தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 4,978 
 

அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17

’இந்த மாமி பிடி சாபம் குடுத்ததால் தானே,நான் என் அம்மா,அப்பா,சுரேஷ் மூனு பேரையும் நான் இப்போ இழந்து தவிக்கறேன்’என்று தன் மனதில் சொல்லிக் கொண்டான்.

கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் “மாமி,நீங்க குடித்த சாபம் வீண் போகலே.அந்த பகவான் அவனுக்கும்,அவனை பெத்த என் அப்பா, அம்மாவுக்கும்,சரியான தண்டணை குடுத்துட்டார்.நாங்க பெங்களூர் போகும் போது எங்க கார் மேலே ஒரு தண்ணி லாரி மீது மோதி ‘ஆக்ஸிடெண்ட்’ஆயி, அந்த இடத்திலேயே அப்பா,அம்மா,ரமேஷ் மூனு பேரும் இந்த லோகத்தை விட்டே போயிட்டா.அதிர் ஷ்டவசமா நான் மட்டும் உயிர் தப்பினேன்.ரமேஷூக்கு அண்ணனா பிறந்த குத்தத்துக்கு பகவான் என்னையும் அவர் சும்மா விடலே.என்னுடைய வலது காலை எடுத்துண்ட்டார்.பகவான் என் குடும்பத் துக்கு தண்டனையை குடுத்துடுத்தாலே,நீங்களும்,லதாவும்,என் தம்பியையும்,என் குடும்பத்தையும் தயவு செஞ்சி மன்னிச்சுடுங்க.நான் என் தம்பி சார்பிலும் என் அப்பா,அம்மா,சார்பிலும் உங்களை ரொ ம்ப தாழ்மையோடு கேட்டுக்கறேன்”என்று சொல்லி தன் ரெண்டு கைகள் ரெண்டையும் கூப்பினான். கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் தன் பாண்ட்டை தூக்கி தன் வலது செயற்கை காலை எடுத்து காய த்திரிக்கும்,லதாவுக்கும் காட்டி விட்டு குலுங்கி குலுங்கி அழுதான்.காயத்திரிக்கும்,லதாவுக்கும் ரமேஷ் சொன்னதையும்,அவன் வலது செயற்கை காலையும் காட்டியதையும் பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி யாக இருந்தது.லதாவுக்கு மயக்கமே வந்து விட்டது.’இவ்வளவு நல்ல மனசு உள்ள உங்களுக்கு இந்த மாதிரி தண்டனையை ஏன் குடுத்தார் அந்த பகவான்.நீங்கள் பாவம் இன்னைக்கு ஒரு காலை இழந்து நிக்கறேளே.தப்பு பண்ணினது உங்க தம்பி தானே.அவனை பகவான் தண்டிச்சது சரி.ஒரு பாவமும் செய்யாத உங்களை அந்த பகவான் ஏன் தண்டிச்சார்’ என்று சொல்லி அவள் உள் மனம் விக்கி விக்கி அழுதது.ரமேஷ் காட்டின காலையே வெறுமனே பார்த்துக் கொண்டு இருந்தாள் லதா.

”அடப் பாவமே,இப்படியா ஆயிடுத்து உங்க குடும்பத்துக்கு.பாவம் பகவான் மிகவும் நல்லவரான உங்க காலை ஏன் பறிச்சிண்டுட்டார்.நீங்க ஒரு தப்பும் பண்ணலையே.கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.நீங்கோ அழாதீங்கோ.எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.இப்போ இந்த செயற்கை காலையும் அக்குள் கட்டையையும் தான் நீங்கோ உபயோக படுத்தி நடந்துண்டு வறேளா”என்று வருத்ததோடு கேட்டு ரமேஷூக்கு ஆறுதல் சொன்னாள் காயத்திரி.“ஆமாம் மாமி.நான் இந்த செயற்கை காலை தான் உபயோக படுத்தி தான் நடந்துண்டு வரேன்.இதனாலே என்னால் வேகமா நடக்க எல்லாம் முடியாது. இனி காலம் பூராவும் நான் மெல்ல ஜாக்கிரதையா தான் நான் நடந்து வர முடியும்”என்று சொல்லி விட்டு,கழட்டி வைத்த செயற்கைக் காலை மீண்டும் தன் வலது காலில் பொருத்தி வைத்துக் கொண்டு அழுதான்.

சற்று நேரம் கழித்து தன் கண்களை நன்றாக துடைத்துக் கொண்டு ”மாமி,நீங்கோ என்வோடு இப்போ எங்க டாக்டர் கிட்டே வாங்கோ.நான் அழைச்சுண்டு போய் காட்டி உங்களுக்கு என்ன ஜுரம் என்று கண்டு பிடிச்சு,மருந்து வாங்கி தரேன்.தயவு செஞ்சி நீங்கோ வேண்டாம்ன்னு மட்டும் சொல்லாதீங்கோ.என்னை வேத்து மனுஷனா நினைக்காதீங்கோ.எழுந்து வாங்கோ” என்று சொல்லி கூப்பிட்டான் ரமேஷ்.லதாவுக்கு அம்மா ‘முடியாது,வேணாம்ன்னு சொல்லாம சுரேஷோடு வந்து மருந் து வாங்கிக் கொள்ள வரணுமே’ என்று கவலை பட்டாள்.நல்ல வேளை.கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு காயத்திரி “சரி நான் வரேன்” என்று சொன்னதும் ரமேஷ் மிகவும் சந்தோஷப்பட்டான். லதாவுக்கும் சந்தோஷமாய் இருந்தது.’ஆக்ஸிடெண்ட்’ நடந்தது என்னவோ உண்மைதான்.அப்பா, அம்மா இந்த லோகத்தே விட்டு போயிட்டான்னு சொன்னதும் உண்மைதான்.ஆனால் தன் பேச்சு திறமையாலும்.செயற்கை காலை காட்டியும் ‘ரமேஷ்’ தன்னை ‘சுரேஷ்’ என்று சொன்னதை நம்பி விட் டார்கள் காயத்திரியும் லதாவும்.பாவம்,அவர்களுக்கு இவன் ‘சுரேஷ்’ இல்லை ‘ரமேஷ்’ என்று தொ¢ந்து துக் கொள்ள முடியவில்லையே.ரமேஷ்.’நாம சொன்னதே இவா ரெண்டு பேரும் நம்பி விட்டார்களே’ என்று நினைத்து தன் மனதுக்குள் சந்தோஷப் பட்டான்.

