் கவனித்தார்கள், அட..எலுமிச்சை பறிக்கவே இல்லையே, பாருங்க எப்படி பழுத்து இருக்குதுன்னு, சொல்லிவிட்டு வண்டியை நிறுத்தி விட்டு எலுமிச்சை பழம் பறிக்க ஆரம்பித்தார்கள்.

அந்த எலுமிச்சைக்கு ஒரே சந்தோசம், பார்த்தீர்களா? எப்படியும் என்னை ஏற்றி விடுவார்கள் என்று நினைத்து கொண்டிருந்தேனே, அதே போல ஆகிவிட்டதல்லவா,

மற்ற எலுமிச்சை பழங்களிடம் சொல்லி சந்தோசப்பட்டுக்கொண்டது.

சந்தையில் அனைத்து காய்கறிகள்,பழங்கள் இறக்கப்பட்டன. எலுமிச்சை பழங்கள் கொண்ட மூட்டை இறக்கப்பட்டவுடன் அந்த எலுமிச்சைக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. எவ்வளவு பெரிய சந்தை, எல்லா தோட்டத்துல இருந்தும் பழங்கள் வந்திருந்தது. பக்கத்து மூட்டையில் இருந்த ஒரு எலுமிச்சையுடன் பேச்சு கொடுத்தது.

அண்ணே நீங்க எந்த தோட்டத்துல இருந்து வாறீங்க? நாங்க மேட்டுப்பாளையத்துல இருந்து வாறோம். அப்படியா அந்த ஊரு எங்க இருக்கு? அந்த

எலுமிச்சை கொஞ்சம் யோசித்து எனக்கு சரியா தெரியல, எங்களை இன்னைக்கு காலையிலதான் செடியில இருந்து வண்டியில ஏத்திட்டு வந்தாங்க. அப்படியா, எங்களையும் இன்னைக்குத்தான் ஏத்திட்டு வந்திருக்காங்க..

பேசிக்கொண்டிருக்கும்போதே, அந்த மூட்டையை ஒரு ஆள் தலை மீது ஏற்றிக்கொண்டு சென்றார். அந்த மூட்டையை எடை பார்க்கும் இயந்திரத்தில் வைக்கப்பட்டு ஐம்பது கிலோ இருக்கு, சொல்லி ஒரு சீட்டை எழுதி கொண்டு வந்த ஆளிடம் கொடுத்தார்கள்.

அவர் அந்த மூட்டையை மீண்டும் தலையில் ஏற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். உள்ளிருந்த அந்த எலுமிச்சைக்கு ஆடி ஆடி செல்வது சந்தோசமாய் இருந்தது.

மற்ற நண்பர்களிடம் பார்த்தீர்களா என்ன ஒரு ஆட்டம். சொல்லிவிட்டு கல கல வென சிரித்தது.. அந்த மூட்டை சிறிது நேரத்தில் ஒரு இடத்தில் இறக்கப்பட்டது.

மீண்டும் அந்த மூட்டை பிரிக்கப்பட்டு பழங்கள் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டன.

இந்த எலுமிச்சம்பழம் தன்னை எப்படியும் நல்ல இடத்தில் பிரித்து வைப்பார்கள் என எதிர் பார்த்த்து. அதே போல் அந்த பழம் நல்ல ரகமாக சேர்க்கப்பட்டு, கடையில் அனைவரும் பார்க்கும் இடத்தில் வைக்கப்பட்டது. தனக்குள்ளேயே பேசிக்கொண்டது எலுமிச்சை, என்னோட கலரும் உருவத்தையும், பார்த்தாலேயே யாராவது ஒருவர் எடுத்துடுவாங்கன்னு எனக்கு தெரியுமே.

இப்பொழுது ஒரு பெண் தன்னை எடுத்து பார்ப்பதை பார்த்த எலுமிச்சைக்கு

மீண்டும் ஒரு மகிழ்ச்சி, எப்படியும் என்னை எடுத்து தன் பைக்குள் போட்டு கொள்வாள் என்று எதிர் பார்த்தது.

அந்தோ பரிதாபம், இந்த பழம் எவ்வளவு விலைப்பா? ஒரு பழம் அஞ்சு ரூபா

ரொம்ப அதிகமாக சொல்றேப்பா, சொல்லி விட்டு அடுத்த ரகத்தை பார்த்து இது என்ன விலைப்பா? அது ஒரு பழம் இரண்டு ரூபா, சரி அப்படீன்னா அதுலயே இரண்டு கொடுத்துடு., அந்த அம்மாள் சொல்லி விட்டு கையில் இருந்து காசை கொடுத்துவிட்டு அந்த பழங்களை தன் பைக்குள் போட்டுக்கொண்டாள்.