ரமேஷ் உடனே தன் செல் போனில் தன் டிரைவருக்கு போன் பண்ணி இந்த வீட்டு விலாசத் தை கொடுத்து உடனே வரச் சொன்னான்.ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் டிரைவர் வந்து வாசலில் வந்து காரை நிறுத்தினான்.காரை நிறுத்தி விட்டு காரில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்து ரமேஷ் முன் பவ்யமாக நின்றான்” சார்,நாம போகலாமா.நீங்க அந்த ஸ்கூலை விட்டு இவ்வளவு தூரம் வந்து இருக் கீங்களே.எப்படிங்க கார் இல்லாம இங்கே வந்தீங்க.என்னை கூப்பிட்டு இருக்க கூடாதா.நான் சும்மா தானே காரிலே உக்கந்துக் கிட்டு இருந்தேன்”என்று பயத்துடன் கேட்டான்.படகு போல நீள இருந்த காரை பார்த்ததும் காயத்திரிக்கும் லதாவுக்கும் ஆச்சரியமாக இருந்தது.ரமேஷ் டிரைவரைப் பார்த்து “நான் ஒரு ஆட்டோலே தான் இந்த வீட்டுக்கு வந்தேன்.இப்போ இந்த அம்மாவை ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ அழைச்சு போகணும்”’என்று சொன்னதும் அந்த கார் டிரைவர் “சரி சார்” என்று சொல் லி காரின் கதவை திறந்து பிடித்த்து கொண்டு இருந்தான்.லதா மெல்ல தன் அம்மாவை கைத்தாங் கலாகப் பிடித்து காரில் ஏற்றினாள்.காருக்குள் ஏறின லதாவுக்கு காரில் இருந்து வந்த ‘செண்ட் வாச னை’ மிகவும் பிடித்து இருந்தது.’ஏ.ஸி’ போட்டு இருந்ததினால் கார் மிகவும் ‘குளு’ ‘குளு’ என்று இரு ந்தது.காயத்திரியும் லதாவும் ஏறிக் கொண்ட பிறகு ரமேஷ் தன் அக்குள் கட்டையை கழட்டி காரின் முன் சீட்டில் வைத்து விட்டு மெல்ல காரில் ஏறிக் கொண்டான்.ரமேஷ் டிரைவரை பார்த்து “டிரைவர் ‘ஏ.ஸி’யை கொஞ்சம் ‘ஆப்’ பண்ணி விட்டு,‘ஹீட்டரை’ போடு.இந்த அம்மாவுக்கு ஜுரம் அடிக்க றது.குளிர போறது” என்று சொன்னதும் டிரைவர் ‘ஏ.ஸி’.யை ‘ஆப்’ பண்ணி விட்டு ‘ஹீட்டரை’ போ ட்டான்.ரமேஷ் டிரைவா¢டம் ”டிரைவர் சீக்கிரமா அப்போலோ ஹாஸ்பிடலுக்கு போப்பா. இந்த அம்மா வுக்கு நல்ல ஜுரம் அடிக்கறது” என்று சொன்னான்.டிரைவரும் “இதோ போறேங்க”என்று சொல்லி விட் டு காரை வேகமாக ஓட்டி போய் அப்போலோ ஹாஸ்பிடலுக்கு வந்தான்.

ஹாஸ்பிடல் வந்ததும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு ஓடி வந்து ரமேஷின் கதவை திறந்தான். பிறகு பின் கதவைத் திறந்தான்.லதா மெல்ல தன் அம்மாவை இறக்கிக் கொண்டு ரமேஷோடு ஹாஸ்பிடலுக்குள் போனாள்.ஹாஸ்பிடலுக்கு உள்ளே போனதும் ரமேஷ் கொஞ்ச தூரம் போய் தன் ‘பாமிலி’ டாக்டருக்கு போன் பண்ணி “டாக்டர்.நான் ஒரு ‘பேஷண்ட்டை’ ‘ஹாஸ்பிடலுக்குக்கு’ அழைச்சு வந்து இருக்கேன்.நீங்க கொஞ்சம் வந்து பாக்க முடியுமா” என்று கேட்டான். ”இதோ நான் இன்னும் ஐஞ்சு நிமிஷத்திலெ வந்து அவங்களை பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு செல் போனை ‘ஆப்’ பண்ணினார் டாக்டர்.அடுத்த ஐஞ்சாவது நிமிஷம் அந்த டாக்டர் வந்து காயத்திரியை நன்றாக ‘செக் அப்’ பண்ணி விட்டு,ரத்த பா¢சோதனை செய்யச் சொன்னார்.ரமேஷூம் காயத்திரியை அழை த்துக் கொண்டு போய் ரத்த பா¢சோதனக்கு ரத்தம் கொடுத்து விட்டு வந்தான்.ஒரு அரை மணி நேரத்தில் காயத்திரி ரத்த பா¢சோதனை ‘ரிப்போர்ட்’ வந்து விட்டது.டாக்டர் ரத்த பா¢சோதனை ரிப்போ ர்ட்டை பார்த்து விட்டு “இவங்களுக்கு ‘விஷ காய்ச்சல்’ வந்து இருக்கு.அந்த விஷ காய்ச்சல் குணம் ஆக ஐஞ்சு நாள் ஆகும்..நான் அவங்களுக்கு ஐஞ்சு நாளுக்கு சாப்பிட வேண்டிய ‘ஆண்டிப யாடிக்ஸ்’ மாத்திரைகளை எழுதி குடுக்கறேன்.அந்த மாத்திரைகளை இவங்க சாப்பிட்டு வந்தா இவங்க ஜுரம் தேவலை ஆகி விடும்.இந்த ஐஞ்சு நாளைக்கும் இவங்க கஞ்சிக் குடிச்சு வரட்டும்.கவலை பட ஒன்னும் இல்லே” என்று சொல்லி விட்டு,அவர் லெட்டர் ஹெட்டில் காயத்திரிக்கு ‘ஆண்டிபயாடிக்ஸ்’ மாத்திரை களையும் எழுதிக் கொடுத்தார்.

உடனே ரமேஷ் “ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்” என்று சொல்லி விட்டு டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டை வாங்கி கொண்டு,.பிறகு ரெண்டு ஆயிரம் ரூபாயை குடுத்து ஹாஸ்பிடல் பில்லை கட்டி விட்டு வந்தான்.ரமேஷ் சொன்னதால் கார் டிரைவர் டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டு,மருந்துகள் வாங்கும் இடத்திற்கு போய் ஐஞ்சு நாளைக்குக் கொடுக்க வேண்டிய ‘ஆண்டிபயாடிக்ஸ்’ மாத்திரைகள்,ரெண்டு பாட்டில் ‘ஹார்லிக்ஸ்’,வாங்கிக் கொ ண்டு ரமேஷிடம் கொடுத்தான்.ரமேஷ் காயத்திரியிடம் “மாமி, டாகடர் குடுத்த மாத்திரைங்களை நீங்க சாப்பிட்டு வந்தா,இன்னும் வீக்கா ஆயிடுவேள்.அதனாலே நீங்க மூனு வேளை தவறாம ‘ஹார்லிக்ஸ்’ குடிச்சு வரணும்”என்று சொல்லி விட்டு,மாத்திரைகளையும்,’ஹார்லிக்ஸ்’ பாட்டில்களையும் லதாவிடம் குடுத்து அம்மாவுக்கு தவறாம குடுத்து வரச் சொன்னான்.கார் டிரைவா¢டம் காரை போர்ட்டிகோவிற்கு கொண்டு வரச் சொன்னான்.கார் வந்ததும் ரமேஷ் லதாவையும் காயத்திரியையும் காரில் ஏறிக் கொள் ளச் சொன்னான்.வழியில் ரமேஷ் கார் டிரைவா¢டம் “டிரைவர்,நாங்க இங்கே காரிலேயே இருக்கோம்.நீ சீக்கிரமா கீழே இறங்கி அந்த பழக் கடையில் ரெண்டு டஜன் சாத்துக்குடி,ரெண்டு டஜன் ஆப்பிள் பழ ங்கள் வாங்கி வா”என்று சொல்லி அவன் கையில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை கொடுத்தான். காயத்திரி உடனே “மாத்திரைகளும் ‘ஹார்லிக்ஸூம்’ போதும்ப்பா.இந்த பழங்கள் எல்லாம் வேண்டா மே.எதுக்கு உனக்கு வீண் செலவு” என்று சொன்னாள்.ஆனால் ரமேஷ் ”இந்த மாதிரி விஷ காய்ச்சல் வந்தா நீங்க சாப்பிடுகிற ‘ஆண்டிபயாடிக்ஸ்’ உங்களே ரொம்ப ‘வீக்’ பண்ணிடும் மாமி. உடம்ப்லே கொ ஞ்சம் சக்தி வர இந்த ‘ஹார்லிக்ஸூ’ம்,சாத்துகுடியும்,ஆப்பிளும்.நீங்க சாப்பிட்டே ஆகணும்” என்று சொன்னான்.உடனே டிரைவரும் காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு காரை விட்டு கீழே இறங்கி ரமேஷ் சொன்ன பழங்கள் வாங்கிக் கொண்டு வந்தான்.

பிறகு டிரைவர் காரில் ஏறி அவர்களை எல்லோரையும் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டான். ரமேஷ் காரில் இருந்துக் கொண்டே ”மாமி,எனக்கு பாகடா¢ போக லேட்டா ஆயிடுத்து.நீங்க ரெண்டு பேரும் இறங்கி ஆத்துக்கு ஜாக்கிறதையா போங்க”என்று சொல்லி விட்டு லதாவை பார்த்து “லதா, அம்மாவுக்கு ஒரு நாளைக்கு குறைஞ்ச பக்ஷம் மூனு தடவையாவது ‘ஹார்லிக்ஸ்’ கரைச்சுக் குடு. குடிக்கக்கட்டும்.கூடவே சாத்துகுடியும் உரிச்சுக் குடு.ஆப்பிளையும் தோலை சீவி விட்டு நறுக்கி குடு. அம்மா அவைகளை எல்லாம் சாப்பிடட்டும் சரியா.அப்போ தான் அம்மா உடம்பில் கொஞ்சமாவது சக்தி வரும்” என்று சொல்லி விட்டு போனான்.ரமேஷ்.உடனே லதா ”சரி,நீங்க சொன்னா போல நான் அம்மாவுக்கு மூனு வேளை ஹார்லிக்ஸ் கரைச்சுத் தரேன்.கூடவே நீங்க வாங்கிக் குடுத்த பழங்களை யும் தவறாம தரேன்”என்று சொல்லி விட்டு,அம்மாவை அழைத்துக் கொண்டு ஆத்துக்குள் வந்தாள்.

முதல் வேளை மாத்திரையை அம்மாவுக்கு கொடுத்து விட்டு, கூடவே கொஞ்சம் ‘ஹார்லிக்ஸை யும் கரைத்து கொடுத்து விட்டு மணியை பார்த்தாள் லதா.மணி பன்னண்டு அடிக்க இன்னும் பத்து நிமிஷம் தான் இருந்தது.”அம்மா,நான் ஸ்கூலுக்கு போய் ஆனந்தனை அழைச்சுண்டு வரேன்.நீ படு த்துண்டு இரு”என்று சொல்லி விட்டு பள்ளிகூடம் போய் ஆனந்தனை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தாள்.ஆனந்தனுக்கு சாப்பாடு போட்டு விட்டு அவளும் சப்பிட்டு விட்டு அம்மாவுக்கு கஞ்சி கலந் து கொடுத்தாள்.காயத்திரி அந்த கஞ்சியை குடித்தாள்.காயத்திரி கஞ்சியை குடித்துக் கொண்டே “ரொம்ப நல்ல பையன் லதா இந்த சுரேஷ்.எவ்வளவு நல்ல மனசு பாரு அந்த பிள்ளையாண்டானு க்கு.அவன் யாரோ ஒருத்தரை பாக்க கார்லே போயிண்டு இருக்கும் போது,உன்னை பாத்ததும், உட னே இங்கே வந்து நம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்டு அழுது இருக்கான்.மன்னிப்பு கேட்டது போதாம என்னையும் அவாளுடைய டாக்டர் கிட்டே காட்டி மருந்து வாங்கி கொடுத்து ‘ஹார்லிக்ஸ்’,சாத்துகுடி, ஆப்பிள்,எல்லாம் வாங்கி குடுத்துட்டு போய் இருக்கான்.அந்த ஹாஸ்பிடலைப் பாத்தியா லதா.அந்த மாதிரி பொ¢ய ஹாஸ்பிடலுக்கு எல்லாம் நாம போய் வைத்தியம் பண்ணிக்க முடியுமா” என்று கேட் டாள் காயத்திரி. ”ஆமாம்ம்மா,நீ சொல்றது ரொம்ப சரிம்மா.அவர் ரொம்ப நல்லவர்மா.நான் அவர் கண் ணில் பட்டவுடன் நமக்கு என்னன்னு அவர் போகாம,என் பின்னாலேயே நம்ம ஆத்துக்கு வந்து இவ்வ ளவு உதவி பண்ணிட்டு போய் இருக்கார்.பாவம்அவர் அப்பா, அம்மா, தம்பி மூனு பேரும் ‘ஆக்ஸிடெ ண்ட்லே’ செத்து போய் இருக்காம்மா.இவர் வலது காலும் போய் இருக்கு.அவர் தன் செயற்கை காலை எடுத்து காட்டும் போது எனக்கு அழுகையே வந்துட்டது” என்று சொல்லி விட்டு ”உன் வைத்தியத்து க்கு அவர் ரெண் டாயிரம் ரூபாய் குடுத்ததை நீ பாத்தியாமா” என்று லதா சொன்னதும் காயத்திரி ”அப்படியா, ரத்த பா¢¨க்ஷ பண்ணிட்டு வெறுனே,மாத்திரை எழுதி கொடுக்கவா ரெண்டாயிரம் ரூபா ய் வாங்கிண்டா அந்த ஹாஸ்பிடல்லே” என்று சொல்லி வருத்தபட்டாள்.”என்னமோ,இவன் எனக்கு ஏன் அவ்வளவு ரூபாய் குடுத்து வைத்தியம் பண்னான்னே தொ¢யலே,நினைச்சா பயமா இருக்கு” என்று சொல்லி பயந்தாள் காயத்திரி.”பயப்படறதுக்கு ஒன்னும் இல்லேம்மா.நீ வீணா கவலைப்படறே, பயபடறே.அவர் தம்பி பண்ன தப்புக்காக அவர் வருத்தப் பட்டு உனக்கு இவ்வளவு செலவு பண்ணி வைத்தியம் பண்ணி இருக்கார்ன்னு எனக்கு தோன்றது” என்று சொன்னாள் லதா.