சே. நோஞ்சானாய் இருக்கும் அவனுக்கு வந்த வாழ்க்கையை பார், தனக்குள் அலுத்துக்கொண்டது, அன்று முழுக்க, அந்த எலுமிச்சையை யாரும் எடுக்கவே இல்லை.

மறு நாள் சற்று சுருக்கம் விழுந்து விட்ட தன் உடம்பை பார்த்து மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டது.நேற்று எவ்வளவு அழகாய் இருந்தோம், இன்று இப்படி ஆகி விட்டோமே, என்று வருத்தப்பட்டது. அன்றும் அதனை யாரும் எடுத்து செல்லவில்லை. பேசாமல் நம்மோட செடியிலேயே இருந்திருக்கலாம், இப்படி அநியாயமாய் வெளீயில வந்து வெயிலிலே வாடிப்போயிட்டோமே,அதற்கு கவலை பிடித்து கொண்டது, நாம் இப்படியே இருந்து காஞ்சு போயிடுவோமா?

நான்காம் நாள் அந்த பழத்தை கையில் எடுத்த பெண் ஏம்பா இந்த பழம் என்ன விலை? அம்மா இந்த பழம் இரண்டு ரூபா, சொன்னவரிடம், நாலு நாளைக்கு

முன்னால இந்த பழம் அஞ்சு ரூபாய்ன்னு சொன்னே, ஆமாம்மா, அப்ப நல்லா பக்குவமா இருந்துச்சு, இப்ப வெயிலிலே கொஞ்சம் வாடி போயிடுச்சு, அதுதான்.

சொன்னவரிடம் மறு பேச்சு பேசாமல் அந்த பெண் காசை கொடுத்து விட்டு தன் பையில் போட்டு சென்றாள்.

இப்பொழுது தான் ஏதோ குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் இருப்பது தெரிந்தது.

அந்த வெயிலுக்கு இந்த அறை பரவாயில்லை, நினைத்துக்கொண்ட அடுத்த நிமிடம்

பெண்ணின் கரம் ஒன்று தன்னை எடுத்து பார்த்து கையில் உருட்டுவதை உணர்ந்தது.

ஆஹா..ரொம்ப சந்தோசமாக அனுபவித்தது. சட்டென தன்னை அறுப்பதை உணர்ந்தது, அதற்கு வலி தெரியவில்லை.

ஏதோ குழலுக்குள் வைத்து திருகுவது கூட அதற்கு கிச்சு கிச்சு மூட்டுவது போல் இருந்தது. அப்புறம் தன்னை பிழிய பிழிய ஆனந்தமாய் நீரை உதிர்த்தது.

பாட்டி உங்க எலுமிச்சை ஜூஸ் பிரமாதம், நல்லா ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருந்துச்சு, நான்கைந்து குழந்தைகள், தங்கள் வாயை துடைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் சொல்லிக்கொண்டிருப்பதை மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தது.பிழியப்பட்ட வெற்றுத்தோலான அந்த எலுமிச்சை பழம். 