‘பாக்டா’¢யில் இருந்து மேஷ் வரதனிடம் செல் ‘போனில்’ கூப்பிட்டுப் பேசினான்.வரதன் ‘போனை’ எடுத்து பேசினவுடன் “வரதா, நான் ரமேஷ் பேசறேன்,நீ இன்னைக்கு சாயங்காலம் ப்ரீயா இருக்கியா,நான் உன் கிட்டே கொஞ்சம் பேசணும்” என்று கேட்டான்.உடனே வரதன் “நான் ப்ரீதான் ரமேஷ்,நாம எங்கே மீட் பண்ணலாம் சொல்லு” என்று கேட்டவுடன் “மவுண்ட் ரோடிலெ இருக்கிற ‘காபி ஹவுஸ்லெ’ ‘சிக்ஸ் ஒ க்லாக்’ ‘கன்வீனியன்ட்டா’ இருக்குமா” என்று கேட்டான் ரமேஷ்.“ஓ.கே. நான் அங்கே ‘சிக்ஸ் ஒ க்லாக்’ உனக்காக காத்துண்டு இருக்கேன் ரமேஷ்” என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீனான் வரதன்.ரமேஷ் ‘பாக்டா¢’ வேலையை முடித்து கொண்டு சாயங்காலம் சரியா ஆறு மணிக்கு மவுண்டு ரோடு ‘காபி ஹவுஸூ’க்கு வந்தான்.வரதன் வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்தான்.ரெண்டு பேரும் காலியாக இருந்த சேர்களில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.சர்வர் வந்ததும் ரமேஷ் சர்வரை பார்த்து “ரெண்டு கட்லெட்டும் ரெண்டு ஸ்டராங்க் காபியும் குடுங்க” என்று சொல்லி அனுப்பினான். ”என்ன வரதன் உன் தங்கை,அவ ‘ஹஸ்பெட்ன்ட்’ எல்லாம் சௌக்கியமா இருக்காளா, உன் அம்மா அப்பா சௌக்கியமா”என்று கேட்டான் ரமேஷ்.உடனே வரதன் ”எல்லோரும் சௌக்கியம் ரமேஷ்,நீ எப்படி இருக்கே ரமேஷ்” என்று கேட்டான்.”நான் சௌக்கியமா இருக்கேன் வரதன்.என் ‘லைப்லெ’ நிறைய சமாசாரங்கள் நடந்து இருக்கு வரதா.நான் ஒன்னு ஒன்னா சொல்றேன்.ஒரு நாள் நான் காத்தாலே கபாலீஸ்வரர் கோவிலுக்கு போய் விட்டு திரும்பிண்டு இருக்கும் போது என் கண்லே லதா தென்பட்டா…” என்று ரமேஷ் சொல்லி முடிக்கவில்லை வரதன் உடனே “ரமேஷ் நீ உன்னை யார் என்று சொல்லிண்டு நீ பண்ண ‘தப்பை’ அவ கீட்டே சொல்லி மன்னிப்பை கேக்கறது தானே” என்று அவசர அவசரமாக கேட்டான்

ரமேஷ் “நான் சொல்றதை கொஞ்சம் முழுக்கக் கேளு வரதா.லதா ஒரு நாலு வயசு பையணோடு ஒரு ஸ்கூல் வாசல்லே அவனை ஸ்கூலுக்கு உள்ளே அனுப்பி விட்டு ‘டா’ ’டா’ காட்டி விட்டு போன தை பார்த்தேன்.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.நான் உடனே கார் டிரைவரை அந்த ஸ்கூல் வாசலுக்கு போய் என்னை ‘ட்ராப்’ பண்ண சொன்னேன்.நான் காரை விட்டு கீழே இறங்கி அந்த பையனை பாத்து ’உன் பேர் என்ன,இப்ப வந்து விட்டு போனது உன் அம்மா வா.உன் அப்பா பேர் என்ன’ ன்னு கேட்டேன்.அதுக்கு அந்தப் பையன் என் பேர் ஆனந்த்,என்னை ஸ்கூலுக்கு கொண்டு வந்து விட்டு விட்டுப் போனது என் அம்மா தான்.என் அம்மா பேர் லதா.எனக்கு என் அப்பா பேர் தொ¢ யாது”என்று சொல்லிண்டு இருக்கும் போது ஸ்கூல் பெல் அடிக்கவே அவன் ஸ்கூல் உள்ளே ஓடிப் போயிட்டான்.நான் அடுத்த நாள் ஸ்கூல் வாசலுக்கு வந்து லதா அந்த பையனை விட்டு விட்டு போனவுடன்,அவ பின்னாலேயே ஒரு ஆட்டோலே போய் அவள் ஆத்தை கண்டு பிடிச்சு,அவ ஆத் துக்குள் போய் என்னை ‘சுரேஷ்’ என்று அறிமுகம் படுத்திக் கொண்டேன்.

அந்த மாமி என்னை பார்த்ததும் ‘நான் அந்த மாமிக்கும் லதாவுக்கும் பண்ண ‘நய வஞ்சக காம’ செயலை சொல்லி,அதனாலே லதா குழந்தையை பெத்துண்டு,இப்போ அவா பட்டு வரும் கஷ்டங்க ளை எல்லாம் ‘கொட்டி’த் தீர்த்தாள்.நான் எல்லாத்தையும் பொறுமையாக கேட்டுண்டு இருந்து விட்டு, என் குடும்பத்லே நடந்த ‘ஆக்ஸிடெண்டை’ப் பத்தி சொல்லிட்டு,என் அக்குள் கட்டையையும், செயற் கை காலையும் காட்டி ”ரமேஷ் பண்ண ‘மன்னிக்க முடியாத தப்புக்கு’ நான் மன்னிப்பு கேக்கறேன் மாமி” என்று சொல்லி நான் அழுதுண்டு.என் கையை கூப்பி சொன்னேன்.என் செயற்கை காலை பார் த்ததும் அந்த மாமிக்கும் லதாவுக்கும் கொஞ்சம் இரக்கம் பொ¢றந்தது.அப்புறமா என்னோடு அந்த மாமி பேச ஆரம்பிச்சா.அன்னைக்கு அந்த மாமிக்கு நல்ல ஜுரம்.நான் ரொம்ப கெஞ்சி சொன்னதாலே அந்த மாமி என் கூட வர சம்மதிச்சா.நான் அந்த மாமியை அப்போலோ ஹாஸ்பிடலுக்கு அழைச்சுண் டு போய் மாத்திரைகள்,’ஹார்லிக்ஸ்’ ரெண்டு பாட்டில் ஒரு டஜன் சாத்துக்குடி,ஒரு டஜன்ஆப்பிள் எல் லாம் வாங்கிக் குடுத்து இருக்கேன்.இனிமேல் நான் என்ன பண்ணட்டும் வரதா”என்று சொல்லி சந் தோஷத்தில் கேட்டான்.
கொஞ்ச நேரம் யோஜனை பண்ணி விட்டு வரதன் ”அப்பாடா அந்த பொண்ணு பகனான் புண் ணீயத்தாலே தற்கொலை எல்லாம் பண்ணிக்காம குழந்தையே பெத்துண்டு இருக்கான்னு கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.எப்ப அந்த மாமியும் லதாவும் உன்னை ‘சுரேஷ்’ என்று நினைச்சுண்டு, உன்னை அவா ஆத்துக்கு வர ‘அலவ்’ பண்ணி இருக்காளோ,நீ இந்த சந்தர்ப்பத்தை உபயோகப் படுத்திண்டு அவா ஆத்துக்குப் போய் வந்து கொண்டு இரு.அவாளுக்கு ஏதாவது ‘ப்ராப்லெம்மோ’, கஷ்டமோ,நிச்சியமா வரும்.அந்த சமயம் பாத்து நீ அவாளுக்கு பண உபகாரமோ,இல்லை சா£ர உபகா ரமோ,பண்ணி வா.இப்படியே நீ பண்ணி வந்து அந்த குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்து அவாளை சந்தோஷமா இருந்து வர பண்ணு.அந்த பையனை நல்ல ஸ்கூல்லெ சேர்த்து படிக்க வை. அவாளுக்கு ஒரு நல்ல ‘ப்லாட்’ வாங்கிக் குடு.இப்படி எல்லாம் பண்ணி வந்து தான் நீ அந்தப் பொ ண்ணுக்கு பண்ண ‘துரோகச்’ செயலுக்கு கொஞ்சமவது பா¢காரம் கிடைக்கும்”என்று சொன்னான். உடனே ரமேஷ் ”ரொம்ப ‘தாங்க்ஸ்’ வரதா.நீ சொன்னா,மாதிரியே நான் பண்ணி வரேன்” என்று சொன்னான் ரமேஷ்.ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்து விட்டு “வரதா,நீ எப்ப கல் யாணம் பண்ணிக்கப் போறே வரதா” என்று கேட்டான் ரமேஷ்.”எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லை ரமேஷ்.நான் என் சுதந்திரத்தை வீணா போக்கிக்க விரும்பலே.என் அம்மா, அப்பா தான் எனக்கு ரொம்ப முக்கியம்.நான் கல்யாணம் பண்ணிண்டா வர பொண்ணு என் அப்பா அம்மா வோடு இருக்க விரும்புவாளோ,மாட்டாளோ.அவ தனி குடித்தனம் போகணும்ன்னு பிடிவாதம் பிடிச்சா எனக்குக் கஷ்டமா இருக்கும் ரமேஷ்”என்று சொல்லிச் சிரித்தான் வரதன்.ரமேஷ் அதற்கு மேலே வரதனை ஒன்னும் கேக்காம கட்லெட்டை சாப்பிட்டு விட்டு காபியையும் குடித்து விட்டு, ரெண்டு பேரும் கபி ஹவுஸை விட்டு கிளம்பிப் போனார்கள்.

ஐந்து நாள் ஆனதும் ரமேஷ் லதா ஆத்துக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அடித்தான்.லதா தான் கதவை திறந்தாள்.சுரேஷ பார்த்ததும் சந்தோஷமா இருந்தது அவளுக்கு.”வாங்கோ,உள்ளே வாங்கோ” என்று சொல்லி விட்டு உள்ளே வந்தாள்.ரமேஷ் தன் அக்குள் கட்டையை ஒரு ஓரமா வைத்து விட்டு மெல்ல மரச் சோ¢ல் உட்கர்ந்தான்.அவன் “மாமி உங்க ஜுரம் இப்போ எப்படி இருக்கு ஜுரம் எப்படி இருக்கு.ஹார்லிலிக்ஸ் குடிச்சேளா,சாத்துகுடி, ஆப்பிள் எல்லாம் சாப்பிட்டேளா” என்று கேட்டான். ”ஜுரம் இப்போ கொஞ்சம் குறைஞ்சா மாதிரி இருக்கு” என்று சொல்லி விட்டு சும்மா இருந்தாள் காயத் திரி.ரமேஷ் கொஞ்ச நேரம் ஒன்னும் பேசாமல் உட்கார்ந்து கொண்டு இருந்தான்.லதாவுக்கு ரமேஷை பார்க்க ரொம்ப பா¢தாபமாக இருந்தது.அவளுக்கு அம்மா மொட்டையா “ஜுரம் இப்போ கொஞ்சம் குறைஞ்சா மாதிரி இருக்கு” என்று சொல்லி விட்டு சும்மா இருந்தது பிடிக்கவில்லை அதனால் அவள் நிலைமையை சமாளிக்க “அம்மா ஹார்லிக்ஸ் குடிச்சா,சாத்துக்குடியும் ஆப்பிளும் சாப்பிட்டா” என்று சொன்னாள் லதா.”நல்லது லதா.அப்படியே நீ பண்ணீ வா.அம்மா உடம்புக்கு சக்தி வரணும்” என்று சொன்னான் ரமேஷ்.லதா ரமேஷூக்கு கொஞ்சம் காப்பி கலந்துக் கொண்டு வந்துக் கொடுத்தாள். ரமேஷூம் அந்த காப்பியை குடித்தான்.தான் கொடுத்த காபியை ரமேஷ் குடித்ததை ரசித்து பார்த்து கொண்டு இருந்தாள் லதா.அவள் பேதை மனம் சந்தோஷப் பட்டது.ரமேஷ் கொஞ்ச நேரம் உட்கார் ந்து கொண்டு இருந்தான்.காயத்திரி அவனுடன் ஒன்னும் பேசாமல் இருந்ததால் ரமேஷ் “மாமி உங்க உடம்பைப் பார்த்துக்கோகோ.நான் போயிட்டு வரேன்”என்று சொல்லி விட்டு மெல்ல தன் அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு,எழுந்து வெளியே போய் காரில் ஏறி ‘பாக்டா¢க்கு’ப் போனான்.