தொடர்புடைய சிறுகதைகள்
சுரேஷ் அன்று பரவசமாய் காணப்பட்டான், அவனுடைய மகிழ்ச்சியை எப்படி சொன்னால் பொருத்தமாய் இருக்கும்? ம்.ம்.. முதன் முதலில் ஒரு இளம் பெண் ஒரு இளைஞனை அன்புடன் பார்க்கும்போது அந்த இளைஞனுக்கு ஏற்படும் ஒரு இன்ப அனுபவத்தை இதனோடு ஒப்பிடலாமா? அல்லது உறவினர் ...
மேலும் கதையை படிக்க...
ஒச்சாயி கண்களை சுருக்கி கண்களுக்கு மேல் கை வைத்துக்கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கணவன் சடையாண்டியை இன்னும் காணவில்லை. காலையில் ஒரு வாய் கஞ்சித்தண்ணியை வாயில் ஊற்றிக்கொண்டு போசியில் கொஞ்சம் பழையதயும் போட்டுக்கொண்டு தன்னுடைய ஆடுகளை மேய்ச்சலுக்கு விட கிளம்பியவந்தான் பசுமைகள் மறைந்து ...
மேலும் கதையை படிக்க...
“மகாத்மா காந்தி நினைவு” பள்ளியில் அடுத்த வாரம் பள்ளிஆண்டு விழா வருகிறது. அந்த விழாவிற்கு புதிதாக வந்திருக்கும் போலீஸ் அதிகாரி ஜீவானந்தம் அவர்கள் விருந்தினராக வருகிறார் என்று பள்ளி தலைமையாசிரியர் அறிவித்தார்.அங்குள்ள மாணவ்ர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால் ஜீவானந்தம் அவர்கள் இந்த ...
மேலும் கதையை படிக்க...
“உங்களுக்கு எல்லாம் எங்களோட கஷ்ட நஷ்டம் புரியாது”, படிச்சு, பேனுக்கடியிலே உட்கார்ந்து கிட்டா, எங்க மாதிரி ஏழைங்களோட வருத்தம் எப்படி புரியும்?. நான்கைந்து பெண்களும், ஆண்களும், விசாரிப்பதற்காக வந்திருந்த பெண் கலெக்டரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தனர். பெண் கலெக்டருக்கு அவர்கள் சொன்னதை கேட்டவுடன் ...
மேலும் கதையை படிக்க...
சங்கர், சங்கர் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்த சியாமளா அங்கு ரகு மட்டும் உட்கார்ந்திருப்பதை பார்த்து ஒரு நிமிசம் தயங்கினாள். ரகு அவளை வெற்றுப்பார்வையாய் பார்த்துக்கொண்டிருந்தான். இவள் மெல்ல தயங்கி சங்கர் இல்லையா? ஏன் சங்கர்தான் வேணுமா? அவன் குரலில் கேலியா, கிண்டலா தெரியவில்லை. சங்கர் என்னைய ...
மேலும் கதையை படிக்க...
சோர்ந்து போய் உட்கார்ந்து இருந்தேன், அலுவலகம் பரபரப்பாக இருந்தது. அலுவலகத்தில் வருவோர் போவோர் என சலசலத்துக்கொண்டு இருந்தது. காலை வெயில் கொடுமை வேறு அதிகமாக இருந்ததால் நடந்து வந்த களைப்பு அதிகமாக சோர்வு அடைய வைத்தது. நான் பார்க்க வேண்டிய கிளார்க் ...
மேலும் கதையை படிக்க...
ராஜேந்திரன் தம்பதிகளுக்கு இப்பொழுது ஒரே கவலை தங்கள் பெண் சியாமளா எப்பொழுது திருமணத்துக்கு சம்மதிப்பாள் என்பதுதான். சில நேரங்களில் இந்த பெண்ணுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோமோ என்கிற கவலையும் வருவதுண்டு. ராஜேந்திரன் தன் மனைவி கமலாவிடம் இதை பற்றி ...
மேலும் கதையை படிக்க...
என்னை பற்றி சிறிய அறிமுகம், நான் டிடெக்டிவ் ஏஜன்ஸி ஒன்று வைத்துள்ளேன். இதற்கு தேவைப்படும் தகுதியாக நான் பழைய இராணுவ அதிகாரி ஆகவோ,போலீஸ் அதிகாரியாகவோ, பணி செய்து கொண்டிருந்ததில்லை.வக்கீல் தொழில் கூட செய்ததில்லை. அப்புறம் எப்படி இந்த டிடெக்டிவ் ஏஜன்ஸி வைத்திருக்கிறாய் என்ற ...
மேலும் கதையை படிக்க...
புதிய கதை ஒன்று எழுதி முடித்திருந்தேன்.கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் சமூகத்தில் இன்று கரைந்து கொண்டிருக்கும் பாசத்தை பற்றி தந்தைக்கும் தனயனுக்கும் நடக்கும் உணர்வு போராட்டங்களை விவரித்திருந்தது. கதை வெளியாகி, எழுத்தாளர்களும் விமர்சகர்களுமான திருவாளர்கள் முகம்மது இப்ராகிமின் ‘ஆச்சர்யமும்’, அர்.வி ரங்கராஜனின் ‘கண்டிப்பும்’, ...
மேலும் கதையை படிக்க...
அந்த ஊரில் புருசோத்தம் ஜோசியரை பார்க்க பெரிய பெரிய பணம் படைத்தவர்கள் முதல், பெரிய அதிகாரிகள் வரை காத்திருப்பர். அவரின் வாக்குக்கு அவ்வளவு மரியாதை. இதற்கும் புருசோத்தம் ஜோசியர் ஒருநாள் பொழுது முழுக்க பத்திலிருந்து பதினைந்து பேரை மட்டுமே பார்த்து ஜாதகம், ...
மேலும் கதையை படிக்க...
அறிமுக எழுத்தாளனின் அவஸ்தை
வானம் எங்களுக்கும் வசப்படும்
திருட்டுப்பட்டம்
அதிர்ஷ்டமா? விதியா?
மறுபக்கம்
தொடரும் கதை
சியாமளாவின் எதிர்பார்ப்பு
யார் வென்றவன்?
என் கதை சினிமாவாகப் போகிறது
தேதி பதினாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)