அன்று ஞாயிற்று கிழமை.’ஆனந்தன் ஆத்லே தான் இருப்பான்,நாம அவனுக்கு ‘பை ஸ்டார்’ சாக்லெட்டும்,‘காஸ்ட்லி பிஸ்கெட்டுகளையும்’ குடுத்துட்டு,மாமியையும் பார்த்துட்டு வரலாம்’ என்று நினைத்து வரும் வழியிலே அவைகளை வாங்கிக் கொண்டு மாமி ஆத்துக்கு வந்து காலிங்க் பெல்லை அழுத்தினான்.ஆனந்தன் கதவை திறந்தான்.லதா அவனை பார்த்ததும் “வாங்கோ” என்று சொல்லி மரச் சேரை இழுத்து அவன் உட்கார சௌகா¢யமா போட்டாள் ரமேஷ் தன் அக்குள் கட்டையை ஒரு ஓரமா வைத்து விட்டு, ஆனந்திடம் சாக்லெட்டையும் பிஸ்கெட்டையும் கொடுத்தான்.அவன் அவைக ளை வாங்கிக் கொண்டு “ரொம்ப தாங்ஸ் அங்கிள்” என்று சொல்லி விட்டு அம்மாவை பார்த்து “இந்த ‘அங்கிள்’ என்னை ஸ்கூல் வாசல்லே போன வாரம் பாத்து ‘உன் அம்மா பேர் என்ன,உன் அப்பா பேர் என்னன்னு கேட்டாம்மா.நான் உன் பேரை சொல்லிட்டு,எனக்கு என் அப்பா பேர் தொ¢யாதுன்னு சொ ன்னேன்” என்று சொல்லி விட்டு ‘பைவ் ஸ்டார்’ சாலெட்டை பிரித்து சாப்பிட ஆரம்பித்தான்.
ஆனந்தன் சொன்னதை கேட்டதும் ‘அவர் சொன்னது பூராவும் உண்மைதான்’ என்று நினைத்து சந்தோஷப் பட்டார்கள் காயத்திரியும்,லதாவும்.அவர்கள் ஒன்னும் பேசாமல் இருத்ததை பார் த்து ரமேஷ் “உங்க உடம்பு இப்போ பூரணமா குணம் ஆயி இருக்கா மாமி”என்று கேட்டதும் காயத்திரி “எனக்கு நேத்து ராத்திரியிலே இருந்து ஜுரமே இல்லை.என் உடம்பு நார்மலாயிடுத்து.நான் நாளையிலே இருந்து ‘மெஸ்’ வேலைக்கு போயிட்டு வறப் போறேன்.நாளைக்கு சமையல் வேலைக்கு போனாலே அந்த ‘மெஸ்’ ஓனர் எனக்கு இந்த எட்டு ஐஞ்சு நாள் சம்பளத்தே பிடிச்சிண்டு தான் தரப் போறார்.ரொம்ப கறார் ஆன ‘ஓனர்’ அந்த ‘மெஸ்’ மாமா” என்று அலுத்து கொண்டே சொன்னாள் காய த்திரி.காயத்திரி சொன்னதை கேட்டு மிகவும் வருத்தப் பட்டான் ரமேஷ்.’இருக்கட்டும்,இன்னும் கொ ஞ்ச நாள் போன பிற்பாடு நாம அவாளுக்கு பண உதவி பண்ண்லாம்’ என்று நினைத்து சும்மா இருந்தான்.

லதா கொடுத்த காபியை மட்டும் குடித்து விட்டு,கொஞ்ச நேரம் ஆனதும் “மாமி.உங்க உடம் பை ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வாங்கோ.ஆனந்த் நான் போயிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு மெல்ல அக்குள் கட்டையை எடுத்து வைத்து கொண்டு எழுந்தான் ரமேஷ்.உடனே ஆனந்தன் “OK அங்கிள்” என்று சொன்னதும் மெல்ல வாசலுக்கு போய் காரில் ஏறி பங்களாவுக்கு வந்தான் ரமேஷ். லதாவுக்கு ரமேஷிடம் பேச வேண்டும் என்று தான் ஆசை.ஆனால் என்ன பேசுவது என்று அவளுக் கு தொ¢யவில்லை.’அவரும் நம்ம கிட்டே ஒன்னும் பேசலையே’ என்று மட்டும் நினைத்து ஏங்கினாள்.

அடுத்த நாள் காயத்திரி ‘மெஸ்’ வேலைக்கு கிளம்ப ரெடி ஆனாள்.‘அம்மா இப்படி ஜுரம் விட்ட வுடனே ‘மெஸ்’ வேலைக்குப் போவது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை லதாவுக்கு.’அம்மா இன்னும் ரெண்டு நாள் ஆத்லேயே இருந்து நன்னா சாப்பிட்ட பிறகு அந்த பாழாய் போன ‘மெஸ்’ வேலைக்கு போய் வரலாமே.எட்டு நாள் சம்பளத்துக்கு பதிலா பத்து நாள் சம்பளம் பிடிச்சுக்க போறார் அந்த‘மெஸ்’ மாமா.ஐஞ்சு நாள் ‘ஆன்டிபயாடிக்ஸ்’ மாத்திரைகள் சாப்பிட்டா ரொம்ப வீக்கா இருக்கும்ன்னு ‘அவர்’ சொன்னது ஞாபகத்துக்கு வரவே,லதா அம்மாவை பார்த்து “அம்மா,நீ உன் ஜுர உடம்புக்கு ஐஞ்சு நாள் ‘ஆன்டிபயாடிக்ஸ்’ மாத்திரை சாப்பிட்டு வந்து இருக்கே.அப்படி சாப்பிட்டா உன் உடம்பு ரொம்ப வீக்கா இருக்கும்ன்னு ‘அவர்’ சொன்னாரேம்மா.ஏம்மா இப்போ ‘மெஸ்’ வேலைக்கு கிளம்பறே.இன்னு ம் ரெண்டு நாள் நீ ஆத்லே,இருந்து நன்னா சாப்பிட்டு வந்த பிறகு அந்த ‘மெஸ்’ வேலைக்கு போக கூடாதா” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.

லதா சொன்னதைக் கேட்ட காயத்திரிக்கு கோவம் வந்த து.”லதா,உனக்கு பயித்தியமா பிடிச்சி இருக்கா என்ன.நான் முன்னே ஒரு தடவை மூனு நாள் ஜுரமா படுத்து இருந்துட்டு,அப்புறமா ஜுரம் தேவலை ஆன பிற்பாடு நான் மறுபடியும் சமையல் வேலைக்கு போனப்ப,அந்த ‘மெஸ்’ மாமா அந்த மூனு நாளைக்கும் என் சம்பளத்தை பிடிச்சுண்டு சம்பளம் குடுக் கும் போது என்னை பாத்து ‘மாமி,அடிக்கடி லீவு போடகூடாது.’மெஸ்’ வேலைக்கு தினமும் தவறாம வரணும்’ன்னு என் கிட்டே ரொம்ப கண்டிப்பா சொன்னார்ன்னு அன்னைக்கு சாயங்காலமே ஆத்துக்கு வந்ததும் உன் கிட்டே நான் சொன்னது உனக்கு மறந்து போச்சா.அந்த பையன் பணக்கார பையன் பணக்காரா எல்லாம் ஜுரம்ன்னு வந்தா,ஜுரம் விட்டு நாலு நாள் ஆன பிற்பாடு தான் வெளியே வந்து மத்த வேலைகளை எல்லாம் கவனிப்பா.அவா போல நாம இருக்க முடியுமா சொல்லு.வழியை விடு” என்று சொல்லி தன் புடவையை சரி பண்ணி கொண்டு கிளம்ப தயாரானாள் காயத்திரி.அம்மா இப்படி பிடிவாதமாக சொன்ன பிறகு லதாவுக்கு என்ன சொல்வது என்றே தொ¢யவில்லை.வேண்டா வெறுப்புடன் “சரி, ஜாக்கிரதையா நீ போய் வா” என்று சொல்லி அம்மாவை அனுப்பி வைத்தாள் லதா.

ஒரு வாரம் ஓடி விட்டது.‘மெஸ்ஸை’ விட்டு காயத்திரி வெளியே வந்த வேக வேகமாக வந்துக் கொண்டு இருந்தாள்.தன் வீட்டுத் தெருவு முனைக்கு வந்த காயத்திரி கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென்று ‘ரோடு காலியா இருக்கே,நாம ரோடை ‘கிராஸ்’ பண்ணிடலாம்’ என்று நினைத்து ரோடை ‘கிராஸ்’ பண்ண ஆரம்பித்தாள்.அப்போது பார்த்து எதிரில் ஸ்கூட்டா¢ல் வந்துக் கொண்டு இருந்த ஒரு இருபது வயதுப் பையன் காயத்திரி ‘கிராஸ்’ பண்ணுவதைப் பார்த்து பயந்துப் போய் ‘சடன் பிரேக்கை’ப் போட்டான்.வேகமாக வந்து கொண்டு இருந்ததால்,அவன் காயத்திரி மேலே மோதி அவளை கீழே தள்ளி,அவள் வலது கால் மேலே ‘ஸ்கூட்டரை ஏற்றிவிட்டான்.கீழே விழுந்த காயத்திரிக்கு வலி உயிர் போனது.அவள் வாய் விட்டு கத்தினாள்.அந்த பையன் ஸ்கூட்டரை ஒரு ஓரத்திலே நிறுத்தி வைத்து விட்டு,காலியாக வந்துக் கொண்டு இருந்த ஆட்டோவை கையைத் தட்டிக் கூப்பிட்டு டிரைவருக்கு நூறு ரூபாயைக் கொடுத்து காயத்திரியை அதிலே ஏற்றி “இவங்களே,அவங்க சொல்ற ‘அட்ரஸ்லே’ கொஞ்சம் இறக்கி விட்டுடுங்க”என்று சொல்லி விட்டு தன் ‘ஸ்கூட்டரை’‘ஸ்டார்ட்’ பண்ணிக் கொண் டு போய் விட்டான்.காயத்திரி டிரைவருக்கு தன் வீட்டு ‘அட்ரஸ்ஸை’ சொன்னதும்,ஆட்டோ டிரைவர் காயத்திரியை அந்த ‘அடரஸ்லே’ இறக்கி விட்டு போய் விட்டான்.காயத்திரி ஆட்டோவை விட்டு மெ ல்ல, விந்தி,விந்தி வந்து காலிங்க் பெல்லை அழுத்தினாள்.அவள் வலியால் துடித்துக் கொண்டு இருந் ததால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்துக் கொண்டு இருந்தது.லதா கதவை திறந்ததும், அம்மாவின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு இருந்ததை பார்த்தாள்.

உடனே லதா “அம்மா உனக்கு என்ன ஆச்சும்மா.நீ ஏம்மா அழறே”என்று கத்தினாள்.”என் வலது கால் ரொம்ப வலிக்கறது லதா” என்று முனகி கொண்டே அவள் விந்தி விந்தி வீட்டுக்குள்ளே வந்தாள்.அம்மாவை மெல்ல அழைச்சு வந்து லதா அங்கு போட்டு இருந்த சோ¢ல் உட்கார வைத்தாள். அம்மாவுக்கு கொஞ்ச குடிக்க ஜலத்தைக் கொடுத்தாள் லதா.காயத்திரியும் அந்த ஜலத்தை வாங்கிக் குடித்தாள்.”ஒரு வயசு பையன் அவன் ஓட்டி வந்த ஸ்கூட்டரை,என் கால் மேலே ஏத்திட்டான்” என்று சொன்னதும் ”ஏம்மா,யாரும்மா உன் மேலே ஸ்கூட்டர் ஏத்தினது.நீ உடனே அவனை பிடிச்சு கேக்க கூடாதாம்மா” என்று சொல்லி அம்மாவின் கால்களை பார்க்க அம்மாவின் புடவை கொஞ்ச தூரம் தூக் கி பார்த்தாள் லதா.காயத்திரியின் வலது கால் நன்றாக வீங்கி இருந்தது.வெளியே இருந்து வந்த ஆன ந்தன் ஓடி வந்து “உங்களுக்கு என்ன ஆச்சு பாட்டி“என்று கேட்டான்.லதா “பாட்டி மேலே யாரோ ஒரு த்தன் ஸ்கூட்டரை ஏத்திட்டு இருக்கான் ஆனந்த்.பாட்டிக்கு கால் ரொம்ப வலிக்கிறதாம்”என்று சொன் னாள்.”தப்பு என் பேர்லெ தான்.நான் தான் ரோடு ‘கிராஸ்’ பண்ணும் போது ரெண்டு பக்கமும் சரியா பார்க்காம ‘கிராஸ்’ பண்ணினேன்.வேகமா ஸ்கூடர்லெ வந்த பையன் என்னை மோதி கீழே தள்ளி, ஸ்கூட்டரே என் வலது கால்லே ஏத்திட்டான்”என்று முனகிக் கொண்டே சொன்னாள்.
“உன் காலு எலும்பு முறிஞ்சி இருக்குன்னு நான் நினைக்கிறேன்ம்மா,அதான் உன் கால் இப்படி வீங்கி இருக்கு.வா நாம ஒரு ஆஸ்பத்திரிக்கு போய் உன் காலை காட்டிண்டு வரலாம்”என்று சொன் னாள் லதா.”எதெல்லாம் ஒன்னும் வேணாம்.நீ கொஞ்சம் வென்னீரை போட்டுண்டு வா.நான் ஒத்த டம் குடுக்கறேன்.எல்லா வீக்கமும் போயிடும்.ஆஸ்பத்திக்கு பணத்தை கொண்டு போய் ஒன்னும் கொட்ட வேணாம்” என்று முனகி கொண்டே சொன்னாள் காயத்திரி.லதாவும் உடனே உள்ளே ஓடி போய் அடுப்பில் வென்னீர் வைத்தாள்.வென்னீர் நன்றாக காயந்ததும் லதா அதை கொண்டு வந்து தன் அம்மாவின் கால்களுக்கு அருகில் வைத்து ஒரு பழம் புடவையையும் கொடுததாள்.காயத்திரி அந்த பழம் புடவையை கையில் வாங்கிக் கொண்டு வென்னீரில் தோய்த்து காலுக்கு ஒத்தடம் கொடுத் தாள்.பத்து நிமிஷம் அவள் ஒத்தடம் கொடுத்த பிறகு வென்னீர் ஆறி விட்டதால் அவள் ஒத்தடம் கொடுப்பத்தை நிறுத்தி விட்டு “லதா,என் கால் வீக்கம் குறைஞ்சி இருக்கா பாரு“ என்று கேட்டாள். லதா அம்மாவின் காலைப் பார்த்தாள்.”அம்மா வீக்கம் குறைஞ்சா போல இல்லையேம்மா” என்று கவ லையோடு சொன்னாள்.”நான் சாப்டுட்டு படுத்துத் தூங்கறேன்.இந்த வீக்கம் காத்தாலேயும் இருந்தா நாம ஆஸ்பத்திரிக்கு போய் காட்டிண்டு வரலாம்”என்று சொல்லி விட்டு பாயை போட்டுண்டு படுத்து கொண்டாள்.லதாவும் ஆனந்தனும் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டார்கள்.லதாவும் ஆனந்தனும் தூங்கி விட்டார்கள்.காயத்திரிக்கு காலில் வலி அதிகமாக இருந்ததால் அவள் இரவு பூராவும் தூங்கவே இல்லை.

அன்றைக்கு ஞாயிதுக் கிழமை.லதா காத்தாலே எழுந்து காபி போட்டு அம்மாவுக்குக் குடுத்து தானும் குடித்தாள்.அம்மாவை பார்த்து “உன் கால் விக்கம் எப்படி இருந்து” என்று கேட்டுக் கொண்டே அவள் காலை பார்த்தாள்.காலில் நல்ல வீக்கம் இருந்து.இரவு பூராவும் தூங்காததால் அவள் கண்கள் சிவந்து இருந்தது.லதா உடனே டிபனை பண்ணி,அம்மாவுக்கும்,ஆனந்தனுக்கும் கொடுத்து சாப்பிட சொல்லி தானும் சாப்பிட்டாள்.கொஞ்ச நேரம் ஆனதும் லதா “வாம்மா நான் உன்னை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போறேன்” என்று சொல்லி அம்மாவை மெல்ல எழுப்பி, அவளை புடவை யை மாற்றிக் கொண்டு வரச் சொன்னாள்.காயத்திரி நிற்க முடியாமல் மெல்ல புடவையை மாற்றிக் கொண்டு வந்து மறுபடியும் பாயில் உட்கார்ந்துக் கொண்டாள்.அந்த நேரம் பார்த்து ‘காலிங்க் பெல்’ அடிக்கவே லதா “அம்மா அவர் வந்து இருக்காப் போல இருக்கே” என்று சொல்லிக் கொண்டே வாசல் கதவைத் திறக்க போனாள்.காயத்திரி உடனே புடவையை தன் கால் வரை இழுத்து மூடிக் கொண்டாள்.லதா வாசல் கதவை திறந்தாள் சுரேஷ் நின்றுக் கொண்டு இருந்தான்.அவன் பக்கத்தில் டிரைவரும் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.’அவரை’ பார்த்ததும் லதா “வாங்கோ,வாங்கோ” என்று சொல்லி ரமேஷை உள் ளே வர சொன்னாள்.ரமேஷ் மெல்ல காலை ஊனி வைத்துக் கொண்டு உள்ளே வந்து அக்குள் கட் டையை ஒரு ஓரமாக வைத்து விட்டு அவன் வழக்கமாக உட்காரும் சோ¢ல் உட்கார்ந்தான்.காயத்திரி யும் “வாங்கோ” என்று சொல்லி ரமேஷை உள்ளே வர சொன்னாள்.

ரமேஷ் காயத்திரி மாமி முகம் கொஞ்சம் வாடி இருந்ததைக் கவனித்தான்.ரமேஷ் தான் வாங்கி வந்த கேக்கையும் சாக்லெட் பாக்கெட்டையும் ஆனந்த் கிட்டே கொடுத்தான்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் “என்னடா,இவன் இப்படி அடிக்கடி வறானேன்னு என்னை தப்பா எடுத்துகாதீங்கோ.எனக்கு ன்னு யார் இருக்கா.இன்னைக்கு ஞாயித்துக்கிழமை.வெறுமனே அந்த பங்களாலே இருந்து வரணும். ஆனந்தனுக்கு கேக்கையும்,சாக்லெட்டையும் குடுத்துட்டு,உங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு,கொ ஞ்ச நேரம் பேசிட்டு வரலாம்ன்னு நினைச்சு தான் நான் வந்தேன்”என்று சொன்னான்.ஆனந்த் அவை களை எல்லாம் வாங்கிக் கொண்டு “ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்”என்று சொன்னான்.ஆனந்த் கீழே உட் கார்ந்து கொண்டு கேக் பாக்கெட்டை பிரித்து சாப்பிட ஆரம்பித்தான்.ஆனந்த் தான் வாங்கி வந்த கேக் கைச் சாப்பிடுவதை ரசித்தான் ரமேஷ்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *